• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 267. "ஸ்னானம் ஜேசி நித்ர போத்தானு!"

ஐந்து வயதில் சிறு மகன் இருக்கிறான்.

ஐந்து விதமான பிரசாதங்கள் இவள் காலை
ஐந்து மணிக்குள் எப்படித் தயாரிக்கின்றாள்???

அவளிடமே கேட்டு விட்டேன் ஒரு நாள்.

டைம் மிச்சம் செய்ய அவள் பூஜைக்கு முன்தினமே
"ஸ்னானம் ஜேசி நித்ர போத்தானு!" என்றார்.
( = I will take bath before I go to bed!)

தூங்கினால் மறுபடியும் குளிக்க வேண்டாமா?
தெரிந்து செய்கின்றாரா? அல்லது தெரியாமலா?

சிலந்தியின், பாம்பின், யானையின் பூஜைகளை
ஏற்றுக்கொண்ட கடவுள் இதையும் ஏற்பார்!
 
# 268. "அடுத்தாத்து நெய்யே....!"

புத்தாண்டை தடபுடலாக வரவேற்க வேண்டாமா?

இல்லாவிட்டால் அது கோபித்துக் கொண்டு
நம்மிடம் வராமலேயே இருந்து விடுமே!

அதற்குக் COLLECTION செய்தது "N" ஆயிரங்கள்.
உணவுக்கு மட்டும் செலவிட்டதோ "2N" ஆயிரங்கள்

தூக்கத்தைக் கெடுத்த ORCHESTRA வுக்கு "N".ஆயிரங்கள்
உபரிச் செலவு வகையில் இன்னொரு "N" ஆயிரங்கள்.

GALA CELEBRATION செய்ய வராதவர்கள் எல்லோரும்
மாதம் மாதம் இதற்காகப் பணம் கட்ட வேண்டுமாம்!

சாப்பிட்டவர்கள் யாரோ! பணம் கட்டுவதோ யாரோ!

"அடுத்தாத்து நெய்யே பொண்டாட்டி கையே" என்பது சரிதான்.
 
Never judge a book by its cover nor a person by his / her dress!

In the hospital where I was forced to stay for a week, New year pooja was performed and prasAdham was distributed by an ayah - dressed in a black sari + black coat!

In the evening I was stunned to see her avatar. She was grandly dressed in a golden yellow sari with a broad brocade border.

Her blouse the special blouse (prince cut blouse?) worn by the ladies now. Her gold haaram hung up to her navel with a big beautiful pendent.

She was waiting for her husband to pick her up on his way to a temple. In a nutshell I would have looked like an ayah - if I stood by her side in a temple!

This explains why some people look brilliant and become dull once they open their mouth while some other look dull but shine bright once they start talking!
 
#269. " பண்ணினவளுக்குக் காலிப் பாத்திரம்!"

கோவிலுக்கு வருபவர்கள் எல்லோருமே
பக்திமான்கள் அல்ல என்று முன்பே தெரியும்.

சிலர் வருவது "for meeting"; சிலர் "for chatting"
சிலர் சந்தேகம் இல்லாமல் ஒன்லி "for eating"

அவர்கள் செலவு செய்து ஒரு நாள்கூட பூஜை செய்ய மாட்டார்கள்.
அடுத்தவன் செய்த பிரசாதத்தை அள்ளும் போது பார்க்க வேண்டுமே!

முன் ஜாக்கிரதையாக வீட்டில் கொஞ்சம் வைத்துவிட்டுச் சென்றால்
சுவை பார்க்க சாம்பிள் ஆவது நமக்குக் கிடைக்கும்.

"சகலமும் கிருஷ்ணார்ப்பணம்" என்று கொண்டு சென்றால்
"பண்ணினவளுக்குப் பாத்திரம் மட்டும் தான் மிஞ்சும்!

