பாசுரம் ஒன்று.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்;
நீராடிப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் - கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராய ணனே, நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
மார்கழி திருப்பாவை
பாசுரம் இரண்டு
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரி சைகள் கேளீரோ : பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம் ; பாலுண்ணோம் ; நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடிவோம்;
செய்யாதன செய்யோம் ; தீக்குறளை சென்றோதோம்:
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் என்பாவாய்.