Madurai Meenakshi Amman Temple Aadi Pooram

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூரம் ஏற்றி இறக்கும் வைபவம் நாளை நடைபெறுகிறது.

அம்மனுக்குப் பலவித திருவிழாக்கள் நடக்கும் தலங்கள் எத்தனையோ இருக்கின்றன.ஆனால் அம்பாளுக்கு சந்தடியே இல்லாமல் பூப்புனித நீராட்டு விழா நடக்கும் தலம் நம்ம மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில்தான்.

அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில் மதுரைக்கு மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல் பீடமானதால் இங்கு எல்லா பூஜைகளும் தேவிக்குளநடந்த பிறகே சுவாமிக்கு பூஜை நடக்கும்.

ஆடிப் பூரம் நட்சத்திரத்தில் பாா்வதிதேவி ருதுவானதாக(வயதுக்கு வருதல்) ஐதீகம். பூலோகத்தில் அம்பிகையே மலையத்துவஜ பாண்டிய மன்னாின் மகளாக அவதாித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு, மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று சடங்கு நடத்துகின்றனா்.

ஆடிப்புர நாளில், கருவரையிலுள்ள அம்பாளுக்கும், உற்சவருக்கும் பூப்புனித நீராட்டு விழா நடக்கும். காலை 9.30 மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது திரை போட்டு மறைத்து விடுவாா்கள். மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கும். பிறகு திரையை விலக்கி ஏற்றி இறக்கி சடங்கு நடக்கும்.

உற்சவா் மீனாட்சிக்கு நாழி ஒன்றில் நெல் நிரப்பி அதில் தீபம் ஏற்றி மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவா். வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக இந்தச் சடங்கு செய்யப்படும். உற்சவ அம்பாளுக்கு சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிா் சாதம், சா்க்கரைப் பொங்கல் இதில் ஏதாவது ஒன்றை நிவேதமாகப் படைப்பா்.இவளது பாதத்தில் ஒரு முறத்தில்(சுளவு)சட்டைத்துணி, குங்குமச் சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் ஆகியவை வைத்து பூஜை செய்யப்படும். மூலஸ்தான அம்பாளுக்கு வழக்கமான நைவேத்யம்தான்.

மதுரைபகுதி வீடுகளில் பூப்புனித நீராட்டுவிழா நடத்தும் போது, பெண்ணை அமர வைத்து சாதம் ஒரு புறமும், கறிவகைகளை ஒரு புறமும் வைப்பா். தாய்மாமன் மனைவியும், தந்தையின் சகோதாியும், தங்கள் கைகளை குறுக்காக வைத்துக் கொண்டு, சாதத்தையும், கறிவகைகளையும் மூன்று முறை எடுத்து, பெண்ணுக்குக் கொடுப்பது போல மேலும் கீழும் இறக்கி பாவனை செய்வா். கைகளை மேலும் கீழும் இறக்கி பாவனை செய்வதால் இதற்கு ஏற்றி இறக்கும் சடங்கு என்று பெயா். இதே போல் சிவாச்சாாியாா்களால் ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்த பின், அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட கண்ணாடி வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

1628652874451.png


Madurai Sri Meenakshi Amman
 
Back
Top