• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

SANDHYA VANDANAM -CONTD-1.

kgopalan

Active member
(தொடரும்)5. ப்ராசனம்.

காலையில் ஸூர்யஸ்ச்ச என்ற அனுவாகத்திற்கு ரிஷி அக்னி. சந்தஸ் தேவி காயத்ரி. தேவதை ஸூர்யன். ஆத்ம சுத்திக்காக ஜலம் சாப்பிடுவதில் வினியோகிக்க படுகிறது.

ஸூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷன்தாம்
யத் ராத்ரயா பாபம காரிஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண ஶிஶ்னா.
ராத்ரிஸ் ததவ லும்பது. யத் கிஞ்ச துரிதம் மயி. இதமஹம் மாமம்ருத யோனௌ ஸுர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா. ஸ்வாஹா என்று சொல்லும் போது கையில் உள்ள ஜலத்தை பருகவும். பிறகு ஆசமனம் செய்யவும்.

(கருத்து) நாம் மனதினாலும், வாக்கினாலும், கைகளாலும், கால்களாலும், வயிற்றாலும், ஆண்குறியாலும் சில பாபங்களை செய்கிறோம். பகலில் அதை செய்யும் போது , பகலுக்கு அதிஷ்டான தேவதையும், ஸூர்யனும் அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களே பின்னால் யம லோகத்தில் சாக்ஷியாக வருகிறார்கள்.

ஆதலால் சூர்யனும், அவரால் உண்டுபண்ணப்பட்ட பகல் தேவதையும், இரவானால் அக்னியும், இரவு தேவதையும் அந்த பாபங்க்களை போக்கடிக்கட்டும். கோபம். கோபத்திற்க்கு பதி மன்யுபதி.இவர்களும் கோபத்தினால் நாம் செய்யும் பாபங்களை போக்கடிக்கட்டும். நம்மை சுத்தமாக செய்யட்டும் என வேண்டுகிறோம்.காமம் கோபம் என்பது மனதின் ஒரு மாறுதல் ஆகும்.

எக்காலத்திலும், எங்கும், எதிலும் ஈசன் நிறைந்து இருக்கிறார். காமம், கோபம் முதலியன உண்டாகும் போது அதன் வழியாகவும் பகவானை நினைக்க வேண்டும்.அவனன்றி அணுவும் அசையாது.ஓ ப்ரபுவே கோபமாகவும், கோபத்திற்கு அதிபதியாகவும் உள்ளவரே . உம்மால் தூண்டப்பட்டே பாபங்கள் செய்கிறோம்.. அந்த பாபத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகிறோம். இந்த கருத்து கொண்டு தான் காமோகாரிஷித், மன்யுரகாரிஷித் என நமஸ்கரிக்கிறோம்.

பகலில் ஆபஹ் புனந்து இத்யனுவாகஸ்ய ஆப ரிஷி: அனுஷ்டுப் சந்த: ப்ருஹ்மணஸ்பதிர் தேவதா. ஆப: புனந்து என்னும் அனுவாகத்திற்கு ஜலம் ரிஷி; அனுஷ்டுப் சந்தஸ்; ப்ருஹ்மணஸ்பதி தேவதை. பகல் ப்ராஶ்னத்தில் இது வினியோகிக்க படுகிறது.

ஆப: புனந்து ப்ருத்வீம் ப்ருத்வீ பூதா புனாது மாம். புனந்து ப்ருஹ்மணஸ்பதி: ப்ரஹ்ம பூதா புனாதுமாம். யதுசிஷ்டம் அபோஜ்யம் யத்வா துஸ்சரிதம் மம. ஸர்வம் புனந்து மாமாபோ அஸதாஞ்ச ப்ரதி க்ரஹக்கு ஸ்வாஹா. ஸ்வாஹா என்று சொல்லும் போது கையில் உள்ள ஜலத்தை உட்கொண்டு ஆசமனம் செய்யவும்.

(கருத்து) ஜலம் எனது பூத உடலை சுத்தமாக்கட்டும்.பூத உடல் மூலமாக ஸூக்ஷ்ம உடலுக்கும் சுத்தி ஏற்படட்டும். ப்ருஹ்மாவிற்கும், வேதத்திற்கும் அதிபதியான பகவான் என்னை சுத்த மாக்கட்டும். எங்கும், எப்போதும், என்னை சுத்தமான வேதம் என்னை சுத்தமாக்கட்டும்.

என்னை அசுத்தமாக செய்யும் மலாதிகளும், உண்ண தகாததை உண்டது, தகாவருடன், தகாத வழியில் சேர்ந்தது முதலிய ஸகல பாபங்களையும் ஜல தேவதை போக்கடிக்கட்டும்.
.அஸத்துகளிடம் இருந்து தானம் வாங்கிய பாபத்தையும் அகற்றட்டும். அதற்காக என்னையே ஆத்மாவிடம் ஹோமம் செய்கிறேன்= அதாவது ஆத்மாவிடம் ஜீவனை சேர்த்து த்யானம் அல்லது ஆத்மானு ஸந்தானம் செய்கிறேன்.

மாலையில்:-
அக்னிஸ்ச இத்யனுவாகஸ்ய ஸூர்ய ரிஷி: தேவி காயத்ரீ சந்த: அக்னிர் தேவதா

அக்னிஶ்ச என்னும் அனுவாகத்திற்கு ரிஷி ஸூர்யன்; சந்தஸ் காயத்ரீ; தேவதை அக்னி.

அக்னிஶ்ச மாமன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம் யதஹ்னா பாபம கார்ஷம். மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண ஶிஶ்னா அஹஸ்ததவ லும்பது. யத் கிஞ்ச துரிதம் மயி இத மஹம் மாமருத யோ நெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா.கையில் உள்ள ஜலத்தை ஸ்வாஹா என்று சொல்லும் போது உட்கொள்ளவும். பிறகு ஆசமனம் செய்யவும்.

காலயில் சொன்ன ஸூர்யஸ்ச என்ற மந்திரத்தின் தாத்பர்யமே இதற்கும். ஸூர்யஸ்ச என்பதற்கு பதில் அக்னிஶ்ச =அக்னி; ராத்ரிஸ்ச= இரவில் அஹ்னா=பகல்; ஸூர்யே ஜ்யோதிஷி என்பதற்கு பதில் ஸத்யே ஜ்யோதிஷி=ஸத்யமான ஜ்யோதிஸ்ஸில் என்றும் மாறும்.

6. மறுபடி மார்ஜனம்.
ததிக்ராவ்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: ததிக்ராவா தேவதா.ப்ரோக்ஷணே வினியோக:
ததிக்ராவ்ண என்ற மந்திரத்திற்கு வாம்தேவர் ரிஷி; அனுஷ்டுப் சந்தஸ், ததிக்ராவ தேவதை; ப்ரோக்ஷித்து கொள்வதில் இம்மந்திரம் வினியோகிக்க படுகிறது.

ததிக்ராவ்ணோ அகாரிஷம்.ஜிஷ்ணோரஶ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத்.ப்ரண ஆயுகும் ஷி தாரிஷத்.

ஆபோஹிஷ்டா மயோ புவஹ தான ஊர்ஜே ததாதன: மஹேரணாய சக்ஷஸே யோவஶ்ஶிவதமோ ரஸ: தஸ்ய பாஜயதே ஹன: உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்க மாமவ: யஸ்யக்ஷயாய ஜின்வத ஆபோஜனயதா சன:

பிறகு யஸ் யக்ஷயாய ஜின்வத: என்பதால் கால்களில் ப்ரோக்ஷித்து அடுத்த மந்திரத்தால் மறுபடியும் தலையில் ப்ரோக்ஷித்து க்கொள்ளவும்.ஆந்த்ரர் ஹிரண்ய வர்ணாம் எனும் 4 மந்திரம் சொல்லி ப்ரோக்ஷித்து கொள்கிறார்கள்.

