• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Do some doctors pray for our ill health first
and pray for our good health once we get treated by them.

When we went for the review, we were asked whether we had come for admission!

Admission? Again? No NO!!!

We just got out of the hospital after coughing up 40 grands for the seven days' stay there !! Without any health insurance people are sure to sink even before they think of the expenses!

It is wisdom to have an insurance coverage by one of the many availabilities! As for us we got into a scheme which was able to close - just to help a relative who was an agent!
 
I remember that cartoon in which three different ladies would be staring at a happy woman.

One of the staring woman wore a string of pearls,
the second woman had only vertical lines in her dress and
the third woman had only the horizontal lines in her dress.

The happy woman has all these three on herself and her dress!

So that explains why the green eyed stare. But jealousy is not the sole property of women. Boys, girls and men all feel jealous - may be for slightly different reasons.

I survived the seven days ordeal in the hospital - running around on many errands which involved a lot of walking.

Instead of helping me of sympathising with me, people are jealous THAT I managed all the problems by myself, despite my own umpteen health problems!

Often human mind is too complex and appears to be completely scrambled!!!
 
Yet again it was proved that one is the master of the unspoken words.
Silence is stronger and more eloquent than speech!
Mounam is any day better than mumbling nonsense!

The only way to keep an 'adhigap prasangi' (one who talks more than what is required) is to ignore him/ her totally.

He/ she would be waiting for the next opportunity to ramble on from where he/ she had left earlier.

SO DENY HIM/ HER THAT OPPORTUNITY!
NOTHING HURTS THEM MORE THAN NOT BEING
ABLE TO HURT SOMEONE ELSE ALL THE MORE
 

# 286. A lady with a wig.


இடைத்தேர்தல் க்யூவில் நிற்கும் அவளைப் பார்த்தேன்

நிச்சயமாக புருவத்தை மழித்து,
திரைப் பட நடிகைகள் போல பென்சிலால்
வில் போலத் திருத்தமாக வரைந்திருந்தாள்.

அவள் வயதுக்கு அது பொருத்தமாக இல்லை.
அது அவள் இஷ் டம்! நமக்கு என்ன கஷ்டம்?

தலையில் வரிசையாக ஒரு டஜன் hair slides
ஒவ்வொரு பக்கமும்!!!

ஒன்றோ, இரண்டோ போதுமே
காற்றில் முடி பறக்காமல் இருக்க!

பிறகு பார்த்தால் காதின் அருகே முடியே இல்லை.
பிடரியிலும் கூடத் தான்!

ஒரு விக் அணிந்து அதை அழகாகப் பின்னிக் கொண்டு
அவள் வந்திருந்தது தெரிந்தது!

அது ஒரு வினோதமான அரிய நோய்.
Alopecia areata என்ற அழகான பெயர் அதற்கு.

உடலில் உள்ள அத்தனை முடிகளையும்
காவு வாங்கிவிடும்!

துக்ளக் ஆசிரியர் சோவுக்கும் உண்டு இந்த நோய்.
என்னுடைய ஒன்றுவிட சித்தப்பாவுக்கும் வந்திருந்தது.

அந்தப்பெண் மனம் குலையாமல் normal பெண் போலவே
வெளியில் வருவது எனக்கு ஆறுதல் ஆக இருந்தது.

வேறு யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை.
என்னுடைய கழுகுக் கண்களுக்கு எதுவுமே தப்பாதே!
 
# 287. மாற்று உடை.

"Less luggage... more comfort!"


மிகவும் உண்மையான வாசகம் என்றாலும்
ஒரு செட் உடை அதிகம் எடுத்துப் போக வேண்டும்!

LIONESS QUEEN award வாங்கச் செல்லும் போது
வழியில் கனமழை பொழியத் தொடங்கியது.

வீட்டுக்கும், ரயில் நிலையத்துக்கும் இடையே 20 கி. மி!

தொப்பலாக நனைந்து விட்டேன்
ஸ்கூட்டரில் railway station செல்லும்போதே.

