Remove Pitru Dosham for 12 Zodiac Signs

பித்ரு தோஷம் பித்ருக்களின் சாபம் ஒரு குடும்பத்திற்கு இருந்தால், அந்த குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் முன்னோர்கள் மறைந்த திதியை மறந்து திதி சிரார்த்த காரியங்களை செய்யாமல் விட்டிருந்தால் அமாவாசை தினத்தில் அவர்களை நினைத்து இந்த பரிகாரம் செய்வது நல்லது. பித்ருக்களின் மனது குளிர்ந்து உங்களுக்கு முன்னோர்களுடைய ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்

மேஷம்

ஏழைகளுக்கு உங்கள் கைகளால் அன்னதானம் செய்ய வேண்டும். உண்மையாகவே பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால் உங்கள் குடும்பம் சீரும் சிறப்பும் பெறும். பித்ரு தோஷம் நீங்கும்.

ரிஷபம்

கோவில்களுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம். கோவில் கும்பாபிஷேகம் நடந்தால் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் நாளைய தினம் குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது உங்கள் கையால் முதியவர்களுக்கு தயிர் சாதம் வாங்கி தானமாக கொடுக்க. பித்ரு தோஷம் நீங்கும்.

கடகம்

வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். குழந்தைகள் ஆசிரமம், முதியோர் ஆசிரமம், சென்று அங்கு இருப்பவர்களுக்கு பணிவிடை செய்தல் அன்னதானம் செய்ய பித்ரு தோஷம் நீங்கும்.

சிம்மம்

குடை தானம் செய்யவும். வெயிலில் கடை வைத்து நடத்துவார்கள். குடை வாங்க முடியாத சூழ்நிலை இருப்பவர்களுக்கு தானம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

கன்னி

வஸ்திர தானம் செய்ய வேண்டும். தாய் தந்தை இல்லாமல் வாழக்கூடிய குழந்தைகளுக்கு புது துணியை வாங்கி தானம் கொடுக்க பித்ரு தோஷம் நீங்கும்

துலாம்

அன்னதானம் செய்வது பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவார்கள் கஷ்டப்படும் ஏழை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த படிப்புக்கு உதவி செய்ய பித்ரு தோஷம் நீங்கும்.

விருச்சிகம்

புளி சாதம் செய்து உங்கள் கைகளால் அன்னதானம் கொடுக்க வேண்டும் வயதானவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

தனுசு

நவதானியங்கள் அரிசி பருப்பு வகைகள் இதில் ஏதாவது ஒன்றை வாங்கி ஆசிரமங்களுக்கு உங்கள் கைகளால் தானம் கொடுக்க பித்ரு தோஷம் நீங்கும்.

மகரம்

கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். அங்கு யாசகம் கேட்பவர்களுக்கு தயிர் சாதத்தை தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். பித்ரு தோஷத்தை நீக்கும்.

கும்பம்

வஸ்திர தானம் செய்ய வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு இந்த வஸ்திர தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

மீனம்

தாய் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் இரண்டு வயதான தம்பதிகளுக்கு சாப்பாடு போட்டு, தாம்பூலம் கொடுத்து, அவர்களுக்கு புது துணி எடுத்து கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று தரும்.
 
Back
Top