• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Vinayagar Chaturthi Pooja Procedures 2022

praveen

Life is a dream
Staff member
வினாயக_சதுர்த்தி 31 . 08 . 2022

பூஜைக்கு தேவையான_பொருட்கள்.

சங்கல்பம் பூஜை விவரம்.

1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4. சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்தியங்கள்.

1.அன்னம் (மஹா நைவேத்தியம்)
2- அப்பம்
3- வடை (உளுந்து வடை)
4-கொழுக்கட்டை
5-வெல்ல பாயசம்

பழ வகைகள்

1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும்..

(மஞ்சள் பிள்ளையார் பிடித்து கொள்ளவும்.)

விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம:
ஃ ஓம் அனந்தாய நம:
ஃ ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின் மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி ஃ ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி என்று சொல்லி, புஷ்பத்தை பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம்)
” உபவீதம் சமர்ப்பயாமி| ( அக்ஷதை போடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா||
- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

பிரதான பூஜை
*****
ஆசமனம், சுக்லாம்பரதரம்......., ப்ராணாயாமம்.

மமோ பார்த்த...
சுபே சோபனே முஹ_ர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ஹோ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, விளம்பிநாம ஸம்வத்ஸரே, தெக்ஷ்ணாயனே வர்ஷ ருதௌ, சிம்ம மாஸே, சுக்லபக்ஷே, சதுர்த்யாம், சுபதிதௌ, வாஸரஹ வாஸரஸ்தௌ, குரு வாஸரயுக்தாயாம், சுவாதி நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ,வர்த்த மாணாயாம் சதுர்த்யாம் சுபதிதௌ,

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஶ்ரீவிக்னேஸ்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூப ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ விக்னேஸவர பூஜாம் கரிஷ்யே|

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஶ்ரீ விக்னேஷ்வர ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்மரூவிஷ்ணு ரூமஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்ரூபீஜம், ஹ்ரீம்ரூசக்தி:, க்ரோம்ரூகீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, மண் பிள்ளையார் பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
விக்னேஷ்வர யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

- இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வினாயகர் பூஜையைத் தொடங்கவும்.

1.ஷோடஸோபசாரங்கள் செய்யவும்.

2.பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், பிள்ளையார் பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

3. ஏகவிம்ஸதி ( 21) தூர்வாயுக்ம (அருகம்புல்) பூஜை செய்யவும்.

4.பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி புஷ்பம் அர்ச்சனை செய்யவும்.

சித்தி வினாயக அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்.

5. பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், கற்பூர தீபாரதனை, செய்யவும்.

6..பிறகு மந்திர புஷ்பம், பிரதக்ஷிணம்,நமஸ்காரம் செய்து, பிரார்த்தனை செய்யவும்.

7. பாலில் ஜலம் கலந்து கொண்டு அர்க்யம் விடவும்.
****
8. மறுநாள் புனர்பூஜை செய்து பிள்ளையாரை கிணற்றில்/குளத்தில் சேர்க்கவும்.

1661830537596.png
 
Attachments

  • 1661830583555.png
    1661830583555.png
    1.2 MB · Views: 54

View attachment 17686
Thanks for pooja details. But sankalpam year date etc not corrected. Please update it. Secondly if you add 21 Dhoorva chanting and 108 ashtothram we could save it a complete pooja for future.
Thanks.
 
விநாயகர் சதுர்த்தி 2022 வழிபடும் முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட பூஜை நேரம் :

*31/08/2022 காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால்,*

*காலை 4:00 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்யலாம்*

(அல்லது )

*6 மணி முதல் 7:15 மணி வரை வழிபாடு செய்யலாம்*

(அல்லது )

*9 மணி முதல் 12 மணி வரை வழிபாடு செய்யலாம்*

(அல்லது )

*மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்யலாம்*

*31ம் தேதி மதியம் இரண்டே முக்கால் மணி வரைக்கும் தான் சதுர்த்தி திதி உள்ளது.*

*ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி தானே முக்கியமானது.* அதனால் இந்த சதுர்த்தி திதி மாலையில் வர வில்லையே. ஆனாலும் நாங்கள் விநாயக பெருமானை மாலையில் வழிபடலாமா என்றால் காலையில் நமக்கு துவங்கும் போது சதுர்தியிலேயே துவங்குகின்ற காரணத்தால் அன்று மாலை நாம் விநாயகரின் வழிபாடு செய்து கொள்ளலாம்.

அதனால் 31ம் தேதி மாலை நாம் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்து வழக்கம் உள்ளவர்கள் மாலையிலும் செய்து கொள்ளலாம். மாலையில் செய்ய நேரம் இல்லாதவர்கள் காலை வழிபாடு செய்யலாம்.

*காலை விநாயகர் வாங்கி வந்து பூஜை செய்ய வேண்டும் என்பவர்கள் 9 மணி முதல் 12 மணி வரை வழிபாடு செய்யலாம்.* வீட்டிலேயே விநாயகர் வைத்திருப்பவர்கள் ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்யலாம்.