ரயிலில் அமர்ந்த உடனேயே எல்லோரும்
"உடை மாற்றிக்கொள்" என
என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை காரணம்

அடுத்தநாள் உடுத்திக் கொள்ளக் கொண்டு சென்ற
ஒரே ஒரு புடவை தான் இருந்து என் பையில்!

அதை ரயிலில் அணிந்தால்
அடுத்தநாள் எதை அணிவது?

ஈர உடையில் நடுங்கிக் கொண்டு இருந்ததில்
இரவோடு இரவாக நல்ல ஜுரம் வந்துவிட்டது!

அடுத்த நாள் அந்த ஜுரத்தோடே celebration!
திரும்பி வரும்போது ரயிலில்
செருப்புத் திருட்டு போனது!

ஜிவு ஜிவு என்று சிவந்த முகமும், கண்களும்,
வெற்றுக் கால்களோடு வந்து சேர்ந்தேன் வீடு!

நல்லவேளை என் கஷ்டங்கள்
போட்டோவில் தெரியவில்லை.
 
One of my admirers of the past used to tell me in Telugu

"Ramani gaaru! mee theggara anni unnai gaani
meeru andhukO lekha pothunnau!" meaning...

"Mrs Ramani! You have everything but you are unable to enjoy them!'

True I have a family who must have accompanied me for the award ceremont. But no one did! I had to go alone!

I had a wardrobe full of clothes and yet I has to spent a night shivering in the wet sari - drenched to the skin.

I had many shoes and sandals and yet I was forced to walk back on bare feet, while running high temperature!

Thinking back it has always been the same story.

Every New sari would get torn/ damaged the very first time I wear. it. I may soar higher than a kite but will never get any credit from people who mean something to me!

I never get what I deserve for all the hard work I put in! It is like something eclipsing me all my life.

Is it due to the scary total eclipse on the night I was born???
 

# 288. "காரைத் தூக்கு!"

நீண்ட நாள் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தோம்;

அவர் மனைவியும் நானும் அளவளாவிக் கொண்டிருக்கையில்
இவரும், நண்பரும் கேராஜ் சென்றார்கள் காரை எடுக்க.

வெகு நேரம் ஆகியும் வரவில்லை காரோ, இவர்களோ!

என்னதான் நடக்கிறது என்று அங்கு சென்று பார்த்தால்
இருவருமாக காரைத் தூக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்!

வொர்க் ஷாப்பில் இருப்பது போல கேராஜ் நடுவில் ஆள் உயரக் குழி.

கார் பார்க் செய்தபோது இடது டயர் குழியின் விளிம்பில்!!!
அதைத் தூக்கி நேரே வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள்!

'லாரல் ஹார்டி' போல இருக்கும் இவர்கள்
'தாராசிங் கிங்காங்' வேலை செய்ய முயலலாமா?

காரை லெஃப்ட்டுக்கு ஒடித்து ரிவெர்சில் வந்தால் போதுமே!
சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்கள்!

ஒரு வழியாகக் குழிக்குள் இறங்காமல் காரை மீட்டுக் கொடுத்தேன்
எனக்குக் CAR driving தெரியும் என்று இவர் அன்று தான் நம்பினார்.

நல்லவேளை நண்பர் recreation vehicle வாங்கி இருக்கவில்லை.
இல்லையென்றால் இவர்கள் அதையும் 'இருகை' பார்த்திருப்பார்கள்! :
 
# 289. Hotel order placed at 3 P. M.

சின்னவன் திருமணம் முடிந்தகையோடு டாக்சியில்
அத்தனை கோவில்களுக்கும் சென்று வந்தோம்.

வீட்டிலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்பட்டது;
மதியம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது!

நல்ல பசி, தாகம், களைப்பு எல்லோருக்கும்.
ஒரு ஹோட்டலில் நுழைந்தோம்.

"லஞ்ச் மூன்று மணி வரையில்" என்ற அறிவிப்பைப்
பார்த்துவிட்டுச் சொன்னேன்,
" எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிடலாம்!" என்று.

"இல்லை அம்மா! மூன்று மணிக்குள் ஆர்டர் கொடுத்தால் போதும்!"

புது மருமகள் ஆர்டர் கொடுக்க அந்த சர்வர் எழுதிக் கொண்டான்.

