Garuda Bhagavan Thuthi

ஸ்ரீ கருட பகவான் துதி
***************************************************
"ௐ ௐ ௐ உத்கீதம் ஓஃம் நமோ பகவதே

ஸ்ரீ மஹாகருடாய பக்ஷீந்த்ராய த்ரைலோக்ய பரிபூஜிதாய

விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் ஷேமம் குரு ஸதா மம

“ஆதவ அனுமார் ஆழி மதிவிடை மாதவஜோதி

ஐந்தவர் சக்தி கூடம் ஆகவே கருடக் காப்பு”

விளக்கவுரை ;
------------------------------------------------------------------------------------
உத்கீதம் என்றால் ஓம் எனும் பிரணவம்

கருடனின் இறக்கைகளில் எப்போதும் ஓஃங்கார பீஜங்கள் தவனித்துக் கொண்டே இருப்பதால், உத்கீத பக்ஷீராஜா என்ற பெயர் கருட மூர்த்திக்கு உண்டு.

கருட வழிபாடு
------------------------------------------------------------------------------------
தினமும் குரு ஹோரை நேரத்தில் முக்கியமாய் கருட சக்தி தினமான வியாழக்கிழமை தோறும் விஷால் கருட கற்சூரத் துதியை, ஸ்ரீ கருட காயத்ரீ மந்திரத்துடன் சேர்த்து 108, 1008, 10008 முறை குருவருளுடன் ஓதி கருட மூர்த்தியை வணங்கி வர வேண்டும்

இஃதோடு வானில் கருடனின் தரிசனத்தையும் பெற்றிட மனசுத்தி, அறிவு மேன்மை, உத்தம நோய் நிவாரணியாய்ப் பலனளிக்கும்

வேள்வியிலும், கருட தரிசனத்தின் போதும் விமானப் பயணத்தை மேற்கொள்கையிலும் இம்மந்திரத்தை ஓதுதல் சிறப்பாய்ப் பயனாகிக் காக்கும்.

நிதமும் ஓதி வந்தால் நல்ல ஞாபக சக்தி உண்டாகும். தீய வழக்கங்கள் அண்டாத வகையில் நல்ல காப்பு ரட்சா சக்தியும் கிட்டும்,

கருடபகவான்
------------------------------------------------------------------------------------
அமிர்தம் பாற்கடலில் கிட்டிய போது, மஹாவிஷ்ணுவின் வாகனமான கருட மூர்த்தி, உலக ஜீவன்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டிய அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் சுயநலமாய் சுருட்டிட முயற்சி செய்கின்றார்களே என்று வருந்தி அமிர்தக் குடத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்தார். அனைத்துமே இறை லீலையால் நிகழ்வதாய் தன் பணியைத் தொடர்ந்தார்.

கருட மூர்த்தி எடுத்துச் சென்ற அமிர்தக் கும்பத்தில் இருந்து அமிர்தத் திவலைகள் வீழ்ந்த புண்யநதித் தலங்கள் நாசிக், உஜ்ஜயினி, ஹரித்வார், பிரயாகை (அலகாபாத்) ஆகிய நான்குமாம்.

அமிர்தச் சாரத்தின் காரணமாய் இந்நான்கு புனித ஆற்றுத் தலங்களிலும் அந்தந்த தலத்தின் புனித நதியில் அமிர்தம் கலந்த காலத்தை ஓட்டி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்கின்றது.

பூலோகத்தின் எலா ஜீவன்களுக்குமே அமிர்தப் பிரசாதம் கிட்டிடுவதற்கு கருட மூர்த்தியின் சேவை துணை ஆயிற்று.

முழு அமிர்தக் கலசமே தன்னிடம் இருந்த போதும் அமிர்தத்தை அருந்திடும் சுயநலமான எண்ணம் ஒருபோதும் கருடாழ்வாரிடம் தோன்றவில்லை.

இதனால் ஆனந்தித்த மஹாவிஷ்ணு, அமிர்தத்தை அருந்தினால் மட்டுமே கிட்டும் அத்தனைக் கோடி ஒளஷத, ஆத்ம சக்திகளையும் தாமே ஆனந்தித்து கருட மூர்த்திக்கு அளித்திட...

இதில் உற்பவித்தவரே அமிர்தகலச ஆனந்த கருடமூர்த்தி

இதற்கு நன்றி செலுத்தும் முகமாகவும், வானில் கருடனைக் கண்டால், நாம் தரிசிக்கும் போதெல்லாம் வலது மோதிர விரலால் கன்னத்தில் தட்டி குறித்த மந்திரங்களை ஓதி அனைத்து ஜீவன்களின் சார்பாகவும் கருடனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
 
Back
Top