• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

GAYATHIRI JAPAM.

kgopalan

Active member
gaayathri japam.
ஆவணி அவிட்டம் அன்று காண்ட ரிஷி தர்ப்பணம் செய்த பிறகே ஆகாரம் சாப்பிட வேண்டும். காலி வயிற்றுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
காயத்ரி ஸ்தோத்ராஸ் இடுகையில் காயத்ரி கவசம், காயத்ரி ஹ்ருதயம், காயத்ரி ஸ்தோத்ரம், காயத்ரி சாப விமோசன ஸ்தோத்ரம் உள்ளது. அதை இன்று ஒரு நாளாவது படிக்கலாமே.

காயத்ரீ ஜப சங்கல்பம். 04-08-2020


காலையில் ஸ்நானம் சந்தியா வந்தனம் ஒளபாஸனம் // சமிதாதானம் செய்து விட்டு 8-30 மணிக்கு இந்த காயதிரீ ஜபம் செய்ய வேண்டும்.


கிழக்கு பார்த்து ஆசனத்தில் அமரவும். எதிரே பஞ்ச பாத்திர உத்திரிணி (ஜலத்துடன்,) பவித்ரம். தர்ப்பை வைத்துக்கொள்ளவும்..


. ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.


ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்.


ஆசமனம்..
. ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.


கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,

ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்


.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே


ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே


((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்*ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந ப்லவங்க நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்).


செளர சாந்த்ரமானாப்யாம் சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸுபதிதெள பெளம வாஸர ஷ்ரவிஷ்டா நக்*ஷத்ர யுக்தாயாம் ஸெளபாக்கிய நாம யோக


பாலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஸுப திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம் தோஷ வஸ்து அபதனீய ப்ராயஸ் சித்தார்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ்சித்தார்தம் அஷ்டோத்ர


ஸஹஸ்ர சங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பத்தை வடக்கில் போடவும். ஜலத்தை கையால் தொடவும்


. ரிஷி என்று சொல்லும் போது தலையிலும், சந்தஸ் என்று சொல்லும் போது மூக்க்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வலது கை விரல்களால் தொடவும்.


ப்ரணவஸ்ய ரிஷி ப்ரும்ம: தேவி காயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா


பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு, குத்ச வசிஷ்ட கெளதம, காஷ்யபஆங்கீரஸ ரிஷ்ய::
காயத்ரீ உஷ்னிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்தித்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி
அக்னி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வேதேவா: தேவதா:


பத்து முறை ப்ராணாயாமம் செய்யவும்.


ஆயாது இத்யனுவாகஸ்ய வாம தேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா காயத்ரீ ஆவாஹனே விநியோக
:
ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம சம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வன: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு:
ஸர்வமஸி ஸர்வாயு:அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி, ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி..


ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ந்ருசித் காயத்ரி சந்த: ஸவிதா தேவதா ஜபே வினியோக:


காயத்ரி மந்த்ரம்: (1) ஓம் (2) பூர்புவஸ்ஸுவஹ (3) தத்ஸவிதுர்வரேண்யம் (4)பர்கோதேவஸ்ய தீமஹி (5) தியோ யோனஹ ப்ரசோதயாத்..


எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம்.


ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும்.


1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ
ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும்.


நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.


பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்..

ஜப மாலை ருத்ராக்ஷம், தாமரை கொட்டை அல்லது ஸ்படிக மணி மாலை , துளசி மணி மாலை எதுவாகவும் இருக்கலாம்.
விரலால் எண்ணி செய்வது சாலச்சிறந்தது.

ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடாது.

மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7,
ஆள் காட்டி விரல்

மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம்.
தீப்பெட்டியில் 50 தீகுச்சிகள் இருக்கும். 20 எண்ணிக்கை முடிந்தவுடன் ஒரு தீகுச்சியை நகர்த்தி வைத்துக்கொள்ளவும். 50 தீக்குச்சிகள் இவ்வாறு நகர்த்தி வைத்து முடிந்தால் 1000 எண்ணிக்கை முடிந்துவிடும். 8 எண்ணிகை செய்து முடித்து விடலாம்.
ஜப மாலையில் 50 மணிகள் இருந்தால் 20 தீக்குச்சிகள் வைத்துக்கொன்டு ஜபம் செய்து முடிக்கலாம்.
அல்லது சென்ற, மாத காலண்டர், ஷீட் இருந்தால் அதில் ஒரு தீக்குச்சி வைத்து நகர்த்திகொண்டே வரலாம்.
ஜப ஆரம்பத்தில் பூதசுத்தி , காயத்ரி ப்ராண ப்ரதிஷ்டை, ந்யாஸம், முத்ரை, காயத்ரி கவசம், காயத்ரி ஹ்ருதயம், காயத்ரி ஸ்தோத்ரம், காயத்ரி ஷாபவிமோசனம், காயத்ரி ஸஹஸ்ர நாமம்.

முதலியவைகளை நித்ய காயத்ரி ஜபத்தில் செய்ய வேண்டும். காயத்ரி ஜபம் 04-08-2020 இன்றாவது இவைகளை செய்யவும்.

பூதஸுத்தி: குருப்யோ நம: என்று கூறி அஞ்சலி செய்து கணபதயே நம: ; ஸரஸ்வத்யை நம: என்று கூறி வலது தோளிலும் துர்க்காயை நம; க்ஷேத்ர பாலாயை நம: என்று இடது தோளிலும் அஞ்சலியை வைத்து பூதஸுத்தி செய்ய வேண்டும்.

தர்மமே கிழங்கு, க்ஞானமே தண்டு, வைராக்யமே மொட்டு.இத்தகைய ஹ்ருதய தாமரை மொக்கை ப்ரணவத்தால் மலர்த்துவதாக த்யானம் செய்து, இடையிலுள்ள சைதன்ய வடிவான ஜீவனை உரக்க ப்ரணவத்தை கூறி

எழுப்பி ஸுஷும்னா நாடி வழியாக த்வாதசாந்தமென்னும் சிரஸிலுள்ள ஸஹஸ்ரதள கமலத்திலுள்ள பரமாத்மாவுடன் – ஹம்ஸ: -என்ற மந்திரத்தை கூறி ஒன்றாக சேர்க்க வேண்டும்.

பிறகு தன் உடலிலுள்ள பாபத்தை புருஷனாக கருதி அதை உலர்த்தி கொளுத்தி நனைக்க வேண்டும்.

அந்த பாப புருஷனுக்கு ப்ரஹ்மஹத்தியே தலை. ஸ்வர்ணத்தை திருடுவதே இரு புஜங்கள்.. கள் குடித்தலே ஹ்ருதயம். குரு மனைவியை புணர்வதே இடுப்பு. இந்த நாண்கு பாவிகளுடன் சேருவது என்பதே இரு கால்கள்.

ப்ரும்ம ஹத்யா ஸம பாதகங்கள் மற்ற உருவங்கள். உப பாதகங்கள் ரோமங்கள். தாடி. மீசை. கத்தி கேடயம், முதலியவைகளை தரித்திருக்கும் பாப புருஷன் தனது வயிற்றிலிருப்பதாக நினைத்து

நாபியில் ஆறு கோண சக்ரத்திலுள்ள –யம் – என்ற வாயு பீஜத்தால் அவனை உலர்த்தி ஹ்ருதயத்தில் முக்கோணதிலுள்ள –ரம்- என்ற அக்னி பீஜத்தால் அவனை கொளுத்தி ,
அந்த சாம்பலை வலது மூக்கால் அப்புறபடுத்தி , ஹ்ருதயத்தில் பாதி சந்த்ரன் போலிருக்கும் அம்ருத மண்டலத்திலுருக்கும் –
வம்- என்ற பீஜத்தால் அம்ருத தாரையை உண்டுபண்ணி அதனால் தன் உடலை நனைத்து சுத்தமாக்கி

த்வாதசாந்ததிலுள்ள பரமாத்மாவை சுஷும்னா நாடி வழியாக ஹ்ருதய கமலத்தில் –ஓம் ஸோஹம்- என்று நிறுத்த வேண்டும். இதே பூத சுத்தியாகும்.