இவள் ஆர்டர் செய்து முடிக்கவும் CINDERELLA
கதை போல சரியாக மணி மூன்று அடித்தது!

"சாரி மேடம் மூன்று மணிக்கு மேல் LUNCH இல்லை!"
என்றவுடன் எனக்கே கோபம் வந்தது!

பிறகு அவ்வளவு கவனமாக ஆர்டர்
எழுதிக் கொள்ளுவானேன்?

மருமகள் முகம் சிவந்து விட்டது.

அவளை சமாதனப்படுத்தி, HEAVY டிபன் சூடாகச்
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்!

அவனை என்ன செய்திருக்கலாம் சொல்லுங்கள்!
 

# 290. அமுதசுரபிச் சாப்பாடு?


நாங்கள் திட்டம் இடவே இல்லை சஷ்டியப்த பூர்த்தியைப் பற்றி.
மற்றவர்கள் யாரும்செய்து கொள்ளவில்லை என்பது ஒரு காரணம்.


மகன்கள் இருவருமே students ஆகப் படித்துக் கொண்டிருந்த காலம்.
பெரியவன் தான் ஆரம்பித்தான் முதலில் இந்தப் பேச்சை.

எங்களுக்கு அதிசயமாக இருந்தது அவனுக்கு
எப்படி இதைப்பற்றி தெரிந்தது?.

பின்னால் தெரிந்துகொண்டோம் அங்கேயும் அறுவது
வயது ஆன professor களை கௌரவிப்பார்கள் என்று!

இரு நாடுகளுக்கும் இடையே ~12 மணி நேர வித்தியாசம் இருந்தாலும்
பல பழக்க வழக்கங்கள் ஒரு போல உள்ளனவே!

சிம்பிள் ஆக நெருங்கிய 'பந்து மித்திரர்கள்' என்று
முதல் லிஸ்டில் முப்பது பேர்கள் இருந்தார்கள்.

பிறகு அதுவே கொஞ்சம் பெருகி ஐம்பது ஆயிற்று.
ஐம்பது பேருக்கு உணவு ஆர்டர் செய்தோம்!
மிகுந்தால் இரவு சமைக்காமல் தப்பித்துக் கொள்ளலாமே!

அன்று உணவே உண்டவர்கள் சரியாக நூற்று எட்டு பேர்கள். :bump2:
கடைசிக் கரண்டிப் பாயசம் கிடைத்தது எனக்கு!.

எல்லாம் கச்சிதமாகக் காலி செய்து விட்டோம்.
இன்னமும் எனக்கு நம்ப முடியவில்லை!

எப்படி ஐம்பது பேர் உணவை 100 + பேர்கள் உண்டோம் என்று.
அக்ஷய பாத்திரத்தில் கொண்டு வந்திருந்தார்களா???

Report
 
I must be the only person coming out of a dental clinic with a wide grin!

All the others were having long drawn faces or wore scowls
instead of smiles!

Smile has this unique property.

We can smile ONLY when we are happy.
(Happiness leads to a smile)

When we smile we ALSO become happy.
(Smiling leads to happiness)

Isn't it wonderful that it works in both ways!
 
# 291. அக்ஷய வீடு.

இடம் என்பது மனத்தைப் பொறுத்தது தான்.
பரப்பளவை பொறுத்தது அல்ல என்றும்
அதே நன் நாளில் அங்கும் நிரூபணம் ஆயிற்று.

வீட்டின் மொத்தப் பரப்பே < 750 sq. feet!

அந்தக் குட்டி ஹாலில் ஒரு டஜன் உபாத்தியாயர்கள் +
இரண்டு assistants(அவர்களுக்கு சித்துவேலை செய்ய)

பெரிய ஹோம குண்டம் + nava graha arrangements +
வந்திருந்த அத்தனை பெண்மணிகளும் அறையினுள்
எப்படி ஃபிட் ஆனோம் இன்னமும் புரியவில்லை!!

நினைத்துப் பார்த்தால் அதிசயமாக இருக்கின்றது.

இன்னமும் என் அம்மா சொலிச் சொல்லி அதிசயிப்பார்
"இத்தனை சின்ன வீட்டில் எத்தனை பேர் இருந்தோம்!"