ஓம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி ஜலத்தால் தன்னை பரிசேஷனம் செய்து கொள்ள வேண்டும்.அதாவது தலையை சுற்றிலும் பிரதக்ஷிணமாக ஜலத்தை சுற்ற வேண்டும்.

கருத்து:- உலகை தரித்து வ்யாபித்திருப்பதால் ததிக்ராவா என்பவர் பரமாத்மா என்பர் சிலர். அக்னியில் தயிர் ஹோமம் செய்யபடுவதால் அக்னியே ததிக்ராவா என்பர் சிலர். அவர் ஜயமுள்ளவர். வேகமாக செல்பவர். அவரை துதிகின்றோம். அவர் நமது முகத்தை வாஸனை யுள்ளதாக செய்யட்டும். ஆயுளையும் அதிக மாக்கட்டும். இந்த மந்திரத்திற்கு ஸுரபிமதி என்று பெயர்.

உலகத்திற்கு சுகத்தை தருவதற்காக முதலில் ஜலம் படைக்கபட்டது. ஸ்நான பானாதிகளாலும், பயிரை வ்ருத்தி செய்து அன்னத்தையும் மற்ற ரஸங்களையும் தருவதாலும் ஜல தேவதை நமக்கு இன்பமூட்டுகிறது.

குழந்தைகள் செய்யும் குற்றத்தை மன்னித்து குழந்தைகளுக்கு தாய், தான் உண்ணாமல் கூட உயர்ந்த ஸத்துள்ள பொருட்களை அளிப்பாள். தாய் போலுள்ள தீர்த்த தேவதையே எனக்கு அத்தகைய தாய் போல் அன்னாதிகளை தந்து இந்த உடலை காப்பாற்றவும்.

ஸ்தூல உடலுக்குள் உள்ள ஸூக்ஷ்ம உடலுக்கு அறிவே உணவு. அதில் உயர்ந்ததான ஞானத்தை எனக்கு அளியும்.உமது அருளால் நான் பேரின்பம் அடைய வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கு ஜலம் அவசியமானது.ஜலத்தின் ஸூக்ஷ்ம அம்சமே ப்ராணன்.

மங்களகரமான ரஸத்தால் இவ்வுடலுக்கும் மிக மிக மங்கள கரமான ரஸத்தால் ஜீவனுக்கும் நன்மை அளிக்கும்படி இந்த மந்திரத்தால் வேண்டுகிறோம்.

அகமர்ஷணம்:- த்ருபதாதிவ முஞ்சது. த்ருபதாதிவேன் முமுசான: ஸ்வின்னஸ் ஸ்னாத்வீ மலாதிவ. பூதம் பவித்ரேண் வாஜ்யம் ஆபஶ்ஶுந்தந்து மைனஸ:

ஜலத்தை கையிலெடுத்து இந்த மந்திரம் சொல்லி முகர்ந்து கீழே விட வேண்டும்.இதற்கு பதில் ரிதஞ்ச என்ற மந்திரம் கூறுவாறுமுண்டு.

(கருத்து) இது சிலர் செய்கின்றனர். சிலர் அனுஷ்டானத்தில் இல்லை. கட்டூண்டவன் கால் விலங்கிலிருந்து விடுபடுவது போலவும், வியர்வை உள்ளவன் குளிப்பதினால் வியர்வை மலத்திலிருந்து விடுபடுவது போலவும்,

நெய்யானது பவித்திரத்தினால் சுத்தமாவது போலவும்,ஜல தேவதை பாபத்திலிருந்து விடுவித்து சுத்தமாக செய்யட்டும்.

இந்த மந்திரத்தால் நம் உள்ளே உள்ள பாபம் ஜலத்தின் வழியாக வெளி வர நாம் அதிலிருந்து விடுபட்டு சுத்தமாவோம்.

7.அர்க்கிய ப்ரதானம்.
இது ஒரு முக்கிய கர்மா. ஸந்தியா வந்தனத்டின் ஜீவ நாடி போன்றது. இதை செய்வதற்குதான் நம் உடல், மொழி மனம் சுத்த மாக்கி கொண்டோம். சிலர் இதற்கும் இப்போது தனி ஸங்கல்பம் செய்கின்றனர். குடும்ப பரம்பரை பழக்கபடி செய்ய வேண்டும்.

புதிதாக நீங்கள் இப்போது மாற்றக்கூடாது.ப்ரணவத்துடன் கூடிய காயத்ரியே 3 வேளையும் அர்க்கியம் விட மந்திரம்.ஸம்ப்ரதாய படியே அனுஷ்டிக்க வேண்டும். காலயில் நின்று கொண்டு பசுவின் கொம்பு உயரம் தூக்கி , கிழக்கு முகமாக குதி காலை சிறிது தூக்கி அர்க்கியம் விட வேண்டும்.

பகலிலும் நின்று கொண்டு அர்க்கியம் தர வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு அர்க்கியம் தர வேன்டும். இடது கை கட்டை விரல், ஆள் காடி விரல் இரண்டிற்கும் நடுவில் பாத்திரத்தை வைத்து கொண்டு இரு கைகளாலும் அர்க்கியம் தர வேண்டும்

. கட்டை விரல் மற்ற விரல்களுடன் சேர்ந்து இருக்க கூடாது.ஒரு கையால் அர்க்கியம் அளிப்பதும் நமஸ்காரம் செய்வதும் தேவதைகளை அவமானம் செய்வது போலாகும். பாபம்.

காலையில் சூரியன் கிழக்கே இருப்பதால் கிழக்கு பார்த்து ஆசமனம், அர்க்கியம் எல்லாம்.

பகலில் கிழக்கு பக்கம் தான் எல்லாம் செய்யலாம். மாலையில் சூரியன் மேற்கே இருப்பதால் மேற்கே ஆசமனம், அர்க்கியம் எல்லாம்.காலை மாலைகளில் 3 அர்க்கியம். ப்ராயஸ்சிதார்கியம் ஒன்று. பகலில் 2+1=3.

சூரியனுடன் சண்டை செய்யும் அசுரர்களை நீங்கள் கொடுக்கும் இந்த அர்க்கியம் அரக்கர்களை மந்தே ஹாருணம் என்ற த்வீபத்தில் தூக்கி எறியும். அவர்களை எறிந்த பாபமானது அர்க்கியம் ஆன பின் செய்கின்ற ப்ரதக்ஷிணத்தால் அகலும்.

காலையில் சூரியன் சிறு குழந்தை. ஆதலால் 3 அர்க்கியம். மாலையில் சூரியன் கிழவர். ஆதலால் 3 அர்க்கியம், பகலில் சூரியன் யெளவனம்=பலவான். ஆதலால் 2 அர்கியம் போதும்.
அர்க்கியம் காணாமல், கோணாமல் கண்டு கொடுக்க வேண்டும். காலத்தில் கொடுக்க

வேண்டும். அரக்கர் சூரியனுடன் போருக்கு வரும் சமயத்தில் தான் நாம் அர்க்கியம் கொடுக்க வேண்டும். போர் முடிந்த பிறகு நாம் அர்க்கியம் கொடுத்து ப்ரயோஜனமில்லை.

