• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

original composition - Tamil

Status
Not open for further replies.
Message to parents, “Please don’t be too choosy. Or you run the risk as indicated in this free verse.”

பொம்மை

குழந்தையை அழைத்துக்கொண்டு
பொம்மை வாங்க
கடைத்தெருவுக்குப் போனேன்.

“இந்தக்கடையில் வாங்கலாம்பா”
“வேண்டாம்மா,
இது வேறே ஜாதிக்காரன்
நடத்தற கடை.”
“இதுப்பா?”
“இதுவும் அப்படித்தான்.”

பல கடைகளைத்தாண்டி
என் ஜாதிக்காரர் நடத்தும்
கடையைக் கண்டுபிடித்தேன்.
அங்கு பல சேல்ஸ்மென்.

இவர் நெற்றியில்
நாமம் போட்டிருக்கிறார்,
வேண்டாம்.

இவர் நெற்றியில் கரிக்கோடு
வேண்டாம்.

இதோ இவர்கள் எல்லாம்
என்னைப் போலவே
விபூதி பூசியிருக்கிறார்கள்.

இவர் தெலுங்கு பேசுகிறார்,
இவர் மலையாளம்,
இதோ இவர்கள்
என்னைப்போலவே
தமிழ் பேசுகிறார்கள்.

“என்ன ரேஞ்சுலே பொம்மை வேணும் சார்?”
என் கையில் பத்து ரூபாய் இருந்தது
நூறு இருநூறு என்கிற
பொம்மை எல்லாம்
எனக்குக் கட்டுபடி ஆகாது.
அஞ்சு ஆறு ரூபா பொம்மை எல்லாம்
என் கௌரவத்துக்கு
குறைச்சல்.

“பத்துப் பதினஞ்சு ரூபாயிலே எடப்பா”
பேரம் செய்து
ஒன்றிரண்டு குறைச்சுக்கலாம்
ஒன்று இரண்டு பணம் குறைந்தால்
கடன் சொல்லிக்கலாம்.

பொம்மை உற்பத்தி ஆன தேதிக்கும்
என் குழந்தை பிறந்த தேதிக்கும்
பொருத்தம் இருக்கிறதா என்று
கம்ப்யூட்டர் மூலம் டெஸ்ட் செய்து,
“இந்தப் பொம்மை அழகாயில்லை,
வேண்டாம்.
இது வேலைக்காரன் பொம்மை,
வேண்டாம்.
இது வியாபாரி பொம்மை,
வேண்டாம்.”

அப்பா ! கடைசியில் கிடைத்தது,
ஆபீஸர் பொம்மை.
இதை விற்பவர்கள்
நல்ல குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் தானா என்பதை
விசாரித்து,
திருப்தி அடைந்து,
பேரம் பேசி,
ஒரு வழியாக பொம்மையை வாங்கி,
கையில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ---
குழந்தையைக் காணோம் !

குழந்தை, குழந்தை !
ஐயோ என் குழந்தை !
தேடினேன், தேடினேன்.

கடைசியில் ஏதோ ஒரு கடையில்
இதுவரை நான் ஒதுக்கி வந்த
பொம்மைகளில் ஒன்றை
கையில் வைத்துக்கொண்டு
குழந்தை சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

குழந்தை ஆசைப்பட்டது என்று
கடைக்காரர்
இனாமாகக் கொடுத்து விட்டார் போலும்

ஹலோ கவிஞரே, பொம்மை என்பதற்குப் பதிலாக மாப்பிள்ளை என்று வாசிக்கலாமா ?

உங்கள் இஷ்டம்.
 
பொம்மை என்று சொல்வதாலே மெய்யும் பொய்யாய் ஆனதே
போலி வாழ்வை வாழ்ந்து காட்டும் பொருளும் வெளியே வந்ததே
காசை நம்பி கன்னிகையை கடல் கடந்த நாட்டிலே
கயிறு மாற்றி விற்பதாலே லாபம் என்ன புரியலே
நல்லவனின் நாணயத்தை எண்ணி பார்த்து சபையிலே
நங்கையினை தாரை வார்க்கும் தகப்பன்மாரும் குறைச்சலே
அழுத குழந்தை அடம்பிடித்து அடைந்த பொம்மையை போலே
அழகு பெண்ணாள் காதலாலே அடைந்திடுவாள் ஆளை

Am I right Vikrama ji???