*விநாயகர் சதுர்த்தி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது?*

எங்கள் வீட்டில் நாங்கள் பாரம்பரியமாக சிறிய விநாயகர் விக்கிரகம் வைத்துள்ளோம். அதனை வைத்து வழிபாடு செய்யலாமா என்றால் ரொம்ப நல்லது அதனை வைத்து வழிபாடு மகிழ்வாக செய்யலாம். வருடவருடம் புதிதாக விநாயகர் வாங்கித் தான் வழிபாடு செய்வோம் என்றால் அப்படி வழக்கம் வைத்திருந்தால் அவ்விதம் வாங்கி வழிபாடு செய்யலாம்.

வாங்கியதை கட்டாயம் கரைக்க வேண்டும் :

வாங்கும் விநாயகரை வணங்கி விட்டு எங்கோ கொண்டு வைப்பது கூடாது.

யாராவது எடுத்துச் செல்வார்கள் கரைத்து விடுவார்கள் எனும் அலட்சியத்துடன் விநாயகரை வைப்பதாக இருந்தால் அதனை வாங்காமல் வீட்டில் இருக்கும் விநாயகரை வைத்து நாம் வழிபாடு செய்து கொள்ளலாம். கரைக்கிறதுக்கு நமக்கு வசதி உள்ளது. நாங்கள் முறையாக கரைத்து விடுவோம் என்றால் கட்டாயம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை முறையாக வாங்குங்கள்.

ஏன் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்க வேண்டும்?

முடிந்த வரை களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வழிபாடு செய்வது சிறப்பானது.

அதற்கான காரணம் இயற்கையனுடைய சூழலை பாதுகாக்கும் பொருட்டு நமது முன்னோர்கள் சில பண்டிகைகளுக்கு சில விஷயங்களை வைத்தார்கள். முளைப்பாரி கரைப்பது என ஒரு விஷயத்தை நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள். எதற்காக ? ஆடி மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதனால் அந்த ஆடி வெள்ளப்பெருக்கில் மண்ணரிப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதனாலயும் ஒவ்வொரு ஊர்ல இருந்தும் கொஞ்சம் மண்ணை கொண்டு வந்து உங்கள் ஆற்றில் போடுங்கள் என்றால் யாரும் போட மாட்டார்கள் என்பதனால் விதைகள் நன்றாக விளையட்டும் என விதைவிற்று பார்த்து அந்த நல்ல மண்ணை கொண்டு போய் ஆற்றில் போடுவார்கள். அப்படி ஆற்றில் போடக்கூடிய மண் ஆற்றில் சென்று தங்கும்.

ஆடியை தொடர்ந்து வரும் மாதம் ஆவணி மாதம் . அந்த மாதத்தில் களிமண்ணால் பிள்ளையாரை செய்து ஒரு 3 நாட்கள் அதனை வீட்டில் வைத்திருப்பர். ஏன் அன்றே கரைக்க கூடாதா என்றால் உடனே கரைக்கும் போது மண் பச்சையாக செய்தது போல் இருக்கும் அது தண்ணீரில் எளிதில் கரைந்து ஓடி விடும். ஆனால் அதனை 3 நாட்களுக்கு பின்னர் இறுகி போன பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ, ஓடும் நீரிலோ ,எதில் போட்டாலும் கொஞ்ச தூரம் ஓடும் கரையாது. அப்படியே தங்கி விடும். இப்படியே ஆங்காங்கே களிமண் சென்று மண்ணரிப்பை தடுக்கும் என்ற காரணத்தால் தான் பெரியவர்கள் 5 பூத தத்துவத்தையும் அதில் அடக்கி உலக நன்மைக்காக இப்படி ஒரு செயலை வழிபாட்டு முறைக்காக நமக்கு அளித்தார்கள்.

இந்த ஆண்டு நமக்கு நன்றாக தண்ணீர் வருகின்றது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை நாம் நன்றாக வாங்கலாம். அதனை ஆற்றில் கொண்டு போய் 3 நாட்களுக்கு பிறகு நாம் கரைத்து விடலாம். ஆறு குளம் எதுவும் எங்கள் வீட்டின் அருகில் கிடையாது. கிணற்றுள் போடலாமா என்றால் அதிலும் தாராளமாக போடலாம். நம் வீட்டில் இருக்கும் கிணற்றில் அழகாக போடலாம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டில் வைத்து வணங்கும் விநாயகரை வைத்தே வழிபாடு செய்யலாம். புதிதாக விநாயகர் வாங்க வேண்டும் எனும் அவசியம் கிடையாது.

வீட்டிலேயே கைகளால் செய்து மஞ்சளில் விநாயகர் வைத்து எளிமையாக செய்து வழிபடலாம்.

