• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
வந்தகாரியம் முடிந்ததா? ” தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள்அவருக்குத்தான் முதல்லே தெரியும் நமக்கே அப்பறம்தான்."[FONT=&quot]

[/FONT]

1988 வருடம்.பல ஊர்களுக்கு வங்கிஅலுவல்நிமித்தமாக பலஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை.சென்னை திரும்பியதும் திடிரென்றுஅலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோதின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்துஅடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை உடம்பு முழுவதும் அரிப்பு.எல்லா வைத்தியமும்பலனளிக்க வில்லை. கடைசியில் பரமாசாரியரிடம் வேண்டிக்கொண்டும் பலன் கிட்டிசரியாகவில்லை.சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .[FONT=&quot]

[/FONT]

ஒருநாள்என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா பெரியவா சாதூர் மாஸ்யம்விரதம் ஆரம்பிக்கபோரா தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியாஎன்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என்நிலையைப் பற்றி என்று. ரயலில் ஏகப்பட்டசாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி,அரிசி, மளிகைசாமான்களோடு பரமாச்சாரியார் இருக்கும் தேடி சென்றோம். ரிக்ஷாகாரர் ரேட்கூட பேசாமல்சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு.கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒருஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம்இருந்த பக்தியின் காரணமாக 4 மதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர்தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள்வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளேசென்று பரமசாரியரிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.[FONT=&quot]

[/FONT]

எங்கள்இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்ட்டானதுக்கு நதிக்கரபோகப்போறளாம் உங்க இரண்டுபேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணீட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் .பாலுமாமா நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிசுட்டோம்ன்னு சொன்னோம் .அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னுகண்டிப்ப சொல்லிட்டார்.[FONT=&quot]

[/FONT]

ஏதன்மத்யே எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு[FONT=&quot]
[/FONT]
எல்லாம் சிகப்புகொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் செட்சைன் மாத்திரையும் இல்லை .பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளைநம்பி வந்தாச்சு அவர் பாத்துக்கட்டும் என்றுஅவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டுஅவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொண்டு அவர் பின்னாலேயேசென்றோம்.வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச்சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டே சென்றேன்……..[FONT=&quot]

[/FONT]

நதிக்கரையைசென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்கால் மாதிரிமுன்று பிரிவாக ஜாலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராடஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டணம் முடித்த பின்புஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெரியவா என்னைப்பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம்உன்னையும் பெரியவா ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது நான் குளித்தஜலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.அவர் உடனே பெரியவாஸ்நானம் செய்ற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச்சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்யஆரம்பித்தேன் .குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராகஇருந்தது. ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து.அப்படியும் விடவில்லைநன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறிதட்டினாற்போல் ஒரு விஷயம்புலப்பட்டது.. நான் குளிக்கும் ஜலம் பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல் பட்டஜலம்தான் என்மேலும் பட்டு ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான்.[FONT=&quot]
[/FONT]
பெரியவா அதற்குள்ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார் .நானும் கரை ஏறினேன்.உடம்பில்இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில்வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியைபூசிக்கொண்டேன் . அப்போது பாலு மாமா கிட்டே வந்த பெரியவாபூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்புதோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியேசெய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில் கலந்துகொண்டோம்.
[FONT=&quot]
[/FONT]

பின்புபெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என்உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது.பெரியவா எனக்குதீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் வந்தகாரியம் முடிந்ததாஎன்று.எனக்கு அப்போதுதான் உறைத்தது என்ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்தவிபூதியும்தான் என்று .இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவேஇல்லை.என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில்விழுந்து நமஸ்காரம் செய்து. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்ததுஎன்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் .[FONT=&quot]

[/FONT]

நண்பர்சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமேசொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார் தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான்முதல்லே தெரியும் நமக்கே அப்பறம்தான்.என்றார்.அவளவுதான் அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய்விட்டது.இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவேஇல்லை, இதை எண்ணிப்பாக்காமல் இருக்கமுடியவில்லை.[FONT=&quot]

[/FONT]

நமோநமஸ்தே குருபாதுகாப்யாம்

Source: face book
[FONT=&quot][/FONT]
 


பெரியவா சரணம் !!

""நாராயண அய்யரே! என்ன தேடறீர்.... நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ.... என்ற பெரியவா ,""

காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.


அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு "கோவிந்தா' என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.


ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, மஹா பெரியவா காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார்.


தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவாளிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர்.


ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார்.


""நாராயண அய்யரே! என்ன தேடறீர்.... நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ.... என்ற பெரியவா ,""போங்கோ... போங்கோ.... ஆத்துல போய் தேடிப் பாருங்கோ.... நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்....'' என்றார்.


விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார்.


தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.


ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.


பெரியவா அதனிடம் அன்புடன், ""கோவிந்தா ..... உனக்கு பசிக்கலையா... எங்கே போயிட்ட....'' என்று கேட்க, அய்யரும் ""ஐயோ குரங்கு ...பத்திரம்.... பத்திரம்....'' என பதட்டத்துடன் ஓடி வந்தார்.


மஹா பெரியவா அவரிடம்,""பயப்படாதீங்கோ.... குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு'' என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி... அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த மஹா பெரியவா, அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.

நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்

Source: face book
 
Experiences with Maha Periyava: “Everything Will Happen As Per Your Wish.”


Sri Maha Periyava is the incarnation of Lord Eswara Himself, who has come down in the form of a sage with the sarva lakshana of Sukhabrahma Rishi to bless us all. Though He never attempted to display His spiritual powers explicitly, innumerable miracles stand as a testimony for the power of His blessings to save the world.


Such a miracle was witnessed at an event happened at Tirupathi Kshetram. It happened about fifty years ago. It is a common practice for the people of Tirupathi Tirumala Devasthanam to bring changes in the temple, to facilitate easy darshan to the devotees considering the ever increasing number.


Likewise once the Public Works Department and the Devasthanam members had planned for such a change. It was customary for the people to go into the Sanctum Sanctorum and come out through the same way as they went in. Instead, if the side walls of the Artha Mandapa was removed and a way made through it, people could move to their right and left sides freely, which would reduce their difficulties in having darshan and would save time too. This was the plan to be executed by them.


This plan was discussed in detail and a decision was taken to purchase a cutting machine from America at the cost of Rupees forty lakhs to execute it.


Listening to all this, Sri Ganapathy Sthapathy who was present there was thoroughly upset. His face reflected the turmoil in his heart. A minister present in the hall noticed it.


“Why is Sthapathy so silent? Is this arrangement okay with you?” asked the minister to the Sthapathy himself.


“Shall I share my views openly?” asked the Sthapathy for which the minister nodded his agreement.


The Sthapathy began to express his view.”Expert architects with a sound knowledge in Agama Sastras have constructed this temple thousands of years ago, in accordance with temple Agamas. The Artha Mandapa situated next to the Sanctum Sanctoriam is extremely sacred. It won’t be proper to demolish the side walls to make way. If it is done that way, there is a chance of the residing deity Sri Venkatachalapathy’s sanctity and power being affected. Considering all this, I request you to stop this demolishing plan,” he expressed his ideas without any fear.


All the members supported the plan unanimously and therefore the Sthapathy’s view wasn’t taken into consideration. The plan was unanimously agreed upon and signatures were sought from all the members to make it official. The Sthapathy had to yield to their demand out of compulsion and had to sign too.


From then on the Sthapathy’s peace of mind is totally lost. He left the place with a heavy heart. His mind was agonising over a plan to stop such a misfortunate incident from happening.


At this stage he realised that no one except the Eswara Incarnate, Sri Maha Periyava could help him. The Mahan was camping at a place called Karvetu Nagar. The Sthapathy ran to Him with the realisation that Sri Periyava is the only leading light that could show him the path.


It was early in the morning when he reached Karvetu Nagar. Tears were streaming down his face when he met Periyava with a heavy heart full of sorrow.


It was so soothing for the Sthapathy when Periyava gestured like drawing a namam on His forehead and asked,”Are you coming from there?” (meaning Tirupathi)


“Yes”, said the Sthapathy and was about to pour his heart to Periyava but He stopped him gesturing with His hand.


“No need to say anything now. Go and eat something first.” If there is something better than mother’s love and care, where else can one get it except Periyava? It was as if the Mother of Love could see through the fact that the Sthapathy was suffering without taking anything for the past two days.


Sri Periyava called a Mutt helper. “Take him to any hotel that is open now and ask them to feed him to his full stomach,” He instructed and sent him along.


Only one hotel was open at that time and when the Mutt’s person said that Periyava was ready to offer him money for the food for Sthapathy, the hotel owner said “ It’s my good fortune to feed him who is sent by Kanchi Periyava,” and served him the different variety of tiffins which was ready there.


The Sthapathy after finishing the food came and stood before Periyava again.


“Now tell me,” enquired the all-knowing God and the Sthapathy started telling everything that happened during the meeting.


“What will happen if you break it?” The Mahan questioned him with a divine playfulness.


“Any change in the temple at Tirupathi is brought about only after consulting Periyava. But now they have not disclosed this matter to Periyava. If we touch the Artha Mantapa, the Divine power of Venkatachalathy may not be received by the masses as before. Now they might come to Periyava to inform You of their decision. At that time Periyava shouldn’t give your consent and should find a way to stop this,” requested the Sthapathy in all earnestness.


Periyava, looking like the merciful saviour of mankind reassured the Sthapathy by saying “Everything will happen as per your wish, don’t worry”, and sent him back.


With his mental burden lessening a bit, the Sthapathy came home from there. He had a deep sleep as he was so tired and fatigued.


Suddenly he felt like someone was waking him up from his deep sleep. He woke up startled .There was no one nearby. But all his tiredness and fatigue had disappeared and a fresh drive had set into his mind. He ran towards the house of the then Chief Minister of Andhra Sri. Brahmananda Reddy, driven by the same force. The security guard standing at the gate identified him. He asked in surprise why the Sthapathy had come so early in the morning. The Sthapathy told him that he had to see the Chief Minister very urgently.


The security guard refused to let him in as he didn’t have prior appointment. Still, Tirupathi Ganapathy Sthapathy was known to all and so the official started thinking of a way to fulfill his request.


“Sir, we can do one thing. The Chief Minister comes down from upstairs to have coffee exactly at 4.30. While coming down and entering the hall, if the Chief Minister’s eyes fall on you coincidentally, it won’t be a problem. Otherwise you will have to wait till morning,” said the official.


The Sthapathy stood there, waiting with the hope that Periyava would certainly show some way and the Chief Minister while coming down, noticed the Sthapathy at the entrance.


“What Ganapathy, so early in the morning?” he enquired and asked him to come in.


“Danger to Tirupathi temple,” started the Sthapathy abrubtly and went on to explain everything in detail.


Anger was writ in the face of the Chief Minister after listening to the Sthapathy. He ordered to summon the Minister for religious affairs at once.


“What happened at Tirupathi day before yesterday?” asked the Chief Minister.”Oh just now I’m getting ready with the file to discuss it with you,” said the Minister.


“I asked only what had happened at Tirupathi,” insisted the Chief Minister angrily and the Minister for Religion described their plan in detail.


“You listen to me first. Venganna jolikku pogandi,” said the Chief Minister in Telugu and emphasized clearly not to interfere in the affairs of Tirupathi Venkatachalapathy and finished the conversation only after saying emphatically that it was his strict order.


“Nothing will happen in Tirupathi. You can go peacefully,” he said before sending off the Sthapathy.


The Sthapathy walked out with a sigh of relief and only then did he come back to his senses. He realised absolutely that it must be some divine power which woke him up from sleep and drove him with a magnificent force, making him meet the CM so early in the morning, thus bringing about a solution to such a big problem.


He could hear the holy voice of Sri Sri Sri Periyava in his mind saying,” Everything will happen as per your wish,” and a shiver went down his spine in absolute elation.