சரியான் காலத்தை நம்மால் நிர்ணயிக்க முடியாது. ஆதலால்உரிய காலத்தில் அர்க்கியம் கொடுக்கிறேன். ஆதலால் காலாதீத ப்ராயசித்த அர்க்கியம் தேவையா என்று கேட்காமல் ப்ராயசித்த அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

ப்ராயசித்த அர்க்கியம் கொடுக்கா விட்டால் தோஷமுண்டு கொடுத்தால் .கொடுப்பது பயனற்றதாக போய் விடுவதால் யாதொரு நஷ்டம் இல்லை.அசுரர் என்பவர் தமோ குணமுடையவர். நமது, பாபம், அஸுத்தம், நோய். அசுத்தமான அந்தகரண விருத்திகள் தான் அரக்கர்கள்.

நமக்கு, சுறுசுறுப்பை, ஆரோக்கியத்தை, ஜீவ சக்தியை, ஒளியை,அறிவை தரும் ஸூர்ய கிரணங்களின் அருள் நம்மிடம் வராமல் இவை தடுக்கின்றன. நாம் தான் அச்சமயம் எழுந்து ஸ்நானம் செய்து சுத்தனாக சுறு சுறுப்பாக திருமண மானவர்கள் பஞ்சகச்சம் கட்டி கொண்டு,

நெற்றிகிட்டு கொண்டுகர்மா செய்தால் நம்மிடமுள்ள அசுர அம்சம் நம்மை விட்டு விலகி விடும்.

பிறகு ப்ரணவத்துடன் வ்யாஹ்ருதி கூறி தன்னை சுற்றி பரிசேஷனம் போல் ஜலத்தால் சுற்ற வேண்டும். இதை உட்கார்ந்த படியே செய்ய க்கூடாது. எழுந்து தன் உடலால் ஒரு ப்ரதக்ஷிணமாக சுற்றி இரு கரங்கலால் மார்பை தொட வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு அர்க்கியம் கொடுக்க வேண்டும். பிறகு எழுந்து நின்று தன்னை தானே ப்ரதக்ஷிணமாக சுற்றி இரு கரங்களால் மார்பை தொட வே|ம். பிறகு உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

எதிரில் காணப்படும் சூரியன் ப்ருஹ்ம ஸ்வரூபி. அந்த ப்ருஹ்மமாக நானிருக்கிறேன்.ப்ருஹ்மமே ஸத்யம். என்று கூறி மனதினால் த்யானம் செய்ய வேண்டும்.

இப்படி தினந்தோரும் மூன்று வேளையும் சிறிது நேரம் அப்யாசம் செய்து வந்தால் அதுவே நம்மை ப்ருஹ்ம நிஷ்டையில் அமர்த்தும்.இப்பிறவியிலேயே ஸத் ஆசார்யான் கிட்டுவார். உபதேசம் பெற்று க்ஞானம், முக்தி,நிஷ்டை கை கூடும். ப்ருஹ்ம நிஷ்டையில் அமர்த்தும்.

அர்க்கிய ப்ரதான மந்த்ரஸ்ய விசுவாமித்ர ரிஷி: காயத்ரி சந்த: ஸவிதா தேவதா. அர்க்கிய ப்ரதானே விநியோக:

அர்க்கிய ப்ரதான மந்திரத்திற்கு விசுவாமித்ரர் ரிஷி; காயத்ரி சந்தஸ்; ஸவிதா தேவதை. இது அர்க்கிய ப்ரதானத்தில் விநியோகிக்க படுகிறது. காயத்ரி மந்திரத்தை கூறி , அர்த்தத்தை மனதில் நங்கு த்யானம் செய்து , இரு கைகளிலும் நிறைய ஜலம் எடுத்து , அளிக்க வேண்டும். கட்டை விரல் சேரக்கூடாது.

காயத்ரி மந்த்ர அர்த்தம்:- எவர் நம் புத்தியை தூண்டுகிறாரோ அப்படி பட்ட ப்ரகாசனான உலகை உண்டு பண்ணுபவருடைய( சூர்யனுடைய) மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம். ஸுரியன் ஒருவரே நம் கண்ணுக்கு புலப்படும் ப்ரத்யக்ஷ தெய்வம்.

இந்த சூரியனும் ஜீவாத்மாதான். காயத்ரி பரமாத்மா எனவும் வாதம் உண்டு. தேவர்களைவிட மூன்று தேவிகளே கருணை உள்ளமிக்க வர்கள். ஆதலால் காயத்ரி என்பவளை மும்மூர்த்தி ஸ்வரூபமாக கூறி முக்தா வித்ரும என்ற த்யான ஸ்லோகத்தால் காயத்ரியை பெண் வடிவமான தேவி, ஸாவித்ரி, ஸரஸ்வதி, ஸந்த்யை என்பவளும் அவளே எங்கிறோம்.

சிலர் பர்க்க எனில் சிவன் என்பது ப்ரஸித்தம் .ஆதலால் சிவனே காயத்ரியின் பொருள் என்பர். காயத்ரியால் ஹோமம் செய்த பிறகு ஸூர்யாய இதம் ந மம எங்கிறோம். ஆதலால் காயத்ரியின் அர்த்தம் ஸூர்யனே என்றும் கூறுவார்கள்.

காயத்ரியின் அர்த்தம் ப்ருஹ்மம் என்று கூறினால் சிறுவன் மூளையில் ஏறாது. அதற்காக சூரியன், காயத்ரி என்று கூறினார்கள். சிறுவன் காயத்ரி செய்ய செய்ய அவன் உள்ளம் சுத்தமாகி ப்ருஹ்மத்தை நாடும் . அதை காண்பிக்கவே காயத்ரி உபதேசத்தை ப்ருஹ்மோ பதேசம் என அழைக்கிறார்கள்.

எந்த மூர்த்தியை உபாசித்தாலும் அவரவருக்கு அதே சிரத்தையை அளித்து அந்த உபாசனையை நானே ஏற்கிறேன் எங்கிறார் கண்ணன் கீதையில்.

பின்பு ஒரு ப்ராணாயாமம் செய்து காலாதீத ப்ராயஸ்சித்த அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று கூறி மற்று மொரு முறை காயத்ரியை கூறி அர்க்கியம் அளிக்கவும். உடனே வ்யாஹ்ருதியை கூறி= ஓம் பூர்புவஸ்ஸுவ: கையில் ஜலம் எடுத்து , தன் சரீரத்துடன் ஒரு ப்ரதக்ஷிணம் செய்து ஜலத்தை தலையை சுற்றி விடவும்.

பின் ஒரு ப்ராணாயாமம் செய்து அஸா வாதித்யோ ப்ருஹ்ம ப்ருஹ்மை வாஹமஸ்மி ப்ருஹ்மைவ ஸத்யம் என்று இரு கைகளையும் மார்புக்கு நேராக வளைத்து ( சிறிது நேரம்
கண்களை மூடி) பத்து விரல்களாலும் மார்பை தொட்டுக்கொண்டு த்யானம் செய்ய வேண்டும்

பொருள்==இந்த ஸூர்யனே பரப்ருஹ்மம். நான் ப்ருஹ்மமாக இருக்கிறேன்.ப்ருஹ்மமே ஸத்யம்..

பிறகு ஆசமனம் செய்து சூரியன் முதலியவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மூன்று வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டு கிழக்கில், மேற்கில், கிழக்கு எனவும் சில ரிஷிகள் வடக்கில் என்றும் பகல் ஸந்த்யைக்கு சொவதால் அவரவர் வீட்டு குலாசார வழக்கபடி பகலில் வடக்கு அல்லது கிழக்கில் செய்ய வேன்டும்.

