• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 366. கிருஷ்ணன் உண்ணி.

என் பல் டாக்டர் பாலக்காட்டில் இருப்பவர்.

என் physiotherapist பாலக்காட்டில் இருப்பவர்.

என் யோகா டீச்சர் பாலக்காட்டில் இருப்பவர்.

இப்படிப் பாலக்காட்டுடன் நெருங்கிய தொடர்பு.

அவர்கள் அதிசயிப்பார்கள் ஒரு போலவே!

எல்லோரும் அங்கிருந்து கோவை வருவார்.

நான் இங்கிருந்து அங்கே போவதால்.

பல் டாக்டர் கிளினிக் தாழ்வான பகுதியில்.

சாலை நன்கு உயரமாக இருக்கும்.

கடக்க வேண்டும் ஒட்டக முதுகு போல

ஒரு வளைவான பகுதியை.

கைத்தடி இருந்தாலுமே இந்த வளைவு பயமுறுத்தும்.

தடியைச் சரியாக ஊண முடியாது...

நழுவி விடும் அல்லது நகர்ந்து விடும்.

பிறகு அந்தர் பல்டி தான் ....

அருகில் உள்ள பெரிய பள்ளத்தில்.

இந்தமுறை சென்றபோது வெளியே யாருமே இல்லை.

"முருகா! எப்படி விழாமல் இறங்கப் போகிறேன்?"

ஒரு இளைஞன் வேகமாக வெளியே வந்தான்.

"அம்மைக்கு சகாயம் வேணமோ?"

ஓடி வந்து இறங்க உதவி செய்தான்.

நன்றி கூறி அவனிடம் அவன் பெயர் கேட்டேன்.

" கிருஷ்ணன்
உண்ணி!" வாயெல்லாம் பல்லாக.:becky:

உன்னிக் கிருஷ்ணன்களும், கிருஷ்ணன் உண்ணிகளும்

நினைத்த மாத்திரத்தில் வெளிப்படும்போது

"இறைவன் என்று ஒருவன் இல்லை!" என்று

சொல்பவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்! :tsk:

உண்டு என்றால் உண்டு! :high5:

இல்லை என்றால் இல்லை! :nono:

உருவம் என்றால் உருவம்!

அருவம் என்றால் அருவம்!

நாம் விரும்புவதுபோல அவன் உருவெடுப்பன்!

நாம் அழைத்தால் அவன் வெளிப்படுவான்!

வெளிப்பட விரும்பித் தயாராக இருப்பவனை

விளிக்காதது நம் மடமை!

அவன் குறை அன்று!!
 
# 367. தோசையோ தோசை!

ஒரு வீட்டுக்குச் சென்றால்

முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்

எல்லோரும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு

வம்பளந்து கொண்டு இருந்தால்

வீட்டு எஜமானி பாடு திண்டாட்டம்.

அங்கு அன்று தோசை டிபன்.

"நான் சுடுகிறேன்!" என்று சுட ஆரம்பித்தேன்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆயிற்று.

"போதுமா?" என்றால் "இன்னம் வேணம்!"

அடுத்து நான்கு தோசைகள்... மேலும் நான்கு!

அத்தனை பேர் தோசையையும்

இவன் ஒருவனே single-handed ஆகக்

கபளீகரம் செய்து விடுவானோ??? :shocked:

அவன் அம்மா சொன்னார்,

"அவனுக்கு வயிற்றின் அளவு தெரியாது!

நீயாகவே சுடுவதை நிறுத்திவிடு!"

இனி எங்கே எதை நிறுத்துவது?

இனிக் கேட்டாலும் கிடையாது. மாவு காலி!

சொல்வதை அரை மணி
க்குமுன்னால் அல்லது

ஒரு டஜன் தோசைகளுக்கு முன்னால்

சொல்லி இருக்கக் கூடாதா? :doh:

"To have a Skeleton in the cupboard!"

என்று கேள்விப்பட்டுள்ளேன்! :fear:


" To have a cupboard in the skeleton!"

என்ற ஒரு கதை ஆகியது இது! :rolleyes:
 
When you have a good heart, now matter where you are, help comes without asking, that is law of nature.. When I lived with my mother in law, I made sure I held her hand all the time, until I made sure she was comfortably seated.. When I drive my uncle and aunt ( in laws ) I make sure I drop them off at the entrance to the destination.. these are simple help that we should render without thinking, I think the gentleman who helped you near the escalator and in Kerala were good souls.. :)

Rules are to be broken Mrs. Visa, I hope it does get broken for your sake.. :)
 
Yes dear Subha.

Whatsoever WILL NOT bend ...WILL end up getting broken!

Nature's law again!!! :) Examples abound!!!

It was not an escalator but the steep stairs in the

Central Railway Station at Coimbatore.

