- Thread Starter
- #8,681
த3ச’கம் 97
த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 சகௌ3ர்யா ஸார்த்த4ம் தத3க்3ரே புரபி4த3த2
க3தஸ்த்வத்ப்ரிய ப்ரேக்ஷ ணாரத்தீ2
ஸித்3தா4னேவாஸ்ய த3த்வா ஸ்வயமய
மஜராம்ருத்யுதாதீ3ன் கா3தோSபூ4த் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி
ஸ ப்ரயதே யேன தஸ்மாத்
மூர்த்தி த்ரய்யாத்மகஸ்த்வம் நனு ஸகல
நியன்தேதி ஸவ்யக்தமாஸீத் ( 97- 9)
அதற்குப் பிறகு பரமேஸ்வரன் தங்கள் பக்தனைக் காண்பதற்குப் பார்வதி தேவியுடன் வந்தார். மார்க்கண்டேயன் முன் சென்று, அவர் தன் தவ மகிமையால் முன்பே பெற்றிருந்த ஜனன மரணமின்மையை அவருக்கு தான் அளிக்கும் வரமாக அருளிவிட்டுச் சென்றார். பரமேஸ்வரன் கூடத் தங்களைச் சேவிப்பதில் பிரீத்தி அடைகின்றார் என்பதால் தாங்களே மும் மூர்த்திகளுக்கும் அந்தர்யாமி என்பது தெளிவாகின்றது அல்லவா?