• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

vaikasi maatha festivals.

Status
Not open for further replies.

kgopalan

Active member
வைகாசி மாத விரத நாட்கள்.
27-5-2014 கிருஷ்ணா அங்காரக சதுர்தசி இது கிருஷ்ண பக்ஷம், சதுர்தசி திதி செவ்வாய் =அங்காரகன். ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நாள். . இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது. இன்று சமுத்ர ஸ்நானம் செய்வது

அனைத்து பாபங்களையும் போக்கும். வீட்டிலாவது காலையில் ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுக்லாம்பரதரம்+ஓம்பூஹு: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்க்ஷயத்வார ஶ்ரீ

பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் க்ருஷ்ண அங்காரக புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட 14 தர்பணங்கள் செய்வதால் அனைத்து பாபங்களும் யம பயமும் விலகி நன்மை உண்டாகும்.

.
உபவீதி. பூணல் எப்போதும் போல் அப்படியே இருக்கட்டும். எள்ளு அக்ஷதை எதுவும் வேண்டாம். பஞ்சாத்ர உத்ரிணியால் தண்ணீர் எடுத்து அர்க்யம் விட்டால் போதும்.விரல் நுனி வழியாக தண்ணிர் தாம்பாளத்தில் விட்டால் போதும்.

1. யமம் தர்பயாமி.2. தர்மராஜம் தர்பயாமி.3. ம்ருத்யும் தர்பயாமி.4 அந்தகம் தர்பயாமி. 5. வைவஸ்வதம் தர்பயாமி. 6. கா.லம் தர்பயாமி. 7. சர்வபூத க்ஷயம் தர்பயாமி. 8. ஒளதும்பரம் தர்பயாமி. 9. தத்நம் தர்பயாமி.10.நீலம்
தர்பயாமி. 11. பரமேஷ்டிநம் தர்பயாமி. 12. வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ரம் தர்பயாமி. 14 சித்ர குப்தம் தர்பயாமி.

பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி தெற்கு திசை நோக்கி நின்று கொண்டு யம தர்ம ராஜாவை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்..

யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால;
ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரீ க்ருதாந்த ஏதத் தசக்ருஜ் ஜபந்தி.

நீல பர்வத ஸங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே.

கருப்பு மலை போன்ற உருவத்துடன் காக்ஷி அளிப்பவரும், சிவனின் கோபத்தால் தோன்றியவரும், கால தண்டத்தை கையில் தரித்திருப்பவரும் வைவஸ்வதனின்=(ஸூரியனின்) புத்ரருமான ஹே ஶ்ரீ மன் யம தர்ம ராஜ உனக்கு நமஸ்காரம்…

இதனால் அகால மரணம் சம்பவிக்காது. பாபங்கள் விலகும். யம பயம் விலகும். அனைத்து வியாதிகளும் விலகும்.

29-5-2014. வியாழன். கரவீர விரதம்.

ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ ப்ரதமை யான இன்று கரவீரம் என்னும் அரளி செடியில் பூத்திருக்கும் புஷ்பத்தை பூஜை செய்ய வேண்டும்.
பூச்செடி இருக்குமிடம் செல்ல இயலாதவர்கள் கடையிலிருந்து அரளீ

புஷ்பத்தை வாங்கி ஓர் தாம்பாளத்தில் வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து கர வீர விஷாவாஸ நமஸ்தே பானுவல்லப
மெளளி மண்டன துர்காதி தேவானாம் ஸததம் ப்ரிய.

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்தித்துக் கொள்ள வேண்டும். .பிறகு இந்த புஷ்பங்களால் சிவனுக்கோ விஷ்ணுவிற்கோ அர்ச்சனை செய்யலாம். இது கர வீர விரதம் எனப்படும்.

இதனால் குடும்பம் எப்போதும் வாஸனை உள்ளதாக இருக்கும்..

31-5-2014 சனி. ரம்பா த்ருதியை.

ரம்பா என்றால் வாழை. ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ த்ருதியை ரம்பா த்ருதியை எனப்படும் ஸ்ம்ருதி கெளஸ்துபம் -118 கூறுகிறது.
புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப சோபிதா
தத்ர ஸம்பூஜ்யேத் தேவீம் சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம்.

என்கிற படி மண்டபத்தில் நாற்புறமும் வாழை மரங்கள் கட்டி நடுவில் தேவீயின் ( தாயாரின்) விக்ரஹம் அல்லது படம் வைத்து நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரிக்கப்பட்ட பக்ஷணங்களையும் நிவேதனம் செய்து பூஜை செய்து ஸுவாஸினி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்தவைகளை தானமாக வழங்க வேண்டும் .இவ்வாறு முறையாக பூஜை செய்து விட்டு கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி தேவியை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.

வேதேஷு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ச்ருதோத் ருஷ்டஸ்ச பஹுசோந சக்த்யா ரஹித: சிவ:த்வம் சக்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா த்வம் ஸாவித்ரி ஸரஸ்வதி பதிம்
தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.

மேலும் யோஷித: புருஷோ வாபி க் யாதம் ரம்பா வ்ருதம் புவி
பார்யாம் புத்ரம் க்ருஹம் போகாந் குலவ்ருத்தி மவாப்நுயு:

என்பதாக பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா பூஜையை செய்வதால் நல்ல கணவன் நீண்ட ஆயுள், நல்ல குழந்தைகள், நல்ல வீடு , அனுபவிக்க தகுந்ததான போக வஸ்துக்கள்
வம்ச வ்ருத்தி ஆகியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.

சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும்.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.

அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது
 
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும்.
.
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில்.
ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அல்லது கெடுதலான இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷத்தை கொடுக்கும். இதனால் காலத்தில் திருமணம் நடக்காது.

அல்லது திருமணம் ஆனவர்களிடம், ஒற்றுமையின்மை , கருத்து வேறுபாடு, தம்பதிகள் பிறிவு ஏற்படும். இந்த குறைகள் நீங்க இந்த கெளரீ பூஜை தக்க பரிஹாரமாகும் .நோய்கள் நீங்கும், ஆரோக்யம் ஏற்படும்.. ஒற்றுமை ஏற்படும்.

ஸம்வத்ஸர கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ ப்ரதமை திதி: 31-03-2014.
இன்று இந்த பூஜை செய்வதால் குடும்பத்தில் திருமணம் , கிருஹப்ரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் பூராவும் நடக்கும்.

புன்னாக கெளரீ வ்ரதம்: .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை
திதி 30-05-2014

புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும்

.புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.

கதளீ கெளரீ வ்ரதம்:01-06-2014; ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி

வாழை மரத்தடியில்/ வாழை இலை மீது அம்மனை வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜையில் 108 வாழை பழங்கள் நிவேத்யம் செய்து அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும்.

இதனால் ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கி திருமணம் , குழந்தை செல்வம் போன்ற நன்மைகள் கிட்டும்.
1-6-2014. ஞாயிறு. உமா அவதாரம்.

ஜ்யேஷ்ட மாத சுக்ல சதுர்த்தி ஹிமவானின் மகளாக தேவி அவதரித்த நன்னாள். . . தேவி சின்னஞ்சிறு குழந்தையாக காட்டில்

தவம் செய்த போது உ=குழந்தாய்; மா=தவம் வேண்டாம் என அனைவரும் கூறினதால் உமா என்று அழைக்கபட்டாள்..

இன்று உமா மஹேஸ்வரரை பூஜை செய்து, ஸ்தோத்ரம், பாராயணம் செய்வது ஸெளபாக்கியத்தையும், ஸெளமாங்கல்யத்தையும் தரும்.

8-6-2014. ஞாயிறு. கங்காவதாரம். பாபஹர தசமி.

ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ தசமி திதியும் ஹஸ்த நக்ஷத்திரம் உள்ள
நாளில் பகீரத மஹா ராஜாவின் கடும் முயற்சியால் கங்கா தேவி ஆகாசத்திலிருந்து பூமிக்கு அழைத்து வரப்பட்டாள்.

இந்த நன்னாளே கங்காவதாரம் என்று அழைக்கபடுகிறது .இதில் சக்தி உள்ளவர்கள் கங்கையில் ஸ்நானம் செய்யலாம். .அல்லது மற்ற நதிகளிலும் கங்கையை ஸ்மரித்து ஸ்நானம் செய்யலாம்.. அல்லது

வீட்டிலோ கங்கையை மனதால் நினைத்துக்கொண்டு முறையாக ஸ்நானம் செய்ய வேன்டும்.

வீட்டில் உள்ள கங்கை சொம்பு ஜலத்தை பூஜித்து கங்கா தீர்தத்தினால் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம் .அனைத்து இன்னல்களும் விலகி மன நிம்மதி ஏற்படும்.

ராமாயணத்திலுள்ள கங்காவதார கட்டம் பாராயணம் செய்யலாம்.
.
தீபாவளி நாள் போல் இன்றும் எல்லா ஜலத்திலும் கங்கையின் ஸான்னித்யம் இருப்பதாக ஸ்காந்த புராணம் கூறுகிறது. கங்கா ஸ்நான பலன் உண்டு,

இன்று முறைப்படி ஸ்நானம் செய்வதால் பத்து விதமான பாபங்களிலிருந்தும் விடுபடுவான்.. ஆகவே இந்த நாளுக்கு பாபஹரா தசமீ என்ற பெயர் உண்டு.

ஜ்யேஷ்டே மாஸி , சுக்ல பக்ஷே தசம்யாம் பானு ஹஸ்தயோ: வ்யதீபாதே கரஜ கரணே கன்யா சந்த்ரே வ்ருஷே ரவெள என்பதாக

ஜ்யேஷ்ட மாதம், சுக்ல பக்ஷம், தசமி திதி புதன் கிழமை, ஹஸ்த நக்ஷத்திரம், வ்யதீபாத யோகம், கரஜ கரணம், கன்யா ராசியில் சந்திரன் இருத்தல், வ்ருஷப ராசியில் சூரியன் இருத்தல்.

ஆனந்த யோகம்(புதனும் ஹஸ்த நக்ஷதிரமும் சேருதல்) ஆகிய பத்தும் ஒன்று சேருகின்றன. ஆண்கள், பெண்கள் என்று ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் இன்று காலையில் எழுந்து தினந்தோறும் செய்யும் நித்ய கர்மாகளையும் முடித்து விட்டு

மம ஏதஜ் ஜன்மதி, ஜன்மாந்திர ஸமுத்பூத த்ரிவித காயிக, , சதுர்வித
வாசிக, த்ரிவித மாநஸேதி ஸ்காந்தோக்த தசவித பாப நிராஸ, த்ரயஸ் த்ரிம்சத் சத பித்ருத்தார ப்ருஹ்ம லோகா (அ)வாப்த்யாதி பல

ப்ராப்தியர்த்தம், ஜ்யேஷ்ட மாஸ, ஸித பக்ஷ, தசமி, பானு வாஸர, ஹஸ்த தாரக, கரஜ கரண, வ்யதீபாதா(ஆ)நந்த யோக கன்யாஸ்த சந்த்ர, வ்ருஷபஸ்த ஸூர்யேதி தச யோக பர்வணி பாபஹர தசமீ

மஹா புண்ய காலே ( அஸ்யாம் மஹாநத்யாம்) ஸ்நானம் அஹம் கரிஷ்யே.