இரு கரங்களாலும் அர்க்கியம் அளிக்க வேண்டும். இது ஸந்த்யையின் கடைசி அங்கம். முதலில் பரமாத்மாவை உபாசித்தோம். இது அரசனை ஆராதிப்பது போல். எந்த பரமாத்மா குணங்களுடன் கூடி இவ்வுலகை நடத்துகிறாரோ, அப்படிபட்ட நவ கிரஹங்களுக்கும், விஷ்ணுவிற்கும் ஜல தர்ப்பணம் மூலம் ஆராதிக்கிறோம்.

ஆதித்யம் தர்ப்பயாமி=சூரியனை நாடி தர்ப்பணம் செய்து அவரை த்ருப்தி செய்து வைக்கிறேன். இம்மாதிரி அர்த்தம் செய்து கொள்ளவும்.

ஆதித்யம் தர்ப்பயாமி; ஸோமம் தர்ப்பயாமி; அங்க்காரகம் தர்ப்பயாமி; புதம் தர்ப்பயாமி; ப்ருஹஸ்பதிம் தர்ப்ப்யாமி; சுக்ரம் தர்ப்பயாமி; சனைஶ்சரம் தர்ப்பயாமி; ராகும் தர்ப்பயாமி; கேதும் தர்ப்பயாமி;

கேசவம் தர்ப்பயாமி; நாராயணம் தர்ப்பயாமி; மாதவம் தர்ப்பயாமி; கோவிந்தம் தர்ப்பயாமி;
விஷ்ணும் தர்ப்பயாமி; மதுஸுதனம் தர்ப்பயாமி; த்ரிவிக்கிரமம் தர்ப்பயாமி; வாமனம் தர்ப்பயாமி; ஸ்ரீதரம் தர்ப்பயாமி; ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி; பத்மனாபம் தர்பயாமி; தாமோதரம் தர்ப்பயாமி. ஆசமனம் செய்யவும். ஸந்த்யா கர்மா பூர்த்தி; ஜபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
 
ஐயா,
நான் இந்த குழுமத்தில் உறுப்பினர். சந்தியா வந்தனம் குறித்து தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த சந்தியா வந்தனம் குறித்த பதிர்வைப் படித்தேன்.
இது ஐந்தாம் பாகம் என்று உணர்ந்தேன். இதன் முன்றைய நான்கு பாகங்களையும் தயவு செய்து எனக்கு பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஐந்தாம் பாகத்திற்குப் பிறகு வேறே பகிர்வுகள் வரும்போது அவற்றை நான் இந்த குழுமத்தில் பார்த்து தெரிந்துகொள்கிறேன்.
ஐம்பது வயதிற்குப் பிறகு புத்தி வந்து இந்த நித்திய கர்மாவை பின்பற்ற ஆசைப்படுகிறேன். தயவுசெய்து உதவுக.
நன்றி.
 
சந்தியா வந்தனம்.

முதலில் ஆசமனம். நின்று கொண்டு ஆசமனம் செய்யக்கூடாது. உட்கார்ந்து கொன்டு தான் செய்ய வேண்டும். விளக்கம் :- கும்ப கோணம் வேத சாஸ்திர பரிபாலன சபாவில் யூ ட்யூபில்
SSDSS என்று க்லிக் செய்யவும்.

ஸ்ம்ருதி ஸந்தேசம் தர்ம சாஸ்திர செய்திகள் ஒன்று முதல் 400 வரை சிறிது சிறிதாக உள்ளது. இதில் மைலாப்பூர் சம்ஸ்க்ருத காலேஜில் ஓய்வு பெற்றவர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். ஆசமனம் பற்றி இதில் பார்த்து கொள்ளுங்கள்.

1. ஆசமனம்.2. ப்ராணாயாமம்;3.ஸங்கல்பம்;4 மார்ஜணம்;5. ப்ராசனம்; 6. புனர் மார்ஜனம்;
7.அர்க்கிய ப்ரதானம்;8. ப்ராயசித்த அர்க்கியம்; 9. நவகிரஹ கேசவாதி தர்ப்பணம்.

10. ஜப விதி,11. ந்யாஸம்; 12. உபஸ்தானம்;13. திக் தேவதா வந்தனம்;

காலையில் 5 மணியிலிருந்து 6 மணி வரை காலையிலும், மத்யான்னம் 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை ஸந்தியா வந்தனம் செய்ய சரியான காலமாகும்.

தற்காலத்தில் உத்யோகஸ்தர்கள் காலை சந்தியா வந்தனம் முடிந்த வுடன் மாத்யானிகம் செய்து விடலாம். ஸாயங்காலம் வீடு வந்து சேர்ந்ததும் ஸாயம் ஸந்தியா வந்தனம் செய்ய வேண்டும்.

கை கால்களை சுத்தமாக அலம்பிக்கொண்டு, அவரவர் பெரியோர் தரித்த படி, வீபூதி, சந்தனம் இட்டு கொண்டு அவசிய மில்லாமல் யாருடனும் பேசாமல் செய்யவும்.

வீடுகளில் ஸந்தியா வந்தனம் செய்யும் போது கால்களை குந்திட்டு ( ப்ருஷ்ட பாகம் தரையில் படாமல்) உட்கார்ந்து கொண்டு இரு கைகளின் முழங்கைபாகம் கால்களுக்கு நடுவில் இருக்குமாதிரி வைத்துக்கொள்ளவும்.ஆசமனம் செய்ய வேண்டும்.

வலது கை சுண்டு விரலையும், மொதிர விரலையும் மட்டும் நீட்டி, மற்ற மூன்று விரல்களையும் சிறிது மடக்கி உள்ளங்கையில் சிறிது குழிவு ஏற்படும் படி செய்து அதில் ஒரு உளுந்து மூழ்கும் அளவிற்கு தீர்த்தம் விட்டு அச்சுதாய நம; என்று கூறி உறிஞ்சும்

சப்தம் இல்லாமல் ,ப்ரும்ஹ தீர்த்ததால் உட்கொண்டு, பிற்கு அ நந்தாய நம; என்று சொல்லி ஒரு உளுந்து மூழ்கும் அளவிற்கு தீர்த்தம் விட்டு ப்ருஹ்ம தீர்த்ததால் உட்கொண்டு, பிறகு கோவிந்தாய நம; என்று சொல்லி ஒரு உளுந்து மூழ்கும் அளவிற்கும் ஜலம் விட்டு ப்ருஹ்ம தீர்த்ததால் உட்கொள்ளவும். பிறகு உதட்டை துடைத்துக்கொள்ளவும்.

பிறகு வலது கை கட்டை விரலால் கேசவ; நாராயணா என்று சொல்லி வலது கன்னம், இடது கன்னம் தொடவும்.பிறகு பவித்திர விரலால் மாதவா, கோவிந்தா என்று சொல்லி வலது கண், இடது கண் தொடவும். ஆள் காட்டி விரலால் விஷ்ணு, மதுஸூதனா என்று சொல்லி வலதுமூக்கு, இடது மூக்கை தொடவும்.

சுண்டு விரலால் த்ரிவிக்கிரமா, வாமனா என்று சொல்லி வலது காது இடது காது தொடவும். நடு விரலால் ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா என்று சொல்லி வலது தோள், இடது தோள் தொடவும். பத்ம நாபா தாமோதரா என்று சொல்லி எல்லா விரல்களாலும் மார்பு தலையை தொடவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் 5 முறை குட்டிக்கொள்ளவும்.

வெண்மை வஸ்த்திரம் தரித்தவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், சந்திரனை போல் நிறமுடையவரும், நான்கு கைகளை உடையவரும்,மலர்ந்த முகத்தை உடையவருமான விநாயகரை எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காக த்யானம் செய்கிறேன்.

