தாக்கு நல்லானந்த ஜோதி - அணு
தன்னிற் சிறிய எனைத்தன் அருளால்
போக்கு வரவற் றிருக்குஞ் - சுத்த
பூரண மாக்கினான் புதுமைகாண் மின்னே.
தாயுமானவர்.
அலைகள் கடலுக்கு அன்னியமாக எப்போதுமே இருப்பதில்லை.
சிறிய அலையாகினும் சரியே, பெரிய அலை ஆகினும் சரியே,
அவை எப்போதும் கடல் மயமாகவே இருக்கின்றன.
ஜீவன் எத்தனையோ உபாதிகளுடன் பொருந்தி உள்ளது.
எத்தனையோ வரைமுறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றது.
ஆயினும் ஜீவன் எப்போதும் பூரணத்திலேயே புதைந்து கிடக்கின்றது.
இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்து கொண்டால்,
நாம் எப்போதும் பூரணத்திலேயே நிலைத்து நிற்பதை உணர்ந்து கொள்வோம்.