((இவைகளில் தசமியும் வ்யதீபாத யோகமும் மிக முக்ய மானது.. மற்றவை ஒரு சில வருஷங்களில் ஒன்று சேரும். )

என்று சங்கல்பம் செய்து கொண்டு முறைப்படி, நதி அல்லது, குளம், கிணறு, அல்லது ஏரி, அல்லது வீட்டிலேயோ கீழ் கண்ட ஸ்லோகங்கள்

சொல்லி கங்கா தேவ்யை ப்ரார்தனை செய்துகொண்டு பத்து விதமான பாபங்களும் விலகுவதாக மனதில் எண்ணிக்கொண்டு பத்து தடவை ஸ்நானம் செய்ய வேண்டும்.

கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜநானாம் சதைரபி முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி.

நமோ பகவத்யை தச பாப ஹராயை கங்காயை நாராயண்யை, ரேவத்யை சிவாயை தக்ஷாயை அம்ருதாயை விச்வரூபிண்யை நந்தின்யை தே நமோ நம:

இவ்வாறு முறைப்படி ஸ்நானம் செய்த பிறகு ஆடை உடுத்தவும். நெற்றி கிட்டு கொள்ளவும். மயாக்ருத தசஹரா ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே. கை நிறய சுத்த ஜலம் எடுத்து கிழக்கு நோக்கி கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் விட வேண்டும்.

நம: கமல நாபாய நமஸ்தே ஜல சாயினே நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச க்ருஹானார்க்யம் நமோஸ்துதே. ஜலசாயினே நம: இதமர்க்யம்.

ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ தேஜோராசே ஜகத்பதே
அநுகம்பய மாம் பக்த்யா க்ருஹானார்க்யம் நமோஸ்துதே.

மஹாபல ஜடோத் பூதே க்ருஷ்ணே உபயதோமுகி வேதே ந ப்ரார்திதே கங்கே க்ருஹானார்க்யம் நமோஸ்துதே.க்ருஷ்ணாவேண்யை நம: இதமர்க்யம். இவ்வாறு அர்க்யம் தந்துவிட்டு

மயாக்ருத தசஹரா ஸ்நானாங்கம் யதா சக்தி தானம் அஹம் கரிஷ்யே.:என்று சொல்லி பத்து ஏழைகளுக்கு பத்து விதமான பழங்களும்,. அரிசி, பதினாறு கைப்பிடி அளவுக்கு குறையாமல் தானமாக வேண்டும்.
 
valkasi maatha festivals contd.

மாலையில் விஷ்ணு ஆலயம் சென்று விஷ்ணு சன்னதியில் பத்து தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு பத்து விதமான புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு பத்து விதமான உணவு பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து
சாப்பிட செய்ய வேண்டும். இவ்வாறு முறையாக இந்த தசஹரா வ்ருதத்தை செய்பவர்கள் பத்து விதமான பாபங்களிலிருந்தும்

விடுபட்டு அனைத்து ஸுகங்களயும் அடைவார்கள் என்கிறது ஹேமாத்ரி என்னும் புத்தகம்.

தவிர்க்க வேண்டிய பத்து பாபங்கள்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும் செய்ய படும் பாபங்கள் பத்து விதம்..

உடலால் செய்ய படும் பாபம்.மூன்று.

1. தனக்கென்று கொடுக்கபடாத பொருள்களை தான் எடுத்து உபயோகித்து கொள்வது.2. விசேஷமான விதியில்லாமல் உயிர்களை ஹிம்சிப்பது. 3. மற்றவர்களின் மனைவியினிடத்தில் தவறான எண்ணத்துடன் பழகுவது.

வாக்கால் செய்யபடும் பாபங்கள் நான்கு. 1. கடுஞ் சொற்கள் பேசுதல்.2 பொய் பேசுதல்;3 ஒருவரை பற்றி மற்றவரிடம் கோள் சொல்லுதல். 4
தேவையற்ற சம்பந்த மில்லாத –பேச்சுக்களை பேசுதல்.

மனதால் செய்யும் பாபங்கள். மூன்று. மற்றவர்களின் பொருட்களை அடைய வேண்டும் என எண்ணுதல்.2. மற்றவருக்கு கெடுதல் நினைத்தல். 3. காரணமில்லாமல் மற்றவரை வெறுத்து ஒதுக்குதல்.

இந்த பாபங்களே நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணமாகிறது..
துன்பம் ஏற்படாமலிருக்க அதற்கு மூல காரணமான பாவங்களை அவ்வப்போது போக்கடித்துக்கொள்ள வேண்டும்.

9-6-2014 நிர்ஜல ஏகாதசி

ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர்.
ஏகாதசி உபவாசத்திற்கு கலி தோஷத்தால் ஏற்படும் பாபங்களையும் துன்பங்களையும் போக்கடிக்கும் சக்தி உண்டு.

