Guru's thread; Tamil jokes

Status
Not open for further replies.
யமன்: உன் பதிபக்தியை மெச்சினேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதேனும் வரம் கேள்.
நவீன சாவித்திரி: தர்மராஜனே. என் கணவரும் நானும் இப்போது டிவியில் முடிவே இல்லாதது என்ற சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சீரியல் முடியும் வரை அவர் உயிரோடு இருக்க வரம் தருமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
யமன்: (சற்று யோசித்து) சரி. அப்படியே தருகிறேன். ஆனால் அந்த சீரியல் முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உன் கணவனை நான் கூட்டிச் சென்று விடுவேன்.
ந. சாவித்திரி: நன்றி பிரபோ. அப்படியே ஆகட்டும்.
(யமன் அவள் கணவனை விட்டுவிட்டு தன் லோகம் சென்றடைகிறான்.)
சித்திரகுப்தன்: என்ன மகாராஜா. வெறும் கையோடு வந்திருக்கிறீர்கள். சென்ற காரியம் என்ன ஆயிற்று?
யமன்: அவர்கள் இருவரும் முடிவே இல்லாதது என்ற சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதைப் பார்த்து முடிந்த பிறகு அந்தப் பதிவிரதை தன் கணவன் சத்தியனை யமலோகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மன்றாடி வரம் கேட்டாள். நானும் அவ்வாறே செய்வதாக அவளுக்கு வரம் கொடுத்து விட்டேன்.
சி. குப்தன்: தவறு செய்து விட்டீர்களே பிரபோ. சீரியல் பெயரோ முடிவே இல்லாதது. அது ஒரு கெகா சீரியல்.
யமன்: அப்படியென்றால்?
சி. குப்தன்: மெகாசீரியலென்றாலே அதில் நடிக்க வரும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்து முடிக்கும் வரையில் உயிரோடு இருந்தால் கிழவனாகவோ, கிழவியாகவோ ஆகிவிடுவார்கள். அப்படி நடித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் அவர்கள் நடித்த பாத்திரத்தைக் கதையில் சாகடித்து விட்டோ அல்லது அவருக்குப் பதில் இவர் என்று வேறு ஒருவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோ சமாளித்து விடுவார்கள். மெகாசீரியலை முழுவதுமாகப் பார்த்தவர்களே பூலோகத்தில் யாரும் கிடையாது. நாமே அந்த மாதிரி பல பேரை இங்கே பார்த்திருக்கிறோம். இப்போது சத்தியன் பார்த்துக்கொண்டு இருப்பதோ கெகா சீரியல். பெயர்வேறு முடிவே இல்லாதது. இதை எடுத்து முடிக்க ஒருயுகம் போதவே போதாது. மெகா சீரியலை விட பல மடங்கு பெரியது. அதனால் இப்போது அவனை இங்கு கொண்டு வர வாய்ப்பேயில்லை. நீங்கள் இப்போது அவனுக்குக் கொடுத்திருக்கும் வரம் சாகாவரம். இப்படி ஏமாந்து விட்டீர்களே.
 
போலீஸ்: என்ன தைரியம் இருந்தா பட்டப்பகல்லே வீடு புகுந்து திருடியிருப்பே?
திருடன்: அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்குக் கண் பார்வை சரியில்லாததனாலே ராத்திரி வீடு புகுந்து திருட முடியறது இல்லீங்க. அதான்.

அவர் ஏன் ஜோக் எழுதறதை நிறுத்திட்டார்?
டாக்டர்களைப் பத்தி ஜோக் எழுதினார். டாக்டர்கள் சங்கம் அவர் மேல கேஸ் போட்டுது. ஆசிரியர்களைப் பத்தி எழுதினார். ஆசிரியர்கள் சங்கம் கேஸ் போட்டுது. அரசாங்க அலுவலர்களைப்பத்தி எழுதினார். அவங்க சங்கம் இவரை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுது. சாமியார்களைப் பத்தி எழுதினார். அகில இந்திய சாமியார்கள் சங்கம் இவரைப் படாத பாடுபடுத்திட்டுது. அதே மாதிரி போலீஸ்,
அரசியல்வாதி, பெண்கள், வக்கீல்கள் இப்படி இவர் யாரைப் பத்தி எழுதினாலும் அந்தந்த சங்கங்களும் அவர் மேலே நடவடிக்கை எடுக்கப்போய் இப்ப அவர் ஜெயில்லே இருக்கார்.

