Surya Gayathri Mantram

praveen

Life is a dream
Staff member
சூரிய காயத்ரி மந்திரம்:

"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி | தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||".

சூரிய பகவான் தனது நீச வீடான துலாம் ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.

ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பகவான் நீசத்தன்மையில் பயணம் செய்வார்.

பொதுவாக மனுக்குலத்துக்கு ஆத்ம பலம் குறைவாக இருக்கும் மாதம். சூரிய பகவான் தன் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் நீசம் அடைவதால், முயற்சிகள் சிறு தோய்வை கொடுக்கும். அதனால் விடா முயற்சி செய்ய வேண்டும்.

சூரியனுக்கு உரிய அதிகாரம் பெயர், புகழ், ஆளுமை போன்றவை பாதிக்கப்படும் இறைவழிபாடுடன் இந்த மாதத்தை கடந்து செல்வது உத்தமம்.

ஆணவத்தால் அவதிப்படும் மாதம்.

கோதுமை தானம், கோதுமையினால் செய்யப்பட்ட பொருட்கள் தானம் செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ் சூரியமூலை ஊரில் உள்ள சூரிய கோடீஸ்வரரை வழிபடுவது உத்தமம். சூரிய பகவான் தனது மூலாதார சக்கர பலத்தை இழந்த பொழுது இங்குள்ள சூரிய கோடீஸ்வரரை வழிபட்டு தனது பலத்தை மீண்டும் பெற்றார்.

கீழ சூரிய மூலை என்பது உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் மற்றும் சூரிய கோடீஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் தலமாகும்.

இந்த ஊர், சூரியனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது, மேலும் 'சூரிய மூலை' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு சூரிய பகவான் தனது மூல சக்தியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

உ.வே. சாமிநாதய்யர்:
"தமிழ்த் தாத்தா" என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யர் பிறந்த கிராமம் இதுதான். அவர் ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும், காப்பியங்களையும் அச்சில் கொண்டு வந்து தமிழ் உலகுக்கு அளித்தவர்.

சூரிய கோடீஸ்வரர் கோயில்:

கீழச் சூரிய மூலையில் உள்ள புகழ்பெற்ற கோயில் இது. இங்கு, அருள்மிகு பவளக்கொடி அம்பிகை சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:

சூரியன் தனது குஷ்ட நோய் நீங்கிய பின், தனது முழு சக்தியையும் பெற்ற தலம் இது என புராண வரலாறு கூறுகிறது.

சூரிய மூலை' பெயர் காரணம்:

சூரிய பகவானுக்கு மூலாதார சக்தியை வழங்கியதால் இத்தலம் 'சூரிய மூலை' என அழைக்கப்படுகிறது.

ஓம் ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் போற்றி
 
Back
Top