2. ப்ராணாயாமம்:- நடு விரலையும், ஆள் காட்டி விரலையும் மடித்து கட்டை விரலால் வலது மூக்கை அழுத்தி பிடித்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மனதினில் உச்சரித்துக்கொண்டு மூச்சு காற்றை உள்ளிழுத்து சுன்டு விரல் பவித்ர விரல்களால் இடது மூக்கை அழுத்தி , பிறகு வலது மூக்கால் மெதுவாக காற்றை வெளியில் விட்டு பிறகு வலது காதை தொட வேண்டும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸ விதுர்வரேணியம்; பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதி ரஸ: அம்ருதம் ப்ருஹ்ம ஓம் பூர்புவஸுவரோம்.

3. ஸங்கல்பம்:- இடது கையை வலது தொடை மேல் மல்லாத்தி வைத்து அதன் மீது வலது கையை கவிழ்த்து வைத்து கொண்டு மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராதஸ் ஸந்த்யாம் உபாசிஷ்யே.என்று காலையிலும், பகலில் மாத்யானிகம் கரிஷ்யே என்றும் மாலையில் ஸாயம் ஸந்தியாம் உபாசிஷ்யே என்றும் சொல்ல வேண்டும்.

பிறகு உத்தரிணியில் ஜலம் எடுத்து அதில் வலது கை மோதிர விரலால் ஓம் என்று உத்தரணி ஜலத்தில் எழுதி ஓம் ஸ்ரீ கேசவாயா நம: என்று சொல்லி புருவ மத்தியில் இந்த ஜலத்தை தடவி கொள்ள வேண்டும்.

4. மார்ஜனம்:- மந்திரத்தை ஜபித்துகொண்டே ஜலத்தை ப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும். மந்திரம் ஜபிக்காமல் ஜலத்தை மாத்திரம் ப்ரோக்ஷித்து கொண்டாலும், மந்திரம் ஜபித்துக்கொண்டு ஜலம் தலையில் படாமலேயே ப்ரோக்ஷித்து கொள்வது போல் கையை அசைத்தாலும் பலன் தராது.

கீழ் கண்ட மந்திரம் சொல்லி கை விரல்களால் அந்தந்த இடங்களை தொடவும். இதற்கு ந்யாஸம் என்று பெயர். இது சிலருக்கு கிடையாது. ஆத்து வழக்கபடி செய்யவும். ஆபோஹிஷ்டேதி மந்த்ரய ஸிந்து த்வீப ரிஷி: ( தலை) தேவீ காயத்ரீ சந்த: ( மூக்கு நுனி) ஆபோ தேவதா ( மார்பு). மார்ஜனே வி நியோக: அல்லது ப்ரோக்ஷணே வி நியோக:

ஆபோ ஹிஷ்டா என்ற மந்திரத்திற்கு ஸிந்து த்வீபர் என்பவர் ரிஷி; தேவீ காயத்ரி சந்தஸ். ஜலம் தேவதை. இந்த ஆபோஹிஷ்டா என்ற மந்திரத்தை சொல்லி தலையில் ப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும் என பொருள். முதல் 7 மந்திரங்களால் தலையில் ப்ரோக்ஷித்து கொள்ளவும். பிறகு யஸ் யக்ஷயாய ஜின்வத: என்பதால் கால்களில் ப்ரோக்ஷித்து அடுத்த மந்திரத்தால் மறுபடியும் தலையில் ப்ரோக்ஷித்து க்கொள்ளவும்.

ஓம் ஆபோஹிஷ்டா மயோ புவஹ தான ஊர்ஜே ததாதன: மஹேரணாய சக்ஷஸே யோவஶ்ஶிவதமோ ரஸ: தஸ்ய பாஜயதே ஹன: உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்க மாமவ: யஸ்யக்ஷயாய ஜின்வத ஆபோஜனயதா சன:

ஓம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி ஜலத்தால் தன்னை பரிசேஷனம் செய்து கொள்ள வேண்டும்.அதாவது தலையை சுற்றிலும் பிரதக்ஷிணமாக ஜலத்தை சுற்ற வேண்டும்.

( பொருள்). உலகத்திற்கு சுகத்தை தருவதற்காக முதலில் ஜலம் படைக்கபட்டது. ஸ்நான பானாதிகளாலும், பயிரை வ்ருத்தி செய்து அன்னத்தையும் மற்ற ரஸங்களையும் தருவதாலும் ஜல தேவதை நமக்கு இன்பமூட்டுகிறது.

குழந்தைகள் செய்யும் குற்றத்தை மன்னித்து குழந்தைகளுக்கு தாய், தான் உண்ணாமல் கூட உயர்ந்த ஸத்துள்ள பொருட்களை அளிப்பாள். தாய் போலுள்ள தீர்த்த தேவதையே எனக்கு அத்தகைய தாய் போல் அன்னாதிகளை தந்து இந்த உடலை காப்பாற்றவும்.

ஸ்தூல உடலுக்குள் உள்ள ஸூக்ஷ்ம உடலுக்கு அறிவே உணவு. அதில் உயர்ந்ததான ஞானத்தை எனக்கு அளியும்.உமது அருளால் நான் பேரின்பம் அடைய வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கு ஜலம் அவசியமானது.ஜலத்தின் ஸூக்ஷ்ம அம்சமே ப்ராணன்.

மங்களகரமான ரஸத்தால் இவ்வுடலுக்கும் மிக மிக மங்கள கரமான ரஸத்தால் ஜீவனுக்கும் நன்மை அளிக்கும்படி இந்த மந்திரத்தால் வேண்டுகிறோம்.

(தொடரும்)5. ப்ராசனம்.

காலையில் ஸூர்யஸ்ச்ச என்ற அனுவாகத்திற்கு ரிஷி அக்னி. சந்தஸ் தேவி காயத்ரி. தேவதை ஸூர்யன். ஆத்ம சுத்திக்காக ஜலம் சாப்பிடுவதில் வினியோகிக்க படுகிறது.

ஸூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷன்தாம்
யத் ராத்ரயா பாபம காரிஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண ஶிஶ்னா.
ராத்ரிஸ் ததவ லும்பது. யத் கிஞ்ச துரிதம் மயி. இதமஹம் மாமம்ருத யோனௌ ஸுர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா. ஸ்வாஹா என்று சொல்லும் போது கையில் உள்ள ஜலத்தை பருகவும். பிறகு ஆசமனம் செய்யவும்.

(கருத்து) நாம் மனதினாலும், வாக்கினாலும், கைகளாலும், கால்களாலும், வயிற்றாலும், ஆண்குறியாலும் சில பாபங்களை செய்கிறோம். பகலில் அதை செய்யும் போது , பகலுக்கு அதிஷ்டான தேவதையும், ஸூர்யனும் அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களே பின்னால் யம லோகத்தில் சாக்ஷியாக வருகிறார்கள்.

ஆதலால் சூர்யனும், அவரால் உண்டுபண்ணப்பட்ட பகல் தேவதையும், இரவானால் அக்னியும், இரவு தேவதையும் அந்த பாபங்க்களை போக்கடிக்கட்டும். கோபம். கோபத்திற்க்கு பதி மன்யுபதி.இவர்களும் கோபத்தினால் நாம் செய்யும் பாபங்களை போக்கடிக்கட்டும். நம்மை சுத்தமாக செய்யட்டும் என வேண்டுகிறோம்.காமம் கோபம் என்பது மனதின் ஒரு மாறுதல் ஆகும்.

