• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Kanchi Magimai

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
திருக்கச்சி நம்பிகள் திரு அத்யயன உத்ஸவம் ( பரணி தீபம் ) கார்த்திகை சுக்லபக்‌ஷ சதுர்தசி


பரணி தீபம் எல்லா ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களிலும் விசேஷமாக அனுசரிக்கப்படும் நாளாகும். ஆனால் அன்றைய தினம் பெருமாளுக்கு திருமஞ்சனம் அனுஷ்டிக்கப்படுவதில்லை. மறுநாள் திருக்கார்த்திகை அன்று பௌர்ணமியும் சேர்ந்து வருவதால் அன்று தான் திருமஞ்சனம். அனால் காஞ்சியில் பரணி தீபம் அன்று தான் பெருமாளுக்கு திருமஞ்சனம். மூலவருக்கு தைல காப்பு ஆனபின்பும் உற்சவர் அருளாளன் அவர் திருக்கச்சி நம்பிகளுடன் வார்த்தை பேசின கச்சி வாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். இது என்ன புதுக்கதை பௌர்ணமி அன்று திருமஞ்சனம் கண்டருளாமல் அதற்கு முன்னாளில் திருமஞ்சனம் என்ற ஐயம் அனைவருக்கும் எழும். இந்தக்கதை புதுக்கதை அல்ல மிகப்பழைய வரலாற்று நிகழ்வு.


பேரருளாளனுக்கு திருவாலவட்டம் கைங்கர்யம் செய்து வந்த நம்பிகள் அவருடன் வார்த்தை பேசும் மாபெரும் பேற்றை பெற்றார். நம் சம்பிரதாயத்தில் எந்த ஒரு ஆழ்வாருக்கோ ஆசார்யனுக்கோ கிடைக்காத ஒரு மாபெரும் பேறு இது. யாதொருவருக்கும் ஸ்வப்னத்திலோ அல்லது அர்ச்சக ஆவேசத்திலோ ஏன் அசிரிரியாகவோ கூட பேசியிருக்கலாம், ஆனால் நேரடியாக பேசியது நம் நம்பிகளோடு மட்டும் தானே. அந்த நம்பிகள் ஒரு நாள் தேவாதிராஜனிடம் தமக்கு மோக்ஷம் அருளுமாறு பிரார்த்திக்க வரதனோ "வீசியதிற்கும் பேசியதிற்கும் சரியாகி விட்டது போம்" என்றான். ஆதாவது உம் கைங்கர்யத்திற்கு பிரதியுபகாரமாக நாம் உம்மிடம் வார்த்தை பேசியாகி விட்டது, மோக்ஷ உபாயம் எம்மால் ஆகாது என்று நம்பிகள் பிரார்த்தனையை புரந்தள்ளினான்.


நம்பிகள் இதுவும் அவனது லீலை என்று அவனிடம் உம்மால் எமக்கு மோக்ஷம் தர இயலாவிடில் எமக்கு உபாயம் யாதென்று வினவ. அதாவது மோக்ஷகர்தாவன சாக்ஷாத் நாராயணனே மோக்ஷம் கொடுக்க இயலாது என்றால் அதற்கு அருகதயானவர் யார் என்று தேவபெருமாளிடன் பிரார்த்தித்தார். அதற்கு பெருமாளும் மோக்ஷத்திற்கு ஒரே உபாயம் ஆசார்யனே என்றும் ஆசார்யனை சரணடைந்தால் மட்டுமே மோக்ஷம் கிட்டும் என்று அருளி, திருக்கோஷ்டியூர் நம்பிகளை சரணடைய உய்த்தார். அவ்வாறு திருக்கச்சி நம்பிகளும் திருக்கோஷ்டியூர் சென்று திருக்கோஷ்டியூர் நம்பிகளை தன்னுடைய ஆசார்யானாக அடைந்து ஒரு கார்த்திகை சுக்ல சதுர்தசி அன்று திருநாடு அலங்கரித்தார். மறுநாள் கார்த்திகை பௌர்ணமி ஆதாலால் அன்றைய தினம் பரணி தீபம்.


நம்பிகள் திருநாடு அலங்கரித்ததை அறிந்த தேவராஜன் உடனே அர்ச்சகர்கள் மேல் ஆவேசமாய் வந்து தனக்கு உடனே கச்சி வாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனம் பண்ணும்படி ஆணையிட்டான். அவ்வாறே அர்ச்சகர்களும் பரணி தீபம் அன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தார்கள். கச்சி வாய்த்தான் மண்டபம் தான் பெருமாளும் நம்பிகளும் வார்த்தை பேசின இடம். இங்கு தான் நித்யமும் நம்பிகள் பெருமாளுக்கு திருவாலவட்டம் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்தார். நம்பிகள் முக்தியடைந்தவுடன் பெருமாள் அந்த இடத்திலேயே தனக்கு திருமஞ்சனம் பண்ணவேண்டும் என்று நியமித்து அதே போல் ஒவ்வொரு வருடமும் நம்பிகளின் திருவத்யான தினத்தில் தனக்கு கச்சி வாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். அதே போல் மறுநாள் பௌர்ணமி அன்று திருமஞ்சனம் கிடையாது இதுவும் ஒரு விசேஷம்.


இன்றைய தினமும் காஞ்சியில் அத்திகிரி மலையில் வைய மாளிகை பிரகாரத்திலே தென்கிழக்கு மூலையில் கச்சி வாய்த்தான் மண்டபத்தின்மேல் நம்பிகள் பெருமாளுடன் உரையாடும் தங்கத்தகடு வேய்ந்த சிற்பத்தை காணலாம்.


ஸ்ரீமத் காஞ்சிமுநிம் வந்தே கமலபதிநந்தனம் |
வரதாங்க்ரிசதா சங்க ரசாயன பராயணம் ||


தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீகாஞ்சிபூர்ணம் உத்தமம் |
ராமானுஜ முநேர்ஹ்மான்யம் வந்தேஹம் சஜ்ஜனாச்ரயம் ||


திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.


தாசன்
 
Whenever I visit Kanchipuram, as soon as I get down from the car I pick up a pinch of sand and sprinkle it on my head because it is the land on which walked many of my respected Acharyas.

Entharo mahanubhavulu anthariki vanthanamu.
 
Status
Not open for further replies.
Back
Top