ஆதலால் எட்டு வயது முதல் எண்பது வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோரும் ஏகாதசியன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்

.( வியாதியஸ்தர்கள் , கர்பிணி பெண்கள் தவிர).

ஒரு சமயம் பீமன் வேத வ்யாஸ மஹரிஷியிடம் என்னால் ஏகாதசி விரதம் இருக்க முடியவில்லையே என்ன செய்வது என்று கேட்க
ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று மட்டும் ஜலம் கூட

அருந்தாமல் உபவாசம் இரு. இதுவே ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசமிருந்த பலன் கிடைக்கும் என்று க்ருஷ்ண பரமாத்மா கூறியதை பீமனுக்கு கூறினார்..

இவ்வாறே பீமனும் சுத்த உபவாசமிருந்து த்வாதசியன்று சாப்பிட்டார். அது முதல் இதற்கு பீம ஏகாதசி என்றும் நிர்ஜல ஏகாதசி என்றும் பெயர் ஏற்பட்டது. .

இன்று ஒரு நாள் உபவாசமிருந்தால் ஆண்டு முழுவதும் ஏகாதசி வ்ருதம் இருந்த பலன் கிட்டுமே.. ஆதலால் முயற்சிக்கலாமே..

10-06-2014. செவ்வாய். கவாமயன துவாதசி.

ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ துவாதசியன்று காலையில் த்ரிவிக்ரம மூர்த்தியான மஹா விஷ்ணு படத்தை துளசி, மல்லிகை பூ

ஆகியவற்றால் பூஜை ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்து மாம்பழம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

அஹோராத்ரேண துவாதஸ்யாம் ஜ்யேஷ்டே மாஸி த்ரிவிக்ரமம்
கவாமயன மாப்நோதி அப்ஸரோபிஸ்ச மோததே.

என்பதாக இன்று த்ரிவிக்ரம மூர்த்தியை பூஜிப்பதால் யாகங்களின் சிறந்ததான கவா மயனம் என்னும் யாகம் செய்த பலன் கிட்டும்.
என்கிறது ஶ்ரீ மஹாபாரதம் தான தர்ம ப்ரகரணம்..

11-6-2014. புதன். வைகாசி விசாகம்.

கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் தமிழ் கடவுள் முருகன் அவதரித்த நன்னாள். . இன்று முறையாக சிவப்பு புஷ்பங்களால் பூஜை செய்து
ஸ்கந்த சஷ்டி கவசம் போன்றவைகள் படித்து தேனும் தினை மாவும் நிவேதனம் செய்து நன்மை அடையலாமே.

12-6-2014. வியாழன் வட சாவித்ரி வ்ருதம்.

வட வ்ருக்ஷம் என்பது ஆல மரம்.. இந்த ஆல மரம் நல்ல குழந்தைகளையும், நல்ல ஞானத்தையும் வழங்கும் சக்தி வாய்ந்தது.
ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆல மரத்து அடியில் அமர்ந்து

ஸநகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்கிறார். ஆல மரம் போல் தழைத்து வாழ வேண்டும் என்பது பழமொழி.

ஜ்யேஷ்டே மாஸி ஸிதே பக்ஷே பூர்ணிமாயாம் இதம் வ்ருதம்
என்கின்ற படி ஜ்யேஷ்ட மாத பெளர்ணமியான இன்று இந்த வட ஸாவித்ரீ வ்ருதத்தை செய்யலாம்.

இதை 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களிலோ அல்லது 12ஆம் தேதியான இன்றோ (பெளர்ணமி யன்று மட்டுமோ) செய்யலாம்.

பெண்கள் தங்களது ஸெளபாக்கியம் நிலைக்கவும் , அன்பான கணவன், நீண்ட ஆயுள் முதலியவற்றை அடையவும் இந்த ஆல மர பூஜை செய்யலாம் .பவிஷ்யோத்தர புராணம் இதை செய்வதால் பெண்களுக்கு ஒரு போதும் வைதவ்யம் ஏற்படாது என்கிறது.

ஸாவித்ரி தேவி இந்த வ்ருதம் செய்து தான் ஸத்யவானுக்கு அல்பாயுஸ் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டு யமனிடமிருந்து தன் கணவனை மீட்டாள்.;

ஆதலால் இதற்கு வட ஸாவித்ரீ வ்ருதம் என்று பெயர்.

ஸுவாசினி பெண்கள் இன்று காலையில் ஸ்நானம் செய்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு சுக்லாம்பரதரம்+சாந்தயே. மமோபாத்த+
ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் “”மம ஜன்ம ஜன்மநி அ வைதவ்ய

ப்ராப்தயே பர்து: சிராயு ராரோக்ய ஸம்பதாதி ப்ராப்தி காமநயா ஸாவித்ரீ வ்ருதம் கரிஷ்யே” என்று ஸங்கல்பம் செய்து கொண்டு அருகே இருக்கும் ஆல மரத்திற்கு சென்று குடத்தில் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு

வட மூலே ஸ்திதோ ப்ருஹ்மா வட மத்யே ஜனார்த்தன:
வடாக்ரே து சிவம் வித்யாத் ஸாவித்ரீ வ்ருத ஸம்யுதா வட
ஸிஞ்சாமி தே மூலம் ஸலிலைரம்ருதோபமை:

என்ற ஸ்லோகம் சொல்லி ஆல மரத்திற்கு நிறைய ஜலம் விட
வேண்டும் .பிறகு பக்தியோடு ஐந்து அல்லது ஏழு தடவை ஆல
மரத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

வீட்டில் ஹால் சுவற்றில் கிழக்கு முகமாக மஞ்சள் அல்லது காவியால் ஆல மரம் படம் வரைந்தோ, அல்லது ஒரு சுத்தமான துணி விரித்து

அதில் ஒரு பாத்ரம் நிறைய பச்சரிசி வைத்து அதில் சில தங்கம் அல்லது வெள்ளி காசுக்களை வைத்து அதில் ஸாவித்ரியை பூஜை செய்யலாம்.