Pranams
 
Namassadhasae.

Shri Vikrama ji:

ஒரு பொம்மலாட்டம் நடக்குது! ரொம்ப புதுமையாக இருக்குது!!
நீங்கள் திரு. விக்ரமாவா? வாமனனை வெற்றி கொண்ட த்ரிவிக்ரமாவா?
இந்த பொம்மை அவதாரம் அற்புதம். வாழ்க உமது கற்பனை வளம் !

A puppet show is running. This show is Arputham.
Are u Thiru. Vikrama or Thrivikrama? This bommai avatharam is excellent.
Long live your imagination!

"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்
 
Rain or shine, we do complain.

நிலம் வெடித்தது, பயிர்கள் காய்ந்தன
மக்கள் கதறினர் – “மழைத்தேவா கண் திறவாயோ”
கண் திறந்தான்-
காலை இளம் பொழுதில்
அவன் கருணை பிறந்தது.
பாலகர்கள் நனைந்தே பள்ளிக்கு விரைந்தனர்
“சே, என்ன மழை காலங்கார்த்தாலே
வேலைக்கு இடைஞ்சல்”
மறு நாள் பகலில் மழையவன் வந்தான்
“சே, என்ன மழை,
காயவைத்த பொருளெல்லாம் வீணாகிவிட்டனவே
கட்டுகின்ற சுவரெல்லாம் கரைந்து போயினவே”
அடுத்த நாள் அந்திப் போதில்
அவன் கருணை பிறந்தது
“சே என்ன மழை,
வேலை முடிந்தும் வீடு செல்ல முடியவில்லை”
எல்லோரும் உறங்கும் இரவினில் வந்தான்
ஓலைக்குடிசை, ஓட்டைகள் பலவுண்டு
உழைப்பாளிக் குடும்பம், உட்கார இடமில்லை
“வேறு சுகம் எதுவுமில்லை,
உறக்கமும் கூடாதா பாழும் கடவுளே”
மீண்டும் கண்களை மூடினான் மழைத்தேவன்
 
Namassadhasae.

Shri Vikrama ji

Your karpanai is excellent. Good posting. Pls. keep it up.

"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!" _ திருவக்கரை திருப்புகழ்
 
அவள் வேண்டும் அவள் வேண்டும் என்று சொன்னான் நம்பி
யாரடா வேண்டும் சொல்லி தொலையேன் என்றார் பெற்றோர்
நங்கை என் கற்பனையில் அல்லவோ இருக்கிறாள்
உங்களால் எப்படி அவளை கண்டு பிடிக்க முடியும்
பதிலளித்தான் நம்பி

தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சன்னதியில் - கவிஞர் கண்ணதாசன்

oh how much i pine for her, sighed the young lad
who is she and we wil find her for you, said the exasperated parents
oh! she is all in my imagination
so how can you locate her?
replied the young lad :)

godlike pleasure awaits her in her man's altar - kannadasan
 
Last edited:
ஷாம்பூ போட்டு குளித்தான்
ஒரு மணி நேரம் தலையை வாரினான்
சீப்பால் மீசையை நூறு தடவை சீவினான்
ஆஹா என்ன கட்டிளம் காளை நான் என்று பெருமினான்
ஆமாம் வடிகட்டின கழுதை என்று பதிலளித்தது கண்ணாடி

he washed himself with liquid soap
combed his hair for an hour
brushed his moustached 100 times
'what an handsome lad am i' he swelled
yes, what an idiot ass you are, replied the mirror
 
Last edited:
Sarvasri Vikrama, Pannvalan and Kunjuppu

Your literary works are amazing.

Keep it up

All the best
 
Once again, let me request on behalf a section of our members who do not understand written Tamil.

Please translate or transilerate. Let us embrace everyone to understand what we post.