மனத்தில் இடம் இருந்தால் வீட்டிலும் இடம் இருக்குமா???
மனம் குறுகிவிட்டால் அந்த வீடும் சிறுத்துவிடுமா???

So many things and events are beyond human comprehension!
 

# 292. சந்தர்ப்பவாதிகள்.


இடப் பிரச்சனை வந்ததன் பின்புலக் கதை இது!
எங்கள் ஃபிளாட்டை அடுத்த ஃபிளாட் காலி.

Owner அதை எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு
உபயோகித்துக் கொள்ள அனுமதி தந்தார்.

இன்னும் இரண்டு பாத்ரூம், இரண்டு பெட்ரூம்கள்,
ஒரு ஹால் கிடைக்கும் என்று மண்டபத்தைப் பற்றிச்
சிந்திக்கவே இல்லை.

கடைசி நேரத்தில் வைத்தார்கள் ஆப்பு ஒன்று!

அந்த வீடு பூட்டி இருந்ததால் maintenance fees due!
அந்த பாக்கியை எல்லாம் எங்களைக் கட்டச் சொன்னார்கள்!

"ஒரு நாள் கூத்துக்காக இன்னொருவரின் dues
நாங்கள் ஏன் கட்டவேண்டும்?" என்று கேட்டால்
சாவியைத் தரமறுத்து விட்டார்கள்.

நண்பர்களாம்!!!

சந்தர்ப்பவாதிகள் என்றால்
யார் என இனம் கண்டுகொண்டேன்.

ஒன்று பணம் கிடைக்கும்
அல்லது எங்களுக்கு இடைஞ்சல்.
இரண்டுமே அவர்களுக்குப் பிடித்தது தானே!

ரூல் பேசினால் நம்மை யாருக்கும் பிடிக்காது
ஏன் என்றால் உலகில் 99 % are unruly people!
 
I have started to believe that most of the health problems CAN be reversed by strict diet control and determination.
That feels better since no problem is really without a solution and no situation is really hopeless.
My eye pressure has dropped to safer values. I scored better in my Field Test and Retinal Scan.
The long hours wasted and fat fees paid, have brought out some results after all.
Thanks to me for saying "NO" to sugar in any form!
How I wish I could say NO to salt as well!!
 
Oh boy! Today was a lousy and long day.

The power cut due on third Tuesday ( which happened to be the Pongal day) had been changed to fourth Thursday - without any warning. So today I was caught completely unaware!

But let me also stat the silver lining of this black cloud.

I was able to get 4-to-5-hours- long pending work done- which did not need electricity.

No one can waste time... 'yes power cut' or 'no power cut'!!!
 
# 293. "சரியான பேஜார் பார்ட்டி!"

திடீரென ஜாகை மாற்றவேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு.
வாடகை வீட்டை நான் விரும்பவில்லை...two decades ago!

எப்போதும் யாரவது அதிகாரம் செய்வார்கள்!
அல்லது திடீரென்று காலி செய்யச் சொல்லுவார்கள்!

"ஒற்றை அறை வீடாக இருந்தாலும் போதும்!
வெளியே இறங்கு! என்று யாரும் சொல்லக் கூடாது"
என்று மிகவும் பிடிவாதமாக இருந்தேன் நான்.

மூட்டை கட்டுவதும், பிரித்து எடுத்து வைப்பதும்
என் தலையில் தானே மொத்தமாக விழும்.

Other people believe that everything happens automatically!
They do not realise nothing can ever happen by itself
without the help of an overworked and underpaid human robot!

கொஞ்சம் interior ஏரியாவில் ஒரு குட்டி ஃபிளாட்!
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல இருந்தது.

தொடங்கும் போது இருந்ததை விடவும் cost per sq foot
மூன்று மடங்கு "மூக்கு வழியாகக் கொடுத்தோம்!"
(PAID THROUGH THE NOSE இன் தமிழாக்கம்!)

ஆனால் ஃபிளாட்டை முடிப்பதாகவே இல்லை!