The Sthapathy’s mind realised that all the miraculous incidents that happened one by one are a witness to Periyava’s colossal blessings and meditated upon the Mahan with overwhelming gratitude that early morning.


Isn’t our Periyava the God of Protection?


It is beyond all doubt that the Bhakthi we have for such a merciful God walking amongst us, will protect us all forever, bestowing all goodness upon us and offering a life with health, wealth and prosperity.


Compassion will continue to flow


You remove the hunger from those who sing your praise, you remove the sickness from those who spread your light to the world – Sundara Murthy Swamigal Devaram


Source: ‘Kanchi Mahanin Karunai Nizhalil’ thro' face book
 


Experienceswith Maha Periyava: Do you know what happens when you scold the child?


The importance of calling a child by their name is explained beautifully by Sri Maha Periyava. There is another incident where SriPeriyava explains why we should not cut short people names (especially BhagawanNama) so that we can get maximum punniyam.


Once there lived an attendant and his wife in Kanchipuram Sri Sankara Matham whowere both engaged in its daily service. They had two girl children. While theirparents were engaged in doing service, the children used to play around theMatham. If their playing caused hindrance to either the devotees or otherfellow attendants, their parents used to reprimand them.


Once, their elder daughter kept running about making a lot of noise. Even after beingreprimanded once, she continued doing it. Losing his temper, her father shouted“Can’t you listen to me? “Thodapakattai”!!! (Broomstick). (The child got scaredand stood frozen.


At the same time, Periyava who was passing nearby heard this attendant using harshwords against his child and beckoned him nearby. The attendant, rightly fearingthat, his conduct might have displeased Periyava stood before Himapologetically.


Sri Periyava said “You used such harsh words on that poor child…what have you namedher?”

Remorsefullythe attendant said “She is named Lakshmi”.

Periyava then continued “You have given such a beautiful name to your daughter, the nameof the goddess herself, yet, why did you call her in such an offensive manner?You are under the impression that a broomstick is an unwanted, repulsiveobject, but did you think without the regular use of a broomstick even a bigpalace will lose its charm. Do not use such harsh words against your children.Do not lose temper with them. Call her with her beautiful name “Lakshmi”. Notonly will your daughter come, even the Goddess Mahalakshmi will come.


From then on the attendant determined never to use harsh words or lose temper withhis children.

Children,by nature, are mischievous. We should correct them gently, with kindness andnever with harsh words. If we do so, the Goddess Mahalakshmi herself gets displeased.

This is what Periyava’s teachings have shown us.


நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்

Source: face book
 

பெரியவா சரணம் !!

, ""சாமீ! நீங்கள் இங்கு வந்தது முதல் எங்களுக்கு வயிறார உணவு கிடைக்கிறது. நீங்கள் ஒருநாள் எங்கள் குப்பத்துக்கும் வருவீர்களா?

காஞ்சிப்பெரியவர், சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார். வேதவிற்பன்னர்கள், இசை வல்லுனர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். அனைவருக்கும் பரிமாறியது போக, மீதமுள்ள உணவு கடற்கரை குப்பத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்டது.

பிறகு பெரியவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார். வாசலில் இருந்த குப்பத்தைச் சேர்ந்த ஒருவர், பெரியவரிடம், ""சாமீ! நீங்கள் இங்கு வந்தது முதல் எங்களுக்கு வயிறார உணவு கிடைக்கிறது. நீங்கள் ஒருநாள் எங்கள் குப்பத்துக்கும் வருவீர்களா?'' என்று கேட்டார்.


பெரியவர் புன்முறுவல் மட்டும் செய்தார்.

மறுநாள் விடிந்த போது பெரியவரைக் காணவில்லை. சீடர்கள் எங்கு தேடியும் பயனில்லை. காலை 8 மணிக்கு அவராகவே வந்து விட்டார். எல்லாரும் ஆச்சர்யத்தில் மூழ்கி அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நேற்று குப்பத்து மக்கள் அழைத்ததன் பேரில் அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன்,'' என்றார்.

"நீங்கள் எல்லாம் விரும்புகிறீர்களோ இல்லையோ, அவர்கள் என் வருகையை மிகவும் விரும்பினர். எளிமையான அவர்களை நேசிக்க வேண்டும். நம் உடம்பில் ஓடுவது போல, அவர்கள் உடம்பிலும் ரத்தம் சிவப்பாகத் தான் ஓடுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேட்டி, புடவை, பழங்கள் வழங்கவேண்டும்,'' என்றார். அதன்படி ஏற்பாடும் நடந்தது.

ஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும.



நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்

Source: face book
 
மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2

இவரே எங்கள் தெய்வம் - 9

அந்த மனிதர் ஒரு பிரபல எழுத்தாளர். என் மாதிரியான ஆள் இல்லை. பிரசித்தி பெற்ற வாரப் பத்திரிகை ஆசிரியராக இருந்து, பிறகு தானே ஒரு பிரசித்தி பெற்ற மற்றொரு பத்திரிகை, அதற்கு அப்புறம் மற்றொன்று என்றெல்லாம் புதிதாக தொடங்கிய அனைத்து பத்திரிகைகளும் விரும்பிப் படிக்கப்பட்ட காலம். டிவி ரொம்ப பெண்களை ஈர்க்காத காலம். மொபைல் என்ன வென்றே தெரியாதே.

வெளிநாட்டு பயண கட்டுரைகள் எழுதி பெயர் பெற்றவர். அவர் இப்படி பல நாடுகளுக்கு பறந்து ஆங்காங்கு பார்த்தவர்கள், பார்த்தவைகள், பார்க்க வேண்டியவைகள் பற்றியெல்லாம் ரசிகர்கள் மகிழ ருசிகரமாக எழுதுபவர். ஒரு விஷயம் குறிப்பாக சொல்ல வேண்டியிருக்கிறது.
அவர் காஞ்சி மகா பெரியவாளின் பரம பக்தர். அந்த நடமாடும் பேசும் தெய்வத்தை முக்காலும் வணங்குபவர். எங்கு சென்றாலும் மகா பெரியவா படம் இல்லாமல் செல்ல மாட்டார். தினமும் அந்த படத்தை எடுத்து வைத்துக்கொண்டு மனசார பூஜை பண்ணி வணங்கிவிட்டு தான் மற்றைய வேலைகள்.
ஒரு தடவை உலகப் பயணத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள நாட்டில் ஒரு முடுக்கு நகரத்தில் அவர் தங்கிஇருக்க நேர்ந்தது. அந்த ஊரைப் பற்றி விவரங்கள் சேகரிக்க முயன்றார். அவரது நண்பர் ஒரு ஆங்கிலேயர் அங்கு அப்போது இருந்ததால் அந்த ஊருக்கு சென்றிருந்தார்.
இவர் வந்து அங்கு தங்கியிருக்க வேண்டிய வசதிகள் செய்து கொடுத்த வெள்ளைக்கார நண்பரின் உறவினர் வீட்டில் சில நாள் அந்த சிறிய ஊரில் தங்க முடிவானது.

எழுத்தாளரும் அங்கு சென்றார். அவருக்கு தனி அறை கொடுத்தார்கள் . அதில் அவர் தங்கியிருந்தபோது ஒரு நாள் காலை அந்த ரெண்டு வெள்ளைக்காரர்களும் , அதாவது நண்பரும் அந்த வீட்டுக்காரரும் எழுத்தாளரைக் கண்டு பேச, அவர் அறைக்கு வந்தனர். எழுத்தாளர் வழக்கம்போல் அந்தக் காலை வேளையில் மகாபெரியவர் படத்தை மேசையில் வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்.
வீட்டின் சொந்தக்காரர் கண்களில் அந்த மஹா பெரியவர் படம் பட்டதும் அவருக்கு ஏதோ ஆச்சர்யம், எழுத்தாளர் த்யானம் முடிந்ததும் கேட்டார்.

"இந்தப் படத்தில் இருப்பவர் யார்?"

"நான் வணங்கும் தெய்வம்"

'' நீங்கள் எந்த மதத்தினர்?

'இந்துக்கள்''

''இந்து கடவுள்கள் நிறைய கைகள், தலைகள், ஏதோ ஒரு பட்சி அல்லது மிருகத்தின் மேல் -- இப்படி தான் எனக்கு இதுவரை அறிமுகம். இந்த கடவுள் யாரோ ஒரு மனிதராக, கிழவராக அல்லவோ இருக்கிறார் '

''நீங்கள் சொல்வது வாஸ்தவம். இவர் நம்மைப்போல் இந்த உலகில் மனிதனாக இருப்பவர். மிக எளிமையானவர் . ஆனால் தெய்வம்.

''ரிஷி'' என்பீர்களே, அப்படிப்பட்டவரா இவர். எல்லோரும் அப்படித்தான் இவரைச் சொல்வார்களோ உங்கள் ஊரில்?''

''இவர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம், ரிஷியும் கூட''

"சக்தி வாய்ந்த தெய்வம் என்றால் நாம் நினைத்தது நடக்கச் செய்வாரா? என்று வீட்டுக்கார வெள்ளையர் ஆவலாகவினவினார்

"நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால், நிச்சயம் நாம் நினைத்தது போல் நடக்கும். அந்த கருணைக்கடல்அதை நிறைவேற்றி வைப்பார்.
எழுத்தாளர் அளவு கடந்த பக்திமான் ஆச்சே . அவர் குரலில் இருந்த அழுத்தம் சொன்ன தோரணை,அவர் குரலில் ஒலித்த பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.

''நானும் அவரை வேண்டிக்கொண்டு என் முறையீட்டை சொன்னால் உதவுவாரா"? வீட்டுக்கார வெள்ளைக்காரர் குரலில் ஏக்கம் தொனித்தது.

''வித்தியாசமின்றி நம்பிக்கையோடு யார் வேண்டினாலும் குறை நிவர்த்தி செய்வார்''

என் மகன் எங்கோ போய்விட்டான்...சில மாதங்கள் ஆகிவிட்டது. அவனைப் பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு உங்களிடம் கேட்டேன்.''

"எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள்..உங்களுக்கு அவரதுஅருள் நிச்சயம் கிட்டும்.
'டப்' பென்று அந்த வெள்ளைக்காரர் சிலைபோல் அங்கேயே அந்த இடத்திலேயே மகா பெரியவா படத்தின் முன்பு அமர்ந்து கொண்டார். கண்கள் மூடியிருந்தது. கைகளைச் சேர்த்து கட்டிக் கொண்டிருந்தார். நேரம் நழுவியது. நிசப்தம். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கண்களைத் திறந்தார்.

''என்னவோ தெரியவில்லை, என் மனம் இப்போது லேசாகி விட்டது. இந்த மனித தெய்வத்தின் படத்தின் முன் மனமுருகி வேண்டி எனக்கு அருள் புரியும்படி வேண்டிக் கொண்டேன்''

இதைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரம் அந்த அறையில் மகா பெரியவா பற்றிய விஷயங்கள் பற்றி வெகு ஆர்வமாக அவர் பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்று புத்தகங்கள் தேவை' என்று கேட்டுக்கொண்டிருந்தார் . ஒருமுறை இந்தியா வருகிறேன். அவரைப் பார்க்க வேண்டும்' என்றார்.

அப்போது தான் அவரது வீட்டு போன் ஒலித்தது. ஆங்கிலேயர் போய் போனை எடுத்தார்.

''யார் பேசுவது ?''

''என்ன அப்பா என் குரல் மறந்து போய் விட்டீர்களா"" --
காணமல் போன அவர் பையன். போனில் வந்த செய்தி அவருக்கு அளவு கடந்த வியப்பை அளித்தது. காணாமற்போன அவரது மகன் தான் பேசினான், தான் எங்கேயோ போயிருந்ததாகவும், இப்போது ஊருக்கு வந்து விட்டதாகவும்,உடனே வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.