ஏன் அந்தப் பெரிய ஆஸ்பத்திரியிலே இருக்கிற டாக்டர்களெல்லாம் நம்ம தலைவரை சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு போகச் சொல்றாங்க? நம்ம நாட்டிலே முடியாதா?
அதெல்லாம் ஒண்ணுமில்லை. இங்கே சிகிச்சையளிச்சு ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா அவரோட கட்சித் தொண்டர்கள் ஆஸ்பத்திரியை அடிச்சி நொறுக்கிடுவாங்க. அதான்.

இது வரையிலும் மற்றும் இனியும் எழுதப் போகும் ஜோக்குகள் யாவும் என்னுடைய சிரி நானூறு என்னும் தமிழ் ஜோக் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையே/ எடுக்கப் படுபவையே
 
யமன்: உன் பதிபக்தியை மெச்சினேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதேனும் வரம் கேள்.
நவீன சாவித்திரி: தர்மராஜனே. என் கணவரும் நானும் இப்போது டிவியில் முடிவே இல்லாதது என்ற சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சீரியல் முடியும் வரை அவர் உயிரோடு இருக்க வரம் தருமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
யமன்: (சற்று யோசித்து) சரி. அப்படியே தருகிறேன். ஆனால் அந்த சீரியல் முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உன் கணவனை நான் கூட்டிச் சென்று விடுவேன்.
ந. சாவித்திரி: நன்றி பிரபோ. அப்படியே ஆகட்டும்.
(யமன் அவள் கணவனை விட்டுவிட்டு தன் லோகம் சென்றடைகிறான்.)
சித்திரகுப்தன்: என்ன மகாராஜா. வெறும் கையோடு வந்திருக்கிறீர்கள். சென்ற காரியம் என்ன ஆயிற்று?
யமன்: அவர்கள் இருவரும் முடிவே இல்லாதது என்ற சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதைப் பார்த்து முடிந்த பிறகு அந்தப் பதிவிரதை தன் கணவன் சத்தியனை யமலோகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மன்றாடி வரம் கேட்டாள். நானும் அவ்வாறே செய்வதாக அவளுக்கு வரம் கொடுத்து விட்டேன்.
சி. குப்தன்: தவறு செய்து விட்டீர்களே பிரபோ. சீரியல் பெயரோ முடிவே இல்லாதது. அது ஒரு கெகா சீரியல்.
யமன்: அப்படியென்றால்?
சி. குப்தன்: மெகாசீரியலென்றாலே அதில் நடிக்க வரும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்து முடிக்கும் வரையில் உயிரோடு இருந்தால் கிழவனாகவோ, கிழவியாகவோ ஆகிவிடுவார்கள். அப்படி நடித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் அவர்கள் நடித்த பாத்திரத்தைக் கதையில் சாகடித்து விட்டோ அல்லது அவருக்குப் பதில் இவர் என்று வேறு ஒருவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோ சமாளித்து விடுவார்கள். மெகாசீரியலை முழுவதுமாகப் பார்த்தவர்களே பூலோகத்தில் யாரும் கிடையாது. நாமே அந்த மாதிரி பல பேரை இங்கே பார்த்திருக்கிறோம். இப்போது சத்தியன் பார்த்துக்கொண்டு இருப்பதோ கெகா சீரியல். பெயர்வேறு முடிவே இல்லாதது. இதை எடுத்து முடிக்க ஒருயுகம் போதவே போதாது. மெகா சீரியலை விட பல மடங்கு பெரியது. அதனால் இப்போது அவனை இங்கு கொண்டு வர வாய்ப்பேயில்லை. நீங்கள் இப்போது அவனுக்குக் கொடுத்திருக்கும் வரம் சாகாவரம். இப்படி ஏமாந்து விட்டீர்களே.

