• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kudumi / Tuft - Procedures / Do's & Dont's / Maintenance

sapsrikaanth

Active member
Hello all,

1) Please can you educate me about having a tuft / Kudumi ?
2) I do not have a kudumi till now, can I have it now on ?
3) What are the procedures to be followed , is there is any ceremony like " poonal kalyanam ( Upanayana ) " kind of a thing needed / to be followed ?
4) Please also advise Do's & Dont's while we have the kudumi ?
5) When to tie it & when not to tie it ?
6) Is there is any book available educating all these things ?

Thank you & kindest regards, Srikaanth
 
சிகை வைக்க வேண்டியது ஏன்.
குடுமி வைப்பது வேதத்தினால் விதிக்கப்பட்ட கர்மா.
முதல் ஆண்டு, மூன்றாம் ஆண்டு அல்லது ஐந்தாம் ஆண்டாவது அவசியம் செய்ய வேண்டியது இது..
இந்த கர்மாவிற்கு சூடாகரணம் என்று பெயர். சூடா என்றால் ஶிகை. அதைவிதிப்படி வைப்பது சூடாகரணம் எனப்பெயர்.
எந்த ஸம்ஸ்காரத்தில் செய்ய படுகிறதோ அது செளளம் எனபடும்.

வேத மந்திரங்களை க்கூறி, அக்னியில் ஹோமம், நாந்தி சிராத்தம் செய்து செய்ய வேண்டிய கர்மா இது.
செளலத்திற்கு பூர்வாங்கமாக உதக சாந்தி, பாலிகை தெளித்தல், ப்ரதி சரம், நாந்தி செய்து முடித்து பிறகு செளளம் செய்ய வேண்டும்,

செளளம் செய்வதற்கு அன்றைய நாளில் எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும், 7ம் இடத்தில் செவ்வாய், சுக்ரன், சனி, சூரியன் இவைகள் இருக்க கூடாது,9ம் இடம் சுத்தியுள்ள லக்னத்தில் செய்வதே சிறந்தது. தாரா பலம், சந்திர பலம் பஞ்சகம் பார்த்து செய்ய வேண்டும்,

உத்திராயணத்தில் மாசி நீங்கிய மற்ற மாதத்தில்
குரு, சுக்ரன் அஸ்தமனமில்லாத காலத்தில்,
துவிதியை, த்ருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, த்ரயோதசி திதிகள்;
அசுவதி, ரோஹிணி, ம்ருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், அனுஷம், சித்திரை, சுவாதி, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நக்ஷத்ரங்கள்

, திங்கள், புதன், வியாழன் கிழமைகள்;
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் லக்னங்கள் சிறந்தது
,ராகு காலம், யம கண்டம், கரிநாள் சந்திராஷ்டம நாள் இல்லாமல் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரி வேதோக்த மந்திரங்கள் சொல்லி தான் எடுக்க வேண்டும். க்ருஹஸ்தனுக்கு உரிய கர்மாக்களை நன்கு செய்து, யாகாதி களால் தேவாதி கட ன்களை நீக்கி, ஸத் புத்ரனை பெற்று அதனால் பித்ரு கடன் நீக்கி
தீவிர வைராக்கியம் உண்டானால் ஸன்யாஸம் பெற்று கொள்ளும் போது பித்ருக்கள் பூஜை செய்து அக்னியை ஆராதித்து ஸிகை யக்யோபவீதம் இவைகளை ஸன்யாஸி களைய வேண்டும்.

இடையில் எக்காரணம் கொண்டும் ஶிகையை களய கூடாது. பழனி போனேன், திருப்பதி போனேன் என்று மொட்டை அடித்து கொண்டு வரக்கூடாது. இது சாஸ்த்திர விரோதம்.

மாதத்திற்கு ஒரு முறை க்ருஹஸ்தன் க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். தீட்டு நிவர்த்தி யாகும் போதும், ப்ரயாகை போன்ற புண்ணிய தீர்த்தங்களில் விதிக்க பட்ட வபனம் , ஶிகை தவிர வபனத்திற்காக விடப்பட்டு வளரும் முடியை அகற்றுவதாகும்.

நோயினால் ஶிகை போய் விட்டால் கர்மாக்கள் செய்ய யோக்கியதை இல்லை. அப்போது பசுவின் வால் மயிர் அல்லது தர்ப்பையை தலையில் ஶிகை மாதிரி வைத்துக்கொண்டு கர்மா செய்ய வேண்டும்.
அல்லது காதுக்கும் தலைக்கும் இடையில் தர்பையை சொறுகி வைத்துக்கொண்டு கர்மா செய்ய வேண்டும்.