அந்த ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது.காஞ்சி மகானை வணங்கியபடியே, எழுத்தாளரை இருக கட்டிக்கொண்டார். கண்களில் நீர் பனிக்க ''இனி என்
தெய்வமும் .இவர்தான்....இந்த உருவில் தான் இனி நான் வணங்கும் தெய்வத்தை பார்ப்பேன்.

அப்போது உள்ளே வந்த அவர் மனைவியும் விஷயம் கேட்டு, ஆனந்தித்து, தனது மகன் மீண்டும் வரப்போகிறான் என்று அறிந்து பெரியவாள் படத்தை வணங்கினாள்.

''மணியன் உங்களுக்கு நன்றி'' என்று அந்த தம்பதிகள் மனமுவந்து சொன்னார்கள்.

ஆம் அந்த இந்திய எழுத்தாளர் மணியன் தான்..

தொகுத்தவர் :

திரு.ஜே.கே.சிவன் அவர்கள்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Source: face book
 
கடலும் கடவுளும் - 11
மஹா பெரியவா எவ்வளவு கடினமான தத்துவமாக இருந்தாலும் எளிதில் புரிகிற மாதிரி சின்ன சின்ன எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்களை வைத்து விளக்குவா. சமுத்ர ஜலத்தை உதாரணமாக காட்டி பரமாத்மாவை நமக்கு புரிய வைத்த விஷயம் தான் இந்த செய்தி. இதை படிக்கிறபோது நான் அனுபவித்த சந்தோஷத்தை உங்களுக்கும் பரிமாறவே இந்த செய்தி மடல் உங்களுக்கு தரப்பட்டுள்ளது.

சில பேர் ''எனக்கு இது ஏற்கனவே தெரியுமே, ஏன்யா இதையே திருப்பி திருப்பி அனுப்பறே?'' என்று கோபித்துக்கொள்ள நிறைய காரணம் இருந்தாலும் ''ஐயா, தெரியாதய்யா'' என்று கெஞ்சப் போவதில்லை. தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னாலே எழுதி ஆயிரம் தடவை கேட்டபோதும் ''நீ தய ராதா'' என்று ஒருவர் பாவத்தோடு பாடினால் சைக்கிளை சுவற்றில் சார்த்தி விட்டு கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்து நின்று கேட்கிறோமே. மகாபெரியவா ஞானத்தை என் போன்றோர் ஏதோ தெரிந்தவரை ஆர்வத்தோடு எழுதினால் கூட படிக்க கசக்குமா?


”சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிற போது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள்உடைந்து போகின்றன. பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்ற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம் மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஜக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.''


'சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து மேகமாக மேலே சென்று மழையாகி, உலகத்தில் பல விதங்களில் நதி, ஒடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன. சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை.அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம். அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம். வெயில் நாள்களில் வீட்டுக் குழாய்களில் ஜலம் இல்லை. ரெட்ஹில்சில் ஜலம் இல்லை என்கிறோம்.மழைக்காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம். ஆனால் சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர் இம்மிகூட - க்ரெயின் கூட -இன்றுவரை குறைய வில்லை. கூடவும் இல்லை.''


''பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள். வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்.பங்குப் பணத்தை ஷேர்களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம் தான் பலவிதங்களில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியே தான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேகத்தில்இருக்க வேண்டும். அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும்.''


''பரமாத்மா பலவாகத் தோன்றி யிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிற தாகத் தோன்றுகிறது.ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை. குறைவும்இல்லை.''


''ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம- ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும்.


சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், அதிலிருந்து குளமும், குட்டையும், கிணறும்உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை. ஆனால், எல்லா நதிகளும்சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன


வடக்கே ஒரு நதிக்கு ஸோன் என்று பெயர். சோணம் என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியேஒடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. கிருஷ்ணா என்றால் கருப்பு. இந்த நதி கருப்பு மண்மீது ஒடுகிறது.


கங்கை என்றால் வெளுப்பு. இதுவும் அது ஒடுகிற பிரதேசத்தைப் பொருத்து அமைந்த பெயர்தான். மூன்றும் ஒரே கடலில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கருப்பு தமோ குணம். வெள்ளை ஸத்வகுணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.( water finds its level ).


தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்கமுயலும் என்பார்கள். மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கன வேகமாக, ஒரே இரைச்சலோடு நதி விழுகிறது. அப்போது அதற்கு நாம் வைக்கும் பெயர் நீர் வீழ்ச்சி. பூமியில் ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்த பின் சத்தமே இல்லை. அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது. அதாவது 'லெவலுக்கு' வந்தவுடன் பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி, 'லெவல்' - அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான் சாந்தம் உண்டாகும். 'லெவலுக்கு' மீறிச் செய்கிற தாட்பூட் காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம்.


ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வது தான் பலன். உருட்டல், புருட்டல், மிரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று ஏற்று பின் வாங்கிச் செல்கிறது. இதனால் தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது.


நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும் நம்மை எதிர் கொண்டு அழைத்துப் போய் தனக்குள்அடக்கம் செய்து கொண்டு விடும்”


இதைக்காட்டிலும் தெளிவாக யாராவது சொல்ல முடியுமா. இதை நீங்களும் ரசித்து தெரிந்த அறிந்த அத்தனை பேருக்கும் அனுப்புங்கள். உங்களால் ஒரு நல்ல காரியம் முடியுமென்றால் செய்ய என்ன யோசனை?

தொகுத்தவர் :
திரு.ஜே.கே.சிவன் அவர்கள்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Source: face book
 
பெரியவா சரணம்.
"" பெரியவாளை அருகே மிக அருகே என்று நினைத்தால் மிகமிக அருகில் இருப்பார்! அப்பாலுக்கப்பாலாய் என்று எங்கோ இருப்பதாக நினைத்தால், எங்கோ தள்ளி இருப்பதாக தோன்றும்""

பெரியவாளுடைய 'முரட்டு' பக்தர்களுள் ஒருவர் கல்யாணசுந்தரமையர். ஒருமுறை காசிக்குப் போய் தன் அப்பாவுக்கான ஸ்ராத்தாதிகளை பண்ணவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை. அடிக்கடி காசிக்கு போய்வரும் மற்றொரு பக்தரிடம் காசியில் உள்ள சங்கர மடத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, தன் பயணத் திட்டத்தை அழகாக தயார் பண்ணிக்கொண்டார். பெரியவாளுடைய அனுக்ரகத்துடன் காசி போய் சேர்ந்து த்ருப்தியாக கார்யங்களைப் பண்ணினார்.


நல்லபடியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தர்சனம் பண்ணிவிட்டு, சங்கர மடத்துக்கு வருவதற்கு ஒரு சின்ன சந்தைக் கடந்து வரவேண்டும். இவரோ, கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் தங்களுடைய டிக்கெட், பணம்,பயண விவரம் என்று எல்லாவற்றையும் பத்திரமாக வைத்து, அந்த பிளாஸ்டிக் பையை ஒரு சின்ன மஞ்சள் துணிப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்தார்.


காஞ்சி காமகோடீஸ்வரர் கோவிலுக்குப் போய்விட்டு, வெளிப் பிராகாரத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தன்னுடைய அடுத்த 'பிளான்' என்ன? என்பதற்காக தன்னுடைய 'bag ' கில் இருந்த மஞ்சள் பையை துழாவினால், காணோம்! "பகீர்" என்றது!


"சர்வேஸ்வரா! மஹா ப்ரபோ!" என்று வாய்விட்டே அலறிவிட்டார்! உடலெல்லாம் நடுங்குகிறது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர்! இனி அடுத்து என்ன செய்வது? ஆகாரத்துக்குக் கூட கையில் சல்லிக்காசு கிடையாது! கண்கள் இருட்டிக் கொண்டு வர, அங்கிருந்த தூணில் சாய்ந்துவிட்டார்! குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால், இவருடைய நிலைமை தெரியாது. "சர்வேஸ்வரா! ஒன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் குடும்பத்தோட கெளம்பினேன்? இப்பிடி என்னை நிர்கதியா தவிக்கவிட்டுட்டியே?" என்று வாய்விட்டு அரற்றினார், புலம்பினார்.


அவரைக் கடந்து போனவர்கள் இவருடைய பாஷை புரியாததால், பாவம், பகவானிடம் புலம்புகிறார் போலிருக்கு என்று பரிதாபமான பார்வையை வீசிவிட்டுப் போனார்கள். சுமார் ரெண்டு மணிநேரம் இந்த புலம்பல். குடும்பத்தாரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.

பெரியவாளுடைய அனுக்ரகம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது............

குடும்பமே இடிவிழுந்த மாதிரி சோகமாக உட்கார்ந்திருக்கும்போது, சத்தமே இல்லாமல் ஒரு சைக்கிள் ரிக்ஷா கோவிலுக்கு எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வயஸான 'பெரியவர்' இறங்கினார். லுங்கி அணிந்திருந்தார். அவரது கையில் "மஞ்சள் பை".

ரொம்பத் தெரிந்தவர் போல் நேராக கல்யாண சுந்தரமையர் இருந்த இடத்தை நோக்கி வந்தார்........

"இது ஒன்னோடதா பாரு! வழில தவறவிட்டுட்டு வந்துட்டியே!" என்று கண்டிப்புடன் ஹிந்தியில் சொன்னார். மஹா அதிர்ச்சியுடன் மஞ்சள் பையை வாங்கிக் கொண்டு, அந்த பெரியவருக்கு நன்றி சொல்ல தலையை தூக்குவதற்குள், வந்த வேகத்தில் போய்விட்டார்! கோவிலில் இத்தனை கும்பல் இருக்கும்போது, அந்த பெரியவர் சரியாக இவரிடம் வந்து எப்படி பையைக் குடுத்தார்? அதுவும் ரெண்டு மணி நேரம் கழித்து! வந்தவர் மாயமாக உடனே எப்படி மறைந்தார்?


பைக்குள் எல்லாம் பத்திரமாக அப்படியே இருந்தது. காஞ்சிபுரம் இருக்கும் திசையை நோக்கி விழுந்து விழுந்து கும்பிட்டு, அழுவதைத் தவிர அக்குடும்பத்தாரால் அப்போதைக்கு வேறு எதுவும் பண்ணத் தோன்றவில்லை.


"ஹஸ்தாமலகம்" "உள்ளங்கை நெல்லிக்கனி" யாக இருக்கும் நம் ஆத்மஸ்வரூபமான பெரியவாளை அருகே மிக அருகே என்று நினைத்தால் மிகமிக அருகில் இருப்பார்! அப்பாலுக்கப்பாலாய் என்று எங்கோ இருப்பதாக நினைத்தால், எங்கோ தள்ளி இருப்பதாக தோன்றும். தப்பு நம் பேரில்தான். அவர் எப்போதும், எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.

----------------------------------------------------------
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


Source: Siva sankaran/ face book
 
வைத்தீஸ்வரனிடம் பிரார்த்தனை - 25


”சரிதான்… என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!”


காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம் நிச்சயம்.


ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.


அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும்.


தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.


பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ”எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே.


எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். ‘காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்” என்றார் குரல் தழுதழுக்க.


”ஓஹோ… அப்படியா சொன்னார்..?” என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.


அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து… ”எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா… இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா… தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்” என்று கதறினார்.

பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க… நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ”இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!” என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

அவருடைய பெற்றோரும் நமஸ்கரித் தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.


ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.


பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர் யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.


மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவா ளிடம் சென்று, ”எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டி னார் பாலு.


உடனே, ”’என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு… இப்ப ஏன் போகணும்கறே?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.


எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ”இல்லே பெரியவா… சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்…” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.


வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் ‘வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். ‘வயிறு’ கிடைக்கவே இல்லை.


உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
”என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக் காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!” என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.


பாலுவுக்கு ஒரே குழப்பம். ‘யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் ‘வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.

‘பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு.

பேச்சின் ஊடே. பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.

பிறகென்ன… சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.


மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.


”பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்” எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ”சரிதான்… என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!” என்றார் புன்னகைத்தபடி!


சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!


தொகுத்தவர் :-

நண்பர் திரு.சிவ சங்கரன்.


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Courtesy: Srinivasan P.R. /Face book



 
Last edited by a moderator:


மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2
ஏகதண்டி ஸன்யாஸியை பாக்கறதே
தோஷம் - 27

“கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்ற வசனப்படி, அபாரமான ஶசாஸ்த்ர புலமை, பாண்டித்யம் பெற்ற ஒரு மஹா வித்வானைப் பற்றி நம் பெரியவா கேள்விப்பட்டார். ஆனால் அந்த வித்வானோ, பெரியவாளின் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட ப்ரியப்படவில்லை!
காரணம்?
அவர் ஒரு வீர வைஷ்ணவர்!
வெறும், வீர வைஷ்ணவர் இல்லை…கடும் வீர வைஷ்ணவர்!
அவரைப் பொறுத்தமட்டில், “ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் ஶைவக் கோலத்தையும் மேற்கொண்டு, கையில் ஏக தண்டத்தை கொண்டுள்ள ஒரு ஸன்யாஸியை பார்ப்பதே பெரிய தோஷம்!”
பெரியவா.. பரிபூர்ண ஶசிவ மோ, பராசக்தியோ, ப்ரஹ்ம்மமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்தாலும், அவரிடம் அந்த யாதவ ஶசி ரோ ன்மணியின் குஸும்பு கலந்த ப்ரேமை அவ்வப்போது, எட்டிப்பார்த்துவிடும்! ஆனால், அதிலும் ஆட்கொள்ளும் அன்பே பரிமளிக்கும்.
“நீ வராட்டா போ!…. நா…..வரேன்” என்பது போல், அந்தப் பண்டிதர் இருந்த ஊருக்கு யாத்ரையாகச் சென்று, பெரியவா தங்கினார்.
அன்பு என்னும் வலையை வாகாக விரித்து வைத்துக் கொண்டார், இந்த பண்டிதர் மாதிரி நல்ல [பக்ஷிகளுக்காக] பக்தர்களுக்காக!
ஊரே தினமும் திரண்டு வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தபோதும், அவர் மட்டும் வரவேயில்லை!
‘எப்டியோ போ!’ என்று அவரை விடுவதற்காகவா வந்திருக்கிறார்?
வருவோர் போவோரிடமெல்லாம் இந்தப் பண்டிதரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பண்டிதரின் காதுகளிலும், பெரியவாளின் தேஜஸ்ஸையும், வித்வத் பெருமையையும் பற்றி பலபேர் புகழ்ந்து பேசுவது எல்லாமே விழுந்தது. ஆனாலும் கமுக்கமாக இருந்து விட்டார்.
பெரியவா அவரை ஆட்கொள்ளும் தருணம் வந்தது !
ஸ்ரீமடத்தின் மஹா வித்வான் ஒருவரை அந்த வீர வைஷ்ணவரிடம் தகுந்த மர்யாதைகளுடன் அனுப்பி, முறைப்படி பெரியவா அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் வீர வைஷ்ணவர் என்றாலும், உண்மையான வைஷ்ணவ லக்ஷணம் கொண்டவர். ஒரு பெரிய பீடாதிபதி, இத்தனை தூரம் நம்மை அழைத்திருக்கும்போது, நாம் அதை மதிக்காமல் இருப்பது அழகல்ல என்று தோன்றியது. எனவே மடத்து வித்வானிடம் வெளிப்படையாக பேசினார்.
“பெரியவா… இவ்ளோ தூரம் கூப்டு அனுப்பியிருக்கா…! மாட்டேன்னு சொல்லப்டா…துதான்! ஆனாலும், எனக்குன்னு செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறரதுக்கில்ல! அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம்… அதான் யோஜனையா இருக்கு…”
“ஒங்களோட ப்ரதிக்ஞைகள் என்னன்னு, சொன்னேள்-ன்னா… பெரியவாகிட்ட சொல்றேன்…”
பணிவோடு கேட்டார் ஸ்ரீமடத்து வித்வான்.
“மொத்தம் மூணு ! ஒண்ணு…அத்வைத மடத்து ஏகதண்டியான ஒங்க பெரியவாளை, நா…. நமஸ்காரம் பண்றதுக்கில்ல;
ரெண்டாவுது… அவர் ப்ரஸாதம் எதுவும் குடுத்தா…. அத… ஸ்வீகரிச்சுக்கறதுக்கில்ல;
மூணாவுது… வித்வத் ஸம்பாவனை-னு ஸால்வை போத்தறது, அது இதுன்னு எதாவுது ஒங்க பெரியவா செஞ்சா, அதையுங்கூட ஏத்துக்கறதுக்கில்ல!…”
“கெட்டுது போ! நம்ம பெரியவாளோட ஐஶ்வர்யம் தெரியாம, அவரை அவமர்யாதை பண்ற மாதிரி, இப்டி கடுமையா கண்டிஷன் போட்ற இவரப்போயி, பெரியவா…எதுக்கு வரிஞ்சு வரிஞ்சு அழைக்கணும்?…”
அந்த மஹா ஸாத்வீகமான ஸ்ரீமடம் வித்வானுக்கே இப்படித் தோன்றியது.
“ரொம்ப ஸந்தோஷம். தேவரீர் சொன்னதை, எங்க பெரியவா கிட்ட தெரியப்படுத்தறேன்”
மர்யாதையோடு அங்கிருந்து கிளம்பி, நேராக பெரியவாளிடம் வந்தார்.
முகத்தில் ஸுரத்தில்லாமல் வந்தவரிடம்…..புன்னகையோடு குடைந்தார்…. கோவர்த்தனத்தை குடையாக பிடித்த நம் கோவிந்தன்……
“என்ன சொன்னார்?…”
“ஒண்ணும் ஸெரியா படல….பெரியவா”
பண்டிதரின் ஸுரத்தில்லாத முகத்தைப் பார்த்தார்……
“என்ன? ஸ்ருதி கொறஞ்சு போச்சு?…”
“ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படல பெரியவா…..! அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார்!…”
“ஓஹோ! அப்டியா? ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நீ நல்ல சேதின்னா கொணூந்திருக்கே!…”
“நல்ல சேதியா? அவர் ரொம்ப கறாரா கண்டிஷன் போடறார் பெரியவா…..”
“கண்டிஷன் போடறார்-ன்னா, அவர் முடிஞ்ச முடிவா…..வரவே மாட்டேன்னு சொல்லல… அவரோட ஏதோ கண்டிஷனுக்கு நாம ஒத்துண்டா…..வரேன்னு சொல்றார்-ன்னுதானே ஆறது? அந்த மட்டுல, நல்ல ந்யூஸ்தானே?….. ஸெரி…..என்ன கண்டிஷன் போட்டார்?…”
“சொல்றதுக்கே மனஸ் எடம் குடுக்கல…..”
“பரவாயில்ல…. சொல்லு! ...”
“மொத ப்ரதிக்ஞை, அவர் பெரியவாளை நமஸ்காரம் பண்ண மாட்டாராம்…..”
“பேஷா..!..அப்டியே இருக்கட்டும்….ம்ம்…மேல”
“ரெண்டாவுது…பெரியவா, எதாவுது ப்ரஸாதம் குடுத்தா, அவர் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்!….”
” அவ்ளோதானே!…ம்….”
“மூணாவுது…பெரியவா அவருக்கு வித்வத் ஸம்பாவனை-ன்னு ஸால்வை போத்தறது… அதெல்லாம் பண்ணினா, அதையும் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்”
பெரியவாளோ…. ஸஹஜமாக சிரித்துக் கொண்டே…
” இவ்ளோதானே? பேஷா அவரோட இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!…”
“எப்டி பெரியவா….? பெரியவாளை மதிக்கற மாதிரி தெரியல….அவர் இப்டீல்லாம் கண்டிஷன் போடறது…”
“பாரு! எனக்குத்தான அவரைப் பாக்கணும்-ன்னு இருக்கு? அவருக்கு இல்லியே? அப்டி இருக்கச்சே, அவர் கண்டிஷன் போடறதுல என்ன தப்பு? எனக்கு, அவர் நெஜமாவே ஒரு பெரிய வித்வத் ஸ்ரேஷ்டர், அவர்ட்ட புதூஸா ஏதோ கொஞ்சமாவுது க்ரஹிச்சுக்கலாம்-ன்னு இருந்தா, அவர் போடற கண்டிஷனை பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?...”
அனைத்தும் அறியும் அறிவிற்கு அறிவாய் இருக்கும் ஆச்சார்ய ஶ சிரோ-ரத்னத்துக்கு, வேறொருவரிடம் க்ரஹித்துக் கொள்ள என்ன இருக்கிறது?
வினயம், வினயம் என்ற ஒன்றை நமக்கெல்லாம் கற்றுத் தரவே, இந்த ப்ராக்டிகல் க்ளாஸ்!
உண்மையில் பெரியவாளே அந்த ஸ்ரீ வைஷ்ணவரின் க்ருஹத்துக்கு ஸ்வாதீனமாக, தானே விறுவிறுவென்று சென்றிருப்பார். ஆனால், விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியை, அவர் தன்னுடைய க்ருஹத்துக்குள், மனஸார வரவேற்காமல் போயிருக்கலாம்! என்பதாலேயே, அவரை அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் வைக்கக் கூடாதென்பதற்காகவே, பெரியவா அங்கே செல்லாமல், அவரைத் தன்னிடம் அழைத்திருக்கலாம்.
” போ! போயி அவரோட ப்ரதிக்ஞைக்கு எந்த பங்கமும் இல்லாத, இங்க வரலாம்-ன்னு சொல்லி, அழைச்சிண்டு வா…”
பண்டிதர் என்னவோ அரை மனஸோடு போய், அந்த வைஷ்ணவரை அழைத்து வந்தார், பெரியவாளுடைய ஸந்தேஷத்தை கூறி!
வைஷ்ணவருக்கு ஏக பெருமை!
ஸம்ஸ்க்ருத பாஷை…. கேட்கவும், பேசவும் மிகவும் அழகாக இருக்கும், அந்த அழகு இன்னும் கோடி மடங்கு அழகாக ஒலித்தது, நம் பெரியவா பேசியபோது!
அவர் உள்ளே நுழைந்ததும், பெரியவா அவரிடம், அழகான ஸம்ஸ்க்ருதத்தில், வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகள் கலந்து, அவரை மிகவும் கௌரவமான முறையில் வரவேற்று, அவருக்கென போடப்பட்டிருந்த ஆஸனத்தில் அமரச் சொன்னார்.
வாக்தேவதையின் முன்னால் போடப்பட்டிருந்த மணையில், அவளுடைய அழகான வரவேற்பால் உண்டான ஒருவித நெகிழ்வும் ஒருசேர, அமர்ந்தார்…….!
அழகான வரவேற்பிலேயே லவலேஸம்….வைஷ்ணவரின் மனஸ் உருகியது.
வேதங்களும், “நமஹ நமஹ” என்று ருத்ரமும், சமகமும் போட்டி போட்டுக்கொண்டு நமஸ்கரிக்கும் நம் பெரியவாளை, நமஸ்காரம் பண்ணாமலேயேதான் அமர்ந்தார்!
ஸ்ரீ ராமானுஜருடைய [ப்ரஹ்மஸூத்ர] ஸ்ரீபாஷ்யம் பற்றியே அந்த வைஷ்ணவரிடம், நம் பெரியவா நிறைய “கேட்டுக் கொள்ள!!” ஆரம்பித்தார்!
ஆம்! முதலில், பெரியவா அவரிடம் கேட்டுக் கொள்வது போல் இருந்தது, போகப் போக…..அந்த வைஷ்ணவர் கேட்கக் கேட்க, ப்ரஹ்ம ஸூத்ரத்தை எழுதிய அந்த வேத வ்யாஸரே, பதில் சொல்வதாக மாறியிருந்தது!
வைஷ்ணவரின் முகம் பெரியவாளிடம் பேசப் பேச ப்ரகாசமாக ஆனது! ஏனென்றால், வாஸ்தவத்தில் அவரிடம் வித்யா கர்வம் இல்லை; நல்ல உயர்ந்த வித்யை இருந்தது. அதனால், பெரியவாளிடமிருந்து கல்பூரம் போல், நிறைய க்ரஹித்துக் கொண்டார்.
பண்பின் ஶசிகரமான பெரியவாளும், அவரை நிறைய ஊக்குவித்து, அவருடைய அறிவு ஸுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக பாண்டித்யத்தை வெளிக் கொண்டு வந்தார்.
வைஷ்ணவரும் கூட, இப்போது, “தான்…. ஒரு விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை; ஒரு ஞான ஹிமாத்ரியிடமிருந்து பொங்கியோடும், ஞான கங்கையில் மூழ்கி, குளித்து, குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறோம்“, என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார்!
அவருடைய வைஷ்ணவ ஸித்தாந்தத்திலிருந்து, அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்பதை, உயர்வு, தாழ்வு வித்யாஸம் காட்டாமல், ஸ்ரீ ஆச்சார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை அங்கங்கே லேஸாக கோடிட்டு காட்டியதும், அந்த வைஷ்ணவரும் பரந்த மனஸோடு அதை ஸ்லாகித்துக் கொண்டார்.
இப்படியாக ரொம்ப நேரம், இந்த அழகான வித்வத் ஸம்பாஷணை நடந்து, மிக மிக இனிதாக, நன்றாக முடிந்தது.
“ஒங்களோட ஸ்ரமத்தை பாராட்டாம, நா….அழைச்சதை ஏத்துண்டு, இத்தன நேரம்……என்னை வித்வத் கடல்ல மூழ்கடிச்சுட்டேள் ! ரொம்ப ஸந்தோஷம்!…..”
மஹா ஸரஸ்வதி வீணையை மறைத்துவிட்டு, தண்டத்தை சுமந்து கொண்டு, தன் முன் “வினயத்தின்” ரூபமாக நிற்பதை, இப்போது அந்த வைஷ்ணவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
“பெரியவாளுக்கு தெரியாத ஶசாஸ்த்ர ஞானம்….. தாஸனுக்கு இல்ல! ஆனா… தாஸனுக்கு தெரியாத கருணை, பெரியவாளுக்கு இருந்தததுனாலதான், கூப்டு அனுப்பி, அனுக்ரஹம் பண்ணியிருக்கா!…….”
இதைச் சொல்லி முடிக்கும் போதே, அந்த வைஷ்ணவரின் ஹ்ருதயமும், கண்களும், குரலும் தழுதழுத்து….! அப்படியே “தண்டம்” போல் கீழே விழுந்து பெரியவாளை நமஸ்காரம் செய்ய முற்பட்டவரை……
“வேணாம்! ஒங்களுக்கு ப்ரதிக்ஞா பங்கமாய்டும்!……”
வினய ஸம்பன்னர் தடுத்தார்! அதில், நாமெல்லாம் பண்ணுவது போல், குத்திக் காட்டும் எகத்தாளம் கிஞ்சித்தும் இல்லை!
“ப்ரதிக்ஞை-ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டு பண்ணினதுதானே? ஸன்னிதானத்ல…அதுக்கு ப்ரஶக்தியில்ல [தெய்வத்துக்கு அது பொருந்தாது!]…..”
கண்ணீர் துளிர்க்க, பெரியவாளை விழுந்து விழுந்து ஸேவித்துத் தீர்த்தார்!
ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண ஸ்வரூபமாகவே நின்று, தன் பக்தனின் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டார்….. “நாராயண! நாராயண!” என்ற நாமத்துடன்!
“பெரியவாளை நமஸ்காரம் செய்ய மாட்டேன்!” என்றவர், தானே… தன் நிபந்தனையை தகர்த்து எறிந்தார்!
அன்று, அங்கு சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் பரமபதமான ஸ்ரீவைகுந்தத்திற்கு மானஸீகமாக நிஸ்சயம் போயிருப்பார்கள்! ஏனென்றால், பகவானும் அப்படி! பக்தனும் அப்படி!
“பெரியவா…..தாஸனுக்கு மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்…”
தன்னையே ப்ரஸாதமாக தந்துவிட்ட நம் பெரியவா….அவருக்கு மந்த்ராக்ஷதையையும் அனுக்ரஹித்தார்!
“பெரியவா கையால… மந்த்ராக்ஷதை எதுவும் வாங்கிக்க மாட்டேன்..”
வைஷ்ணவரின் ரெண்டாவது நிபந்தனையும் “ஃபணால்!!”
குழைந்து போய் நின்று கொண்டிருந்த அந்த வைஷ்ணவ பக்தரிடம் இப்போது பகவானே குழைந்து போனான்!
“என்னோட ஆசைக்காக, ஒங்களோட மூணாவுது ப்ரதிக்ஞையையும் விடலாம்-ன்னு தோணித்துன்னா.. ஒரு மஹா வித்வான் வந்தும் கூட, நம்ம மடத்ல அவருக்கு ஸம்பாவனை பண்ணல-ங்கற கொறை… எனக்கு இல்லாம இருக்கும்….”
அம்மாடீ! வருமா இந்த பரந்த ஹ்ருதயம்!
ஸ்ரீ வைஷ்ணவர் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார்!……. கண்ணீர் பொங்க, தழுதழுக்கும் குரலில்……
“பெரியவா எது பண்ணினாலும்…என்னோட பரம பாக்யமா ஏத்துக்கறேன்”
உடனே மிகவும் உயர்ந்த ஸால்வை ஒன்றை கொண்டு வரச்சொல்லி, ஸ்ரீமடத்திலிருந்து அளிக்கும் இந்த உயர்ந்த ஸம்பாவனையை, யாரை விட்டுக் குடுக்கச் செய்தார் தெரியுமா?…….
“கண்டிஷன் போடறார்.. பெரியவா!…” என்று பெரியவாளுடைய தூதராக ஸ்ரீ வைஷ்ணவரிடம் தூதாக நடந்த, அந்த மஹா வித்வானைக் கொண்டே, ஸம்பாவனை செய்யச் சொன்னார்…
நம்முடைய மனஸிலும், “மங்களம் சுஶப மங்களம்” என்று ஒரு கண்ணீர் கலந்த ஸந்தோஷம் பரவி நிறைவதை அனுபவிக்கலாம் !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Courtesy: Srinivasan P.R. / Face book