I liked this one a lot :)
 
அப்பா: (தன் மகனிடம்) டேய் எனக்கு பெங்களூருக்கு ஒரு ரயில் டிக்கட் வாங்கிண்டு வாடா
மகன்: (மறுநாள்) இந்தாங்கப்பா டிக்கட் (டிக்கட்டை அப்பாவிடம் கொடுக்கிறான்)
அப்பா: (டிக்கட்டைப்பார்த்துவிட்டு) என்னடா, நான் பெங்களூருக்கு டிக்கட் வாங்கிண்டு வரச்சொன்னா நீ திருச்சிக்கு டிக்கட் வாங்கிண்டு வந்திருக்கே!
மகன்: அப்பா பெங்களூரு டிக்கட் கெடக்கல்லே. தீர்ந்து போயிடுத்து. திருச்சி டிக்கட் கெடச்சது. அதனாலெ அதை வாங்கிண்டு வந்துட்டேன்.
அப்பா: மடையா இதை வச்சிண்டு என்னடா பண்றது?இப்படி பண்ணிப்பிட்டியே
மகன்: நீஙக தானே நேத்து சொன்னேள் கெடைக்கறதை வச்சிண்டு சந்தோஷப்படணுமே தவிர கிடைக்காததை நெனச்சு வருத்தப்படக்கூடாதுன்னு

சின்னப்பெண்: யாரைப்பார்த்தாலும் என்னை பாட்டி மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல்லை.
அக்கா: நீ பாட்டி ஜாடையா இருக்கேங்கறதை அப்படி சொல்றாங்க.

தமிழாசிரியர்: (ஒரு மாணவனைப்பார்த்து ) தமிழ் மொழியை விட இனிமையான வேறு ஒரு மொழி ௨ண்டா?
மாணவன்: உண்டு ஐயா. அது தான் உங்க மகள் தேன்மொழி
 
Last edited:
வீட்டிலே இருந்தா ரொம்ப போரடிக்குது. ஆனா ஆபீசுக்குப் போனா நேரம் போறதே தெரிய மாட்டேங்குது.
ஆமாம். ஆமாம். தூங்கும்பொழுது நேரம் போறதே தெரியாதுதான்.
 
நரிக்குறவங்க முன்னேற நாம ஊக்குவிக்கணும்
என்னங்க சொல்றீங்க நீங்க? அவங்களே கஷ்டப்பட்டு ஊக்கு வித்துத்தான் பொழச்சிக்கிட்டு இருக்காங்க.அப்படி இருக்க நாம வேறே அவங்களுக்குப்போட்டியா ஊக்கு விக்க ஆரம்பிச்சா எப்படிங்க?
 
ஒரு பஸ் நிறைய பெண்களும், மற்றொரு பஸ் நிறைய அவர்களின் மாமியார்களும் ஒருவரை ஒருவர நன்றாகப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பிக்னிக்குச் சென்றார்கள். சென்ற வழியில் மாமியார்கள் சென்ற பஸ் பெரும் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தாரைதாரையாகக் கண்ணீர் விட்டு அழுது அமைதி ஆனார்கள். ஆனால் ஒரு பெண் மட்டும் துக்கம் தாளாமல் விடாமல் விக்கி விக்கி அழுதாள். யார் சொல்லியும் அழுகையை நிறுத்திய பாடில்லை. உடனே பக்கத்திலிருந்த பெண் இந்தப் பெண்ணைப் பார்த்து
" உன் மாமியார் மீது உனக்கு அவ்வளவு பிரியமா?" என்று கேட்டாள். அதற்கு அந்தப் பெண் அழுது கொண்டே" எப்படிச் சொல்வேன்? கடைசி நிமிடத்தில் விபத்தான பஸ்ஸில் வரவேண்டிய என்னுடைய மாமியார் வயற்று வலி என்று வராமல் போய்விட்டாள்" என்றாள்.
 