எக்காலத்திலும், எங்கும், எதிலும் ஈசன் நிறைந்து இருக்கிறார். காமம், கோபம் முதலியன உண்டாகும் போது அதன் வழியாகவும் பகவானை நினைக்க வேண்டும்.அவனன்றி அணுவும் அசையாது.ஓ ப்ரபுவே கோபமாகவும், கோபத்திற்கு அதிபதியாகவும் உள்ளவரே . உம்மால் தூண்டப்பட்டே பாபங்கள் செய்கிறோம்.. அந்த பாபத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகிறோம். இந்த கருத்து கொண்டு தான் காமோகாரிஷித், மன்யுரகாரிஷித் என நமஸ்கரிக்கிறோம்.

பகலில் ஆபஹ் புனந்து இத்யனுவாகஸ்ய ஆப ரிஷி: அனுஷ்டுப் சந்த: ப்ருஹ்மணஸ்பதிர் தேவதா. ஆப: புனந்து என்னும் அனுவாகத்திற்கு ஜலம் ரிஷி; அனுஷ்டுப் சந்தஸ்; ப்ருஹ்மணஸ்பதி தேவதை. பகல் ப்ராஶ்னத்தில் இது வினியோகிக்க படுகிறது.

ஆப: புனந்து ப்ருத்வீம் ப்ருத்வீ பூதா புனாது மாம். புனந்து ப்ருஹ்மணஸ்பதி: ப்ரஹ்ம பூதா புனாதுமாம். யதுசிஷ்டம் அபோஜ்யம் யத்வா துஸ்சரிதம் மம. ஸர்வம் புனந்து மாமாபோ அஸதாஞ்ச ப்ரதி க்ரஹக்கு ஸ்வாஹா. ஸ்வாஹா என்று சொல்லும் போது கையில் உள்ள ஜலத்தை உட்கொண்டு ஆசமனம் செய்யவும்.

(கருத்து) ஜலம் எனது பூத உடலை சுத்தமாக்கட்டும்.பூத உடல் மூலமாக ஸூக்ஷ்ம உடலுக்கும் சுத்தி ஏற்படட்டும். ப்ருஹ்மாவிற்கும், வேதத்திற்கும் அதிபதியான பகவான் என்னை சுத்த மாக்கட்டும். எங்கும், எப்போதும், என்னை சுத்தமான வேதம் என்னை சுத்தமாக்கட்டும்.

என்னை அசுத்தமாக செய்யும் மலாதிகளும், உண்ண தகாததை உண்டது, தகாவருடன், தகாத வழியில் சேர்ந்தது முதலிய ஸகல பாபங்களையும் ஜல தேவதை போக்கடிக்கட்டும்.
.அஸத்துகளிடம் இருந்து தானம் வாங்கிய பாபத்தையும் அகற்றட்டும். அதற்காக என்னையே ஆத்மாவிடம் ஹோமம் செய்கிறேன்= அதாவது ஆத்மாவிடம் ஜீவனை சேர்த்து த்யானம் அல்லது ஆத்மானு ஸந்தானம் செய்கிறேன்.

மாலையில்:-
அக்னிஸ்ச இத்யனுவாகஸ்ய ஸூர்ய ரிஷி: தேவி காயத்ரீ சந்த: அக்னிர் தேவதா

அக்னிஶ்ச என்னும் அனுவாகத்திற்கு ரிஷி ஸூர்யன்; சந்தஸ் காயத்ரீ; தேவதை அக்னி.

அக்னிஶ்ச மாமன்யுஸ்ச மன்யுபதயஸ்ச மன்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம் யதஹ்னா பாபம கார்ஷம். மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண ஶிஶ்னா அஹஸ்ததவ லும்பது. யத் கிஞ்ச துரிதம் மயி இத மஹம் மாமருத யோ நெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா.கையில் உள்ள ஜலத்தை ஸ்வாஹா என்று சொல்லும் போது உட்கொள்ளவும். பிறகு ஆசமனம் செய்யவும்.

காலயில் சொன்ன ஸூர்யஸ்ச என்ற மந்திரத்தின் தாத்பர்யமே இதற்கும். ஸூர்யஸ்ச என்பதற்கு பதில் அக்னிஶ்ச =அக்னி; ராத்ரிஸ்ச= இரவில் அஹ்னா=பகல்; ஸூர்யே ஜ்யோதிஷி என்பதற்கு பதில் ஸத்யே ஜ்யோதிஷி=ஸத்யமான ஜ்யோதிஸ்ஸில் என்றும் மாறும்.

6. மறுபடி மார்ஜனம்.
ததிக்ராவ்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: ததிக்ராவா தேவதா.ப்ரோக்ஷணே வினியோக:
ததிக்ராவ்ண என்ற மந்திரத்திற்கு வாம்தேவர் ரிஷி; அனுஷ்டுப் சந்தஸ், ததிக்ராவ தேவதை; ப்ரோக்ஷித்து கொள்வதில் இம்மந்திரம் வினியோகிக்க படுகிறது.

ததிக்ராவ்ணோ அகாரிஷம்.ஜிஷ்ணோரஶ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத்.ப்ரண ஆயுகும் ஷி தாரிஷத்.

ஆபோஹிஷ்டா மயோ புவஹ தான ஊர்ஜே ததாதன: மஹேரணாய சக்ஷஸே யோவஶ்ஶிவதமோ ரஸ: தஸ்ய பாஜயதே ஹன: உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்க மாமவ: யஸ்யக்ஷயாய ஜின்வத ஆபோஜனயதா சன:

பிறகு யஸ் யக்ஷயாய ஜின்வத: என்பதால் கால்களில் ப்ரோக்ஷித்து அடுத்த மந்திரத்தால் மறுபடியும் தலையில் ப்ரோக்ஷித்து க்கொள்ளவும்.ஆந்த்ரர் ஹிரண்ய வர்ணாம் எனும் 4 மந்திரம் சொல்லி ப்ரோக்ஷித்து கொள்கிறார்கள்.

ஓம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி ஜலத்தால் தன்னை பரிசேஷனம் செய்து கொள்ள வேண்டும்.அதாவது தலையை சுற்றிலும் பிரதக்ஷிணமாக ஜலத்தை சுற்ற வேண்டும்.

கருத்து:- உலகை தரித்து வ்யாபித்திருப்பதால் ததிக்ராவா என்பவர் பரமாத்மா என்பர் சிலர். அக்னியில் தயிர் ஹோமம் செய்யபடுவதால் அக்னியே ததிக்ராவா என்பர் சிலர். அவர் ஜயமுள்ளவர். வேகமாக செல்பவர். அவரை துதிகின்றோம். அவர் நமது முகத்தை வாஸனை யுள்ளதாக செய்யட்டும். ஆயுளையும் அதிக மாக்கட்டும். இந்த மந்திரத்திற்கு ஸுரபிமதி என்று பெயர்.

உலகத்திற்கு சுகத்தை தருவதற்காக முதலில் ஜலம் படைக்கபட்டது. ஸ்நான பானாதிகளாலும், பயிரை வ்ருத்தி செய்து அன்னத்தையும் மற்ற ரஸங்களையும் தருவதாலும் ஜல தேவதை நமக்கு இன்பமூட்டுகிறது.

குழந்தைகள் செய்யும் குற்றத்தை மன்னித்து குழந்தைகளுக்கு தாய், தான் உண்ணாமல் கூட உயர்ந்த ஸத்துள்ள பொருட்களை அளிப்பாள். தாய் போலுள்ள தீர்த்த தேவதையே எனக்கு அத்தகைய தாய் போல் அன்னாதிகளை தந்து இந்த உடலை காப்பாற்றவும்.

