(Image courtesy: Google Images)
ரூ.700 கோடிக்கு தீபாவளி சரக்கு
தீபாவளிக்காக, 'டாஸ்மாக்' கடைகளில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன; 500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின், டாஸ்மாக் கடைகளில், தினசரி சராசரியாக, 50 ஆயிரம் பெட்டி பீர்; 1.25 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. இவற்றின் மதிப்பு, 70 கோடி ரூபாய். வார விடுமுறையில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும்.
இதை விட, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் விற்பனை எகிறும்.இந்நிலையில், நாளை தீபாவளி கொண்டாடப்படுவதால், 500 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிக விற்பனையாகும் கடைகளில், ஏழு நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. தீபாவளியை ஒட்டி, அனைத்து கடைகளுக்கும், 10 நாட்களுக்கு தேவையான, 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் அனுப்பப்பட்டு உள்ளன.
மது வகைகள் விலையை உயர்த்தியதால், அதன் விற்பனை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலரும் விலை உயர்வுக்கு எதிராக, அரசை கடுமையாக விமர்சிக்கின்றனரே தவிர, மது வாங்கு வதை குறைக்கவில்லை என, கள ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது.
Read more at:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1876919&device=tw
Cheers....
