sookshma sarreraththin theeya kunankal.

Status
Not open for further replies.

kgopalan

Active member
தீய குணங்கள் பதிமூண்று. இராகம், த்வேஷம்.,காமம், க்ரோதம்,உலோபம்., மதம், மாற்சரியம், ஈரிசை, அசுயை, டம்பம், தர்பம்,அஹங்காரம்.

இராகம்.: பர தாரம் விரும்பல்; இராவணன் ஸீதை யை இச்சித்து இராகவணால் தன் குலம் முழுமையும் அழித்தான்.

துவேஷம்: ஹிரண்ய கஸிபன் தன் தமையனை கொன்ற த்வேஷத்தால் நாராயண்னை எதிர்த்து நாசம் அடைந்தான்.

காமம்: ஐஸ்வர்யத்தை மேன் மேலும் விரும்புதல்; நரகாஸுரன் லக்‌ஷம் ஸ்த்ரீகளை விவாஹம் செய்ய இச்சித்து பதினோராயிரத்துஅறுனூறு ராஜ ஸ்த்ரீகளை சிறை பிடித்து வர அவர்கள் வேண்டுகோள் படி பகவானால் நாசம் அடைந்தான்
.
குரோதம்: தான் சம்பாதித்த பொருளுக்கு விக்கினஞ் செய்தவர் பேரில் சீறுதல்: பகாஸுரன் தனது புசிப்புக்கு விக்கினஞ்செய்த பீம ராஜனை சீறி அவனால் நாசம் அடைந்தான்

உலோபம்: ஒருவருக்கும் ஈயாமை: துரியோதனன் பாண்டவர்களுக்கு வசித்திருக்க ஓர் வீடும் கொடுக்க மாட்டேன் என்றதால் நாசம் அடைந்தான்.

மோகம்: ப்ரியம்; அனுபவித்தல்; தஸரதன் ராமன் பேரில் பெரிய ப்ரியம் வைத்ததால் ராமன் காட்டிற்கு செல்ல தான் நாசம் அடந்தான்..

மதம்: தெரியாமை: கார்த்தவீர்யாச்சுனன் நாரதரை உபசரியாதலால் பரசு ராமனால் நாசம் அடைந்தான்.

மாற்சரியம்: பொறாமை: சிசுபாலன் தருமராஜன் செய்த ராஜசூய யாகத்தில் பகவானுக்கு செய்த பூஜையை சகியாமல் பொறாமையால் நாசம் அடைந்தான்.

ஈரிசை: அருணாக்ஷதன் தனக்கு வந்த துன்பம் தன்னிஷ்டனான வரணாசுரனுக்கு வரட்டும் என்று நினைத்ததால் தான் நாசமடைந்தான்.

பிறர் துன்பமடையவும் தான் அத்துன்பத்தை அடைய கூடாது என எண்ணுதல்.
அசுயை: தனக்கு வந்த சுகம் போல் பிறர்க்கு வரலாகாது.என் நினைத்தல்.பெளண்டரீக வாசுதேவன் என்ற பெயர் இருப்பது பற்றி பகவானோடு எதிர்த்து யுத்தம் செய்து நாசம் அடைந்தான்.

டம்பம்: தான் செய்கின்ற தருமத்தை பார்த்து எல்லோரும் மெச்ச வேண்டும் என எண்ணுதல்;நபூர்வமஹாராஜன் தான் செய்த யாகத்தை புகழ்ந்து கொண்டது பற்றி துர்வாச முனிவரால் ஏவப்பட்ட பூதத்தால் நாசம் அடைந்தான்.

தர்ப்பம்: நானே செல்வத்தில் பெரியவன் எனக்கு நிகர் யாருமில்லை என எண்ணுதல்; ஐஸ்வர்யத்தால் கர்வித்து ராவணன் தேவர்களை உபத்ரவம் செய்ய அதை நாரத முனிவர் ராமனுக்கு அறிவிக்க சீதையால் நாசமடைந்தான்.

அகங்காரம்: பிடிவாதம்: மது, கைடபர் என்ற இரு ராக்ஷசர்கள் மஹா விஷ்ணு வோடு பதிணாயிரம் வருஷம் யுத்தம் செய்து , தோல்வி அடைந்த விஷ்ணு வானவர் அவர்களை பார்த்து நீங்கள் அதி பராக்ரம சாலிகள், என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்று கேட்க நாங்கள் உணக்கு வரம் தருகிறோம் என சொல்ல மஹா விஷ்ணு அவர்களிடம் உங்கள் உயிரை கொடுங்கள் என கேட்க அதனால் அவர்கள் நாசமடைந்தார்கள்.,

இந்த பதிமூன்றும் சூட்சும சரீரத்தின் தொழில் ஆனதால் இவைகள் இருப்பதால் சூட்சும சரீரம் அசுத்தமாகிறது. இவை தவிற இச்சை,பக்தி சிரத்தை கூட சூட்சும சரீரத்தின் அசுத்தங்களே.

இச்சை என்பது பொருட்களில் ஏற்படும் விருப்பம். பக்தி என்பது சிரவண் பொருளில் மனம் பற்றுதல். சிரத்தை என்பது ஸ்வரன் குரு நூல் இவைகளில் விஸ்வாஸம், இம்மூன்றும் மோட்ச ஸாதன மாக இருப்பினும் முடிவில் இல்லாமையால் அசுத்தம்..

இப்படி அசுத்தமாயுள்ள 35 தத்துவங்களுக்கு விலக்‌ஷனமாயும் சாக்ஷியாயும் உள்ள ப்ருஹ்மமானது இவைகளோடு கூடி யிருந்தாலும் இந்த அசுத்தம் பற்றாதிருக்கும் ப்ரும்மமே சுத்தம்.




.
 
Status
Not open for further replies.
Back
Top