இதன் பிறகு காயத்ரியை ஆவாஹனம் செய்து மாத்ருகா நியாஸம் செய்ய வேண்டும்.
பிறகு 24 முத்திரைகளை காட்டி , த்யானம் செய்ய வேண்டும்.

பின்னர் காயத்ரி அக்ஷர ந்யாஸம், ,பத ந்யாசம், பாத ந்யாஸம், செய்யும் போது ஒவ்வோரு அக்ஷரதிற்குள்ள ரிஷி, சந்தஸ், தேவதை முதலியவைகளை மனதால் நினைக்க வேண்டும்.

முத்ரைகளை காட்டிய பின் காயத்ரி சாப விமோசனம் என்ற மந்திரங்கள் கூற வேண்டும்.

1.ரிஷி: ஒரு மந்திரத்தை தனது தவ வலிமையால் கண்டு அறிந்தவர் மற்றும் அதன் பயனை அறிந்தவர்., அனுபவித்தவர் ரிஷி என படுவார்.
ரிஷியின் ஸ்தானம் சிரஸ். ஆதலால் ரிஷி என்று கூறும் போது தலையில் கை வைக்க வேண்டும்.

2. சந்தஸ்: என்பது அந்த மந்திரத்தின் அமைப்புஆகும். அது உச்சரிக்கப்படும் வாய் அதன் ஸ்தானம். எச்சிலாக கூடாது என்று மேல் உதட்டில் அல்லது மூக்கின் பேரில் சந்தஸ் என்று கூறி கை வைக்க வேண்டும்.

3. தேவதை: அந்த மந்திரத்தினால் கூறப்படும் தேவதை நமது ஹ்ருதய கமலத்தில் இருப்பதால் தேவதை என்று கூறி மார்பில் கை வைக்கிறோம்.

ஒரே காயத்ரி மந்திரத்திற்கு ப்ராணாயாமத்தில் வரும் போது காயத்ரி சந்தஸ் என்றும் , காயத்ரி ஜபத்தில் ந்ருசித் காயத்ரி சந்தஸ் என்றும் , பொருளிலும் சிறிது மாறுதல் ஏற்படுகிறது.

காயத்ரி ஜப கர ந்யாஸம்.:
ஓம் தத்ஸவிது: ப்ருஹ்மாத்மனே அங்குஷ்டாப்யாம் நம:
வரேண்யம் விஷ்ணுவாத்மனே தர்ஜனீப்யாம் நம:
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே மத்யமாப்யாம் நம:

தீமஹி ஸத்யாத்மனே அநாமிகாப்யாம் நம;
தியோயோன: க்ஞானாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம;
ப்ரசோதயாத் ஸர்வாத்மனே கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம;

அங்க ந்யாஸம்;

ஓம் தத்ஸவிது: ப்ருஹ்மாத்மனே ஹ்ருதயாயை நம;
வரேண்யம் விஷ்ண்வாத்மனே சிரஸே ஸ்வாஹா
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே சிகாயை வஷட்

தீமஹி ஸத்யாத்மனே கவசாய ஹூம்
தியோ யோந; க்ஞானாத்மனே நேத்ர த்ரயாய வெளஷட்
ப்ரசோதயாத் சர்வாத்மனே அஸ்த்ராய பட்

பூர்புவஸுவரோம் இதி திக் பந்த: என்று சொல்லி நம்மை சுற்றி ப்ரதக்ஷிணமாக கட்டை விரல் நடு விரல்களால் சப்தம் செய்ய வேண்டும்.


போதாயன மஹரிஷி கூறுகிறார்: ஸந்த்யை என்பது உலகை படைத்தது. மாயையை கடந்தது. நிஷ்கலமானது. ஈஸ்வரியானது. கேவல சக்தியானது. மும்மூர்த்திகளிடமிருந்து உண்டானது.

