• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

thanur maatha puujai

Status
Not open for further replies.

kgopalan

Active member
தனுர் மாத பூஜை.

தேவர்களுக்கு தக்ஷிணாயனம் இரவு நேரம். உத்தராயணம் பகல் நேரம். . மார்கழி மாதம் விடியற்காலை போது தேவர்களுக்கு.. இந்த விடியற்காலையில் மஹா விஷ்ணுவை எழுப்பி 16 உபசாரம் பூஜை செய்து பொங்கல் படைத்து தினந்தோறும் மிகுந்த பக்தியுடன்

சூரிய உதயத்திற்கு முந்தி ஆராதித்து வருவதால் விஷ்ணு பதவியை பெறுகிறான். இம்மாதத்தில் சிவ பூஜையும் சிறந்ததாகும்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நக்ஷத்திரதன்று சிவனையும் வழிபடுகின்றோம்.

மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி..இன்று வேத பாராயணத்துடன் விஷ்ணுவிற்கு உத்ஸவம் செய்ய வேண்டும் .
திருவோணம், ஏகாதசி, அமாவாசை, பெளர்ணமி. ஜன்ம நக்ஷத்திரம், மாச நக்ஷத்திரம், ஹரி தினங்களிலும், பக்தர்கள் வரும் போதும் துர்நிமித்தம், , துஸ் ஸ்வப்னம், மஹாபயம் வரும் போதும் மஹா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.

விஷ்ணு பூஜையை விட வேறு விசேஷ வைதீக கர்மாவே கிடையாது. விஷ்ணு ஸூக்த,ம் புருஷ ஸுக்தத்தை விட வேறு சிறந்த வேத மந்திரம் கிடையாது. ஆகையால் திருமாலை தினந்தோறும் ஆராதிக்க வேண்டும். இதில் அஷ்டாக்ஷரம் பிரதியுப சாரத்திற்கும் உபசார மந்திரமாகும்.

திருமாலை பூஜித்து நமஸ்கரித்து ஆத்ம நிவேதனம் பண்ண தகுந்ததாகும்..

பஞ்சாக்ஷர மந்திரத்தால் பரமேஸ்வரனை ருத்திர மந்திரத்தோடு விஷ்ணு பூஜையில் சொல்லப்பட்டது போல் செய்ய வேண்டியது.

பூமியை பசுஞ் சாணத்தால் மெழுகி முன்னே ப்ரும, விஷ்ணு, சிவலிங்கத்தையும் , தெற்கில் கணபதி, சுப்பிரமணியரும், மேற்கில் சூலமும், வடக்கில் நந்திகேஸ்வரரையும், ஸ்தாபித்து, அர்க்கியம், பாத்யம் கொடுத்து நிர்மால்யத்தை நீக்கி வடக்கே சண்டிகேசுவரரிடம் சேர்ப்பித்து

அதன் பிறகு ஸ்நானம், , அலங்காரம், வஸ்த்ரம், தூப தீப நைவேத்ய உபசாரங்கள் எல்லா தேவதைகளுக்கும் செய்து மந்திர புஷ்பம், ஸ்தோத்ரம் ,மற்ற உபசாரங்கள் செய்ய வேண்டியது.. இப்படி செய்வது இஹ பர ங் களுக்கு நன்மை உண்டாகும்..

சிவ லிங்கத்தை தரிசிப்பதே புண்யமானது. . ஸ்பர்சம், அர்ச்சனம், த்யானம் இதை விட ஒவ்வொன்றும் மேலானது.
நூறு முறை பாலாபிஷேகமும், இருபத்தைந்து முறை எண்ணைய் அபிஷேகமும் பழ ரஸங்களால் ஆயிரம் முறை அபிஷேகம் செய்வது மஹா அபிஷேகம் எனப்பெயர்.

வாஸனை சந்தன அபிசேகத்திற்கு கந்தர்வ லோகமும்,, பன்னீர் அபிஷேகத்திற்கு குபேர லோகமும் ,பஞ்சாம்ருத அபிஷேகத்திற்கு முக்தியும் பலனாகும்.

புதிய பட்டு வஸ்த்ரங்களையும். , மூன்று இழையுள்ள தாமரை நூல்களால் இயற்றப்பட்ட பூணலையும்,சாற்றுகிறவன் வேதாந்தத்தின் கரையை காண்பான் .வாசனை சந்தனம் லேபனம் செய்பவன் அநேக கோடி வருஷங்கள் சிவ லோகத்தில் வசிப்பான் .நெய் தீபம் ஏற்ற வே\ன்டும். அகிற்புகை யூட்டுபவர் யம வாதனை பட மாட்டார்கள்.

பாத்திரத்தில் எவ்வளவு அன்னம் நிவேதிக்க படுகிறதோ அவ்வளவு ஆயிரம் யுகங்கள் ஸ்வர்கத்தில் ஆனந்தம் அநுபவிப்பர்.
வரகு, கேழ்வரகு, (ராகி) சுரைகள் உதவாது. தாழை, குருக்கத்தி, குருந்தை,, மா, முல்லை பூக்கள் சிவபூஜைக்கு ஆகாது.