அஸ்மின் சித்ர படே அல்லது அஸ்மின் கலசே வட வ்ருக்ஷம், ப்ருஹ்மாணம், ஸாவித்ரீம், ஸத்யவந்தம், தர்மராஜம், நாரதம் ச ஆவாஹயாமி.
–ஸ்தாபயாமி- பூஜயாமி என்று பூக்களை போட்டு ஆஸனம் முதலிய 16 உபசார பூஜை செய்து தேங்காய், பழம், அச்சு வெல்லம் நிவேதனம் செய்ய வேண்டும்.

ஓங்கார பூர்விகே தேவி ஸர்வ துக்க நிவாரணி வேத மாதர் நமஸ்துப்யம் ஸெளபாக்கியஞ்ச ப்ரயஸ்சமே என்று ப்ரார்தித்துக் கொள்ளவும். கையில் புஷ்பம் அக்ஷதை வைத்துக்கொண்டு

கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி சுத்த ஜலத்தால் அர்க்யம் தர
வேன்டும்.

ஓங்கார பூர்விகே தேவி ஸர்வ துக்க நிவாரணீ வேத மாதர் நமஸ்
துப்யம் அ வைதவ்யம் ப்ரயஸ்சமே.வேத மாத்ரே நம: இதமர்கியம்.

பதிவ்ரதே மஹா பாகே வஹ்ணி யாநே சுசி ஸ்மிதே த்ருடவ்ருதே
த்ருடமதே பர்துஸ்ச ப்ரியவாதினி ஸாவித்ரியை நம; இதமர்கியம்.

அ வைதவ்யம்ஸ்ச ஸெளபாக்கியம் தேஹி த்வம் மம ஸுவ்ரதே.
புத்ரான் பெளத்ராம்ஸ்ச ஸெளக்யஞ்ச க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸாவித்ரியை நம: இதமர்க்கியம்.

த்வயா ஸ்ருஷ்டம் ஜகத் ஸர்வம் ஸ தேவாஸுர மாநவம் ஸத்ய
வ்ரத தரோ தேவ ப்ருஹ்ம ரூப நமோஸ்துதே ப்ருஹ்மணே நம;
இதமர்க்கியம்.

த்வம் கர்ம ஸாக்ஷி லோகானாம் சுபா சுப விவேசக:
க்ருஹாணார்க்கியம் தர்மராஜ வைவஸ்வத நமோஸ்துதே.
யமாய நம: இதமர்க்கியம்.

பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.
அவியோகோ யதா தேவ ஸாவித்ர்யா ஸஹிதஸ்ய தே
அவியோக ஸ் ததா ஸ்மாகம் பூயாஜ் ஜன்மநி ஜன்மநி.

பிறகு ஒரு மூங்கில் தட்டில் மஞ்சள், குங்குமம், வளையல் சீப்பு, கண்ணாடி மாலை (புடவை) ரவிக்கை துண்டு முதலிய ஸெளபாக்கிய த்ரவ்யங்கள் தக்ஷிணை வைத்து

ஸெளபாக்கிய த்ரவ்யம் ஸுபகே வ்ரத ஸம்பூர்த்தி ஹேதவே
ப்ருஹ்மண: ப்ரீண நார்த்தாய ஸாவித்ரீ ப்ரதிக்ருஹ்யதாம் இதம்
ஸெளபாக்கிய த்ரவ்யம் ஸாவித்ர்யாதி ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே .

என்று சொல்லி அம்மன் சன்னதியில் வைத்து விட்டு , பிறகு அதை வயதான சுமங்கலி பெண்களுக்கு தந்து விட வேண்டும். அன்று இரவு
ஸாவித்ரீ ஸத்யவானீன் சரித்ரத்தை படிக்கவோ, கேட்கவோ வேண்டும்.

இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் ஆல மரத்திற்கு ஜலம் விட்டு
விட்டு நமஸ்கரித்து, அர்க்யம் தந்து சரித்ரம் படிக்கலாம்.

இதனால் எப்படி பட்ட ஆபத்துகளிலிருந்தும் தனது கணவனை மீட்டு விடலாம். .கருத்து வேறுபாடுகள் நீங்கி கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும்..

12-6-2014. காஞ்சி மஹா பெரியவர் பிறந்த தினம். வைகாசி மாதம் அநுஷ நக்ஷத்திரம். இன்று அவரை வணங்கலாம். இவர் சரித்திரத்தை உள்ளத்தில் நினைக்கலாம்.

13-6-2014 குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க படி 19-6-14 திருக்கணித பஞ்சாங்கப்படி..; குரு ப்ரீதியாக ஶ்ரீ லக்ஷ்மீ ந்சிம்மருக்கு அல்லது தக்ஷிணா மூர்த்தி வழிபாடு செய்யலாம். வேதம் படித்தவர்களுக்கும், வேதம் படிக்கும் மாணவர்களுக்கும் வஸ்த்ர தானம் , அன்னதானம் செய்யலாம்.
 
aani maatham festivals.