Regards,
KRS
 
மழைத்தேவன் தோன்றினான்
பிழைப்புக்காக அலைபவர் பலர் குற்றம் கூறினாலும்- மற்றோர்
அழைப்புக்காக வான்வழியே வந்திறங்கி நின்றான்

குற்றம் கூறுவோரை எல்லாம் குனிந்து பார்த்த அவன்
காய்ந்த புற்களில் துளிர்பச்சை காண்கிறான்
தானியம் விளையக்கண்டான் தாகங்கள் தீரக்கண்டான்
தவணை முறையில் தவறாது வருவேன் என்றான்
ஒலைக்குடிசையினரின் ஒரு நாள் ஓலத்துக்காக
பாலை நிலத்தை பரிதவிக்க விடலாமோ

மழைத்தேவன் தோன்றினான் - மண்ணில் இன்பம் பரப்பினான்
பயிர்கள் செழித்தன பள்ளிபூக்கள் சிரித்தன
உயிர்கள் விழித்தன உடலெங்கும் சிலிர்த்தன
மழைத்தேவன் தோன்றினான் - மண்ணில் இன்பம் பரப்பினான்
 
முங்கிகொண்டிருக்கும் கடலோர நகரங்கள்
தண்ணீருக்குள் முகிழ்ந்த தீவுகள்
பனி இல்லா ஆர்க்டிக் பனிமலை
நான் இதற்கு காரணமல்ல கதறினார் வருணபாவான்
இந்த உலக வெப்ப நிலை உயர்வதற்கு
எல்லாம் பாழாய்ப்போன மனிதன்தான்

sinking seaside cities
islands under water
snowless arctic tundra
'i am not responsible for this' cried varuna bhagavan
for this global warming
all this is the work of the damn humans !
 
Namassadhasae.

இந்த ஆண்டு இந்த தேசத்தில் செம மழையாம்
இந்த வெப்சைட்டிலும் தான் ஏகத்துக்கு கவிஞர்கள் காட்டில் மழை
நான் கவிஞனும் இல்லை ; நல்ல ரசிகனும் இல்லை (உபயம் : கண்ணதாசன்)
எல்லாம் இந்த கவிஞர்கள் காட்டில் இப்பொழுது பொழியும் மழை தந்த ஊக்கம் தான்!
தொடரட்டும் இந்த மழைக்கால மேஹம்!
இத்துடன் முடியுது இந்த பேத்தல் மழை!

Seems this year India gets severe rain
In this website also severe rain in the forest of poets
I am no poet; Not even a good rasikan
All due to the encouragement got in this rain of poems.
Let the rainy clouds continue!
My pathel ends here!

"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்
 
மண்ணைப்பார்ததும் மயங்கினேன் - என்
கைகளால் பலவித பொம்மைகள் செய்தேன்
என் இஷ்டப்படி ஆட்டிவைத்தேன் - பொம்மைகளுக்கு
உண்ணக்கொடுத்தேன் உடையும் கொடுத்தேன்
பொம்மைகளின் பராமரிப்பிலேயே பொழுதும் போனது
போதும் இந்த விளையாட்டு "போரடித்து" போனது
நான் செய்த பொம்மைகளை நான் என்ன செய்வது?
நிலத்தில் அழுத்தவா? நீரில் அமிழ்க்கவா? வெயிலில் சுடவா?
ஒவ்வொன்றாக செய்து பார்க்கிறேன்- முதலில்
ஓங்கு பனிசிகரங்களை ஒழித்துக்கட்டுகிறேன்
ஓசோனின் ஓட்டையை விரிவுபடுத்துகிறேன்
ஆசையில் ஆடும் பொம்மைகளை அழித்துக்கட்டுகிறேன்
பொம்மைகள் தீர்ந்தாலென்ன பொழுது விடியட்டும்
மண்ணைப்பிசைந்தால் மறுபடியும் பொம்மைகள்...


I created dolls and made them to live as I wish. I made it beautiful with new dress. the whole day was wasted in maintenance of these dolls and its boring for me now. What to do now to destroy these dolls? Shall I place it under soil, or immerse it in water, or make it dry under sun??? There is nothing to worry. There are lot of clay and I will create dolls tomorrow to play.
 
Once again, let me request on behalf a section of our members who do not understand written Tamil.

Please translate or transilerate. Let us embrace everyone to understand what we post.