அரைச்சவளுக்கு ஆட்டுக்கல்;
சுட்டவளுக்கு தோசைக்கல்;

பண்ணினவளுக்குப் பாத்திரம் கிடைக்கும்
எதுகை, மோனையோடு!
 

# 270. பட்டாசு மாமி.


'பட்டாசு மாமி' என்று ஒரு பட்டப் பெயரா?

கேட்டவுடன் நானும் வியந்தேன் - அதன்
பின்புலக் கதையை அவரே கூறும்வரை!

தீபாவளிக்கும், மழைக்கும் உண்டு மிகவும்
நெருங்கியதொரு தொடர்பு அல்லவா?

பட்டாசுகளும், மத்தாப்புகளும் ஈரத்துக்கு
நமத்து விட்டன, வெய்யிலும் இல்லை.

மாமிக்கு வந்து ஒரு brilliant brain wave.

அத்தனை பட்டாசுகளையும், மத்தாப்புகளையும்
அழகாக அடுக்கினார் ஒரு தாம்பாளத்தில்.

அதை காஸ் அடுப்பில் வைத்து விட்டு dining ரூம்
செல்வதற்குள் அங்கே வாண வேடிக்கை தொடங்கியது.

Aeroplane கள் பறக்கத் துவங்கின; மத்தாப்புகள் எரிய;
பட்டாசுகள் வெடிக்க; விஷ்ணுச் சக்கரம் இறங்கி ஓட;

ஒரு உள்நாட்டுக் கலவரப்பகுதி ஆகிவிட்டது அவர் வீடு.

உள்ளே சென்று அவற்றை அணைக்கவும் முடியவில்லை,

அத்தனையும் எரிந்து, வெடித்து முடிந்தபின் தான்
அறையின் அவரால் உள்ளே நுழைய முடிந்தது.

அன்றிலிருந்து அவர் பெயர் பட்டாசு மாமி.

இதுவே அந்த வீட்டு ஹாலில் நடந்திருந்தால்
furniture எல்லாம் ஒரு வழி ஆகி இருக்கும்.

பெட் ரூம் என்றால் சொல்லவே வேண்டாம். :scared:

நல்ல வேளை கிச்சனில் காஸ் சிலிண்டர்
வெடிக்காததால் ஒன்றும் ஆகவில்லை.
 
I met many strange people suffering from many strange maladies while I had to stay in the hospital for seven full days.

There was a young woman whose lungs have shrunk (for whatever reason) and was unable to breathe freely to get the supply of oxygen she needed to be able to any work.

I suggested her to blow balloons expanding and filling her lungs with air first. It does not cost anything but is very effective in increasing the lung capacity.

There was an elderly lady who was suddenly discovered with liver cancer! Her daughters were scared and worried for the right reasons. Fatty liver seems to be common problem in many people. Fatty liver is so much safer than a cancerous liver.

A man who had bandaged the toes in his right foot was seen walking bare feet all day long. To my knowledge diabetics are advised to take care of their feet as carefully as they do their face.

He walked bare feet. He was tall and hefty and I wondered whether the walking actually helped him or harmed him. My doubt proved to be right. His right foot was partly amputated while I was there. I felt surging pity for the man and his doting wife.

A greater shock awaited me when I returned home . A nephew from the in law's side had his right leg amputated below the knee.

The family is known to be diabetic but all those children never bothered to limit their food intake or calories intake. Even when the leg started oozing he would rather tie a bandage from his hip to the foot that modify his diet and start exercise regimen.

Man must learn from the mistakes committed by the others.

LIFE is too short for a person to commit all the blunders by himself and learn from those bitter experiences! :(
 
"ஸ்னானம் ஜேசி நித்ர போத்தானு!" is it not "ஸ்னானம் சேசி நித்ர போத்தானு!"
 
May I was anxious that no one should read
சேசி = (as in Malayalam) chechi = akka.

BUT that is exactly how the lady pronounced it !

We have two word 'joosi' and also 'choosi' which mean the same thing and another pair 'jooda' as well as 'chooda' meaning the same !