The beauty is that, they DO NOT wait to be formally requested
but rush to help on their own FREE WILL! :clap2:


When you have a good heart, now matter where you are, help comes without asking, that is law of nature.. When I lived with my mother in law, I made sure I held her hand all the time, until I made sure she was comfortably seated.. When I drive my uncle and aunt ( in laws ) I make sure I drop them off at the entrance to the destination.. these are simple help that we should render without thinking, I think the gentleman who helped you near the escalator and in Kerala were good souls.. :)

Rules are to be broken Mrs. Visa, I hope it does get broken for your sake.. :)
 
# 368. உடல் , உணவு, உள்ளம், உணர்வு.

அமெரிக்காவில் உள்ள இந்தியக் கோவில்கள் நல்ல

Cultural Centers என்பதில் ஐயமில்லை. :clap2:

வாரக் கடைசியில் கூட்டம் அலை மோதும். :flock:

இறைவனின் தரிசனம் கண்ணுக்கு விருந்து;

சுவையான இந்திய சமையல் நாவுக்கு விருந்து. :hungry:

நண்பர்களுடன் சந்திப்பு உள்ளத்துக்கு விருந்து. :grouphug:

அங்கு கற்பிக்கப்படும் சமயம் சார்ந்த விஷயங்கள்

அறிவுக்கும், உணர்வுக்கும் விருந்து.

பட்டுப் பாவாடையில் வருவர் குட்டிப் பெண்கள்,

நகைகள் அணிந்து,
நம் கலாசாரத்தை மறக்காமல்!

சமஸ்க்ருதம், ஸ்லோகங்கள், சங்கீதம், இசைக் கருவிகள்

எல்லாம் கற்கலாம் அங்கே ஒரே இடத்தில்!

வயோதிக அன்பர்கள் கொட்டம் அடிக்காமல்

உருப்படியான வேலைகளைச் செய்கின்றார்கள்.

சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை

அங்கேயும் "ஒரு கை பார்த்துவிட்டு" காகிதப் பைகளில்

வீட்டுக்கும் வாங்கிச் செல்கிறார்கள் அவர்கள்.

இரண்டு டாலருக்கு பூந்தி லட்டு எங்கே கிடைக்கும்?

இங்கே நிச்சயம் கிடைக்கும் எவ்வளவு வேண்டுமானாலும்.

 
# 369. "நீயும் செய்யவேண்டாம்...!"

குடும்பத்தில் ஒரு நல்ல காரியம் நடந்தால் எல்லோரும்

இழுத்துப் போட்டுக் கொண்டு உதவி செய்ய வேண்டும்.:roll:

"பகிர்ந்த வேலை பளுவாக இராது" அல்லவா!

"யாருக்கு வந்த விருந்தோ?" என்று சிலர் அமர்ந்திருப்பார்.

'பிடித்து வைத்த பிள்ளையார்' போலச் சிலர் இருப்பார்.

'யாரிடம் என்ன குற்றம் குறை காணலாம்?" என்று நோட்டம்

போட்டபடி சும்மா அமர்ந்து இருப்பார் சிலர்.:couch2:

பேச்சு வாக்கில் "உதவி செய்யலாமே!" என்றால்

ஒரே மாதிரி பதில் அனைவரிடமிருந்தும் வரும்.

"நீயும் எனக்கு உதவி செய்ய வேண்டாம்! :hand:

நானும் உனக்கு உதவி செய்ய மாட்டே
ன்! :nono:

நல்ல பாலிசி. எல்லோரும் கஷ்டப் படவேண்டும்

யாரு
மே சுகப் படக் கூடாது! என்ன பரந்த உள்ளம்!


சுவர்க்கமும், நரகமும்!

சுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்?
அவற்றுள் என்ன பேதம் அறிவீரா?
சுவர்க்கமும் நரகமும் வேறுபடுவது
அவற்றுள் வசிக்கும் ஆத்மாக்களாலே!

சுவர்க்கம் நரகம் இரண்டையுமே
சுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,
இரண்டில் உள்ளவர்களின் நிலையும்
இருந்தது ஒரு போலவே, விந்தை!

கையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்
கனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.
எதிரில் அறுசுவை உணவு இருந்தும்,
எடுத்துத் தாமே உண்ண இயலாது!

நரகத்தில் வசிப்போர் உணவின்றி
நானா இன்னல்கள் அடைத்தாலும்,
சுவர்க்கவாசிகள் உணவு உண்டு,
சுகமாகவே இருந்து வந்தனர்!

எப்படி இது சாத்தியம் என வியந்தால்,
இப்படித்தான் எனச் செய்து காட்டினர்.
சுவர்க்கவாசி ஒவ்வொருவரும் தம்
எதிரே உள்ளவருக்கு ஊட்டிவிட்டார்.

நரகவாசிகள் நவின்றதோ இப்படி!
“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்?
பசியுடன் நான் இருப்பது போலவே,
பசியுடன் அவனும் இருக்கட்டுமே!”

நரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே!
நரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.
நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
“நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

<visalramani.wordpress.com>
 
இரு வகை மகளிர்.

இரு நண்பர்கள் சந்தித்தனர்.

ஒருவன் சொன்னான் மற்றவனிடம்

"என் மனைவி எப்போதும் ஏதாவது வாங்கித்
தரச் சொல்லி என் உயிரை எடுப்பாள்!'' :whoo:

மற்றவன் சொன்னான் இவனிடம்,

"என் மனைவி வாங்கித் தரச் சொல்லமாட்டாள்.

எல்லோரையும் போல நான் இது வேணம்னு கேட்டேனா?

அது கேட்டேனா? என்று சொல்லியே உயிரை எடுப்பாள்!":doh:

கேட்பதிலும் இரு வகை உண்டு.

நேரிடை ஒன்று; எதிர் மறை ஒன்று!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top