Regards,
KRS
Dear Sri KRS,
while pleading for a literature section, I had made a specific request that translation may not be insisted upon. Now you make it mandatory on behalf of non-Tamil knowing members. I plead my inability to subscribe to this thread any more. Even transliteration is boring and it dampens creativity.
 
Namassadhasae.

I like to recall the posting made, suggesting for a separate Literature section for posting pieces of creativity, pre-dominantly in Tamizh,by Shri Vikramaji

It is an 'avasthai' to transliterate, which will test the patience of the author. Creativity is a different matter and stipulations and conditioning will not yield the desired result.

It is once more suggested that this Literature section is allotted for Tamil reading members. Wherever possible, the author may, either in the caption portion or at the end, add few lines of narration, which may not be made as mandatory, but optional. No doubt, the author may also get more readership to his creativity.

Shri Vikramaji's postings in this Literature Section are found enjoyable and I feel continuance of this section will add merit to this website and attract persons with creative interest.

All threads in this website speak English only, basically. If it is felt that we have authors and readers for Literature Section in English, a separate section for English also may be allotted.

Let the higher-ups in this forum decide pls!

"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!" _ திருவக்கரை திருப்புகழ்
 
Yes. While translating the meaning in english, the "bhava" has been totally lost. It also turns to be dual work for us to post. Even the readers will lost their enthu while reading it in english, as in english, that is not a poem (they will be mere lines of translation). Just consider these things moderators.

Pranams
 
Once posted in a translated version, it will belittle the original too. The mastery of the creator itself will be put to doubt.

"Poyum, poyum ivanaiya oru padaippali endru iththanai nalum enni kondirundhom?" ennum kelvi ellorudaiya manadhilum ezhuma, illaiya?

Please read this.

There are 3 classes of Tamil Brahmins.

1. Tamil only knowing Tamil Brahmins.
2. Tamil not knowing Tamil Brahmins.
3. Both Tamil and English knowing Tamil Brahmins.

The posts will affect only the Class No. 2. They may not consitute, in my humble opinion, more than 12%. Further, all other posts being only in English, they may not complain.

Moreover, if at least in Literature Section, Tamil posts are allowed, Tamil only knowing Tamil Brahmins will come forward to join the forum in larger numbers, if they find something suiting their taste, understanding, interest and ideologies.

Do we possess an inner fear that once Tamil posts are freely allowed, the forum itself may be hijacked by the Class 1, mentioned above?

Why can't we put this to vote, so as to elicit the opinions of the majority of the members in clear cut terms?

I repeat the words of KRS. Let us learn to be more inclusive, respecting the sentiments of everyone - but not all persons in every aspect.

Please read the above sentence once more to understand its correct meaning.

Regards,
pannvalan
 
Namassadhasae.

Any development? Any decision taken - whether or not to continue this Literature column exclusively in Tamil or making it optional to give the posting in transliterated form or the status-quo ante to be followed?



"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்
 
Dear All,
It is more than a month since I requested the moderators not to insist on Tamil translation/transliteration for original compositions. Since then, it seems, the moderators have quit and the responsibility of moderating has fallen on all of us, members. A few members have supported my plea and none is against. So I take it to mean that we can write in Tamil without translation/ transliteration in this thread. So here is my poem. Hope nobody has any objection.

முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை


மரத்தடி ஒன்றில் கிடந்தார் பிள்ளையார்
கோயில் இல்லை, கூரையும் இல்லை
கும்பிடப் பெரிதாய்க் கூட்டமும் இல்லை

பணமிகப் படைத்ததோர் பக்தன் வந்தான்
எந்தன் செல்வம் என்றும் காப்பீர்
நாளும் உனக்கு நாலணா தருவேன்
நன்றியோடிருப்பேன் நாயகா என்றான்.

திருடன் ஒருவனும் அவ்விடம் வந்தான்
இந்தச் செல்வனின் சொத்தைத் திருடுவேன்
சிறையுள் புகாமல் நீ எனைக் காத்தால்
கிடைப்பதில் பாதி உனக்கே என்றான்.