Sir! Tell me the truth now!
"Are you from A.P??? " or
are you also a nomad like me who
learnt ( or had to learn) Telugu???
 

# 271. ஒட்டியாணமும், காசுமாலையும்.


அறுபது வருடங்களுக்கு முன்பு கல்யாணப் பெண்ணுக்கு
ஒட்டியாணம், காசுமாலை செய்து போடுவது வழக்கம்.

எப்படித்தான் அந்த கனத்தைச் சுமந்தார்களோ?
பிடித்த பொருள் என்றால் எடையை உணரமாட்டோமோ?

எத்தனை முறை அணிந்து கொண்டாளோ தெரியாது.
ஆனால் அது நல்ல இன்வெஸ்ட்மென்ட்டாக இருந்தது.

எத்தனையோ செலவுகள் வந்தபோதும் அவற்றை
விற்கவோ, அடகு வைக்கவோ இல்லை அவள்.

எப்படியோ செலவினத்தை சமாளித்து வந்தாள்.

ஆனால் அமெரிக்காவுக்குப் போக விரும்பியபோது
அதை விற்க நேர்ந்தது வேறு வழி இல்லாமல், பாவம்.

மகனால் டிக்கெட் அனுப்பித் தர முடியவில்லை.
இவளுக்கோ போக வேண்டும் என்ற ஆவல்.

அதற்கு பலியாகின அந்த நகைகள் இரண்டும்.
இப்போது பவுன் விலை தாறுமாறாக ஏறிவிட்டதே!

இப்போது அவற்றை விற்றிருந்தால் அதே பணத்தில்
நாலு அல்லது ஐந்து அமெரிக்க ட்ரிப் அடித்திருக்கலாம்!

தினமும் ஒரு பாட்டம் அதை நினைத்து அழுகின்றாள்.
சிந்திய பாலை நினைத்து அழுது என்ன பயன் கூறுங்கள்
 
# 272. For Show and For Use!

அவர்கள் வசித்த குவாட்டர்ஸ் மிகவும் பெரியது.
ஆனால் உள்ளே வரச்சொல்லி அழைப்பது மிகவும் அரிது!

வாசலோடு நிறுத்தி பேசி அனுப்பிவிடுவார்கள்.
என்னை ஒருமுறை உள்ளே அனுமதித்தபோது வியந்தேன்!

"கச்சிதமாக ஒரு மாடல் வீடு போல உள்ளதே!" என்று.
யாரவது சோபாவில் அமர்ந்தால் தானே அது கலையும்!

சமையல் அறையில் பளபளக்கும் பாத்திரங்கள் எல்லாம்
புகழ் பெற்ற சரவணா ஸ்டோரில் இருப்பதுபோல

உயரத்திற்குத் தகுந்தபடி 'நீட்'டாக அடுக்கி இருந்தன!
"எப்படி தினமும் எறி எல்லாம் அடுக்குவீர்கள்?" என்றால்

"அவி அன்னி ஷோ கோசரமே!
இவி மேமு வாடுதுன்னவி!"

[அவை எல்லாம் வெறும் பார்வைக்காக.
இவை நாங்கள் தினமும் உபயோகிப்பவை]

என்று கரிப்பிடித்த பத்திரங்களைக் காட்டினர்
kitchen 'சிங்கிற்கு' அடியில்.

எல்லாம் இரண்டு! இரண்டு!
பார்வைக்கு ஒன்று! பணிக்கு ஒன்று!

நல்ல சிஸ்டம் தான் வருபவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்கு!
என்னால் வாழ முடியாது இந்த இரட்டை வாழ்க்கை!
 
The avatar of the hospital ayah made me ponder over it.

I realized that she needed to be accepted and respected in the society. The only way she can earn it instantly is by dressing up like a rich lady.

Naai vitRa kaasu kuraikkaathu
Bathroom kazhuvina paNam naaRaathu.