அந்த ஒரே பராசக்தியானது மூன்று வேளைகளிலும் மூன்று தனி ரூபத்துடன் விளங்குகிறது. தனி பெயர், தனி வர்ணம், தனி வாஹனம் இவைகளால் வேறுபட்டது போலிருக்கிறது.

அந்தந்த காலத்தில் அந்தந்த ரூபிணியாக த்யானம் செய்து ஒவ்வொரு வேளையிலும் ஏக ரூபமாய் இருப்பதாகவும் த்யானம் செய்ய வேண்டும்.
இதற்குத்தான் ஸந்த்யை என்று பெயர்.

காலை ஜபத்தில் ஸூர்ய மண்டலதினிடையே சிவந்த வர்ண முள்ளவளாய், குமாரியாய் ரஜோ குணம் உள்ளவளாய் ஹம்ஸ வாஹனத்தில் ப்ருஹ்ம
ஸ்வரூபிணீயாய் ( ஸரஸ்வதி) ரிக் வேத ரூபிணியாய் அபய முத்ரை, கமண்டலு , தாமரைபூ, ஜபமாலை, ஸ்ருவம் இவைகளை தரித்து இருப்பவளாய் காயத்ரியாக த்யானம் செய்ய வேண்டும்.

மத்யானத்தில் ஸுர்ய மண்டலத்தில் வெண்மை நிறம், தமோ குணம், கட்டில்கால், அபய முத்ரை, சூலம், ருத்ராக்ஷ மாலை, இந்த ஆயுதங்களை தரித்து (உமை) யெளவன முள்ளவளாகவும் ,
வ்ருஷப வாஹனத்தி லிருப்பவளாகவும் மூண்று கண் உள்ளவளாகவும் , யஜுர் வேதமாகவும், ருத்ர ரூபிணீயாகவும் ஸாவித்ரீ என்ற பெயரில் த்யானம் செய்ய வேண்டும்.

ஸாயங்காலத்தில் ஸூர்யமண்டலத்தில் ஸரஸ்வதி என்ற பெயர். கறுத்த வர்ணம், கிழ சரீரம், கருட வாஹணம், சங்கு, சக்ர, அபய, துலஸீ மாலை,
க்ஞான ஸ்வரூபம்,ஸத்வ குணம், சாம வேதம், இவைகள் உள்ள விஷ்ணு (லக்ஷ்மி) ஸ்வரூபமாய் த்யானம் செய்ய வேண்டும்.

இந்த மூன்று காலங்களில் கூறப்பட்டவை ஸ்தூலம். இது ஸூக்ஷ்மம் தனிதனியாக இருப்பது வ்யஷ்டி; எல்லாம் சேர்ந்த போது ஸமஷ்டி எனப்படும்..

ஸமஷ்டி ரூப காயத்ரி த்யானம்:
முத்து. பவழம், ஸ்வணம், கருப்பு, வெளுப்பு, ஆகிய வர்ணங்களுடைய ஐந்து முகமுள்ளவளும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உடையவளும், சந்த்ர கலையை தலையில் அணிந்தவளும், ,

தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமானவளும்,வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பு கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை இவைகளை கைகளில் ஏந்தியவளுமான காயத்ரியை பஜிக்கிறேன்.

காயத்ரியின் பொருள் பரமாத்மாவே. இது எங்கும் உளது. சத்சித் ஆனந்த ரூபமானது .
உருவும் பெயரும் இல்லாதது. வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதது. சிற்றறிவால் அறிய முடியாதது. சிறிய மனதால் த்யானம் செய்ய முடியாதது.

ஆதலால். முதலில் ஸூர்யனையும் ஸூர்ய மண்டலத்தில் காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி ஸமஷ்டி காயத்ரி என்று பல வாறாக த்யானம் செய்யும் படி கூறபட்டது.