ஸ்தூல உடலுக்குள் உள்ள ஸூக்ஷ்ம உடலுக்கு அறிவே உணவு. அதில் உயர்ந்ததான ஞானத்தை எனக்கு அளியும்.உமது அருளால் நான் பேரின்பம் அடைய வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கு ஜலம் அவசியமானது.ஜலத்தின் ஸூக்ஷ்ம அம்சமே ப்ராணன்.

மங்களகரமான ரஸத்தால் இவ்வுடலுக்கும் மிக மிக மங்கள கரமான ரஸத்தால் ஜீவனுக்கும் நன்மை அளிக்கும்படி இந்த மந்திரத்தால் வேண்டுகிறோம்.

அகமர்ஷணம்:- த்ருபதாதிவ முஞ்சது. த்ருபதாதிவேன் முமுசான: ஸ்வின்னஸ் ஸ்னாத்வீ மலாதிவ. பூதம் பவித்ரேண் வாஜ்யம் ஆபஶ்ஶுந்தந்து மைனஸ:

ஜலத்தை கையிலெடுத்து இந்த மந்திரம் சொல்லி முகர்ந்து கீழே விட வேண்டும்.இதற்கு பதில் ரிதஞ்ச என்ற மந்திரம் கூறுவாறுமுண்டு.

(கருத்து) இது சிலர் செய்கின்றனர். சிலர் அனுஷ்டானத்தில் இல்லை. கட்டூண்டவன் கால் விலங்கிலிருந்து விடுபடுவது போலவும், வியர்வை உள்ளவன் குளிப்பதினால் வியர்வை மலத்திலிருந்து விடுபடுவது போலவும்,

நெய்யானது பவித்திரத்தினால் சுத்தமாவது போலவும்,ஜல தேவதை பாபத்திலிருந்து விடுவித்து சுத்தமாக செய்யட்டும்.

இந்த மந்திரத்தால் நம் உள்ளே உள்ள பாபம் ஜலத்தின் வழியாக வெளி வர நாம் அதிலிருந்து விடுபட்டு சுத்தமாவோம்.

7.அர்க்கிய ப்ரதானம்.
இது ஒரு முக்கிய கர்மா. ஸந்தியா வந்தனத்டின் ஜீவ நாடி போன்றது. இதை செய்வதற்குதான் நம் உடல், மொழி மனம் சுத்த மாக்கி கொண்டோம். சிலர் இதற்கும் இப்போது தனி ஸங்கல்பம் செய்கின்றனர். குடும்ப பரம்பரை பழக்கபடி செய்ய வேண்டும்.

புதிதாக நீங்கள் இப்போது மாற்றக்கூடாது.ப்ரணவத்துடன் கூடிய காயத்ரியே 3 வேளையும் அர்க்கியம் விட மந்திரம்.ஸம்ப்ரதாய படியே அனுஷ்டிக்க வேண்டும். காலயில் நின்று கொண்டு பசுவின் கொம்பு உயரம் தூக்கி , கிழக்கு முகமாக குதி காலை சிறிது தூக்கி அர்க்கியம் விட வேண்டும்.

பகலிலும் நின்று கொண்டு அர்க்கியம் தர வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு அர்க்கியம் தர வேன்டும். இடது கை கட்டை விரல், ஆள் காடி விரல் இரண்டிற்கும் நடுவில் பாத்திரத்தை வைத்து கொண்டு இரு கைகளாலும் அர்க்கியம் தர வேண்டும்

. கட்டை விரல் மற்ற விரல்களுடன் சேர்ந்து இருக்க கூடாது.ஒரு கையால் அர்க்கியம் அளிப்பதும் நமஸ்காரம் செய்வதும் தேவதைகளை அவமானம் செய்வது போலாகும். பாபம்.

காலையில் சூரியன் கிழக்கே இருப்பதால் கிழக்கு பார்த்து ஆசமனம், அர்க்கியம் எல்லாம்.

பகலில் கிழக்கு பக்கம் தான் எல்லாம் செய்யலாம். மாலையில் சூரியன் மேற்கே இருப்பதால் மேற்கே ஆசமனம், அர்க்கியம் எல்லாம்.காலை மாலைகளில் 3 அர்க்கியம். ப்ராயஸ்சிதார்கியம் ஒன்று. பகலில் 2+1=3.

சூரியனுடன் சண்டை செய்யும் அசுரர்களை நீங்கள் கொடுக்கும் இந்த அர்க்கியம் அரக்கர்களை மந்தே ஹாருணம் என்ற த்வீபத்தில் தூக்கி எறியும். அவர்களை எறிந்த பாபமானது அர்க்கியம் ஆன பின் செய்கின்ற ப்ரதக்ஷிணத்தால் அகலும்.

காலையில் சூரியன் சிறு குழந்தை. ஆதலால் 3 அர்க்கியம். மாலையில் சூரியன் கிழவர். ஆதலால் 3 அர்க்கியம், பகலில் சூரியன் யெளவனம்=பலவான். ஆதலால் 2 அர்கியம் போதும்.
அர்க்கியம் காணாமல், கோணாமல் கண்டு கொடுக்க வேண்டும். காலத்தில் கொடுக்க

வேண்டும். அரக்கர் சூரியனுடன் போருக்கு வரும் சமயத்தில் தான் நாம் அர்க்கியம் கொடுக்க வேண்டும். போர் முடிந்த பிறகு நாம் அர்க்கியம் கொடுத்து ப்ரயோஜனமில்லை.

சரியான் காலத்தை நம்மால் நிர்ணயிக்க முடியாது. ஆதலால்உரிய காலத்தில் அர்க்கியம் கொடுக்கிறேன். ஆதலால் காலாதீத ப்ராயசித்த அர்க்கியம் தேவையா என்று கேட்காமல் ப்ராயசித்த அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

ப்ராயசித்த அர்க்கியம் கொடுக்கா விட்டால் தோஷமுண்டு கொடுத்தால் .கொடுப்பது பயனற்றதாக போய் விடுவதால் யாதொரு நஷ்டம் இல்லை.அசுரர் என்பவர் தமோ குணமுடையவர். நமது, பாபம், அஸுத்தம், நோய். அசுத்தமான அந்தகரண விருத்திகள் தான் அரக்கர்கள்.

நமக்கு, சுறுசுறுப்பை, ஆரோக்கியத்தை, ஜீவ சக்தியை, ஒளியை,அறிவை தரும் ஸூர்ய கிரணங்களின் அருள் நம்மிடம் வராமல் இவை தடுக்கின்றன. நாம் தான் அச்சமயம் எழுந்து ஸ்நானம் செய்து சுத்தனாக சுறு சுறுப்பாக திருமண மானவர்கள் பஞ்சகச்சம் கட்டி கொண்டு,

நெற்றிகிட்டு கொண்டுகர்மா செய்தால் நம்மிடமுள்ள அசுர அம்சம் நம்மை விட்டு விலகி விடும்.

பிறகு ப்ரணவத்துடன் வ்யாஹ்ருதி கூறி தன்னை சுற்றி பரிசேஷனம் போல் ஜலத்தால் சுற்ற வேண்டும். இதை உட்கார்ந்த படியே செய்ய க்கூடாது. எழுந்து தன் உடலால் ஒரு ப்ரதக்ஷிணமாக சுற்றி இரு கரங்கலால் மார்பை தொட வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு அர்க்கியம் கொடுக்க வேண்டும். பிறகு எழுந்து நின்று தன்னை தானே ப்ரதக்ஷிணமாக சுற்றி இரு கரங்களால் மார்பை தொட வே|ம். பிறகு உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

எதிரில் காணப்படும் சூரியன் ப்ருஹ்ம ஸ்வரூபி. அந்த ப்ருஹ்மமாக நானிருக்கிறேன்.ப்ருஹ்மமே ஸத்யம். என்று கூறி மனதினால் த்யானம் செய்ய வேண்டும்.