விநாயகர், சூரியன், விஷ்ணு , சிவலிங்கம், அம்பாள் இந்த ஐவரையும் பூஜிப்பவர்,, சூரிய மண்டலத்திலோ, ஹிருதயத்திலோ , ஒரு மேடையிலோ, பிம்பத்திலோ பூஜிக்க வேண்டியது. கிழக்கு முகமான தேவனை, வடக்கு முகமாயிருந்து பூஜிக்க வேண்டும்.

பூஜை அறையில் சென்று நமஸ்கரித்து ஒரு தடுக்கு மேல் அமர்ந்து சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம், சங்கல்பம் செய்து பாத்திரத்திலும், சங்கிலும் நீர் நிரப்பி. புஷ்பாக்ஷதைகள் போட்டு காயத்ரி மந்திரத்தால் அபிமந்திரித்து தீர்தங்களை ஆவாஹனம் பண்ணி ஆப்போஹி என்ற மந்திரத்தால் தன்னையும், பூஜா அறை; பூஜா த்ரவ்யங்களையும் ப்ரோக்ஷித்து 16 உபசார பூஜை செய்ய வேண்டியது.

பதார்தங்கள் குறைவாய் இருந்தாலும் மனதினால் அதிகமாக் இருப்பதாய் த்யானம் செய்து கொள்ள வேண்டியது. கடைசியில் நமஸ்கரித்து அபராத மன்னிப்பு கேட்க வேண்டியது. இப்படி செய்வதால் ஸர்வாபிஷ்டங்களையும் பெறுவான்..

பூஜையில் நிவேதனம் ஆன அன்னத்தால் வைஸ்வ தேவம் செய்யக்கூடாது.

ஆசாரியனிடத்தில் மனிதன் என்ற புத்தி வரக்கூடாது.பிம்பத்தில் கல், தாமிரம், என்ற புத்தியும்,மந்திரத்தில் ஏதோ ஒரு சப்தம் என்கிற புத்தியும் வைப்பவன் ப்ருஹ்மஹத்தி செய்தவனாகிறான்.

குருவை அவமதிப்பதால் மரணத்தையும்,மந்திரத்தை தூஷிப்பதால் தாரித்ரத்தையும் அடைந்து நரகத்தில் அவதி படுவான் என பராசர, வசிஷ்டர் முதலியோர் கூறுகின்றனர்.

வைத்தினாத தீக்ஷிதீயம் ஆஹ்நீக கான்டம் பக்கம் 242 ல் தனுர் மாத பூஜையை அதிகாலையில் ஸ்நானம் செய்து சூர்ய உதயத்திற்கு முன் முடித்து வி ட வேண்டும் .சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம், ஜபம், ஒளபாசனம் செய்து விட்டு, தினசரி செய்யும் பூஜையை தனியாக செய்ய வேண்டும்.

ஆனால் சிலர் ஆசாரத்தில் விடியற்காலை தனுர் மாத பூஜையை அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வரை நிறுத்திக்கொண்டு ஸந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் செய்து விட்டு, தூபம், தீபம், நிவேதனம், கற்பூர ஹாரத்தி முதலியன செய்து தனுர் மாத பூஜை .நித்ய பூஜை இரண்டும் சேர்த்து ஒரே பூஜையாக செய்கிறார்கள். இம்மாதிரியும் செய்யலாம்..

சூரிய உதயத்திலிருந்து தான் இன்றைய கணக்கு. சூரிய உதயத்திற்கு முன்பு நிவேதனம் செய்துவிட்டால் அது நேற்று செய்ததாக ஆகிவிடுகிறது. நேற்று செய்ததை இன்று ப்ரசாதமாக சாப்பிடுவது பழயது ஆகி விடுகிறது.

ஆதலால் சூரிய உதயத்திற்கு பிறகு வெண்பொங்கல் குக்கரில் தயாரித்து தூபம், தீபம், நைவேத்யம் கற்பூரம் காண்பித்து சாப்பிடுவதால் பழயது ஆன தோஷம் கிடையாது.

“உஷஹ்காலே து ஸம்ப்ராப்தே போதயித்வா ஜகத்பதிம் ஸமர்ப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே “என்ற தர்ம சாஸ்திர வாக்கியப்படி மார்கழி மாதம் விடியற்காலையில் மஹா விஷ்ணுவிற்கு, அபிஷேகம், அர்ச்சனை செய்து வெண் பொங்கல் படைத்து பூஜை செய்வதால்

அந்த கிராமத்திற்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும், மற்ற ப்ராணிகளுக்கும் அனைத்து தோஷங்களும் விலகி நன்மை உண்டாகும். என்பதால் எல்லா கோயில்களிலும் மார்கழி மாதத்தில் மக்களின் நன்மை கருதி விடியற்காலையில் பூஜை செய்ய படுகிறது.

ஆதலால் விடியற்காலையில் எழுந்திருந்து இதயத்தில் பிள்ளையார், சூரியன் விஷ்ணு, சிவன், அம்பாள் ஐவரையும் 16 உபசாரங்களால் மானசீக பூஜை செய்து பலன் பெறலாமே.. ,





.
 
Status
Not open for further replies.
Back
Top