My father often used to say,
"oor aRindha paarppaanukku pooNool edharku?"

So people like me do not care much about projecting an image of a rich lady, since the 'aRivuk kaLai' (the glow of intelligence) and 'thavak kaLai' (the glow of the penance and other spiritual practices) in the face are enough by themselves to be respected.

I was mistaken for a mAtAji in Orlando Airport and one couple from Kerala sought my blessings by touching my feet!

The Orange dress (sari-churidhar) I wore when I flew from Chennai to Coimbatore made poople move away and make way for me.

Either I must be becoming very HUGE OR very spiritual OR BOTH!!! :)
 
My friend was constantly being blamed by her partially deaf husband that she made him deaf!

The whole clan was deaf - right from his mother through his elder brothers and sisters down to himself.

"oorukku iLaithavan piLLaiyAr kOvil aaNdi!"
endru chummaavaa chonnargaL???
 
Being deaf if O.K as long as they do not start spreading wrong news to the others after hearing the news conveyed wrong!

My father used to quote this very often, "The misinformed are the most anxious to enlighten the uninformed"

This kind of enlightening often ends up in firework-lightning followed by thunder-storm and heavy rain at home!
 

# 274. Gold cleaning !


நகை பாலிஷ் போடுகிறோம் என்று வந்தார்கள் இருவர்.
அம்மா எப்படி அவர்களை நம்பினார்கள் என்று தெரியவில்லை!

அப்பா ஹாஸ்பிடலில், நாங்கள் பள்ளியில், இருக்கும் போது
திண்ணையில் அமர்ந்து ஏதோ திராவகத்தில் முக்கி எடுத்துத்

துடைத்து பளபளக்கும் நகைகளை அம்மாவுடன் தந்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் அவர்கள்.

அம்மாவுக்கு செயின் கனம் குறைந்தது போலத் தோன்றியது.
அப்பாவிடம் சொல்லவும் பயம்.

தெரு வியாபாரிகள் என்றாலே அப்பாவுக்கு அலர்ஜி.
உண்மையைக் கண்டுபிடிக்காவிட்டால் அம்மாவுக்கு உறக்கம் வராது.

தட்டானிடம் சென்று நகையை எடை போட்டால்
அம்மா பயந்தது நிஜம் என்று ஆயிற்று.

பயங்கரமாக upset ஆகிவிட்டார் அவர்.
கடப்பாறையை முழுங்கியதுபோல இருந்தார் சில நாட்கள்.

எத்தனை ஸ்மார்ட் ஆகவும், அலெர்ட் ஆகவும் இருந்தாலும்
யானைக்கு அடி சறுக்குவது போல சிலசமயம் சறுக்கி விடும்.
 
# 274. LIGHTHOUSE மாமி.

அந்த மாமிக்கு வேறு எந்தப் பெயரும் பொருந்தாது.
பகலிலேயே பார்ப்பவர்கள் கண்கள் நகை வெளிச்சத்துக்குக் கூசும்!

இரவிலோ கன்னியாகுமரி தேவியின் மூக்குத்தி போல
வெகு தூரம் கலங்கரை விளக்கமாக டால் அடிக்கும்.

கிளியோபட்ராவாக நடித்த எலிசபெத் டைலர்
படப்பிடிப்பின் போது அசல் நகைகளை அணிந்திருந்தாராம்!

"எதற்கு அனாவசிய ரிஸ்க்?" என்று பிறர் கேட்டபோது,


டைரக்டர்,
"அசல் நகைகளைப் போட்டுக் கொண்டால் இந்த
நடிகைக்கும் கிளியோபட்ராவின் மனோபாவம் இருக்கும்!" என்றாராம்

கலங்கரை மாமியைப் பற்றி முற்றிலும் அறிந்துகொள்ள
இந்த ஒரு க்ளூ உங்களுக்குப் போதும் அல்லவா?