ஆன்ஹிகத்தில் முதல் கர்மாவான ஸ்நான கர்மாவில் ஸ்நான அங்கமாக பித்ருக்கள் அருளை நாடி ஶிகோதகம் விட வேண்டும்.

அதாவது ஸ் நானம் ஆன பின் பின்னால் தொங்கும் சிகையை முன்புறமாக தள்ளி , அங்கிருந்து பூமியில் ஜலம் விழுமாறு செய்ய வேண்டும். இதன் போது சொல்ல வேண்டிய சுலோகம். சதா குல்மேஷு வ்ருக்ஷேஷு வர்தந்தே பிதரோ ம ம தேஷாமாப்யாயனார் தந்து இதமஸ்து ஶிகோதகம்.

குளித்த பிறகு வஸ்த்ரங்களை இந்த மந்திரம் சொல்லி பூமியில் பிழிய வேண்டும். இவை இரண்டும் பித்ருக்களுக்கு ப்ரீதியான விஷயம்.

யேகேசாஸ்மத் குலே ஜாதா: அபுத்ரா கோத்ரஜாம்ருதா: யே க்ருஹ்ணந்து மயாதத்தம் வஸ்த்ர நிஷ்பீட நோதகம்

பஞ்சாயத்ன பூஜை காலத்திலும் பஞ்சாக்ஷரி முதலிய ஜப காலத்திலும் ந்யாஸம் என்ற கர்மாவினால் அந்தந்த மந்திரம் அல்லது பீஜாக்க்ஷரத்தால் ஒவ்வொரு அங்கத்தயும் தொட வேண்டும்,

அச்சமயம் சிகை அவசியம் வேண்டும். இல்லறத்தில் உள்ளவன் \குடும்பி எனப்படுவான், குடும்பி சிகை தரிக்க வேண்டும், அதுவே குடுமி என மாறி வந்திருக்கலாம்.

உப நிஷத்துக்கள் கூறுகின்றன நமது சரீர அமைப்பு ஒரு ரதம் போலும், ஒரு நகரம் போலும் அல்லது ஒரு வீடு போலும்.இருக்கிறது என்று. ஒரு வீட்டிற்க்கு கூறை போல நமது சிகை.

ஶிகை இல்லாத உடல் மேற்க்கூறை இல்லாத வீடுபோலாகும். மஹ ரிஷிகள் ஶிகை பற்றி கூறியுள்ள த த் துவம் நம் சிறு புத்திக்கு எட்டாதது.

மேரு மலைக்கு சமமான பாபங்கள் நம் கேசத்தை அண்டியுருப்பதால் புண்ய காலங்களில் நமது ஶிகையை விட்டு விட்டு மிகுதியை வபனம் செய்து கொள்ள வேண்டும்.
பாப நிவ்ருத்திக்காக் செய்யும் கூஷ்மாண்ட ஹோம ம் யாக தீக்ஷை முதலிய கர்மாக்களில் வபனம் விதிக்க பட்டிருக்கிறது. கேசம், நகம் இவை நமது உடலிலிருந்து வளர்ந்த உயிரற்ற அம்சம்.ஆதலால் நாம் அதை தரிக்க கூடாது.

வபனம் செய்து கொள்ள வேண்டும். இரு கக்ஷங்களை முதலிலும் பிறகு முகம் பிறகு தலை என்ற முறைப்படி க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும்.
மரத்தில் உலர்ந்த சிறகுகள் , தானே உதிர்கின்றன,அது மரத்தின் வளர்ச்சிக்கு அவசியம். அதே போல் துளஸியின் கதிர் புங்க இலையின் நுனி, வாழை மரத்தின் அருகில் உண்டாகும் கன்று களை கிள்ளி அல்லதி வெட்டி எறிவது வாழை மரத்தின் வ்ருத்திக்கு காரணமாவது போல் , ஸிகையை வளர்த்து ,அதன் வ்ருத்திக்கு காரணமாக மற்ற இடத்தில் வபனம் செய்து கொள்ளும் படி கூறினர் போலும்.

ஒரு ரிஷியின் கொள்கை பசுவின் குளம்பின் அளவிற்கு நடுவில் ஸிகை வைத்து அதை பின் புறமாக கட்ட வேண்டும் என்பது. நடுவில் ஶிகை வைத்து அதை பக்க வாட்டில் அல்லது முன் புறம் முடிய வேண்டும் என்பது மற்றொரு ரிஷியின் கொள்கை. முக்காணி தில்லை தீக்ஷிதர்கள் சிதம்பரத்தில் பார்க்கலாம்.