 
Dear Balasubramaniam Sir
Thanks for sharing these posts . Kindly keep sharing them .Always happy to read about Kanchi Mahaswamigal;s teachings and devotees experience with him .
 
Sir,

It is a pleasure in deed to share such articles in this Forum.

Shall keep posting.

And thanks for the encouragement Sir
 
13707812_277542512608591_6723590652671264049_n.jpg


மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2
காஞ்சி மகானின் அனுக்ரஹம் - 28
தலைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா!
சுவாரஸ்யமான அந்தப் புனித நிகழ்வைத் தெரிந்துகொள்வோமா?
பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால், இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான்
, காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.
ராஜகோபால் தம்பதி, காஞ்சி மகானிடம் பக்தி கொண்டு இருந்தார் களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், மகானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது.
உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால், சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, ''சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா.
''சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது'' என்று ராஜகோபால் சொல்ல... ''சேலத்தில் வீடு இருக்கிறதா என்றுதான் கேட்டேன்'' என்றார் மகான் அழுத்தம்திருத்தமாக.
''இல்லை!'' என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது... சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று!
சேலத்தில், அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர், மகானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதிகொண்டார்.
எங்கெங்கோ தேடி, கடைசியில் ஒரு நண்பர் மூலமாக, ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். அதை வாங்கும்பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.
அதன்பின், காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க, ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி, தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்துவிட்டார் ராஜகோபால்.
''சொந்த வீடு இருக்கிறதா?'' என்று மகான் கேட்டதை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால், மகானின் முன்னால் போய் நின்றார்.
இதற்கு முன் நடந்த சம்பவத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.
வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே, நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால், மகானிடம் பவ்வியமாக, ''ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்'' என்றார்.
மகானின் அடுத்த கேள்வி, ராஜகோபாலை வியப்பில் ஆழ்த்தியது... ''வடக்குப் பார்த்த வீடுதானே? வாங்கிடு!''
வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மகானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால். ஆனால், அந்த மகான் கேட்டார்... ''வடக்குப் பார்த்த வீடுதானே?''
அவரது அடுத்த கேள்வி: ''என்ன விலை சொல்றான்?''
ராஜகோபால் சொன்னார்.

''அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!'' என்று ஆசி வழங்கினார் மகான்.
மகான் சொன்னபடியே, வீட்டின் சொந்தக் காரர் அதன் விலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் குறைத்துத் தர முன்வந்தார். வீடும் கைமாறியது.
இதோ... ராஜகோபால் தம்பதி, மகானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மகானிடம் நீட்டும்போது, தன்னை அறியாமல் ராஜகோபால் சொல்கிறார்...
''மகா பெரியவா அனுக்ரஹத்தில், மகா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!''
'தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. 'பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
மகான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து, ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு, சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன்பின் கேட்டார்... ''எனக்கே எனக்கா?''
''பெரியவா அனுக்ரஹம்'' என்றார் ராஜ கோபால். பத்திரத்தை மகான் உடனே திருப்பித் தரவில்லை. சற்றுநேரம் கழித்து, அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து, பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார்.
வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மகா பெரியவா, சாவியை ராஜகோபாலின் கையில் தந்து, ''சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி'' என்றார் புன்னகை புரிந்தபடி.
உண்மைதான்! வீட்டுக்காரி என்னும் சொல் மனைவி என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல... வீட்டைத் தன் மனைவியின் பேரில்தானே பதிவு செய்திருந்தார் ராஜகோபால்! எனவே, வீட்டுக்கு உரிமையாளர் என்கிற அர்த்தமும் அதில் உள்ளடங்கியிருந்தது.
அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம் யாரும் எதிர்பார்க்காதது.
''உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர் யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!''
இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! ராஜ கோபால் கொஞ்சம் ஆடித்தான் போனார். 'பெரியவாளை கீழே விட்டுவிட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது.
மகானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா?
''நான் எல்லா இடத்திலும் இருப்பேன்'' என்பதைப்போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார்.
''எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக்கொண்டது, உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!'' என்ற பிரதோஷம் மாமா, அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினார்.
இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மகா பெரியவா கிரஹத்தின் வரலாறு.
இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புனிதமான கோயிலாகக் கருதப்படும் இந்தக் கிரஹத்தில், பிரதோஷ நாள்களில் வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் திணறிப் போகிறார்களாம்!
மகா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க, கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள்.
புதிதாக 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப்போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
மகானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும்.
சேலத்தில் உள்ள மகா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒருமுறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து, காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!
தொகுத்தவர் :-
நண்பர் திரு.சிவசங்கரன் அவர்கள்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

மாலை வணக்கம் நண்பர்களே !!

Courtesy: Srinivasan P.R. / Face book
 
Dear Mr, Bala, I am A.Srinivasan, retd from Ordnance Factories & now ,in Madras. We have friendship.
Is tere yet another Balasbramanian in this Forum ? Please clarify ?

A.Srinivasan ( Rishikesan/ for this Forum )
 
Dear Mr, Bala, I am A.Srinivasan, retd from Ordnance Factories & now ,in Madras. We have friendship.
Is tere yet another Balasbramanian in this Forum ? Please clarify ?

A.Srinivasan ( Rishikesan/ for this Forum )



Dear Rishikesan Ji,

I am your friend Balasubramani and we had telephonic conversation on several occasions.

I am the thread opener.