Last edited:
[h=2]மாமியார் பாசம்[/h]
0
down_dis.png
up_dis.png

ஒரு பஸ் நிறைய இளம் பெண்களும், மற்றொரு பஸ் நிறைய அவர்களின் மாமியார்களும் ஒருவரை ஒருவர நன்றாகப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பிக்னிக்குச் சென்னார்கள். சென்ற வழியில் மாமியார்கள் சென்ற பஸ் பெரும் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தாரைதாரையாகக் கண்ணீர் விட்டு அழுது அமைதி ஆனார்கள். ஆனால் ஒரு பெண் மட்டும் துக்கம் தாளாமல் விடாமல் விக்கி விக்கி அழுதாள். யார் சொல்லியும் அழுகையை நிறுத்திய பாடில்லை. உடனே பக்கத்திலிருந்த பெண் இந்தப் பெண்ணைப் பார்த்து
" உன் மாமியார் மீது உனக்கு அவ்வளவு பிரியமா?" என்று கேட்டாள். அதற்கு அந்தப் பெண் அழுது கொண்டே" எப்படிச் சொல்வேன்? கடைசி நிமிடத்தில் விபத்தான பஸ்ஸில் வரவேண்டிய என்னுடைய மாமியார் வயற்று வலி என்று வராமல் போய்விட்டாள்" என்றாள்.
 
*இன்னிக்கி சமையலுக்கு சாம்பார் வெக்கிறதா, வத்தக் குழம்பு வெக்கிறதா, பொறிச்ச குழம்பு வெக்கிறதா, காரக்குழம்பு வெக்கிறதா எதை வெக்கிறதுன்னே புரியாம ஒரே குழப்பமா இருக்கு.
நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம சமைச்சு முடிச்சுடு. அப்புறமா நீ செஞ்சதுக்கு என்ன பேர் வெக்கலாம்னு யோசிக்கலாம்.
 
உங்க பேரனுக்கு பூணூல் போடப்போறதா கேள்விப்பட்டேனே. எங்கே போடப்போறேள்?

எல்லாம் இடது தோள்பட்டைக்கு குறுக்கேதான்
 
என்ன இன்னிக்கு இந்த ஸ்கூல்லே எல்லாப்பசங்களும் இவ்வளவு சந்தோஷமா இருக்காங்க?

வேறே ஒண்ணுமில்லே. அரசாங்கம் வெச்ச பரீட்சையிலே அவங்க ஸ்கூல் வாத்தியார்கள் அத்தனை பேரும் failஆம்.
************
உங்க கால்வலி இப்ப எப்படி இருக்கு?
பரவாயில்லை. முக்கால் வலி போயிடுத்து. இன்னும் கால்வலி இருக்கு.
***********
ஆயுர்வேத டாக்டர் பசுபதியைப் பார்த்தேன்.ஒண்ணும் பிரயோசனமில்லை. அல்லோபதி டாக்டர் கஜபதியைப்பார்த்தேன். ஊஹூம். ஒரு பிரயோசனமும் இல்லை. ஹோமியோபதி டாக்டர் உமாபதியைப்பார்த்தேன்.அதுவும் பிரயோசனமில்லை. நேசுரோபதி டாக்டர் சீதாபதியைப்பார்த்தேன். அப்பவும் வியாதி குணமாகல்லை. இன்னும் யாரைத்தான் பார்க்கிறதுன்னு புரியல்லே.
அப்படியா? சரி. இப்ப நான் ஒருத்தரை சொல்றேன். அவரைப்போய் பாருங்க
யார் அவர் ?
அவர் தான் திருப்பதி வெங்கடாஜலபதி!
*************
அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தப்புறம் பாட்டி ரொம்பவும் மாறிட்டாங்க
எப்படிடா சொல்றே?
இப்ப எல்லாம் பாட்டின்னு கூப்பிட்டாலே கோவிச்சிக்கிறாங்க
All jokes presented in this thread are taken from my Tamil Book "SIRI NANOORU" a book of jokes containig 400 jokes

இது வரையிலும் மற்றும் இனியும் எழுதப் போகும் ஜோக்குகள் யாவும் என்னுடைய சிரி நானூறு என்னும் தமிழ் ஜோக் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையே/ எடுக்கப் படுபவையே

guru ji,

You have lot in store!! Indeed , very interesting !!
 
வாயாடி வனஜாவோட புருஷன் ரொம்ப சாது ஆச்சே. அவரை இப்ப கொஞ்ச நாளா காணமே. எங்கே போயிட்டார்?

அவர் நிஜமாகவே சாதுவா மாறி ஹ்ருஷீகேசம் போயிட்டார்.
 
