The Renuka Parameshwari mantra that repels enemies!

எதிரிகளை விரட்டும் ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்!
----------------------------------------------------------------------
(குரு உபதேசம் பெற்றே செய்யவேண்டும், அதற்கு ஒருதகுதி வேண்டும் அந்த தகுதி நம்மிடம் இருக்கிறதா? என்று குரு பரிசோதித்து அருளுவார்! , குரு இல்லாத வித்தைபாழ்! )
-----------------------------------------------------------------------
நம்முடன் இருந்தே குழிப்பறிக்கும் துரோகிகளை விலக்கி, நாம் தொடுக்கும் சுபகாரியங்களின் தடையைக்கலைந்து,
நமக்கு வாழ்நாள் வரையில் உறதுணையாயிருந்து அருள் பாலிக்கும்.

ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன், அருள் கிடைத்திடும் சுபமூலமந்திரம்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலையில் பூஜை அறையைச் சுத்தம் செய்து, தான் வடக்கு முகம் நோக்கி அமர்ந்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமப் பொட்டிட்டு, அருகம்புல் சாற்றி,

நெய்தீபமேற்றி வைத்து புஷ்பத்தினால்,

ஓம் சுக்லாம் ப்ரதரம் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்னவதனம் த்யாயே சர்வவிக்ந உபஸாந்தயே,

என்று உச்சரித்து அர்ச்சனை செய்து, வினாயகப்பெருமானே அம்மாவின் அருள் கிடைக்க அருள் தாருமய்யா என்று த்யானித்து, கற்பூர தீபாராதனை செய்ய வேண்டும்.

இப்பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

வினாயகப்பெருமான் எதிரில் செப்பு சொம்பில் சுத்த ஜலம் ஊற்றி, அதில் மாயிலையை சொருகி அதன் மத்தியில் குங்குமப் பொட்டிட்டு மட்டைத் தேங்காயை வைத்து, அதன் மீது புஷ்பம் சாற்றி,நமஸ்காரம் பண்ணனும்,

கலசத்தின் எதிரே வாழைஇலைப்போட்டு அதில் தாம்பூலம் தட்சணை வைத்து, பொங்கல் வைத்து தேங்காயுடைத்து வைத்து, கற்பூர தீபாரார்த்தி செய்து,

கீழ்வரும் மூலமந்திரத்தை ஸ்படிக மணிமாலைக் கொண்டு 108 உரு. இது போன்று 1 மண்டலம் உரு கொடுக்க சித்தியாகி, ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அன்னையின் அருள் கிடைக்கும்.

மூலமந்திரம் :

ஹரிஓம் பஹவதி
ஆதிபகவதி அனாதரட்சகி, அகிலத்தையாண்ட
ப்ரமாண்ட நாயகியே,
ஆனந்த தாண்டவி
ரேணுகா பரமேஸ்வரி தாயே, ஆதிமுதல்வியே ஹரியையும் அயனையும் படைத்த அமுதவல்லித்தாயே,
அண்டசராசரம் யாவும் துதிக்கும் ரேணுகா பரமேஸ்வரித்தாயே, பண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும்,
ஈன்ற ரேணுகா பரமேஸ்வரித்தாயே,

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும், ஓங்காரி றீங்காரி, வாவா வாவா, வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ. என்று உச்சரிக்கவும்.
 
Back
Top