அவர் குனிந்தோ அல்லது வணங்கியோ யாருமே பார்ததில்லை.
வணங்காமுடி என்றால் சற்றும் மிகை ஆகாது.

ஒருவள் சொன்னாள்,

"மாமி குளிக்கும்போது சோப்பு கீழே விழுந்து விட்டால் கூட,
நாங்கள் யாரவது தான் போய் அதை எடுத்துத் தர வேண்டும்.
அவளால் குனியவும் முடியாது! முடிந்தாலும் குனியமாட்டாள்."

இது எப்படி இருக்கு???
 
She seemed to be bright and intelligent. She had to be so - in order to earn a living after she got widowed. But her story sounded hollow and strange!

One officer offered to teach her Classical music ( for free?)
It was more than an offer- rather a concealed compulsion to make her go over to her place.

He was already single and she had become single. She looks half her age and is really very pretty. If there can be anyone who would NOT take advantage of her trust and their privacy - he has to be none other than Lord Sree RAma Himself.

Why did she go over to his place when there were institutes and colleges teaching music? Considering that she was a freelance designer and could make herself free whenever she wanted to?

Some behaviors are too complex to be understood by simple minded and straightforward people like you-know-who!
 
It was a scary pooja day today. After the camphor haarathi was over and the priest bent over it to pick up something, his uthareeyam tied around his waist caught fire.

I and only I saw the flame and wanted to scream "Fire! Fire!" but all I could say was '"Mama! Mama!"

He looked at me and I pointed to his burning uthareeyam. It was done at the right time. It would have been awkward if he had to cast off his dhothi to save his skin - in a temple filled all female devotees.

I remembered the M. I. L of one of my students who succumbed to the burn injuries caused by the burning camphor!

Once I myself had toppled a saucepan of boiling milk on right thigh and did not realise it until I saw the stream of milk flowing down from my right foot.

Whether we see or don't - the flame and the boiling milk hurt us all the same!
 
# 275. WHAT A GREAT SACRIFICE!

அவர் வயது 65 + ! ஆனால் பார்ப்பதற்கு
ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் போலவும்,
இன்றைய நதியா போலவும் இருந்தார்.

இரண்டு மகன்கள், நான்கு பேரன்கள்;

கணவர் இல்லை! அம்மா, மாமா என்று உறவுகளை
ஓர் ஓல்ட் ஏஜ் ஹோம் போல ஆதரித்து வந்தார்.

எனக்கு புதிர்களின் விடை உடனே தெரிய வேண்டும்.
அவரிடமே கேட்டேன் அவர் இளமையின் ரகசியத்தை.

அவர் உப்பையும், சர்க்கரையையும் உண்பதில்லையாம்!
உப்பு இல்லாவிட்டால் காரம், புளியை உண்ண முடியாது.

இவ்வளவு பெரிய தியாகம் அவர் செய்யக் காரணம்???
ரத்த அழுத்தம், நீரிழிவு என்று எண்ணினால் அது முற்றிலும் தவறு.

அவர் உடல்நிலை நன்றாக இருந்தது
பின் எதற்காக இந்தத் தியாகம்?

அப்போது இருந்த ஹீரோயின்கள்
சல்வார், கமீஸ் அணிவது வழக்கம்.

அவருக்கு அந்த உடை ரொம்பவும் பிடிக்குமாம் -
அன்றும், இன்றும் கூட!

அந்த உடை அணிய, இடை என்ற ஒன்றும் தேவை.
அதையும் அவர் அறிவர்.

உடையை அணிய, இடையை விரும்பி,
எடையைக் கட்டுப்படுத்தவே
அவர் செய்தாராம் இந்த மகத்தான தியாகம்.

என்ன வில் பவர்!!! :clap2:
 
# 276. இளமையும், அழகும் எங்கே ???

பழைய 'ஆல்பம்'களைப் பார்த்தல் அதிசயம்!
"நாம் தானா இது?" என்று தோன்றும்!