ஆனி மாதம் விரத நாட்கள்.

23-6-2014. திங்கள். ஶ்ரீ கூர்ம ஜயந்தி அவதாரம்.
கூர்மாவதாரம் மஹா விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம்.இன்று மஹா விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபடவும். .பாற்கடலை கடையும் போது மந்த்ர மலையை ஆடாமல் அசையாமல் நிற்க வைத்தார்..

21 -6-14 ராஹு கேது பெயர்ச்சி.
28-06-2014. வாராஹி நவராத்ரி. ஆரம்பம் 6-7-2014 முடிய.

2-7-14. சமி கெளரி வ்ரதம். பரிக்ஷைகளில் வெற்றி பெற.

தாம்பத்யார்த்த உமாம் ஸதீம் என்பதாக கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அன்பு பாசம் ஏற்பட உமை என்னும் கெளரியை பார்வதியாக பூஜிக்க வேன்டும்.

ஆஷாட மாத சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று சமீ கெளரி விரதம் அநுஷ்டிக்கலாம். அதாவது வன்னி மரத்தடியில் சிவனுடன் கூடிய பார்வதியின் படத்தை வைத்து பூஜை செய்ய வேன்டும்.

அல்லது வன்னி மரத்தின் கிளைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்து அவற்றின் நடுவில் அம்மனை கெளரியாக பாவித்து பூஜிக்கலாம். வஹ்னி மரத்து இலைகளால் அர்சிக்கலாம். இதனால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை,

கல்வியில் நாட்டம், பரிக்ஷைகளில் வெற்றி, நல்ல அறிவாற்றல், கூர்மையான புத்தி ஞாபக சக்தி கிட்டும்..

.. . குமார சஷ்டி 3-7-14
ஆஷாட சுக்ல சஷ்டீ து திதி; கெளமாரிலா ஸ்ம்ருதா குமார மர்ச்சயேத் தத்ர பூர்வத்ரோபேஷ்ய வைதிநம்.

ஆஷாட மாத சுக்ல சஷ்டி திதிக்கு குமார சஷ்டி எனப்பெயர். இன்று பகலில் உபவாசமிருந்து குமாரன் எனும் முருகனை பலவித புஷ்பங்களால் சுப்ரமண்ய ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்ர அர்சனைகள் செய்யவும்.
இதனால் எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கும். ரத்த கொதிப்பு போன்ற ரத்த நோய்கள் விலகும். காலத்தில் ஸந்தான பாக்கியம் ஏற்படும்.

4-7-14.
ஆனி திருமஞ்சனம்.
திருமஞ்சனம் என்றால் குளிப்பாட்டுதல்= அபிஷேகம் செய்தல் .என்று பொருள். நடராஜருக்கு ஒரு வருஷத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் .நடைபெறும். ஆனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று பால் தயிர், தேன்,

பழரஸம், இளநீர் முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்வதே ஆனி திருமஞ்சனம் எனப்பெயர்.. அருகிளுள்ள ஆலயத்திற்கு சென்று வழிபடலாமே.

6-7-14. சுதர்சன ஜயந்தி: ஆனி மாதம் சித்திரை நக்ஷத்திரம்.

பக்தரான அம்பரீஷ சக்ரவர்த்தியை துர்வாச முனிவரின் கோபத்திலிருந்து காப்பாற்ற மஹா விஷ்ணு ஶ்ரீ ஸுதர்சன ஆழ்வாராக அவதரித்த நன்னாள்..

ஶ்ரீ சுதர்சன சக்கிரத்தை பூஜித்தால்-உபாசித்தால் சத்ருக்கள் விலகுவார்கள். உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் ஏற்படும். அனைத்து பயங்களும் விலகும்.

8-7-14. சயன ஏகாதசி;
ஏகாதச்யாம் சுக்லாயாம் ஆஷாடே பகவான் ஹரி; புஜங்க சயனே சேதே க்ஷீரார்ண ஜலே ஸதா; நித்ராம் த்யஜதி கார்திக்யாம் தயோ: ஸம்பூஜயேத் ஸதா ப்ருஹ்மஹத்யாதி கம் பாபம் க்ஷிப்ரமேவ வ்யபோஹதி.

ஒரு வருஷத்து 25 ஏகாதசிகளில் 1. ஶ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் (படுக்கும்) ஆஷாட சயன ஏகாதசி.; 2. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. 3. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையிலிருந்து

எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக முக்யமானவை. .இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசமிருந்து ஶ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்

.நாம் அறியாமல் செய்த ப்ருஹ்மஹத்தி போன்ற பாபங்களும் அகலும். ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஆஷாட சயன ஏகாதசியன்று பகலில் தம்பதிகளாக ( கணவன் மனைவி ) எதுவும் சாப்பிடாமல்

( சக்தி அற்றவர்கள் பால் பழம் சாப்பிடலாம்) உபவாசமிருந்து , மாலையில் சூர்ய அஸ்தமனமான பின்பு , அழகான பஞ்சாலான (பட்டு) மெத்தையில் ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் படம்

வைத்து அல்லது விக்கிரஹம் வைத்து , மல்லிகை, தாமரை பூக்களால் மஹா விஷ்ணூ மஹா லக்‌ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்து பால் சாதம் நிவேதனம் செய்து நமஸ்கரித்து

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து இரவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணுவையும் ஶ்ரீ மஹா லக்ஷ்மியையும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.