ஒன்றயே நித்யம் மூன்று வேளையும் த்யானம் செய்தால் அது மனதில் தங்கி விடும். ஒன்று ஒன்றாக த்யானம் செய்து பழகினால் , ஒன்றில் நிலைக்காமல் த்யான சக்தி வ்ருத்தியாகும்.

நாள் ஆக ஆக இந்த உருவங்களையும் விட்டு விட்டால் மனம் ஒன்றையும் நினையாமல் அசைவற்று இருக்கும்..
மநோ வ்ருத்திகள் ஒழிந்தால் தான் க்ஞானம் நிலைக்கும். முக்தி உண்டாகும். ஆதலால் ஸந்தியாவந்தன கர்மா படிபடியாக மோக்ஷ ஸாதனமாகும்.

ஸந்த்யை என்பது ப்ருஹ்மா, விஷ்ணு, ருத்ரர்களை விட, ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை விட மேலான சிறந்த துரிய சக்தி.
நமது சித்த பரிபாகத்திற்கு ஏற்றப்படி இவ்விதம் ஸூர்ய மண்டலத்தில் மூன்று மூர்த்திகளாக த்யானம் செய்யும் படி கூறப்பட்டது.

பஞ்ச பூஜை:

லம் ப்ருத்வ்யாத்மனே கந்தாம் தாரயாமி.
அம். ஆகாசாத்மனே புஷ்பாணி பூஜயாமி.
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி.

ரம் வஹ்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
வம் அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி.
ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்பயாமி.



காயத்ரீ அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ், தேவதை, சக்தி முதலிய விவரம்.உண்டு.

மூன்று வேதங்களின் சாரம் மூன்று வரிகளில் ஸாவித்திரி மந்த்ரம்.
இத்துடன் ப்ரணவமும் வ்யாஹ்ருதியும் சேர்த்து விச்வாமித்ரர் காயத்ரீ மந்த்ரமாக கன்டுபிடித்தார்.

துரீய காயத்ரி எனும் ‘பரோரஜஸே சாவதோம்” எனும் மந்திரத்தையும் சேர்த்து முற்காலத்தில் சொல்லி வந்தார்கள்.

ப்ருஹ்ம புராணம் கூறுகிறது. மூல ப்ருமம் தன் நாபியிலிருந்து ப்ருஹ்மாவை தோற்று வித்தார். பிரம்மாவிற்கு ப்ரணவ ஒலி கேட்டது.
அந்த ஒலியை கேட்ட பிறகு ப்ருஹ்மாவின் நான்கு முகங்களிருந்து 24 எழுத்துக்கள் தோன்றின. அந்த 24 எழுத்துக்களும் பீஜாக்ஷரங்கள் எனப்படும்.
அதுவே காயத்ரி மஹா மந்திரம் எனப்படும். அதன் பிறகு ப்ருஹ்மாவின் முகத்திலிருந்து நான்கு வேதங்கள் தோன்றின. எனவே காயத்ரி மந்திரம் வேதங்களுக்கு தாய் ஆகும்.
தலை ஆவணி அவிட்டத்திற்கு தேவையான சாமான்கள் மற்றும் காயத்ரி ஹோமத்திற்கு தேவையான சாமான்கள்.

மஞ்சள் தூள். 100 கிராம்.; குங்குமம் 10 கிராம்.; சந்தனம் 10 கிராம். மஞ்சள் கிழங்கு 50 கிராம்.; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; பூவன் வாழைப்பழம். 10;

புஷ்பம் தொடுத்தது 4 முழம்.; உதிரி புஷ்பம், துளசி 200 கிராம்; ஊதுபத்தி 10 குச்சி.; கற்பூரம் 20 கிராம்; மஞ்சள் அக்ஷதை 25 கிராம்; ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரப்பொடி 5 கிராம்; வாழை நுனி இலை 4; கோதுமை ஒரு கிலோ;.

