த3ச’கம் 52 ( 6 to 10)
ஏவம் ப்ரதி க்ஷண விஜ்ரும்பி4த ஹர்ஷா பா4ர
நிச்’சே’ஷா கோ3ப க3ணான் லாலித பூ4ரி மூர்த்திம்|
த்வா மக்3ரஜோபி பு3பு3தே கில வத்ஸராந்தே
ப்ரஹ்மாதமனோரபி மஹான் யுவயோர் விசே’ஷ: ||( 52 – 6)
வினாடிக்கு வினாடி வளர்ந்து வரும் அன்பின் பெருக்கால் திக்கு முக்காடிய கோபிகைகள் தங்கள் மகன்கள் என்றே கருதித் தங்களின் பல வேறு உருவங்களையும் சீராட்டிப் பாராட்டினார்கள். இந்த ரகசியத்தைத் தங்கள் தமையன் பலராமன் கூட ஒரு வருடம் கடந்த பின்னரே அறிந்துகொண்டார் அல்லவா? பரபிரம்மத்தின் ஸ்வரூபங்களாக நீங்கள் இருவரும் இருந்த போதிலும் உங்கள் இருவரிடையே மகத்தானபேதங்கள் உண்டு.( 52 – 6)
வர்ஷாவதௌ3 நவ புராதன வத்ஸ பாலான்
த்3ருஷ்ட்வா விவேக மஸ்ருணே த்3ருஹிணே விமூடே4 |
ப்ராதீ3த்3ருஷ: ப்ரதி நவான் முகுடாங்க3கதா3தி3
பூ4ஷாச்’சதுர் பு4ஜ யுஜஸ்ஸஜலாம்புதா3பா4ன் ||(53 – 7)
வருடத்தின் முடிவில் பிரமன் கண்டது பழைய கோப பாலர்களுடனும், கன்றுகளுடனும், அவர்களைப் போன்ற புதிய கோப பாலகர்களும், கன்றுகளும். இனம் பிரித்து அறியமுடியாமல் மயங்கிய பிரமனுக்குத் தாங்கள் புதிய கோபர்கள், புதிய கன்றுகள் ஒவ்வொருவரையும் நீலநிறம் கொண்டவராகத் தோள்வளை கிரீடம் அணிந்தவராக, நான்கு கரங்கள் உடையவராகக் காட்டினீர்கள் அல்லவா?( 52 – 7)
ப்ரத்யேகமேவ கமலா பரிலாலிதாங்கா3ன்
போ4கீ4ந்த்ர போ4க3 ச’யனான் நயனபி4ராமான் |
லீலா நிமீலித த்3ருஷஸ் ஸனகாதி3 யோகி3
வ்யாஸேவிதான் கமலபூ4ர் ப4வதோ த3த3ர்ஷ ||(53 – 8)
ஒவ்வொருவரும் லக்ஷ்மி தேவியால் சீராட்டப்பட்டவராக, சர்ப்ப ராஜன் ஆதிசேடனின் உடலில் படுத்து இருப்பவராக, கண்களுக்கு ஆனந்தம் அளிப்பவராக, யோகநித்திரை செய்பவராக, யோகிகளால் சேவிக்கப்படுகிறவராக பிரமன் கண்டார்.( 52 – 8)
நாராயணாக்ருதி மஸங்க்யதாமான் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வ்மவேக்ஷ்ய தா4தா |
மாயா நிமக்3ன ஹ்ருத3யோ விமுமோஹ யாவத் 3
ஏகோ ப3பூ4வித2 ததா3 கப3லார்த4பாணி: ||( 53 – 9)
எண்ணமுடியாத நாராயண மூர்த்திகளை ஏக காலத்தில், எல்லா இடங்களிலும் கண்டு மாயையில் மூழ்கின் அறிவிழந்தான் பிரமன். அதே கணத்தில் பழையபடிக் கையில் பாதி உண்ட கவளத்துடன் தாங்கள் மீண்டும் காட்சி அளித்தீர்கள் அல்லவா? ( 52 – 9)
நச்’யன்மதே3 தத3னு விச்’வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூனவதி தா4தரி தா4ம யாதே |
போதைஸ்ஸமம் ப்ரமுதி3தை: ப்ரவிச’ன் நிகேதம்
வாதாலயாதி4ப விபோ4 பரிபாஹி ரோகா3த் ||( 53 – 10 )
ஹே கிருஷ்ண! கர்வம் நசித்த பிரமன், அதன் பிறகு லோகநாதனானத் தங்களை பலமுறை நமஸ்கரித்து எழுந்தான். பலவாறு துதித் துவிட்டு சத்ய லோகம் சென்றான். மிக குதூகலத்துடன் எப்போதும் போலநண்பர்களுடனும், கன்றுகளுடனும் வீடு திரும்பிய குருவாயூரப்பா! தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பற்றவேண்டும். ( 52 – 10)