சாது: நானும் பதினஞ்சு நிமிஷமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். நீ புகைபிடிக்கிறது இல்லாமல் புகையை என் மூஞ்சியிலேயே விட்டுக்கிட்டு இருக்கியே.

அடாவடி: அப்படியா? இந்த சிகரெட் விலை 5 ரூபா. 15 நிமிஷமா நீ ஓசியிலே நான் விட்ட புகையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கே. அதாவது கிட்டத்தட்ட 3 ரூபாய் புகையை நீ புடிச்சி இருக்கே. எடு 3 ருபாயை.
 
மாமியார்: இந்தப்பொண்ணு என் வீட்டு குத்துவிளக்கா இருப்பான்னு சொன்னீங்க.

ஆனா?
சாமியார்: இப்ப என்னாச்சு?

மாமியார்: அந்தப் பொண்ணு குத்துவிளக்காலே என் வயித்துலே குத்திட்டா.
"siri nanooru"

பையன் என்ன பண்றான்?

அவன் எம்பியே படிக்கிறான்.
ஏன்? உட்கார்ந்தே படிக்கலாமே. எதுக்காக எம்பணும்?
"siri nanooru"

(இதில் முதல்பாதி முற்றிலும் உண்மை. அதன்அடிப்படையில் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட கற்பனைக் கதை இது)
ராமானுஜர் பரம்பரையில் வந்த ஜெயலலிதாவை விட்டுவிட்டு ராவணானுஜர் பரம்பரையில் வந்த கருணாநிதி ஆச்சாரியார் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், வேங்கடநாதனின் பரிபூரண அனுக்கிரகம் அன்னாருக்குக் கிட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும் அவருடைய ராமானுஜர் என்ற டிவி தொடரின் மூலம் பாமர மக்களுக்கும் ராமானுஜரின் பெருமையை எடுத்துச் சொன்ன அவருடைய தெய்வ சேவையைப் போற்றும் வகையிலும், திருப்பதி திருமலை தேவ ஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஆச்சாரியர்களும், பட்டர்களும், ஜியர்களும், வேதவிற்பன்னர்களும், பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு என்று கோபாலபுரம் அதிர பல்லாண்டு பாடியபடி மேளதாளங்களுடனும் வேத கோஷங்களுடனும் கருணாநிதி ஆச்சாரியார் அவர்களின் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி அவருக்குத் திருமலையானின் துளசி தீர்த்தத்தையும் லட்டுப் பிரசாதங்களையும் அளித்து, டிவியின் மூலம் அவர் செய்த இராமானுஜர் சேவையைப் பாராட்டி அதைத் தெலுங்கில் டப் செய்து வெளியிட அனுமதி கேட்டதை நாடே கண்டு வியக்க, நானும் மனதிற்குள் கருணாநிதி ஆச்சாரியாருக்குப் பல்லாண்டு பாடி மகிழ அந்த நேரத்தில் என் கற்பனைக் குதிரை கட்டவிழ்ந்ததன் விளைவுதான் கீழ்க் கண்ட கற்பனை.
ஆரிய ராவணனுன் பெருமையையும் மகிமையையும் பாமர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து, ஶ்ரீலங்கா அதிபர் சிரிசேனா வரையிலும் அனைவராலும் ஏகமனதுடன் பாராட்டப்பட்ட டிவியில் ராவண காவியம் வடித்த வீரமணி சிவாச்சாரியாரின் ராவண சேவையைப் புகழ்ந்து அன்னாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும்,கௌரவப்படுத்தும் வகையிலும் வடநாட்டிலுள்ள அயோத்தியிலிருந்து ராவண பக்த கோடிகள் பலரும், ராவண பஜனை கோஷ்டியினர் சிலரும் வீரமணிக்கு வீபூதிப் பிரசாதமும் மற்றும் கங்கை சொம்பும் அளித்து விஸ்ரவசுவின் புதல்வனும், பிரம்மாவின் பேரனுமான சிவபக்தனான ராவணனன் என்ற பிராமணனைப் போற்றியும் திராவிட ராமனைப் பழித்தும் பல உண்மைகளை உலகிற்கு எடுத்துக் கூறியமைக்கு பொன்னாடை போற்றியும் அந்த டிவி தொடரின் இந்தித் தொடரை தாங்கள் வெளியிட அனுமதி கோரி அதே நேரத்தில் கிறுத்துவ, முஸ்லிம் மற்றும் பிற மதத்தினரின் முழு ஆதரவுடனும் ,ஒத்துழைப்புடனும், நிதி உதவியுடனும் அயோத்தியில் அவர்கள் கட்ட இருக்கும் ராவணன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவும், கட்டி முடித்தபின் அந்தக் கோவிலுக்கு ஒரே ஒரு பூசாரி மட்டும் இருப்பதாலும், சமூக நீதிப்படி பங்கு போட்டு அதை அளிக்க இயலாததாலும் அதற்கு அவரே பூசாரியாகவும் இருந்து அங்குள்ள மற்ற வேலைகளுக்கு சமூக நீதிப்படி ஆட்களை நியமிக்க வேண்டும் என்று காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அவருடைய ஆசி பெற்றுச் சென்றனர்.