ஏழைப் பிள்ளையார் ஏழைக்குதவினார்
உண்டியல் நிரம்ப நோட்டுக் கத்தை
அறங் காவலர்கள் அப்பாவி மக்கள்
அத்தனை பணத்தையும் அவர்க்கே ஆக்கினர்
நிலங்கள் வாங்கினர் கோயிலைக் கட்டினர்
நகைகள் செய்தனர் கவசம் பூட்டினர்
பக்தர் கூட்டமோ பல பல ஆயிரம்
உள்ளே நுழையவே ஒரு நூறு கட்டணம்

அரசியல் வாதியின் கைகள் அரித்தன
வட்டம் பிடித்து மா வட்டம் வளைத்து
கோட்டையை நெருக்கினான். கோவிலில் இவனை
அறங்காவலனாய் அமைச்சர் அமைத்தார்.

கணக்கில் மறைத்துக் கரவுகள் செய்து
நிலங்கள் வளைத்து நகைகள் பதுக்கி
உண்டியல் திருடியும் நிறைவடையாமல்
சாமிக்கடியில் ரத்தினம் உளதென
பாறையால் ஒரு நாள் பெயர்த்துப் போட்டான்
மீண்டும் பிள்ளையார் மரத்தடி வந்தார்

முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை
மூத்த கணபதி விதிவிலக்கில்லை.
 
விக்ரமாவைப் போல் சில நல்லவர்கள் இருந்தாலும்
அக்ரமக்காரரே அதிகம் மலிந்தனர்
இன்று போய் நாளை வா என்ற
ஏழை பிள்ளையாரும் இவர்களிடம் சிக்கினாரோ?
சிறுதிருடனுக்கு உதவினாலும் செய்த பாவம் சும்மா விடுமோ?
சீர்திருத்தம் வேண்டுமன்றோ சிந்தைக்கும் செயலுக்கும்?

Pranams
 
அக்னி

புலவர் வகுத்தபடி புகழோடு தோன்றிடுவாய்
பிறக்கும் கணமுதலே பிரகாசம் பரப்பிடுவாய்
கடமை முடிந்தபின் கணமேனும் உயிர்தரியாய்
காலம் பலவாகக் கவிந்திருந்த இருளெனினும்
நிற்றல் இயலுமோ நின்முன்னே தேவனே?

சார்ந்தாரைக் காத்திடுதல் சான்றோரின் இயல்பென்பர்
நீயோ சார்ந்தாரை நீறாக்கி மகிழ்கின்றாய்

உயர்வும் தாழ்வுமென உனக்கில்லை பேதங்கள்
உன்னதக் கலைப் பொருளை ஓசையின்றி விழுங்கிடுவாய்
அழுகிய பிணத்தினையும் ஆசையுடன் உண்டிடுவாய்
அழுக்கு தூசிகளை அழித்திடவே விரும்பிடுவாய்
பழையன நைந்தன உன் பசிவாயக்கு உணவாக்கி
புதுமை பிறத்தற்குப் புவி தன்னில் வழியமைப்பாய்

தங்கம் ஒளிர்வதுன் தயவின்றி நடைபெறுமோ
வீட்டில் சமையலகம் வீதியில் வாகனங்கள்
எந்திரத் தொழிலகங்கள் யாவையும் இயக்கிடுவாய்
நீயின்றி எனக்கிந்தப் பொருளெல்லாம் ஏது ?

நானே தான் ஏது?
என்னிடம் நீ இன்றேல் எனைநான்கு பேர் தூக்கி
உன்னிடம் சேர்ப்பித்தல் உலகினில் மரபன்றோ?

மானிடரே வாருங்கள், மஹரிஷிகள் சொன்னபடி
வேதமொழி சில கூறி வேண்டிடுவோம் அக்கினியை

அக்னிமீளே புரோஹிதம்
யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
ஹோதாரம் ரத்னதாதமம்

முன்னின்று வழிநடத்திச் செல்பவனே போற்றி
முதன்மையாம் நலம் செய்யும் முன்னவனே போற்றி
யாகத்தின் தலைவனாய் இயங்கிடுவாய் போற்றி
யாகங்கள் செய்பவனும் நீயே தான் போற்றி
தேவரை அவியுண்ண அழைப்பவனே போற்றி
சிறப்பான செல்வங்கள் சேர்த்திடுவாய் போற்றி
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top