enjoying the happiness without break

Status
Not open for further replies.

shridisai

You Are That!
attachment.php


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய


கோடியுண் டாயினும் இல் - குறள் 1005




பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு

மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன்

இல்லை என்பது இக்குறளின் பொதுப்பொருள்

.

சுகத்திலிருந்து ஸ்ரத்தை உண்டாகின்றது என்பது உபநிஷத் வாக்கு.

இதில் வள்ளுவர் குறிப்பிடும் இன்பம் என்பது பொதுவான,இயல்பான,

தெய்வத்தன்மை கொண்ட குணமாகும்.இவ் இன்பத்தை துய்க்காத

(மாறுபட்ட அளவு முறையில் ) உயிர்கள் இப்பூவுலகில் இருக்கவே இருக்காது.

சத்வம் மற்றும் ரஜோ குணம் உடையவர்களை இவ் இன்பமானது,

அவர்கள் புரியும் நற்செயல்கள் மூலமாகவே அவர்களை சென்றடையும்.

உ.ம் 1 .ஒருவரின் உணவுப் பசியினை ஒருவர் ஆற்றும் தருணத்தில்

பசியாறுபவர் மற்றும் பசியாற்றுபவர் என்ற இவ் இருவராலும்
இன்பமானது துய்க்கப்படும்

2. அவ்வாறே மண்ணையோ,பொன்னையோ அல்லது பொருளையோ,

இல்லாதவருக்கு இருப்பவர் வழங்கும் தருணத்திலும்,

3.ஒருவரின் அறிவுப் பசியினை ஒருவர் ஆற்றும் தருணத்திலும்,
4. நல்விருதோம்பும் தருணங்களிலும்

5. உடல் உழைப்பு ,உறுப்புக்கள் தானம்,தக்க சமயத்தில் பேராபத்துக்களில்

இருந்து கைகொடுத்து உதவுதல் ஆகிய இத்தருணங்களில் இன்பமானது

அச்செயல்களுக்கு உரிய அளவோடு உரித்தானவர்களை சென்றடையும்
எனவேதான் இதன் சூஷ்மத்தை புரிந்து கொண்ட ஞானிகள் தன்னையே

முழுவதுமாக இவ்வுலகிற்கு அர்ப்பணித்ததின் காரணம், ஆனந்தம்

அளவற்ற பேரானந்தமாக இன்றளவும் அவர்களால் இடைவிடாது

துய்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் இத்தகைய மகான்களின்

சந்நிதானத்திற்கு செல்பவர்கள் எவராயினும் அவர்களுக்கும் இத்தகைய

அனுபவம் கிட்டிக் கொண்டிருப்பதே சாட்சியாகும்.




அ ஃதின்றி தமோ குணத்தை விரும்புபவர்கள் அனேக செல்வம்
கிட்டியிருந்தும்
மேற்கூறிய தகுதியில் வாழ முற்சிக்காமல்,

துவக்கத்திலேயே மயக்கத்தை தரவல்ல போதை வஸ்துக்கள் தரும்
அற்ப சுகத்திலும்,அதற்கும் கீழான தகுதியில்,மற்றவர்கள் படும்
துன்பத்தை காண்பதால் கிடைக்கப்பெறும் அற்பத்திலும் அற்பமான
சுகத்திலுமே தங்கள் வாழ்நாளை வீணே போக்கிக்கொண்டு,அதன்

மூலம் அவர்களை அண்டியிருந்த செல்வத்தையும் செல்லரிக்கச்

செய்துவிடுவார்கள் என்னும் பொருள்படவே இக்குறளை வள்ளுவர்
பெருந்தகை நமக்கு வழங்கியுள்ளர்கள்.

Sairam
 

Attachments

  • valluvar_50.gif
    valluvar_50.gif
    12.8 KB · Views: 231
Status
Not open for further replies.
Back
Top