Quotable Quotes Part II

நல்லதோர் வீணை


வீணையும் பெண்ணும் ஒரேபோலவே;
வீணர்கள் இசைக்கவே இயலாதவர்கள்.
இசைக்கத் தெரிந்தவரிடம் கிடைத்தால்,
இசைப்பார் உலகை மயக்கும் இசையை.

----
நல்லதோர் வீணையைக் கைகளில் எடுத்து,
நலம் கெடப் புழுதியில் எறிந்து விடாதீர்!
வல்லவன் கைகளை அடையட்டும் அது!
வானவர் மயங்க இசைக்கட்டும் அது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

நல்லதோர் வீணை செய்தே



நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ


சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ



விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...uyir கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவா
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ
-நன்றி பாரதியார்
 
சிரிப்பும், அழுகையும்


சிலசமயங்களில் அழும் விலங்குகளும்;
சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே.
வாய் விட்டுச் சிரித்தால் நம்முடைய,
நோய் விட்டுப் போகும் என்பார்கள்.

-------
பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி,
மகிழ்ச்சியும் சரி, அழுகையும் சரி;
இடம் மாறி, மாறி, நம்மிடம் பலவித
வேடிக்கைகள் காட்டும் உலகினில்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒருனாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

:bounce::frusty:
 
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
 
உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

- கவிஞர் கண்ணதாசன்.
 
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!

வாழ்க வாழ்க பெண்களை நம்பும் ஆண்கள் வாழ்க மிக்க வளமுடன்..

அதனால் தான் பெண்கள் இப்போதெல்லாம் :mullet:

சேலையைத் தூக்கிக் கடாசி விட்டார்களோ? :confused:

சூரிதார்/ ஜீன்ஸ் பெண்களை நம்பலாமே!!! :rolleyes:
 
எல்லோரும் நல்லவரும் அல்ல :angel: ...:nono:

எல்லோரும் பொல்லாதவ்ரும் அல்ல :evil: ...:nono:
 
மனிதன் பாதி மிருகம் பாதி :hat: + :llama:

கலந்து செய்த கலவை நாம்!!! :humble:

பாதி = 50% / > 50% / < 50% :decision:


கெட்டவர்கள் ...நாம் நினைப்பதை விடவும் நல்லவர்கள்!!! :thumb:

நல்லவர்கள்..... நாம் நினைப்பதை விடவும் கெட்டவர்கள்!!! :heh:
 
வயது வேறுபாடு


மனித இனத்திலும், பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொற்கள் வயது வேறுபாடு இன்றி எல்லாப் பெண்களையும் குறிப்பதையும் கவனிக்கலாம். எனினும் பொது வழக்கில் பெண் எனும்போது அது வளர்ச்சியடைந்த மனித இனத்துப் பெண்பாலாரையே பெரும்பாலும் குறிக்கும்.

வயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும்


தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன எனினும் தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை.

இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
இவை தவிர சிறுவயதுப் பெண்ணைப் பொதுவாகச் சிறுமி என்றும், திருமணம் ஆகாத பெண்களைக் கன்னி என்றும் குறிப்பது உண்டு. பொதுவாகச் சிறுமி நிலையைத் தாண்டியவர்கள் பெண்கள் எனலாம்...நீடூழி வாழ்க.. நரசிம்ஹன் (புதிய சாணக்கியன்):drama:

  1. 0 - 12 வயதுப் பெண் - பேதை => மண்டு :loco:
  2. 12 - 24 வயதுப் பெண் - பெதும்பை => இனியவள் :music:
  3. 24 - 36 வயதுப் பெண் - மங்கை => chalthaa hai :(
  4. 36 - 48 வயதுப் பெண் - மடந்தை.=> உடும்பு :mmph:
  5. 48 - 60 வயதுப் பெண் - அரிவை.=> அறுவை :violin:
  6. 60 - 72 வயதுப் பெண் - தெரிவை.=> பேரறுவை :drum:
  7. 72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண் => :bolt: (பிடித்தேன் ஓட்டம்)
 
தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன எனினும் தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை.

காரணம்???

பெண்களுக்குத் தான் 16 வயதுக்கும் மேல் ஏறவே ஏறாதே!

பிறகு எதற்காக இத்தனை அனாவசியச் சொற்கள்??? :rolleyes:
 
நரசிம்ஹன் (புதிய சாணக்கியன்):drama:

நான் நெனைச்சேன்! :)
நீங்க சொல்லீட்டீங்க!!
:drama:
 
ref #3374
டிஆர்எஸ் கண்டனம்: மக்களவையில் மிளகுப்பொடி தூவியும், சக உறுப்பினர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டும் சில உறுப்பினர்கள் நடந்துகொண்ட செயல்களுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கண்டனம் தெரிவித்தார். :target:

vellarikkai polak kadiththu mendru vizhungaamal irunthaargale!!! :rolleyes:
 
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒருனாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

:bounce::frusty:


:Cry:......:nono:

:becky:.......:nono:
 
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

Repeat performance???

Retelecast???
 
Back
Top