R.Guruswamy
[TABLE="class: cf FVrZGe"]
[TR]
[TD="class: amq"]
no_photo.png
[/TD]
[TD="class: amr"]
[/TD]
[/TR]
[/TABLE]

பையன் என்ன பண்றான்?
அவன் எம்பியே படிக்கிறான்.
ஏன்? உட்கார்ந்தே படிக்கலாமே. எதுக்காக எம்பணும்?
 
சேவகன்: நம்ம ராஜாவுக்கு நாளைக்கு அறுபதாம் கல்யாணம்
குடிமகன்: என்னண்ணே சொல்றே? அவருக்கு இப்ப 45 வயசுதானே ஆகுது.
சேவகன்: இருந்தா என்ன? நாளைக்கு ராஜா கல்யாணம் பண்ணிக்கப்போறது 60வது பொண்ணை. அதைச்சொல்றேன்.
 
ஒரு சோகமான ஜோக்!
ஒருவர்: எங்கள் குறைகளைத் தீர்க்காவிட்டால் புரட்சி வெடிக்கும்னு பட்டாசுத்தொழிலாளர்கள் மிரட்டியிருந்தாங்களே, என்ன ஆச்சு?
மற்றவர்: அவங்க வேலை செஞ்ச பட்டாசுத் தொழிற்சாலையே வெடிச்சிடுச்சு!
 
ஒருவர்: அவர் ஏன் இறக்கணும், இறக்கணும்னு கத்திக்கிட்டு இருக்கார்?அவருக்கு அப்படி என்ன கஷ்டம் வந்துட்டுது?
மற்றவர்: அதெல்லாம் ஒண்ணுமில்லே.அவர் பரண்லே இருக்கிற சாமான்களையெல்லாம் கீழே இறக்கணும்னு கத்தறாரு.அவ்வளவுதான்.
 
உங்க வீட்டிலேயும் இப்படித்தானா?
---------------------------------
உங்களுக்கு கிரிக்கெட்லே இன்டரஸ்ட் இல்லியா? நீங்க tvயிலே டெஸ்ட் மேட்ச்செல்லாம் பார்க்கறதே இல்லையே.
அதில்லை. என்வீட்டுக்காரர்தான் என்னைப் பார்க்க விடமாட்டேங்கறார்.
ஏன்?
நான் பார்க்கும் போதெல்லாம் நம்ம ஆளுங்க ஆடினா அவங்க எல்லாம் அவுட் ஆகித் தொலைச்சுடறாங்களாம். எதிர் கட்சிக்காரங்க ஆடினா ஒவ்வொருத்தரும் சிக்ஸரா, அடிச்சுடறாங்களாம். அதனாலே மேட்ச் நடக்கும்போது அந்தப் பக்கமே நான் வரக்கூடாதுன்னு ஆர்டர் போட்டுட்டார்.
 
