The Sudarshana Stuti composed by Ambarisha Chakravarti

praveen

Life is a dream
Staff member
அம்பரீஷ் சக்கரவர்த்தி அருளிய சுதர்சன ஸ்துதி:

ஸுதர்ஶந நமஸ்துப்யம் ஸஹஸ்ராரச்யுதப்ரிய |ஸர்வாஸ்த்ரகாதிந் விப்ராய ஸ்வஸ்தி பூயாதிதாநகா || 1

த்வமக்நிபகவாந் ஸூர்யஸ்த்வம் ஸோமோ ஜ்யோதிஷாம் பதி꞉ |த்வமாபஸ்த்வம் க்ஷிதிர்வாயுர்வ்யோம்ஹேந்த்ரியாணி தந்மயா꞉ || 2

ஸுதர்ஶந நமஸ்தே(அ)ஸ்து தர்ஶநீய மஹோஜஸே |நாபாய விஶ்வநாபாய மஹோக்ராந்ஹக்நதேஜஸே || 3

த்வம் தர்மஸ்த்வமதம் ஸத்யம் த்வம் யஜ்ஞோ த்ரிவ்ருத꞉ பர꞉ |த்வம் லோகபால꞉ ஸர்வாத்மா த்வம் தேஜ꞉ பௌருஷம் பரம் || 4

நம꞉ ஸுநாபாகிலதர்மஸேதவே த்வதர்மாஶீலாஸுரதூமகேதவே |த்ரைலோக்யகோப்த்ரே ப்ரதிஹூததேஜஸே சகராய விஷ்ணோரம்மிதவிக்ரமாய || 5

அச்யுதனுக்கு (மகாவிஷ்ணுவிற்கு) மிகவும் ப்ரியமானவனே! ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சுதர்சனமே உனக்கு நமஸ்காரம். அனைத்து அஸ்திரங்களையும் அழிக்க வல்லவனே, இந்த பிராமணருக்கு (துர்வாசருக்கு) மங்களத்தை உண்டாக்குவாயாக.

நீயே அக்னி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் அதிபதி. நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் புலன்களாகவும் நீயே விளங்குகிறாய்.

காண்பதற்கு அரிய பெரும் ஒளியைக் கொண்டவனே! பிரபஞ்சத்தின் மையமாய் விளங்குபவனே, தீயோரை அழிக்கும் உக்ரமான பிரகாசம் கொண்ட சுதர்சனமே உனக்கு நமஸ்காரம்.

நீயே தர்மம், சத்யம், யாகம் மற்றும் உலகைக் காக்கும் லோகபாலகன். நீயே பரமபுருஷனின் உன்னத ஆற்றல்.

தர்மத்தின் எல்லையாய் விளங்கும் நல்வட்டத்தைக் கொண்டவனே, அதர்மம் செய்யும் அசுரர்களை அழிக்கும் தூமகேதுவே (வால்நட்சத்திரமே)! விஷ்ணுவின் கையில் ஒளிரும் அளவற்ற பராக்கிரமம் கொண்ட சுதர்சனமே, உன்னை வணங்குகிறேன்.

1788356733721.webp
 
Back
Top