கலஹம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கோவிலில் விழுந்து, பெண்கள் சிசுருஷை செய்தவுடன்
கேசரியைச் சாப்பிட்டுவிட்டுக் காபியும் குடித்துவிட்டு
ஜம் என்று இவர் எழுந்து கொண்டு விட்டார்.
ஆறடி மனிதரை அலங்கோலமாகத் தரையில் பார்த்த ஷாக்கில்
ஆகாயத்துக்கு எகிறிவிட்டது என்னுடைய ரத்த அழுத்தம்.
மண்டைக்குள்ளே யாரோ சிவமணி போல DRUMS வாசித்தார்கள். :drum:
மூஞ்சி முகரை எல்லாம் பூசனி போல வீங்கி விட்டது.
பிள்ளைகள் முகமும் பார்க்க சகிக்கவில்லை
எல்லோரும் கவலைப் பட்டார்கள்.
மாலை நாலு மணி ஆனதும் எப்போதும் போல ஸ்கூட்டரில் உலா!
படு ஷோக்காகக் கிளம்பியாயிற்று.
ஹெல்மெட் போடமாட்டாராம்! :nono:
வீட்டில் அடங்கி இருக்க மாட்டாராம்!:nono:
இத்தனை கண்டிஷன் அவர் போட்டதால்
நான் ஓரே ஒரு கண்டிஷன் போட்டேன்!
"விழுந்து அடிபட்டு கொண்டால் பார்த்துக் கொள்வதற்கு
ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி விட்டு அதன் பின்
ஹெல்மெட் போடாமல் வெளியே போகலாம்!
என்னால் பார்க்க முடியாது. முடிந்தாலும் நான் பார்க்க மாட்டேன்."
எலாஸ்டிக் லிமிட்டின் எல்லையில் இருப்பவளை

out:
இன்னமும் எவ்வளவு சோதிக்க முடியும்???
பதினேழு வருடங்களாகப் பால் கம்பனிலேயே போய் பால் வாங்கி வருவார்.
எத்தனை முயன்றும் அதை மாற்றவே முடியவில்லை.
இன்று மாறிவிட்டது.
வாசல் கடைக்காரன் இனி supply செய்வான்.
போனஸ் நன்மைகள்
இரவு இரண்டு மணியிலிருந்து டார்ச் அடித்து அடித்து
நேரம் பார்க்க வேண்டாம்
காலை நாலு மணிக்குக் கதவைத் திறந்து போட்டுவிட்டு
வெளியே போக வேண்டாம் .
தினமும் பத்து கீ.மீ. ஸ்பீடில் பத்து கீ.மீ. செல்ல வேண்டாம்.
விடியற்காலை நாலு மணிக்கு நாயும் பேயும் உலவும் வேளையில்
வெளியே போக வேண்டாம்.
இனிப் பால்காரன் வரும் வரையில் தூங்கலாம்!