good quotes from girija

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
எப்போதும் துணிவுடன் இருக்க வேண்டும்.
தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு இருந்தால் தான் செயல்பட முடியும்.

**** டால்ஸ்டாய்
 
சூழ்நிலைகள் அனுசரிக்கப் பழகிக் கொண்டால் தான் இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக இருக்கும்.

*** சார்லஸ் டிக்கன்ஸ்
 
நாம் உலகிற்கு வந்தது சேவை செய்வதற்கே... அடக்கி
ஆள்வதற்கன்று.

*** நோவாலிஸ்
 
வெற்றியை அடைவதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய மிகப் பெரிய விலை உழைப்பே !!!
**** பிரிக் போரக்
 
கோடையில் வியர்வை சிந்தாமல் இருப்பவன், குளிர்காலத்தில் உறைந்து போக கற்றுக் கொள்ள வேண்டும்.
**** ஸ்தீபென்சன்
 
நட்பு உடையக் கூடிய பொருள்.
மற்ற உடையாக கூடிய பொருட்களை எப்படி காய் ஆளுகிறோமோ அத்தகைய கவனத்துடன் நட்பையும் கையாள வேண்டும்.

***** போர்ன்.
 
யார் தங்களுடைய நற்செயலை செவ்வனே முடிப்பதற்கு விரும்புகிறாரோ, அவர்களுக்கு இறைவன் தன உதவியை எப்ப்டோதும் அளித்துக் கொண்டிருக்கிறார்.

*** குயவர்
 
ஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்க வழி - அது ரகசியமான விஷயம் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

*** ஹென்றி கெல்லர்
 
மகிழ்ச்சி நம் வீட்டுக் கூட்டத்திலேயே இருக்கிறது. அதை மற்றவர்களின் தோட்டத்திலிருந்து பறித்துக் கொள்ள வேண்டியதில்லை.
*** ஜெரால்டு
 
ஒரு மனித்ன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது.
**** மார்க்ஸ் அரேலியஸ்
 
எவனொருவன் புகழை வெறுக்கிறானோ, அவனுக்கு உணமையான புகழ் தானாக வந்தடையும்.
*** அல்பேனியா
 
சிறிய அளவிலான மரியாதைகள் வாழ்க்கையை இனிமை ஆக்குகின்றன .
பெரிய மரியாதைகள் அதை மிக வு ம் சிறப்படையச் செய்கின்றன.

**** போவீ
 
மன வலிமை மிக்க மனிதனால், சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை.
***** நார்மன் வின்சென்ட் பீஸ்

 
உழைத்துக் கொண் டே இருங்கள்; அப்படி இருந்தால் உங்களிடம் வறுமை எட்டியே பார்க்காது.
***** வால்டர்

 
பேச்சில் இனிமை கொள்கையில் செறிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் உலகில் எதையும் சாதிக்கலாம்.

***** ஜேம்ஸ் ஆலன்
 
இன்று செய்ய வேண்டியதை இப்போதைய செய்யுங்கள். காரணம், நாளைக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டு செயலைத் தடுக்கக் கூடும்.

*** பெஞ்சமின் பிராங்கிளின்

 
அதிக செலவுகளையும் மனச்சுமைகளையும் உண்டாக்கும் பொருளான கோபத்தைச் செலவழிப்பதில் மிகவும் கஞ்சனாக இருங்கள்.

**** ஜார்ஜ் வில்லியம் கர்ட்ஸ்

 
நம்பிக்கை என்பது சூரியனைப் போல. அதை நோக்கி நாம் செல்ல செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னால் போய் விடும்.

*** சாமுவேல் ஸ்மைல்ஸ்

 
பிறப்பினாலும், பரம்பரையாலும் கிடைக்கும் சிறப்பை விட உயர்வானவை, உயர்ந்த ஒழுக்கமும், உத்தமமான வாழ்க்கை நெறியும் தான்.

**** சரது ஸ்திரர்
 
நல்லதை சிந்தித்தல், பேசுதல்,கேட்டல், ஆகியன மட்டும் போதாது; இவை உங்களோடு ஒவ்வொரு காரியத்திலும் மிளிர வேண்டும்.

****தாமஸ் புல்லேர்
 
உங்களுக்கு சிறப்பான ஆற்றல்கள் இருந்தால்,
உழைப்பு அந்த ஆற்றல்களை மேலும் வளர்த்தி பெ ரு க செய்யும்.

*** ஜெனோன் கே. வால்டைர்
 
முயற்சி செய்தால் எந்த வேலையையும், எளிதில் நிறைவேற்றி விடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

**** ஜான் கே
 
“In the beginner’s mind there are many possibilities, but in the expert’s there are few”
- Shunryu Suzuki, Zen mind, Beginner’s mind : informal talks on Zen meditation and practice
 
“When you catch yourself slipping into a pool of negativity, notice how it derives from nothing other than resistance to the current situation.”
- Donna Quesada, Buddha in the classroom : Zen wisdom to inspire teachers
 
Status
Not open for further replies.
Back
Top