17b. குபேரன்
“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும் முதலுமாக!”
அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.
திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்மதேவன்.
ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!
“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”
எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.
கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இருமரங்கள் சாட்சிகளாக.
தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.
தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.
சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.
அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.
ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி