Visalakshi Ramani
Well-known member
#05. யாவத்3 வித்தோ
5. சுற்றத்தினர் சுயநலவாதிகள்.யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |
பச்’சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||
பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய்.