இப்படி தினந்தோரும் மூன்று வேளையும் சிறிது நேரம் அப்யாசம் செய்து வந்தால் அதுவே நம்மை ப்ருஹ்ம நிஷ்டையில் அமர்த்தும்.இப்பிறவியிலேயே ஸத் ஆசார்யான் கிட்டுவார். உபதேசம் பெற்று க்ஞானம், முக்தி,நிஷ்டை கை கூடும். ப்ருஹ்ம நிஷ்டையில் அமர்த்தும்.

அர்க்கிய ப்ரதான மந்த்ரஸ்ய விசுவாமித்ர ரிஷி: காயத்ரி சந்த: ஸவிதா தேவதா. அர்க்கிய ப்ரதானே விநியோக:

அர்க்கிய ப்ரதான மந்திரத்திற்கு விசுவாமித்ரர் ரிஷி; காயத்ரி சந்தஸ்; ஸவிதா தேவதை. இது அர்க்கிய ப்ரதானத்தில் விநியோகிக்க படுகிறது. காயத்ரி மந்திரத்தை கூறி , அர்த்தத்தை மனதில் நங்கு த்யானம் செய்து , இரு கைகளிலும் நிறைய ஜலம் எடுத்து , அளிக்க வேண்டும். கட்டை விரல் சேரக்கூடாது.

காயத்ரி மந்த்ர அர்த்தம்:- எவர் நம் புத்தியை தூண்டுகிறாரோ அப்படி பட்ட ப்ரகாசனான உலகை உண்டு பண்ணுபவருடைய( சூர்யனுடைய) மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம். ஸுரியன் ஒருவரே நம் கண்ணுக்கு புலப்படும் ப்ரத்யக்ஷ தெய்வம்.

இந்த சூரியனும் ஜீவாத்மாதான். காயத்ரி பரமாத்மா எனவும் வாதம் உண்டு. தேவர்களைவிட மூன்று தேவிகளே கருணை உள்ளமிக்க வர்கள். ஆதலால் காயத்ரி என்பவளை மும்மூர்த்தி ஸ்வரூபமாக கூறி முக்தா வித்ரும என்ற த்யான ஸ்லோகத்தால் காயத்ரியை பெண் வடிவமான தேவி, ஸாவித்ரி, ஸரஸ்வதி, ஸந்த்யை என்பவளும் அவளே எங்கிறோம்.

சிலர் பர்க்க எனில் சிவன் என்பது ப்ரஸித்தம் .ஆதலால் சிவனே காயத்ரியின் பொருள் என்பர். காயத்ரியால் ஹோமம் செய்த பிறகு ஸூர்யாய இதம் ந மம எங்கிறோம். ஆதலால் காயத்ரியின் அர்த்தம் ஸூர்யனே என்றும் கூறுவார்கள்.

காயத்ரியின் அர்த்தம் ப்ருஹ்மம் என்று கூறினால் சிறுவன் மூளையில் ஏறாது. அதற்காக சூரியன், காயத்ரி என்று கூறினார்கள். சிறுவன் காயத்ரி செய்ய செய்ய அவன் உள்ளம் சுத்தமாகி ப்ருஹ்மத்தை நாடும் . அதை காண்பிக்கவே காயத்ரி உபதேசத்தை ப்ருஹ்மோ பதேசம் என அழைக்கிறார்கள்.

எந்த மூர்த்தியை உபாசித்தாலும் அவரவருக்கு அதே சிரத்தையை அளித்து அந்த உபாசனையை நானே ஏற்கிறேன் எங்கிறார் கண்ணன் கீதையில்.

பின்பு ஒரு ப்ராணாயாமம் செய்து காலாதீத ப்ராயஸ்சித்த அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று கூறி மற்று மொரு முறை காயத்ரியை கூறி அர்க்கியம் அளிக்கவும். உடனே வ்யாஹ்ருதியை கூறி= ஓம் பூர்புவஸ்ஸுவ: கையில் ஜலம் எடுத்து , தன் சரீரத்துடன் ஒரு ப்ரதக்ஷிணம் செய்து ஜலத்தை தலையை சுற்றி விடவும்.

பின் ஒரு ப்ராணாயாமம் செய்து அஸா வாதித்யோ ப்ருஹ்ம ப்ருஹ்மை வாஹமஸ்மி ப்ருஹ்மைவ ஸத்யம் என்று இரு கைகளையும் மார்புக்கு நேராக வளைத்து ( சிறிது நேரம்
கண்களை மூடி) பத்து விரல்களாலும் மார்பை தொட்டுக்கொண்டு த்யானம் செய்ய வேண்டும்

பொருள்==இந்த ஸூர்யனே பரப்ருஹ்மம். நான் ப்ருஹ்மமாக இருக்கிறேன்.ப்ருஹ்மமே ஸத்யம்..

பிறகு ஆசமனம் செய்து சூரியன் முதலியவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மூன்று வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டு கிழக்கில், மேற்கில், கிழக்கு எனவும் சில ரிஷிகள் வடக்கில் என்றும் பகல் ஸந்த்யைக்கு சொவதால் அவரவர் வீட்டு குலாசார வழக்கபடி பகலில் வடக்கு அல்லது கிழக்கில் செய்ய வேன்டும்.

இரு கரங்களாலும் அர்க்கியம் அளிக்க வேண்டும். இது ஸந்த்யையின் கடைசி அங்கம். முதலில் பரமாத்மாவை உபாசித்தோம். இது அரசனை ஆராதிப்பது போல். எந்த பரமாத்மா குணங்களுடன் கூடி இவ்வுலகை நடத்துகிறாரோ, அப்படிபட்ட நவ கிரஹங்களுக்கும், விஷ்ணுவிற்கும் ஜல தர்ப்பணம் மூலம் ஆராதிக்கிறோம்.

ஆதித்யம் தர்ப்பயாமி=சூரியனை நாடி தர்ப்பணம் செய்து அவரை த்ருப்தி செய்து வைக்கிறேன். இம்மாதிரி அர்த்தம் செய்து கொள்ளவும்.

ஆதித்யம் தர்ப்பயாமி; ஸோமம் தர்ப்பயாமி; அங்க்காரகம் தர்ப்பயாமி; புதம் தர்ப்பயாமி; ப்ருஹஸ்பதிம் தர்ப்ப்யாமி; சுக்ரம் தர்ப்பயாமி; சனைஶ்சரம் தர்ப்பயாமி; ராகும் தர்ப்பயாமி; கேதும் தர்ப்பயாமி;

கேசவம் தர்ப்பயாமி; நாராயணம் தர்ப்பயாமி; மாதவம் தர்ப்பயாமி; கோவிந்தம் தர்ப்பயாமி;
விஷ்ணும் தர்ப்பயாமி; மதுஸுதனம் தர்ப்பயாமி; த்ரிவிக்கிரமம் தர்ப்பயாமி; வாமனம் தர்ப்பயாமி; ஸ்ரீதரம் தர்ப்பயாமி; ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி; பத்மனாபம் தர்பயாமி; தாமோதரம் தர்ப்பயாமி. ஆசமனம் செய்யவும். ஸந்த்யா கர்மா பூர்த்தி; ஜபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
 
Latest ads

Back
Top