And there was a thread under the very same caption and our friend Nannilam Balasubramani from Ambattur used to contribute articles on MahAperiava teachings and messages all these years but somehow that thread was closed and hence now this one was started. I am waiting for Nannilam Balasubramani to contribute more articles and to take active participation in this thread.

And I thank you for visiting this thread.
 

பெரியவா சரணம் !!

யானைக்கு பிடித்த மதம்


""கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!""


செம்மங்குடியில் பட்டாமணியார் வீட்டில் பூஜை. மடத்தின் ஸ்ரீகார்யம்,ஸ்வாமி அபிஷேகத்துக்காக பட்டத்துயானை மேல் ஒரு வெள்ளிக்குடத்தில், செம்மங்குடி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார். பட்டாமணியார் வீட்டுவாசலுக்கு வந்ததோ இல்லையோ, யானைக்கு மதம் பிடித்துவிட்டது!


நல்லவேளை, ஸ்ரீகார்யம் வெள்ளிக்குடத்தோடு கீழே குதித்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். யானைப்பாகனோ, உயிர் பிழைத்தால் போதும் என்று எங்கேயோ ஓடிவிட்டான்! ஒரே அமளிதுமளி! தெருவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் கிடைத்த வீட்டுக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டு, ஜன்னல் வழியாக கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


யானை, கிழக்குக்கோடியிலிருந்து மேற்குக் கோடிவரை கன்னாபின்னாவென்று ஓடி, அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்தது! ஒரே பிளிறல்! பெரியவாளை வரவேற்க போட்டிருந்த பந்தக்கால்கள், தூண்கள், திண்ணையில் போட்டிருந்த தட்டிகள் எல்லாவற்றையும் அடித்து இழுத்து த்வம்ஸம் பண்ணிக் கொண்டிருந்தது! உள்ளே ஓடிய ஸ்ரீகார்யம் பெரியவாளிடம் "யானைக்கு மதம் பிடிச்சுடுத்து!......பெரியவா" மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கூறினார். குடத்தோடு கீழே குதித்த பயம் இன்னும் போகவில்லை. தெருவில் ஈ காக்காய் இல்லை. யானை மட்டும் இங்கே அங்கே ஓடிக் கொண்டிருந்தது.


இதோ.........கஜேந்த்ரவரதனாக வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் பெரியவா கையில் நம் எல்லாருடைய மதத்தையும் அடக்கவல்ல தண்டத்தோடு! தன்னந்தனியாக மதம் கொண்ட யானையின் எதிரே போய் நின்றார்!


"கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!" தெய்வத்தின் குரல், நம் போன்ற ஆறறிவு, பகுத்தறிவு என்று பீற்றிக்கொள்ளும் மானிட ஜாதியை விட, ஐந்தறிவு, ஏன்? அறிவேயில்லாத அசேதன வஸ்துக்களுக்கு கூட உள்ளே சென்று வேலை செய்யும் தெய்வத்தின் குரல்..ஓங்கி ஓலித்தது!


இதோ ஐந்தறிவு ஜீவனாக, ப்ரம்மாண்டமாக அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்த யானை, பூஞ்சை மேனியரைக் கண்டதும் கட்டிப்போட்ட பசு மாதிரி வடக்குப்பக்கம் தலையும், தெற்குப்பக்கம் வாலும் வைத்து, தெருவையே அடைத்துக் கொண்டு பெரிய மூட்டை போல் மஹா சாதுவாகப் படுத்துக் கொண்டது! ஜன்னல், மேல்மாடிகளில் இருந்து இந்த கண்கொள்ளாக் காட்சியை, அதிசயத்தை அன்று கண்டு களித்த பாக்யவான்கள் ஏராளம்!


வாசலில் இருந்து கஜேந்த்ரவரதனை பார்த்துக் கொடிருந்த ஸ்ரீகார்யத்தை அழைத்து, "கல்பூரம், சாம்ப்ராணி,வாழைப்பழம், பூ.....எல்லாம் ஒடனே கொண்டா" எட்ட இருந்தே பெரியவா சொன்னதை குறித்துக் கொண்ட ஸ்ரீகார்யம், அவர் கேட்டதை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, யானையின் மேல் உள்ள பயத்தால், திண்ணையிலேயே வைத்து விட்டுப் போய்விட்டார்.


பெரியவா தானே அந்த மூங்கில் தட்டை கொண்டுவந்து, ஒருமணிநேரம் முன்பு தெருவையே பிய்த்துப் போட்டுவிட்டு, இப்போது சமத்து சக்கரைக்கட்டியாக வாலை சுருட்டி, உடலைக் குறுக்கி, காதைக் காதை ஆட்டிக் கொண்டிருந்த யானைக்கு கஜபூஜை பண்ணி, பூ சாத்தி, கல்பூரம் ஏற்றி சாம்ப்ராணி காட்டி விட்டு, வாழைப்பழத்தை தன் திருக்கரங்களால் அதன் வாய்க்குள் குடுத்தார். "எழுந்து போ! இனிமே விஷமம் கிஷமம் பண்ணாதே!" என்றதும், அந்த பெரிய சர்க்கரை மலை மெல்ல எழுந்து அடக்க ஒடுக்கமாக, அந்த இத்தனூண்டு தெருவில் கால்வாசி இடம் விட்டு ஒரு ஓரமாக நின்றது.


நமது மனமும் இப்படி யானை மாதிரி மதம் பிடித்து சில சமயங்களில் கண் மண் தெரியாது ஓடிக்கொண்டிருக்கும்.

யானையை அடக்கிய காஞ்சி மாமுனிவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டோமேயானால், மதம் தானாக அடங்கி, மனம் குழந்தையாகிவிடும். அவர் சரணங்களைத் தவிர நமக்குப் புகலிடம் ஏது?

Courtesy: Siva Sankaran/ Brahmana Sangam/Brahmins Association/Face book
 


மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2

பட்டு பாட்டிக்கு பெரியவாளின்

அனுக்ரஹம் - 29

கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய ரெண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள்.

பெரியவா ஸதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம்!

ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவை அழைத்தார்.....

" இந்தா.....பாலு! இந்தக் கம்பிளிய கொண்டு போயி, பட்டுப் பாட்டிட்ட குடு"

"ஸெரி......"வாங்கிக் கொண்டு போனார். ஆனால் நாள் முழுக்க இருந்த கார்யங்களில், கம்பிளியை குடுக்க மறந்து விட்டார்.
நள்ளிரவாகிவிட்டது!

பெரியவா படுத்துக் கொண்டுவிட்டார்! பாலு அண்ணா கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டு தூங்கிவிட்டார்!

"பாலு!......"

பெரியவாளின் மதுரக்குரல் கேட்டு எழுந்து கொண்ட பாலு அண்ணாவிடம்....

"ஏண்டா....பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?"

தூக்கிவாரிப் போட்டது!

"ஆஹா! மறந்தே போய்ட்டேனே!...இல்ல பெரியவா...... மறந்தே போய்ட்டேன்"

பெற்றவளுக்கு மட்டுந்தான், தன் குழந்தைகள் எத்தனை தொண்டு கிழமானாலும் அவர்களுடைய தோற்றத்தைப் பார்க்கத் தெரியாமல்,

எப்போதுமே குழந்தையாகவே பார்க்க முடியும்!

"ஸெரி.....இப்போவே போயி, அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவட்ட குடுத்துட்டு வா"

"இந்த நடுராத்ரிலயா? குளிரான குளிர்! எங்க போய் பாட்டியை தேடறது?..... காலம்பற குடுத்துடறேனே பெரியவா!..."

தெய்வக் குழந்தை அடம் பிடித்தது!

"இல்ல.....இப்பவே குடுத்தாகணும்! நீ என்னடா?... ராத்ரிலதான குளிர் ஜாஸ்தி? பாவம். நடுங்கிண்டிருப்பா!"

கம்பிளியை எடுத்துக் கொண்டு, அர்த்த ராத்ரியில் வீடுவீடாக அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஶ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் தன் புடவையை சுருட்டி, முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்!

"பாட்டி! ....பாலு....."

"ம்...என்னப்பா?....என்ன வேணும்?.."

தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்ட பாட்டியின் காதில் அம்ருதமாக விழுந்தது.... பாலு அண்ணா சொன்னது.....

"பெரியவா....இந்தக் கம்பிளிய ஒங்ககிட்ட குடுக்கச் சொல்லி காலமேயே சொன்னா..... மறந்தே போய்ட்டேன்! பெரியவா, இப்போ ஞாபகமா கேட்டா....

குடுக்கலன்னதும், ஒடனேயே எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு குடுக்கச் சொன்னா....."

"பெரியவாளா!!.....என்னப்பனே! இந்த ஜீவனுக்கும் இப்டியொரு அனுக்ரஹமா!..."

பாட்டி அடைந்த ஸந்தோஷத்துக்கு ஏதாவது அளவு இருக்குமா என்ன? கண்ணீரோடு, கம்பிளிக்குள் முடங்கினாள்.

பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.

பிறருக்கு நாம் செய்யும் நல்லதும், கெட்டதும், உண்மையில், நமக்கு நாமே செய்து கொள்வதுதான்!

ஏனென்றால் அது ஏதாவது

வழியில், நமக்கே திரும்பும்!

பாலு அண்ணா, பட்டுப் பாட்டிக்கு செய்த கைங்கர்யம்.... அவருக்கே திரும்பியது....

எப்படி? யாரால்...?

ஸம்போட்டி என்ற ஊரில் பெரியவா தங்கியிருந்த நேரம், நல்ல மார்கழி மாஸக் குளிர்!

ஒருநாள், பாலு அண்ணா, அங்கிருந்த ஒரு கோவிலின் திறந்த வெளியில் அஸதி மேலிட, சுருண்டு படுத்து, அந்தக் குளிரிலும் எப்படியோ உறங்கிப் போனார்.

மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு ஸால்வை போர்த்தியிருப்பதைக் கண்டார். ஸஹ பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

நாலு நாள் கழித்து, பெரியவா பாலு அண்ணா இடுப்பில் கட்டியிருந்த ஸால்வையை பார்த்து விட்டுக் கேட்டார்....

"ஏதுடா பாலு.....போர்வை நன்னாயிருக்கே! ஏது?"

"தெரியல பெரியவா.....!

வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு.... நான் தூங்கிண்டிருந்தேன்"
தன் ஊகத்தை சொன்னார்.

பெரியவா ஜாடை பாஷையில் "ம்ஹும்! அப்படி இல்லை" என்று தன் ஆள்காட்டி விரலை இப்படியும் அப்படியுமாக ஆட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்!

முகத்தில் திருட்டு சிரிப்பு!

"நல்ல பனி! நீ பாட்டுக்கு.... தரைலயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....!

ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..! அதான் போத்திவிட்டேன்!..."

இந்த க்ஷணத்தை இந்தக் காட்சியை அப்படியே நாம் மனஸுக்குள் 'snap shot' எடுத்துக் கொண்டு, அதிலேயே மக்னமாகிப் போய்விடணும்!
பெத்த அம்மாவுக்கும் "பெத்த அம்மாவாக" தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான், கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.

பாலு அண்ணாவுக்கு நமஸ்காரம்.

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய்" என்பது வேதவாக்கு! பாலு அண்ணா, பெரியவாளையே ஸதா ஸ்மரித்து, தர்ஶித்து, உணர்ந்ததால், ஸன்யாஸ கோலத்தில் பெரியவா மாதிரியே இருக்கார்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


Courtesy: Srinivasan P.R. / Face book
 


மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா! - 30

பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார்.

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்?

அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே!

அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.

பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார்.

அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.?

பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா!

அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…………மழை வருகிறதா? என்று பார்க்க!பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று ....மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது?
ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும்.

அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!

பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது?