ஒவ்வொருவரும் எவ்வளவு இளமையாக,
அழகாக, தலை நிறைய கறுப்பு முடியுடன்,

எத்தனை ஸ்மார்டாக இருந்திருக்கிறோம்???
எங்கே போயிற்று அந்த இளமையும், அழகும்?

எப்போது போயிற்று நம்மை விட்டு அகன்று?
எப்படி இப்படி மாறிப்போனோம்? அயோமயம்!

'டெய்லி டோஸில்' மாறுவதால் தெரிவதில்லை.

ஒளவையார் போல ஒரே அடியாக மாறி இருந்தால்
நம்மைப் பார்த்து நமக்கே ஷாக் ஆகி இருக்கும்.

Smaller and manageable டெய்லி டோசெஸ்
எத்தனை உதவியாக இருக்கின்றது பார்த்தீர்களா???
 
The blog of my grandfather's composition is having a busy traffic. You will get to see someone - whom all of you have been wishing to get a glimpse of for over the past 8 years!!
Take a peek ! You will really feel very happy!
 
# 277. தொங்கத் தொங்கத் தாலி!

Summer vacation ஊருக்கு வந்தால் எனக்குப் பொழுது போகாது!

[ In spite of bringing a lot of homework

to copy, to stitch, to write, to compose jathis for new dances...]

எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்குவார்கள். :sleep:
பிறகு தூங்கிவிட்டு மீண்டும் சாப்பிடுவார்கள்! :hungry:

இந்த இரண்டு வேலைகளே ஒழுங்காக நடக்கும்.

நமக்கோ இரவு தூங்கினால் அதுவே பெரிய விஷயம்.
கூடா நட்புப் போல ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.

நண்பியுடன் கால் நடையாக(?) லைப்ரரி செல்வேன்.
நிறையப் புத்தகங்கள் படிப்பேன். அவளும் தான்.

அவள் வீட்டுக் கதவைத் தட்டினால் வெகுநேரம் கழித்து
சுவர்க்க வாசல் திறப்பது போல மெல்லத் திறப்பார்கள்.

லிங் பெல் வேலை செய்யாது.
கழற்றி விட்டிருப்பார்கள்

ஒரு நாள் பொறுக்க முடியாமல் நான் கேட்டு விட்டேன்,
"காலிங் பெல்லை ஏன் கழற்றி விட்டிருக்கிறீர்கள்?"

அவள் மாமியார் சொன்ன பதிலை நினைத்தால்
இன்றைக்கும் எனக்கு மனத்தைப் பிசைகிறது!

"காலிங் பெல்லை அடிச்சு எவனாவது இவள்
தாலியை அறுத்துண்டு போய்டுவானே!
அதனால் தான் கழற்றி விட்டிருக்கேன்!"

நன்பியின் முகம் சுண்டைக்காயாக ஆகிவிட்டது.

என் கோபம் என் முகத்தில் தெரிந்திருக்கும்.
நாள் எல்லாம் மாடாக உழைக்கிறாள் :roll:

இந்த அன்பான மாமியாருக்கும், முசுடு மாமனாருக்கும்,
முரட்டுக் கணவனுக்கும், மூன்று குழந்தைகளுக்கும்!

பதிலுக்கு இது போன்ற ஆசீர்வாதங்களுடன்!

தாலியைப் பற்றிய பழமொழி கேட்டிருக்கிறேன்
ஆனால் அன்று தான் வாய் மொழியாகக் கேட்டேன்.

சில பெண்கள் ரொம்பவும் மோசமானவர்கள் தாம்!

"தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு
தீர்க்க சுமங்கலியாக இரு!" என்று சொல்ல வேண்டியவர்

அன்று கொட்டிய நெருப்பு வார்த்தைகள்..... அப்பப்பா!

Surely she must have been aware of the
real significance of her nasty and poisonous words!