கேட்டால்,"உங்களுக்கு முன்னால் பணம் கட்டியவர்கள்
எத்தனையோ பேர் இருகிறார்கள். பொறுங்கள்!"
என்ற ஒரே பதில் கீறல் விழுந்த ரெகார்ட் போல!

எங்களைப் பார்த்ததுமே "சரியான பேஜார் பார்ட்டி!"
எங்கள் காது படவே சொல்லலானான் SUPERVISOR

இதுவேலைக்கு ஆகாது என்று நான் ஒரே போடாகப் போட்டேன்.

"நீங்கள் சொல்லுவது சரிதான்!
நாங்கள் கடைசியாக வந்திருக்கிறோம்.
நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம்.

ஆனால் நாங்கள் கட்டிய அதிகப் பணத்தைத்
திருப்பித் தந்து விடுங்கள்!" என்றேன்

அவன் அதை எதிர் பார்க்கவில்லை.

கடைசியில் வந்ததற்குத் தானே 300 % பணம்!
பிறகு பொறுத்துக் கொள் என்றால் என்ன பொருள்?

பிறகு வேறு வழி இல்லாமல், மனதும் இல்லாமல்,
ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுத்தான்.

எத்தனை விதமான மனிதர்கள் நம்மை ஏய்க்கக்
காத்துக் கொண்டு இருக்கிறார்கள் பாருங்கள்!
 
# 294. Copper thread embroidery.

படி ஏறி இறங்கவும், காலை வீசி நடக்கவும்
எளிதாக இருக்கும் சூடிதார் அணித்து
அமெரிக்கப் பயணம் தொடங்கியது.

கோவையில் ஒரு பிரச்சனையும் இல்லை, நல்லவேளை.

சிங்கப்பூரில் ஒரு சிறிய metal detector warning.
கழுத்துத் செயினைக் கழட்டிய பிறகு MUM ஆயிற்று

L. A. வில் மாட்டிக் கொண்டேன் நன்றாக.
நிஜமாகவே "Hands up! Pants down !" ஆயிற்று

பிரைவேட் அறையில்
knee guard sox கழற்றச் சொல்லி cotton வைத்துத்
துடைத்து எடுத்து analyse செய்தார்கள்!

metal detector ருக்கும், முட்டி சாக்ஸ்சுக்கும் என்ன தொடர்பு?
அவர்களிடம் கேட்க முடியுமா? லா upholders ஆயிற்றே.

அரை மணி கழித்து "She is clean! sorry" :sorry:
சொல்லி அனுப்பி வைத்தார்கள்!

என்ன பிரச்சனை? எப்படி வந்தது ?
ஒரு சிறு பின் அல்லது ஹேர்பின் கூட
அணிந்திருக்கவில்லை நான்

பிறகு strike ஆயிற்று
அந்த புது கமீஸில் இருந்தது
ஒரிஜினல் copper wire embroidery !!!
 
# 295 . "Can I give you a hug ?"

சிங்கப்பூர் air port.
என்ன மாதிரி செட்டிங் தெரியவில்லை.

யார் நுழைந்தாலும் ஆண் பெண் பாகுபாடு இன்றி
மெடல் detector அலறியது. என் பாடு கோவிந்தா!

எல்லோரையும் மறுப்புச் சொல்லாமல் அனுமதிக்கும்போதே
எனக்கு மட்டும் சிறப்பான பிரச்சனைகள் வருமே!

இன்று இங்கு என்ன நிகழப் போகிறதோ?
என்ன ஆச்சரியம். ஒரு சின்ன beep கூட இல்லை.

என்னாலேயே நம்ப முடியவில்லை.
I had to share the happiness with someone!

அப்போது அங்கிருந்த ஒரு ivory பொம்மை chinese
பெண்ணைக் கேட்டேன் நான், "Can I give you a hug ?"

"Sure go ahead! " என்றாள் சிரித்துக் கொண்டே.
என் மருமகளைத் தழுவது போலத் தழுவிக்கொண்டேன்.

அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
பெண்களின் personal space சிறியது என்பது உண்மையே.

இரண்டு முன்பின் தெரியாத ஆண்களால்
இப்படிச் செய்யமுடியுமா?
 

Latest ads

Back
Top