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Courtesy: Srinivasan P.R. / Face book

 


மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2
பசுவிற்கு கிடைத்த பாக்கியம் - 31

பெரியவாளுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக இல்லை. எந்த மோசமான உடல் உபாதையிலும் அவர் ஒருநாள் கூட தன் அனுஷ்டானங்களை விட்டார் என்பதில்லை; பூஜையை விட்டார் என்பதில்லை; ஏதோ சுருக்கமாக பூஜையை முடித்தார் என்பதும் இல்லை. நாமோ, "ஹச்"சென்று ஒரு தும்மல் வந்துவிட்டால் கூட, ஏதோ பெரிய வ்யாதி வந்த மாதிரி, குளிக்கக் கூட யோஜிப்போம்.


1945ல் பெரியவாளுக்கு ஹார்ட்டில் கோளாறு உண்டானது. மயிலாப்பூர் டாக்டர் T N கிருஷ்ணஸ்வாமி ஐயர் வந்து வைத்யம் பண்ணினார். பெரியவா கொஞ்ச நாள் பேசாமல் அவர் சொன்னதை கேட்டுக்கொண்டாலும், தான் பாட்டுக்கு "சிவனே" என்று தன் கார்யங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் டாக்டரிடம்,

"நீ குடுக்கற அலோபதி வைத்யம் போறும்..." என்று நிறுத்திவிட்டு, பாரிஷதர் ஒருவரிடம் "மேலகரம் கனபாடிகளை அழைச்சிண்டு வா!" என்று உத்தரவிட்டார்.

கனபாடிகளைப் பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் அவரிடம் உள்ள வேதம்; அதோடு வைத்யம், ஜோஸ்யம் எல்லாம் அவருக்கு கை வந்த கலை! அவர் வந்தால் பெரியவா நேரம் போவது தெரியாமல் அவரோடு நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவார்.

கனபாடிகள் வந்து பட்டுத் துணி போர்த்தி, பெரியவாளுடைய நாடியைப் பார்த்தார்.

"ஒரு பஸுவுக்கு தெனோமும் நாகமரத்தோட தழையை [இலை] மட்டும் ஆகாரமாக் குடுக்கணும். பெரியவாளுக்கு, அந்த பஸுவோட பாலை மட்டும் குடுக்கணும்" என்றார்.

"செரியாப் போச்சு! எனக்கு ஒடம்பு செரியாகணுங்கறதுக்காக ஒரு பஸுமாட்டைக் கஷ்டப்படுத்தலாமா? நாகத் தழை மட்டும் அதுக்கு எப்டிப் போறும்? கோஹத்தி தோஷம் வந்துட்டா என்ன பண்றது?..." ரொம்ப கவலையோடு கேட்டார்.

(பஸுவுக்கு ஒரே மரத்தின் இலையை ஆஹாரமாகப் போடுவதையே பெரியவா கோஹத்தி என்றால், அன்றாடம் அந்த மஹாமாதாவை பாலுக்காகவும், மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் கொடூரமாக வதைக்கும், வதைக்க அனுப்பும், மற்றும் அதோடு தொடர்பு கொண்ட மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மிருகங்களின் "கோஹத்தி" தோஷம் சித்ரகுப்தனுக்கும் எழுத முடியாத அளவு இருக்கும்.)
அதற்குள் பாரிஷதர்கள் "பஸுவை பட்னி போடலியே பெரியவா! நாக எலையை நெறைய போடலாம்..." என்று எதையோ சொல்லி, பெரியவாளை சம்மதிக்க வைத்தனர்.

பெரியவாளுக்கென்றே தன் உதிரத்தைப் பாலாக்கி பிக்ஷையாகக் குடுக்க அந்த கோமாதா செய்த பாக்யந்தான் எப்பேர்ப்பட்டது! பஸுவே ப்ரத்யக்ஷ தெய்வம். அவள் பாலமுதளித்து தெய்வத்துக்கே அம்மாவானாள்!

ஜம்மென்று நாகத் தழையைத் தின்று கொண்டு, நல்ல தண்ணீரைக் குடித்துக் கொண்டு சௌக்யமாக இருந்தாள் அந்த அம்மா! பெரியவாளும் அவள் தந்த பாலை மட்டுமே பிக்ஷையாக ஏற்று, மூன்று கால பூஜை, தர்சனம் என்று சௌக்யமாக இருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பாரிஷதர்கள், பக்தர்கள் சிலர்,

"என்னத்துக்கு நமக்கெல்லாம் இந்த தண்டமான மனுஷ ஜன்மா, ஒண்ணுத்துக்கும் உபயோகமில்லாம? இந்தப் பஸுவா பொறந்திருந்தா.... இந்த ஜன்மா கடைதேறியிருக்குமே! பெரியவாளோட பிக்ஷைக்கு பாலைக் குடுக்க இந்தப் பஸு
என்ன புண்யம் பண்ணித்தோ !.." என்று மனமுருகினார்கள்.

கொஞ்சநாளில் "குழந்தை" உம்மாச்சி தாத்தா தாயாரின் கவனிப்பினால், சொஸ்தமானார்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Courtesy: Srinivasan P.R. /Face book
 

Experiences with Maha Periyava: The Mystic Who Dazzled the Western Professors


ProfessorRobinson was the President of the South Carolina University, U.S.A. He was trained in Greek philosophy.


A team ofprofessors from many departments of some of the universities of the U.S.A. cameto Chennai.


I told Robinson,"You must go to Kanchi and have darshan of Periyavar." That was all!His eyes blossomed. He narrated the wonderful story of their visit to Kanchi onthe very same day. They roamed Kanchi in small groups, knowing nothing about SankaraMatham or Periyavargal. Robinson and two others came accidentally opposite theentrance to Sankara Matham.

They entered, thinking it was a temple. He narrateswhat happened there, himself:


"The cotwas a charpoy fitted with ropes. A man of matured old age was sitting on it. Alarge crowd around him. We did not understand anything. Suddenly a boy camerunning to us. 'Are you from America?' he asked us. Surprised, we said

'Yes.'There was absolutely no chance that anyone there would know us. The nextquestion stunned us. 'Who is Professor Robinson among you? I have orders onlyto bring him to the sage.'


"I haddarshan of Periyavar. He asked me to sit near him. That was all! I was notconscious of the passing of them thereafter!" Robinson was unable tocontinue talking, overwhelmed by tears of joy. I understood that the one whosaid it did not see and the only that saw it did not say.


(This sameRobinson, when he came to the American Embassy in Chennai in April-May 1994,rang up Dr. Padma Subramanyam and inquired, "Is Maha Swamigal fine?"When he was told that Sri Swamigal had attained siddhi, he had asked, "Isit on January 8th or 9th?"


"How do youknow it so correctly?" Dr. Padma had asked him.


Robinson repliedin a voice choked with emotion, "On that day Maha Periyava gave me darshan(in a vision), said 'Goodbye' thrice and disappeared... If I told this news toanyone in our place, they wouldn't be able to understand it, which was why I couldn't verify it with anyone here.")


Author: Dr.Padma Subramanyam, 'Nrutyodaya', Chennai
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 2, Pages 231-235 / Subramanya Devangere /Brahmana Sangam /Face book
 
[h=2]தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையை கடை பிடித்த மஹா பெரியவா[/h]மஹா பெரியவா பெரியவரின் தரிசனத்திற்காக அம்மாவும் பெண்ணும் வந்து நின்றார்கள் . ஒரு தட்டில் இருந்த மஞ்சள் , குங்குமம் , பழம் , பாக்கு., தேங்காய் , புஷ்பம் அதற்கு மேல் திருமாங்கல்யம் என்று அந்த பெண்ணின் திருமணத்தை பறை சாற்றியது. இன்னொரு தட்டில் கூரை ப்புடவையையும் அந்த அம்மாள் எடுத்துவைத்தாள் . ஜீவ இம்சை என்பதாலும் அது தேவையற்ற ஆடம்பரம் என்றும் பெரியவர் பட்டு உடைகளை விரும்புவதில்லை என பலர் அறிந்ததே . அதை அறியாததால் அந்த அம்மாள் அரக்கு நிற கூரை ப்புடவையை தட்டில் வைத்து ஆசிக்காக காத்திருந்தாள். ஆனால் மடத்து சிப்பந்திகளுக்கு மனம் ஒப்பவில்லை. அதனால் புடவைத் தட்டை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு மற்ற மங்கல திரவியங்கள் உள்ள தட்டை மட்டும் பெரியவர் ஆசிக்காக நகர்த்தினார்கள் . உடனே அந்த அம்மாள் ஆதங்கத்துடன் கடினமான வாக்குக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார் .

அப்பொழுது பெரியவர் உள்ளிருந்து நடப்பதை கேட்டபடி வெளியே வருகிறார். ஆமாம் , புடவையை நகர்த்திதான் வைக்கணும் என்பதுபோல் கூறினார்.. அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. யார் தவறு செய்தாலும் அவர் மனம் லேசாக நோகும்படியாக கூட பெரியவர் என்றுமே சொன்னதில்லை , செய்ததில்லை. அவரே கூறைப்புடவையை தள்ளி வைத்துவிட்டாரே .

பெரியவர் மடத்து சிப்பந்தியிடம் ஒரு குச்சியை கொண்டு வரச்சொல்கிறார்.. ஒதுக்கிவைக்கப்பட்ட பட்டுப்புடவையின் மடிப்பை குச்சியால் விரிக்க , அங்கே இருந்த பக்தர்கள் அச்சமுறும் வகையில் ஒரு பெரிய கருந்தேளும் இரண்டு குட்டி தேள்களும் காணப்பட்டன.. இதனால்தான் ஒதுக்க சொன்னேன் என்பதுபோல் அந்த பெண்ணை பார்த்துவிட்டு , மடத்து சிப்பந்தியிடம் அந்த ஜீவராசிகளை வெளிய கொண்டுவிடும்படி கூறுகிறார்.
பிறகு அந்தப்பெண்ணிடம் , கூரைப்புடவை அரக்கில் இருக்கக்கூடாது . மஞ்சளோ, வேறே மங்கலகரமான கலரோ வாங்கிக்கோ . இங்கே நடந்ததை யெல்லாம் கடைக்காரனிடம் சொல்லவேண்டாம் என்று சொல்லி என்று ஆசிர்வதித்தார் தான்மறுக்கும் பட்டுத்துணி தேளின் விஷத்திற்கு சமமானவை என்று அனைவருக்கும் புரியும்படியும், தேவையற்ற ஆடம்பரத்தை விருப்புவதில்லை என்றும் அனைவருக்கும் புரியும்படி செய்தார் பெரியவா

Source: http://swasthiktv.com/thevayatra-aadambarathai-thaverthu-yelimaiyai-kadai-piditha-mahaa-periyavaa/
 


பெரியவா சரணம் !!
""அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம் ""

மகா பெரியவர் மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது. அந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மகா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.


1980-ல் கேரள ஆளுநராக இருந்தவர் திருமதி ஜோதி வெங்கடாசலம். அப்போது அவரிடம் செயலராகப் பணியாற்றி வந்தவர் டி.வி.சுவாமிநாதன். ஒரு டிசம்பர் மாதக் கடைசியில், அவரின் உடல்நிலை பாதித்து, தினமும் காய்ச்சல் வர ஆரம்பித்தது. கூடவே, எடையும் குறைந்துகொண்டு வந்தது. ரத்தப் பரிசோதனை செய்தார்கள்; எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.


பின்பு, சுவாமிநாதனைத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி நிபுணர்களிடம் கொண்டுபோய்க் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அங்கே, நுரையீரல் துறை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்தனர்.


‘நுரையீரலின் மேற்பகுதியில், புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது!’ என்றார் முதன்மை மருத்துவர்.


விஷயம் உடனே ஆளுநர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மனிதாபிமானம் மிக்க அவர் பதறிப் போய், ‘சென்னையில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், அங்கே சுவாமி நாதனைக் கூட்டிக்கொண்டு போங்கள். அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள்!’ என்றார். அதன்பின், சென்னை- அரசு பொதுமருத்துவமனையில் சுவாமிநாதனைச் சேர்த்தனர். அவரை, புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கே.வி.கிருஷ்ணசுவாமி, தீவிரமாகப் பரிசோதனை செய்தார்.