வாஸுதேவ ஜகத்யோநே ப்ராப்தேயம் த்வாதசீ தவ புஜங்க சயநே (அ)ப்தெள
ச ஸுகம் ஸ்வபிஹி மாதவ. இயம் து த்வாதசீ தேவ சயனார்த்தம்

விநிர்மிதா அஸ்யாம் ஸுப்தே ஜகன்னாதே ஜகத்ஸுப்தம் பவே திதம்
விபுத்தே த்வயீ புத்யேத ஸர்வமேதச் சராசரம்..

ஹே வாஸுதேவ , உலகமனைத்தும் தோன்றுவதற்கு காரணமானவரே இந்த த்வாதசியில் பாற்கடலில் பாம்பின் மேல் ஸுகமாக தூங்குங்கள்.
தூங்கு வதற்காகவே இந்த த்வாதசீ ஏற்பட்டுள்ளது. இன்று ஜகன்னாதரான

தாங்கள் உறங்குவதால் சகல உலகமும் உறங்கும். தாங்கள் விழித்தால் அனைத்து சராசரங்களும் விழித்துக்கொள்ளும்.. என்று சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணு மேல் பக்தியுடன் புஷ்பங்கள் போட்டு ப்ரார்தித்துக் கொள்ளலாம்..

இவ்வாறு செய்வதால் படுக்க நல்ல வீடும் நல்ல படுக்கையும் படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் ஸுகமான வாழ்க்கையும் அமையும்.

8-7-14 முதல் 3-11-14 முடிய அதாவது சயனிக்கும் ஏகாதசி முதல் உத்தான ஏகாதசி முடிய லக்ஷியத்தை நிறைவேற்றும் லக்ஷ ப்ரதக்ஷிணம் செய்யலாம். இதையே வலம் வருதல் சுற்றி வருதல் என்பர்.

தெய்வ வழிபாட்டில் மிக சுலபமான வழி ப்ரதக்ஷிணம் செய்வது ஆகும்.
யானி கானி ச பாபானி ஜன்மாந்திர க்ருதானி ச தானி தானி வினஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

ஆலயங்களில் நாம் ப்ரதக்ஷிணம் செய்யும் போது நாம் வைக்கும் ஒவ்வொரு காலடியும் முன் ஜன்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதையே வ்ரதமாக செய்யலாம் என இந்த வ்ரதத்தை வேத வ்யாஸர் தர்மபுத்ரருக்கு கூறியதாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.ஆலயங்களில்
காலை மாலை ப்ரதக்ஷிணம் செய்யலாம். ஆனால் அரச மரத்தையும் துளசியையும் காலையில் மட்டும் தான் சுற்ற வேண்டும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஜாதி மத வேறு பாடின்றி அனைவரும் இந்த ப்ரதக்ஷிண வ்ருதத்தை மேற்கொள்ளலாம்..

8-7-14 முதல் 3-11-14 முடிய 115 நாட்களில் ஒரு லக்ஷம் தடவை சுற்றினால் மிக உத்தமம். இயலாதவர்கள் 25000 அல்லது 10,000 அல்லது 1000 தடவையாவது

இந்த நான்கு மாதங்களில் ப்ரதக்ஷணம் செய்வது மிகுந்த பலனை வாரி வழங்கும். அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்களிலிருந்து விடுபடலாம்.

இந்த ப்ரதக்ஷிணத்தை அருகில் உள்ள கோவிலில் உள்ள சிவன், அல்லது அம்மனுக்கு, விஷ்ணுக்கு, ஆஞ்சனேயருக்கு , கனேசன் ,பசுமாடு , அரச மரம், துளசி அல்லது பிடித்த தெய்வம் எதற்கும் செய்யலாம்.

ப்ரதக்ஷிணம் செய்யும் போது நிதானமாக மெதுவாக நடந்து செல்ல வேண்டும். ஓடக்கூடாது. தினசரி செய்யும் ப்ரதக்ஷிணங்களை கணக்கு எடுத்து க்கொள்ளவும்.

ஶ்ரீ மஹாவிஷ்ணுவை ப்ரதக்ஷ்ணம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.அனந்தம் அவ்யயம் விஷ்ணும் லக்ஷ்மீம் நாராயணம் ஹரீம் ஜகதீச நமஸ்துப்யம் ப்ரதக்ஷிண பதே பதே..

ஶ்ரீ ஆஞ்சனேயரை ப்ரதக்ஷிணம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

ராம தூத மஹா வீர ருத்ர பீஜ ஸமுத்பவ அஞ்சனா கர்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்துதே..

பசுவை ப்ரதக்ஷிணம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவணாநி சதுர்தச யஸ்மாத் தஸ்மாத் சிவம் மே ஸ்யாத் இஹ லோகே பரத்ர ச

துளசியை ப்ரதக்ஷிணம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
ப்ரஸீத மம தேவேசி க்ருபயா பரயா முதா அபீஷ்ட ஸித்திம் ஸெளபாக்கியம் குரு மே மாதவ ப்ரியே.

12-7-14. வ்யாஸ பூஜை. ஆ கா மா வை.