She wished her dear D.I.L to become a widow -
even when it meant that she herself would lose her son!
 
குட்டி ராணி #1.

இவள் வெறும் குட்டி அல்ல!
இவள் ஒரு குட்டி ராணி. :baby:

Born with a silver ஸ்பூன் - for real!

அவன் கன்னக் குழிகளே சாட்சிகள்
அவள் ஒரு குட்டி ராணி என்பதற்கு.

அவள் பாட்டிக்கு ஒரு கன்னக்குழி இருக்கும்.
அதுவே அவரோ ஓஹோ என்று வைத்திருக்கும்போது

இரண்டு பணக் குழிகள் இருக்கும் இவள்
ராணி என்பதில் யாருக்கு என்ன சந்தேஹம்?

நடு முதுகு வரை ஓர் ஆண்டில் வளர்ந்து விட்ட
வெல்வெட் soft, ஜெட் black, தலை முடி.

அழகிய கறுப்பு திராட்சைக் கண்கள்.

சிட்டுக் குருவியின் மூக்குப்போல
அழகிய சின்ன பெர்மனன்ட் POUT !

வரைந்தது போல வில் புருவங்கள்.
நீண்ட கண் இமைகள்!

குட்டி பட்டன் மூக்கு.
பெரிய வடிவமைந்த அழகிய காதுகள்!

கணக்கில் புலியாக இருப்பாளோ?

அம்மாவும், அப்பாவும், இரண்டு
தாத்தாக்களும், பாட்டிகளும்
மெத்தப் படித்தவர்கள் அல்லவா?
 
1547459807184.png


When we wish to possess strong and durable things - for the money we pay for them - sometimes it backfires!

The recurring toothache often lasts for prolonged periods and makes the life of that person a living hell.

The metal crown fixed over my upper molar did the same thing.

The area around that tooth was collecting food particles and getting infected frequently. This is in spite of brushing the teeth twice a day and gargling the mouth everytime after eating.

The crown had to be removed but won't budge. So a marathon session of cutting it followed by the digging and cleaning its roots for RCT tool exactly 105 minutes!

I have never kept my mouth open for so long nor so wide. I thought my whole face might get distorted due to this procedure.

It was difficult to say who became more tired... the doctor who had to cut it open of the patient who had to live up to her name as a patient.

The digging of the upper molar is always followed by an imaginary mechanical buzzing in the kapaalam for a day or two.

MaNdaikkuLLe Mahaa Bhaaratham???
 
# 2. குட்டி ராணி.

போட்டோவில் பெரிய குழந்தைபோல இருந்தவள்
நேரில் பார்க்கும் போது ஒல்லியாகவும்
நல்ல உயரமாகவும் இருக்கிறாள்.

கீழே மட்டும் இரண்டு அரிசிப் பற்கள்.

அதை வைத்து என் baby - faced - அக்காவின்
ஆப்பிள் கன்னத்தைக் கரண்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு மச்சம் விடாமல் சுரண்டிக் கொண்டிருந்தாள்.
தோடும், மூக்குத்தியும் விளையாட்டு சாமான்கள்!

அக்காவின் தோள் இடுக்கில் தலையைப் பதித்து
மணிக்கணக்கில் நன்றாகத் தூங்கினாள்.

தாத்தாவைச் செல்லமாகக் கூப்பிடுவது "ஏய்!"
அம்மாவை "அம்ம்ம" என்று அழுத்தியும்,
அப்பாவை "ப்பா" என்று உரக்கவும் அழைத்தாள்.

அப்பாவில் செல்லத் தொப்பையில் இவள்
தலையை வைத்து செட்டில் ஆகிவிடுவாள்.

உணவு உண்ணும் போது clamp போல விரல்களால்
இரண்டு புறமும் தலையை பிக்ஸ் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் உணவு காதுக்குள் போய்விடும்.
காது குத்தி micro mini stud அணிந்திருந்தாள்.
 

Latest ads

Back
Top