பச்சரிசி 1 கிலோ. நெய் 500 கிராம்; தேங்காய் 2; பஞ்ச பாத்திர உத்திரிணி;.; சொம்பு—2; கும்ப வஸ்திரம் 3 முழ துண்டு ஒன்று. ஹோமம் பண்ண கிண்ணம் -6; குத்து
விளக்கு 2; இதற்கு நல்ல எண்ணெய்; திரி. தீப்பெட்டி; விராட்டி 10; சுள்ளி ஒரு கிலோ; ;பலகை

அல்லது தடுக்கு 2; செங்கல்10; மணல் 2 கிலோ; அல்லது ஹோம குண்டம்; ஹாரத்தி கரைசல்; நாந்தி 10 பேருக்கு அனுக்ஞை; வாத்யார் சம்பாவனை; அரச மர குச்சி அல்லது புரச மர குச்சி 1200;;

அப்பம்; சுண்டல் நைவேத்யத்திற்கு.;பால் 500 மில்லி;

யஜுர் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை: 1. ஸ்நானம்; ஸந்தியா வந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிக்கு; 3. சமிதாதானம் ப்ருஹ்மசாரிக்கு;ஒளபாசனம் கிருஹஸ்தர்களுக்கு; 4.காமோகாரிஷீத் மந்த்ர

ஜபம்(( முதல் வருட பையனுக்கு கிடையாது)5. மாத்யானிகம்; ப்ருஹ்ம யஞ்யம்; 6. ஸ்நானத்துக்கு மஹா ஸங்கல்பம்; 7. முறையாக ஸ்நானம் செய்தல்; 8. புதிய பூணூல் போட்டு கொள்ளூதல்; 9. காண்டரிஷி தர்பணம்.

10.வேத வ்யாஸ காண்டரிஷி பூஜை 11.உபாகர்மா ஹோமம் ;12. அனுக்ஞை நாந்தீ ச்ராத்தம் முதல் வருட பையனுக்கு; 14. வேதராம்பம், வேத அத்யயனம் நமஸ்கரித்து ஆசி பெறுதல்.

ருக் வேதிகளுக்கு சாகாதீசனான குரு பகவான் மெளட்யத்திற்கு பிறகு 15 நாள் பால்யாவஸ்தையில் இருப்பதால் ருக் உபாகர்மா செய்ய கூடாது என்று உள்ளதால் “”அஸிம்மார்க்கே ப்ரெளஷ்ட்ரபத்யம் ச்ரவணே

வ்யவஸ்தயா என்று சொல்ல பட்டதால் பாத்ர பத சிரவணத்தில் செய்யும் படி சொல்லி உள்ளதால் உதய காலத்திலிருந்து 2 நாழிகை முழுமையாக

உள்ள ச்ரவண நக்ஷத்திரத்தில் செய்யும் படி உள்ளதாக ருக் உபாகர்மா அநுஷ்டிக்க வேண்டும்.

ரிக் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை.

1. ஸ்நானம் ஸந்தியாவந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிகளுக்கு; 3. ஸமிதாதானம் ப்ருஹ்மசாரிகளுக்கு. ஒளபாஸனம் கிரஹஸ்தர்களுக்கு.
4. மாத்யானிகம், ப்ருஹ்மயக்ஞம். 5. உத்ஸர்ஜனம், புண்யாஹ வசனம்;

6. மஹா ஸங்கல்பம், அவப்ருத ஸ்நானம்; 7. தேவ ரிஷி பித்ரு தர்பணம். 8. உபக்ரம ஹோமம். 9. யக்ஞோப வீத ஹோமம். 10. தயிர், ஸத்து மாவு ப்ராசனம்

.11. புதிய பூணல் அணிதல். 12. அனுக்ஞை நாந்தி சிராத்தம் முதல் வருட பையனுக்கு.13. வேதாரம்பம், வேதாத்யயனம் 14. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.

ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம். ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:

என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் பூணல் முழங்கைக்கு மேல் போகாமல் இருக்குமாறு இடம் போட்டுக்கொண்டு தர்பணம் செய்ய வேண்டும் தந்தை இல்லாத எல்லோரும் முழுமையாக பூணலை இடம் போட்டுக்கொள்ளலாம்..
 

Latest ads

Back
Top