Quotable Quotes Part II

Excuse+Quotes+-tamilimagequotes.blogspot.com.jpg
 
[h=1]குண்டு

[/h][h=2]என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.[/h]

 
[h=1]முட்டாள் மாணவ[/h][h=2]அன்று தான் விடுமுறைக்கு பிறகு முதல் நாள் கல்லூரியில்....
பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மாணவர்கள் அனைவரும் வணக்கம் கூறி, இருக்கைகளில் அமர்ந்து கவனிக்க தொடங்கினர்...

பேராசிரியர் : இந்த வகுப்பில் யாரேனும் தன்னை முட்டாள் என்று நினைத்தது உண்டா...? ஆம் என்றால் எழுந்து நிற்கவும்...

சிறிது நேரம் அமைதி நிலவியது....ஒரே ஒரு மாணவன் எழுந்தான்...

பேராசிரியர் : உன்னையே நீ முட்டாள் என்று நினைக்க காரணம் என்ன?? சொல்

மாணவன் : நான் முட்டாள் இல்லை, நீங்கள் தனியாக நிற்பதை என்னால் காண இயலவில்லை....அதனால் தான் எழுந்தேன்.

மொத்த வகுப்பறை கொல்லென்று சிரிக்க.....

பேராசிரியரும் சிரித்து விட்டார்...!!![/h]


[h=1]ன்[/h]
 
[h=1]நாலாறு திங்களாய் நான்[/h][h=2]பாலாற்றில் ஊருகின்ற தண்ணீர்போ லேமனது
வாலாட்டித் துள்ளிக்கொண் டோடுதே - வேலா!நின்
கோலால்ஏன் என்னிடையைத் தட்டினாய் உன்னினைவில்
நாலாறு திங்களாய் நான்

உச்சி நரைத்ததே ! ஊன்றி நடப்பதற்குக்
குச்சியும் தேவைப் படுகிறதே - அச்சமூட்டும்
காலாநீ வேந்தேன்னைக் கைப்பற்றிப் பொவாயென
நாலாறு திங்களாய் நான்

- விவேக்பாரதி[/h]
 
[h=1]துரோகம்[/h][h=2]அன்று
அணைத்துக்கொண்டாள்
மகனை
அது தாயின் உள்ளம்

இன்று
அனுப்பிவிட்டான்
தாயை
அது முதியோர் இல்லம்[/h]
 
Back
Top