.பிறவியின் பயனான மோக்ஷத்தை அடைவதற்கு ப்ருஹ்ம ஸூத்ரம் இயற்றி பாமர மக்களுக்கு நல் வழி காட்டிய ப்ருஹ்ம நிதியும் , பதினெட்டு புராணங்களையும் இயற்றி வேதங்களை

நான்காக பிறித்து உலக மக்களை அநுக்கிரஹித்தவரும் , அனைத்து மஹரிஷிகளுக்கும் தலைவருமான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் ஶ்ரீ வேத வ்யாஸ மஹரிஷியை ஒவ்வொருவரும் பூஜை செய்ய வேண்டும்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பெளத்ரமகல்மஷம் பராசராத்மஜம்
வந்தே சுகதாதம் தபோநிதிம் ..

வேதங்களை நமக்கு வழங்கிய ஶ்ரீ வ்யாசரையும் மற்றும் நமது குருமார்களையும் பூஜை செய்ய வேண்டிய நாள் இந்த குரு பூர்ணிமா
இன்று முடிந்த வரை வீட்டிலோ பொது இடத்திலோ இந்த பூஜையை செய்ய முயற்சிக்கலாம்..ஒரு பீடத்தில் மஞ்சள் அக்ஷதைகளை மண்டலமாக போட்டு

அதன் மீது சுமார் 45 எலிமிச்சம் பழங்களை வரிசையாக வைத்து அந்த பழங்களில் தேவதைகளை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அக்ஷதை மண்டலத்தின் நடுவில் ஐந்து எலுமிச்சம் பழங்களை வைத்து
1. க்ருஷ்ணர்.; 2, வாஸுதேவர். 3. ஸங்கர்ஷணர். 4. ப்ரத்யும்னர். 5. அநி.
ருத்தர். என்று ஐந்து தேவர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

பிறகு இந்த ஐந்துக்கும் தெற்கில் ஐந்து எலுமிச்சம்பழம் வைத்து 1. வ்யாஸர்,2. ஸுமந்து; 3. ஜைமினி 4 வைசம்பாயனர். 5. பைலர் என்ற ஐந்து முனிவர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

பிறகு வடக்கு பக்கத்தில் ஐந்து பழங்களை வைத்து 1. ஆதி சங்கரர். 2. பத்மபாதர். 3; ஸுரேச்வரர். 4 தோடகர். 5 . ஹஸ்தாமலகர். .என்ற ஐந்து ஆசார்ய புருஷர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

ஶ்ரீ க்ருஷ்ணருக்கு இரண்டு பக்கத்தில் இரண்டு பழங்களை வைத்து ப்ருஹ்மா, ருத்ரன், இருவரையும் நான்கு திக்குகளில் நான்கு பழங்களை

வைத்து 1. ஸனகர். 2 ஸநந்தனர். 3. ஸனத் குமாரர். 4 ஸனத் ஸுஜாதர் களையும் பூஜிக்கவும். இவர்கள் ப்ருஹ்மாவின் மானஸ புத்ரர்கள்.

ஶ்ரீ க்ருஷ்ணருக்கு கிழக்கில் ஐந்து பழங்கள் வைத்து 1. குரு. 2. பரம குரு.3. பரமேஷ்டி குரு. 4. பராத்பர குரு. 5. ப்ரம்ம வித்யா ஸம்ப்ரதாய போத குருக்கள் ஆகியோரையும் பூஜிக்கவும்.

பிறகு த்ராவிடாசார்யார் ஐவரையும் 1. த்ராவிடாசார்யார். 2. கெளட பாதர். 3. கோவிந்த பகவத் பாதர்கள்.4. ஸங்க்ஷேப சாரிர காசார்யாள் 5. விவரணா சார்யாள் இவர்களையும் 1. சுகர்; நாரதர் இவர்களையும்.

அதன் பிறகு 1. இந்த்ரன். 2. அக்னி. 3. யமன். 4. நிருரிதி. 5. வருணன். 6. வாயு. 7. ஸோமன். 8 ஈசானன் என்ற எட்டு திக் தேவதைகளையும்

அதன் பிறகு 1, கணேசர். 2. க்ஷேத்ர பாலகர். 3. துர்கா. 4. ஸரஸ்வதி. இவர்களையும் ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

இங்கு குறிப்பிட்ட எல்லா தேவதைகளையும் தனி தனியே பதினாறு உபசார பூஜைகளையும் செய்து பூஜிக்கவும்.. இந்த வ்யாஸ பூஜையை அனைவரும் செய்து அல்லது பூஜையில் கலந்து கொண்டு ச்ரேயஸ்ஸை அடையலாம்…

12-7-2014. ஆ கா மா வை.

ஆஷாடம், கார்திகம், மாகம், வைசாகம். ஆகிய நான்கு மாத பெயர்களின் முதல் எழுத்தின் சுருக்கமே ஆகாமாவை என்ற சொல்.
இந்த நான்கு மாதங்களிலும் பெளர்ணமியன்று ஸூர்ய உதயத்திற்கு 96

நிமிடங்களுக்கு முன் முறையாக ஸ்நானம் செய்ய வேன்டும். இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், ஸுகம்; தைர்யம், ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும் என்கிறது ஸத்யவ்ருத ஸ்ம்ருதி..
 
அற்புதம் ஐயா.!!! மிக மிக பயனான தகவல்கள்.... தங்களின் இந்த சேவைக்கு மிகவும் கடமைபட்டுள்ளோம்.....!!!
 
Status
Not open for further replies.
Back
Top