நமது மூளை தான் ஸகல அவயங்களிலும் சிறந்த பாகம்.மனம் சென்று ஒவ்வொரு இடத்திலும் வேலை செய்கிறது. வேலைசெய்யும் இடத்தில் கனமான உறுதியானகூறை போன்ற சிகையால் மூடபட்டால்
மூளைக்கு உறுதி என சிகை விதித்தனர் போலும்.

பெற்றோர் இறந்த ஆண்டில் ஆப்தீகம் ஆகும் வரை புத்ரன் வபனம் செய்து கொள்ள கூடாது.மனைவி கர்பிணியானால் , கர்ப்பம் வ்யக்தமாக தெரிந்த பிறகு பத்து மாதம் வரை வபனம் செய்து கொள்ள க்கூடாது.

விவாஹம் ஆன பிறகும், உப நயனமான பிறகும் ஆறு மாதம் வபனம் செய்து கொள்ளக்கூடாது.

ப்ரசவித்த பத்தாம் நாள் வபனம் செய்து கொள்ள வேண்டும்.பெற்றோர் சிராத்ததிற்கு முன்பும், பின்பும் சில நாட்களாவது வபனம் செய்து கொள்ள கூடாது.

மாதத்திற்கு ஒரு முறை கிரஹஸ்தனும், இரு மாதத்திற்கு ஒரு முறை சன்யாசியும், அமாவாசை ,பெளர்ணமிகளில் ஆஹிதாக்னியும் வபனம் செய்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வபனம் கூடாது. த்விதியை, த்ருதியை வபனம் பண்ணிக்கலாம். சதுர்த்தி அப்பா, அம்மா இல்லாதவர்கள் பண்ணிக்கலாம். பஞ்சமி பண்ணிக்கலாம், சஷ்டி

கூட பிறந்தவர்கள் உடையவர்கள் பண்ணக்கூடாது. ஸப்தமி பண்ணிக்க லாம். அஷ்டமி, நவமி பண்ணிக்கொள்ள கூடாது. தசமி, ஏகாதசி பண்ணிக்கலாம். துவாதசி பண்ணக்கூடாது.

த்ரயோதசி பண்ணிகலாம். சதுர்தசி அக்கா, தங்கை உள்ளவர்கள் பண்ணக்கூடாது. அம்மாவாசை, பெளர்ணமி, ப்ரதமை பண்ணக்கூடாது. வபனம் செய்து கொள்ளும் நாளில் செவ்வாய், சனி, வெள்ளி ஜன்ம நக்ஷத்ரம் , பித்ரு தினங்கள் இவைகள் வந்தால் வபனம் கூடாது. க்ருத்திகை, பூரட்டாதி,உத்திரட்டாதி நக்ஷத்திரங்களில் வபனம் கூடாது.

ஆசெளச வபனம்:-
பத்தாம் நாள் எந்த திதியில் வந்தாலும் வபனம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் நாள் வெள்ளி கிழமையாக இருந்தால் முதல் நாள் வியழகிழமை 9ம் நாள் ஞ்யாதிகள் செய்து கொள்ள வேண்டியது. கர்த்தாவிற்கு எந்த திதி , எந்த கிழமையாக இருந்தாலும் பத்தாம் நாள் வபனம்.

வட தேசத்தவர் போல் கிராப்பின் நடுவிலாவது சிறிது ஶிகை வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
தானே வபனம் செய்து கொள்ள கூடாது.

நீங்கள் ஶிகை வைத்துக்கொள்ள விரும்பினால் ஸலூனுக்கு சென்று குடிமி வைத்துகொண்டு வரலாம். ஸிகை நீளமாக வளர்ந்த பிறகு தினமும் ஸ் நானம் செய்த பிறகு , சிகையை முன் பக்கம் வைத்துகொண்டு தலை முடி ஜலம் பூமியில் விழும் படி மந்திரம் சொல்லி கொண்டு நிற்கலாம்.
 
Just came across this video in youtube. Very informative on KUDUMI / TUFT / SHIKHA
But this is only a small piece. Where can we collect / learn more inofrmation on KUDUMI ?


Thanks Gopalan mama for answering this.
Please can you educate me by replying to other unanswered queries ? VIZ
4) Please also advise Do's & Dont's while we have the kudumi ?
5) When to tie it & when not to tie it ?
6) Is there is any book available educating all these things ?

Plus / Moreover:
7) please can you educate me on what is பஞ்சாயத்ன பூஜை ?
8) During TARPANAM, I heard that we have to untie the KUDUMI. If it is true, exactly at what point we have to untie & at what point we have to tie it back ? please can you throw light on this ?
9) What is the meaning of வபனம் , இரு கக்ஷங்களை& ஆப்தீகம் ?

thank you & kindest regards, SRikaanth
 

Latest ads

Back
Top