Hanuman mantra to be recited to avoid harm from Shani

praveen

Life is a dream
Staff member
சனியால் பாதிப்பு வராமல் இருக்க கூறவேண்டிய அனுமன் மந்திரம் :-


நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது “சனி பகவான்” ஆவார். மிகவும் சக்தி வாய்ந்த சனிபகவான், ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிப்பவராக இருப்பதால், அந்த சனிபகவானின் கெடுதலான தசைக்காலங்களில், அவரிடம் இருந்து காத்துக்கொள்ள பலரும் நினைப்பதுண்டு. அப்படி நினைப்பவர்கள் அனுமனை வணங்கி கீழே உள்ள அவருக்குரிய மூல மந்திரம் ஜெபிப்பதன் மூலம் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அனுமன் மூல மந்திரம் :-

“ஹங் ஹனுமதே
ருத்திராத்மஹெ ஹுங் பட்”

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றோ அல்லது அவரை மனத்தில் நினைத்துக் கொண்டு, 108 முறை ஜெபம் செய்ய, சனி பகவானின் தீய தாக்கங்கள் குறைந்து, உடலும், மனமும் மிகுந்த சக்தி பெரும்.

1724558285531.webp
 
Back
Top