(இதில் முதல்பாதி முற்றிலும் உண்மை. அதன்அடிப்படையில் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட கற்பனைக் கதை இது)
ராமானுஜர் பரம்பரையில் வந்த ஜெயலலிதாவை விட்டுவிட்டு ராவணானுஜர் பரம்பரையில் வந்த கருணாநிதி ஆச்சாரியார் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், வேங்கடநாதனின் பரிபூரண அனுக்கிரகம் அன்னாருக்குக் கிட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும் அவருடைய ராமானுஜர் என்ற டிவி தொடரின் மூலம் பாமர மக்களுக்கும் ராமானுஜரின் பெருமையை எடுத்துச் சொன்ன அவருடைய தெய்வ சேவையைப் போற்றும் வகையிலும், திருப்பதி திருமலை தேவ ஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஆச்சாரியர்களும், பட்டர்களும், ஜியர்களும், வேதவிற்பன்னர்களும், பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு என்று கோபாலபுரம் அதிர பல்லாண்டு பாடியபடி மேளதாளங்களுடனும் வேத கோஷங்களுடனும் கருணாநிதி ஆச்சாரியார் அவர்களின் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி அவருக்குத் திருமலையானின் துளசி தீர்த்தத்தையும் லட்டுப் பிரசாதங்களையும் அளித்து, டிவியின் மூலம் அவர் செய்த இராமானுஜர் சேவையைப் பாராட்டி அதைத் தெலுங்கில் டப் செய்து வெளியிட அனுமதி கேட்டதை நாடே கண்டு வியக்க, நானும் மனதிற்குள் கருணாநிதி ஆச்சாரியாருக்குப் பல்லாண்டு பாடி மகிழ அந்த நேரத்தில் என் கற்பனைக் குதிரை கட்டவிழ்ந்ததன் விளைவுதான் கீழ்க் கண்ட கற்பனை.
ஆரிய ராவணனுன் பெருமையையும் மகிமையையும் பாமர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து, ஶ்ரீலங்கா அதிபர் சிரிசேனா வரையிலும் அனைவராலும் ஏகமனதுடன் பாராட்டப்பட்ட டிவியில் ராவண காவியம் வடித்த வீரமணி சிவாச்சாரியாரின் ராவண சேவையைப் புகழ்ந்து அன்னாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும்,கௌரவப்படுத்தும் வகையிலும் வடநாட்டிலுள்ள அயோத்தியிலிருந்து ராவண பக்த கோடிகள் பலரும், ராவண பஜனை கோஷ்டியினர் சிலரும் வீரமணிக்கு வீபூதிப் பிரசாதமும் மற்றும் கங்கை சொம்பும் அளித்து விஸ்ரவசுவின் புதல்வனும், பிரம்மாவின் பேரனுமான சிவபக்தனான ராவணனன் என்ற பிராமணனைப் போற்றியும் திராவிட ராமனைப் பழித்தும் பல உண்மைகளை உலகிற்கு எடுத்துக் கூறியமைக்கு பொன்னாடை போற்றியும் அந்த டிவி தொடரின் இந்தித் தொடரை தாங்கள் வெளியிட அனுமதி கோரி அதே நேரத்தில் கிறுத்துவ, முஸ்லிம் மற்றும் பிற மதத்தினரின் முழு ஆதரவுடனும் ,ஒத்துழைப்புடனும், நிதி உதவியுடனும் அயோத்தியில் அவர்கள் கட்ட இருக்கும் ராவணன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவும், கட்டி முடித்தபின் அந்தக் கோவிலுக்கு ஒரே ஒரு பூசாரி மட்டும் இருப்பதாலும், சமூக நீதிப்படி பங்கு போட்டு அதை அளிக்க இயலாததாலும் அதற்கு அவரே பூசாரியாகவும் இருந்து அங்குள்ள மற்ற வேலைகளுக்கு சமூக நீதிப்படி ஆட்களை நியமிக்க வேண்டும் என்று காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அவருடைய ஆசி பெற்றுச் சென்றனர்.

R.guruswamy
[table="class: Cf fvrzge"]
[tr]
[td="class: Amq"]
no_photo.png
[/td]
[td="class: Amr"]
[/td]
[/tr]
[/table]

வளமிகு கற்பனை

வளரட்டும் மேன்மேலும்

வருவது அடுத்து எதுவோ..?

வந்தபின் காண்போம் மகிழ்வுடன்

tvk
 
Status
Not open for further replies.
Back
Top