31ம் தேதி காலை பூஜை செய்கின்றோம் எனில் 30ம் தேதி மாலையிலேயே நாம் நமது வீட்டினை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விநாயகருக்கு பிடித்த நெய் வேத்யங்கள் , பூஜை பொருட்கள் அனைத்தும் முதல் நாளே வாங்கி தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

காலையிலேயே எழுந்து விநாயக பெருமானை வாங்கும் போது நல்ல நேரத்தில் வாங்க வேண்டும்.

வாங்கி வந்தவுடன் வாசலில் விநாயகரை நிறுத்தி தீபம் காட்டி விநாயக பெருமானே எங்கள் வீட்டில் எழுந்தருளி சந்தோசமாக அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து விட்டு பூஜை செய்யும் இடத்தில் விநாயகரை வைக்க வேண்டும்.

நெய்வேத்யங்கள் : பால் , பழங்கள் , அப்பம் , கடலை , மோதகம் , கொழுக்கட்டை , தேங்காய் , வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு என வழக்கமாக நாம் என்ன செய்வோமோ அதனை வைத்து சர்க்கரை பொங்கல் , அவள் , பொறி , கம்பு சோளம் , கரும்புத் துண்டு என கிடைப்பதை வைக்கலாம்.

எளிமையாக 2 வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு , அவல் பொரிகடலை வைத்து கூட வழிபாடு செய்யலாம்.

நமது சவுகரியம் நம்மால் செய்ய முடியவதை பொறுத்து செய்யலாம். விநாயகருக்கு பிடித்த மோதகம் விரும்பி உண்பார்.

*வெள்ளை எருக்கு , கலர் எருக்கு எதனை பயன்படுத்துவது ?*

இரண்டுமே தாராளாமாக பயன்படுத்தலாம். எருக்கம் பூ நாம் மாலையாக போடலாம்.

அர்ச்சனைக்கு வைத்து கொள்ளலாம். மிக முக்கியமானது அருகம் புல். அது இருந்தால் மிக விஷேசம். இருந்தால் எளிமையாக வைத்து வழிபாடு நடத்தலாம்.

விநாயகர் அகவல் பாராயணம் செய்தல் மிக மிக விஷேசம்.

*விநாயகர் அகவல் :*

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

3 நாள் வைத்து விநாயகரை கரைக்க வேண்டுமே 3ம் நாள் வெள்ளிக்கிழமை கரைக்க மனம் வரவில்லை எனில் 5 நாள் நாம் வைக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கரைத்து விடலாம்.

விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கரைக்கும் வரை 1 வேலையாவது வாழை பழம் , ஏதாவது வைத்து வழிபாடு செய்யவும்.

1 ரூபாய் வைத்து விநாயகரை வாங்கி வந்தால் அந்த காசை பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் உண்டியலில் போட வேண்டும்.

நீர் நிலையில் போடுவதை விட சிறந்தது.
 
Thanks for pooja details. But sankalpam year date etc not corrected. Please update it. Secondly if you add 21 Dhoorva chanting and 108 ashtothram we could save it a complete pooja for future.
Thanks.
Another point is today our own Brahmin community needs to perfect our religious practices.
1. This Vigneswara poojai in Ganesh Chaturthi, you put rightly but left half way. The shodopachara Poona all should come in one complete so we need not go elsewhere to search for it.
What to do wherever we go go we meet the end wall. If some one do better check and correct complete pooja in one at one place.
 
What was shared with me is what I have shared here. I will check with the member who sent this to see if they can share the missed out parts.
 
What was shared with me is what I have shared here. I will check with the member who sent this to see if they can share the missed out parts.
I fully understand your point. I even wrote in FB of Giri Trading, that today they simply print and sell books but never checked for its contents.
We are such a sorry state that the once in a year spiritual function of men is Upakarma. Even that is shrieked and printed by Giri which is the contents all reduced to a small fond and printed in back to back one sheet.
There too in between they instead of printing in full for each ritual chanting they simply quote """ from here.....from.....to....continue""'.
This is really a dirty job. They only try for money. We can't read the small fond and at the ritual time with wet hands how can we handle the paper searching when there is no space to mark our lead.
Are we so poor can't spend Rs.50.00 for a clear 4 pages full description printing without going back and forth??
Because we fully trust GIRI TRADING they look only commercial aspect but not any value to the society of our Brahmin community.
I would suggest why can't you try to make a full one with learned help and publish it.
Secondly, as you have shared just like that without reading it's contents the year date thithi are all wrong old one just sent over. When I start reading it before taking a print out I noticed it and took out the Panjangam and amended it in my copy.
But when I come to bottom further pooja I get stranded in the island, as only such names appear and no rituals and mantras, as it shows far away shore but how to reach without a way.
Better catch who sent you and get him to catch the originator ancestor of this.
Our one effort will benefit all, so please take it easy as no offend intended in writing a long reply.
Regards,
 
Can I have this in English.

Sekhar Kausik
[email protected]
Please check this web. Here it is in English. Plus there is an option to download PDF file.
 
Latest ads

Back
Top