‘இதில் புற்று நோய் அறிகுறி எதுவும் தெரிய வில்லை. ஆனால், நுரையீரலின் மேல் பகுதியில் ஓர் அழுத்தம் தென்படுகிறது. அதை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்!’ என்றார்.


இதற்கிடையே, டாக்டர் செரியனையும் சென்று பார்த்தார் சுவாமிநாதன். அவரது எக்ஸ்ரே படங்களை எல்லாம் பல கோணங்களில் வைத்துப் பார்த்த டாக்டர் செரிய னின் முகத்தில் சற்றுத் துயரம் தெரிந்தது. ’இடது நுரையீரலின் மேலே புற்று நோய் பாதித்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ஏற்கெனவே நான்கைந்து மாதங்கள் வீணாகிப் போய் விட்டன. இனியும் காலதாமதம் செய்யாதீர்கள்!’ என்றார் அவர்.


பாவம், சுவாமிநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 1981-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவர் டெல்லி போகவேண்டிய வேலை வந்தது. அங்கேயும் ஒரு சோதனை நடத்திப் பார்த்துவிட முயன்றார். அங்கே பிரபல மருத்துவர் டாக்டர் கோபினாத், சுவாமிநாதனின் நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, டாக்டர் கிருஷ்ணசுவாமி சொன்னது போலவே, ”நுரையீரலின் மேற்பகுதியில் அழுத்தம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யலாம், கவலைப்படாதீர்கள்!’ என்றார்.


சுவாமிநாதனுக்கு மகா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி உண்டு. அவர் எப்போதும் தன் மீது அலாதியான பரிவு காட்டி வந்திருப்பது அவருக்கு நினைவு வந்தது. பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இப்படி வெவ்வேறான கருத்துக்கள் கூறியதில், அவருக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. ஆரம்பத்திலேயே மகா பெரியவாளிடம் சரணடைந்திருக்கலாமோ என்று
வருத்தப்பட்டார். எத்தனை பெரிய குழப்பமாக இருந்தாலும், அவரிடம் தாம் கொண்டிருந்த அளவற்ற பக்தி தம்மைக் காப்பாற்றும் என்று பரிபூரணமாக நம்பினார்.


அப்போது, கர்நாடக- மகாராஷ்டிர எல்லை யில் மகா பெரியவா தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தார்.


சுவாமிநாதனின் சார்பாக அவரது நெருங்கிய நண்பரும், பெரியவாளின் பரம பக்தருமான ஜோஷி என்பவர், சுவாமிநாதன் படும் துன்பத்தை பெரியவாளிடம் எடுத்துச் சொன்னார்.


அதன்பின், மகா பெரியவா சில மணி நேரம் கடும் மவுனம் அனுசரிக்கத் தொடங்கிவிட்டார்.


அப்போது அவரின் முகாரவிந்தத்தில் ஏற்பட்டிருந்த தேஜோமயமான ஒளி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள் ளாக்கியது. ‘அது என்ன அப்படிப்பட்ட ஒரு பிரகாசம்!’ என்று சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் பயந்து கூடப் போனார்கள்.

சற்று நேரத்துக்குப் பிறகு, மவுனத்தைக் கலைத்தார் பெரியவா. எதிரே நின்றுகொண்டிருந்த ஜோஷி மற்றும் கண்ணன் இருவரையும் அருகில் அழைத்து, ‘அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் வராது!’ என்று மிகவும் கருணை யோடு, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

ஜோஷி இதைத் தொலைபேசி மூலம் சுவாமிநாதனிடம் சொல்ல, அவருக்கு ஒரே மகிழ்ச்சி! இனம் தெரியாத புத்துணர்ச்சி! ஜோஷியின் வார்த்தைகள் மகா பெரியவாளின் வாய் வார்த்தைகளாகவே அவர் காதில் விழ, மெய்சிலிர்த்துப் போனார்.


அன்றைய தினத்திலிருந்து, மாலையில் காய்ச்சல் வருவது நின்றது. முகத்தில் இருந்த தளர்ச்சியும், சோர்வும், கவலை ரேகைகளும் மெள்ள மெள்ள அகன்றன. உடல் எடை குறை வதும் நின்றது. முகத்தில் ஒரு புதிய பொலிவு வந்தது.

ஆனால், மே மாதத்திலிருந்து மறுபடியும் அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பித்துவிட்டது. ஓயாத இருமலும், காய்ச்சலும் வர ஆரம்பித்தன. கேரள ஆளுனரின் குடும்ப ஆலோசகரான ஒரு மருத்துவர், சுவாமிநாதனின் பழைய எக்ஸ்ரே படங்களையும் மருத்துவக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, மிக நவீன கருவியால் இன்னும் சில படங்கள் எடுத்துப் பார்த்தார்.

அந்த நிபுணரின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது. படத் தில், நுரையீரலின் மேல் பக்கத்தில் புதிதாக ஒரு நிழல் தெரிந்தது. சுவாமிநாதனுக்குப் புற்று நோய் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துவிட்டது என்றும், ஆனால் அறுவை சிகிச்சையை அவர் தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார். ’உடனடியாக கீமோதெரபி எனப்படும் கதிர் இயக்க சிகிச்சை தொடங்க வேண்டும். அதுகூட இறுதி நிலை வலியினால் உண்டாகும் வேதனையைக் குறைக்கத்தான் உதவும்!’ என்றார். அவர் ஆளுநருக்கு ஒரு தனிக்குறிப்பும் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


ஆளுனர் திருமதி ஜோதி வெங்கடாசலத்துக்குத் தன் உதவியாளர் சுவாமிநாதன் மீது மிகவும் பரிதாபம் உண்டாயிற்று. மறுபடியும் டெல்லி அகில இந்திய மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு, மூத்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சுவாமிநாதனை சென்னைக்கு அனுப்பி, ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கச் செய்தார். அங்கே, சுவாமிநாதனின் இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்தில் ரத்தம் தேங்கிப்போய், தாங்கும் சக்தியைக் கடந்ததும் வெடித்து விடும் போன்ற அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.


சுவாமிநாதன் நடுநடுங்கிப்போனார். மீண்டும் நண்பர் ஜோஷியிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி, பெரியவாளிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, ஜோஷியும் மகா பெரியவாளை மீண்டும் தரிசித்து, ‘சுவாமிநாதனின் மனைவிக்கு மாங்கல்ய பிஷை கேட்கிறேன், சுவாமி!’ என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கிஅழுதார்.

பக்தரின் அபாய நிலை தெரிந்தும், மகா பெரியவா சும்மா இருப்பாரோ? சிறிது நேர மவுனத்துக்குப் பின், ஸ்னானம் செய்யப் புறப்பட்டர். ஜோஷி தம்பதியர் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றனர்.

நீர் நிறைந்த தொட்டியில் இறங்கி நின்ற பெரியவா, ஜோஷியை அருகில் அழைத்தார். சுவாமிநாதன் பற்றிய முழு விவரங்களையும் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார். பிறகு ஒரு தடவை நீரில் மூழ்கி எழுந்தார். ‘அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!’ என்று உத்தரவு தருவது போன்று அருளினார்.

ஜோஷி இதை சுவாமிநாதனுக்குத் தெரிவித்து, தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நவீன கருவிகளின் கணிப்பு, மருத்துவர்களின் கெடு, நிபுணர்களின் கருத்துக்கள் எல்லாம் அவருக்கு மூன்று மாதங்களே என்று நிர்ணயித்து விட்ட பிறகு, எப்படித் தைரியமாக இருப்பது? எந்த சக்தியால் இதை மாற்ற முடியும்?

மறுபடி, டெல்லியில் 15 நாட்கள் சோதனைகள் நடந்தன. மகா பெரியவாளே ‘அவனுக்குப் புனர்ஜன்மம்’ என்று கூறிவிட்ட பிறகு, அந்தத் தெய்வத்தின் வாக்குக்கு மறுவாக்கு உண்டோ? அதற்கான பலன்கள் கிட்டவே செய்தன. எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது. திருவனந்தபுரத்தில் எடுத்த எக்ஸ்ரே

படத்தில் காணப்பட்ட கரு நிழல், டெல்லியில் எடுத்த படத்தில் முற்றிலும் மறைந்திருந்தது.


டெல்லி பரிசோதனையின் முடிவில், சில எதிர்பாராத உண்மைகள் தெரிய வந்தன. சுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத்தண்டில் வளைவு உண்டு. அதன் காரணமாக, அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும்போதெல்லாம் சளி வெளியே வராமல், நுரையீரலுக்குள் சேர்ந்து, உறைந்து போய், அதனால்தான் நுரையீரலில் அழுத்தம் காணப் பட்டது. அதுதான் கரு நிழல் போல் எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது. அதைத்தான் புற்று நோய் என வல்லுநர்கள் தவறான முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.


சுவாமிநாதனுக்குத் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் பூரண குணம் அடைந்தார். மூன்று மாதமே அவருக்கு ஆயுட்காலம் என்று புகழ்பெற்ற மருத்து வர்கள் சொல்லியிருந்தபோதும், பெரியவாளிடம் அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தி அவரைக் காப்பாற்றியது.

அவர் மகா பெரியவாளை தரிசனம் செய்யச் சென்றபோது, அவர் தம் அருகில் இருந்த கண்ணனிடம், ‘சுவாமிநாதன் வந்திருக்கானே, பார்த்தியா? புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம்.

மகானின் கருணைக் கடாட்சம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
Source: Siva Sankaran / Brahmana Sangam / Face Book
 



பெரியவா சரணம் !!

""இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனேன ் ஆனால் நடமாடும் தெய்வத்தின் தீர்க தரிசணத்தை எண்ணணி வியந்து போனேன்""

அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டார்.

முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.

”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டி ருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.

உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.

சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.

இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.

சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!


பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு ஷெராஸ்தார் எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.

சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.

”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?” என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


Source: Siva Sankaran / Brahmana Sangam / Face Book
 


A prose - poetry on KANCHI sage by KannadAsan:

காஞ்சி பெரியவாளை பத்தி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னது

“காஞ்சி பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50ஆண்டுகள் போனால், 'இந்து மதம் என்றால் என்ன?' என்று கேட்டால், 'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் " என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டுரையில் கூறியிருந்தார்.

உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.

மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது. .....

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.

அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.

தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது. பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.
முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.

சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.

அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை.

நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.
அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை.

ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.

காலணிகள் ஏதும் அணியாமல் வெற்று பாதத்துடன் மஹா பெரியவா யாத்திரை செய்துகொண்டிருந்தபோது…!
மகா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை; நாளாக நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது.
கங்கை நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப் பட்சி பனித்துளியைத் தான் நாடுகிறது.
சில வண்டுகள், மலரில் மட்டுமே அமர்கின்றன.

சில பறவைகள், பசுமையான மரங்களில் மட்டுமே அமர்கின்றன.

மகா யோகியின் வைராக்கியம் மணம் மிக்கது. பசுமையானது.

இரவும் பகலும் உலகில் மாறி மாறி வருகின்றன.

லௌகிகவாதிக்கு இரண்டும் ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன.

உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.

அந்தத் தெய்வத்தின் பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் துதுவர்கள் அவர்கள்.
அதனால் தான் மற்ற மனிதர்களின் தலையை விட அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன.
லோகயாத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது.
மகா யோகம் மலர்கள் தூவுகிறது.

மகாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஆந்த்ராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கி போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தொஷப்பட்டார்களாம் .

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் பேரொளி.

அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ மஹா சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞானப் பாசத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது.

கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும்.

செஞ்சி கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல.

காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.

ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூடம் திரளுகிறது.

இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.

தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.

பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.

ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது.

மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம்.

பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம்.

யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.

ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.

அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை.

அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.

அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

From the Sathvishayam group

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Source: Sivam Perinkulam / Brahmana Sangam / Face book
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top