• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Doordarshan - Podhigai - Spreading Christianity

Status
Not open for further replies.
கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!

pothigai.jpg
கிறுத்துவமயமாக்குதல் – சிறிய பின்னணி
உலகம் முழுவதையும் கிறுத்துவமயமாக்குவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, உலகெங்கும் உள்ள கிறுத்துவமல்லாத நாடுகளைக் குறி வைத்துத் தன் அரசியல் பலத்தையும் பணபலத்தையும் பெருமளவில் முதலீடு செய்து ஆன்மாக்களை அறுவடை செய்வது கிறுத்துவ மத நிறுவனங்களுக்குக் கைவந்த கலை. ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்த பழங்குடியினரை அழித்து அவர்கள் கலாசாரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து அவ்விடத்தில் சிலுவைகளை நட்டுத் தங்களின் கிறுத்துவ கலாசாரத்தை ஸ்தாபித்து அந்த தேசங்களைக் கிறுத்துவ தேசங்களாக மாற்றியவர்கள் கிறுத்துவர்கள். ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்குள்ள பூர்வபழங்குடியினரை அழித்தொழித்து அந்நாட்டைக் கிறுத்துவ நாடாகப் பிரகடனப்படுத்துதல் ஒரு வழி; வியாபரம், மனித சேவை போன்ற பெயர்களில் ஒரு நாட்டிற்குள் நுழைந்து பின்னர் பல துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்துத் தங்கள் அரசியல் நோக்கங்களைச் சாதித்துக்கொண்டு அந்நாட்டைக் கிறுத்துவ மயமாக்குவது இரண்டாவது வழி.
பாரதத்தைப் பொருத்தவரை, போர்ச்சுகீசிய படையெடுப்பில் ஆரம்பித்த கிறுத்துவ தாக்குதல், பிரெஞ்சுக்காரர்களுடனும் டச்சுக்காரர்களுடனும் உள்ளே நுழைந்து கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. மலைப்பிரதேசங்களையும், கடலோரங்களையும் கைப்பற்றிய கிறுத்துவர்கள், உள்பிரதேசங்களிலும் கல்விச்சேவை, மருத்துவச்சேவை என்கிற போர்வையில் பெருமளவு நிலங்களைக் கைப்பற்றினர். பல ஆண்டுகள் போராடி சுதந்திரம் அடைந்த பின்னரும் கிறுத்துவ மத நிறுவனங்களை விரட்டி அடிக்காமல் அவர்களை இங்கு தொடர்ந்து இருக்கச் செய்தது நம் தலைவர்கள் செய்த மாபெரும் தவறாகும். அரசியல் சாஸனத்தில் அவர்களுக்குச் சலுகைகள் அள்ளித்தந்தது அடுத்த பெரும் தவறு. ஆங்கிலேயரின் கல்வித் திட்டத்தையே தொடர்ந்து கொண்டிருப்பது மற்றுமொறு முட்டாள்தனம். இவற்றின் பலன் பாரதத்தில் பல துறைகளும் இன்று கிறுத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆட்சியும் கூடத்தான்!
கிறுத்துவமயமாக்கப்பட்ட ஊடகங்கள்
ஊடகங்களைப் பொருத்தவரை அவை என்றோ கிறுத்துவமயமாக்கப் பட்டுவிட்டன. பத்திரிகைத்துறை கிறுத்துவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது என்றால் அது மிகையல்ல. பத்திரிகைத் துறைக்குத் தேவையான கல்வியும், பாடத்திட்டங்களும் (Journalism, Media Management, Electronics & Visual Communication போன்றவை) கிறுத்துவ கல்லூரிகளில்தான் இருக்கின்றன. எனவே அங்கு பயிலும் ஹிந்து மாணவர்கள் கூட, மதச்சார்பின்மை என்கிற போதை மருந்து கொடுத்தே பயிற்சி அளிக்கப் படுவதால், தங்களை “செக்யூலரிஸ்டுகள்” என்று சொல்லிக்கொண்டு நாளடைவில் ஹிந்துத் துவேஷிகளாக மாறிவிடுகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களும் இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் மௌடீக ஹிந்துக்களும் அதிக அளவில் வேலைபார்க்கும் நிறுவனங்களாகவோ இருக்கின்றன. எனவே அவை அனைத்தும், இந்த தேசத்தின் ஹிந்துத் தன்மையை முழுவதுமாக அழித்து, கிறுத்துவ கலாசாரத்தை இந்நாட்டில் நுழைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.

இந்திய ஊடகங்களில் தற்போதைய நிலைமை
இன்றைய ஊடகங்கள், ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் விதமாகவும், ஹிந்து ஆன்மீகப் பாரம்பரியத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், ஹிந்து கலாசரத்தைக் கொச்சை படுத்தும் விதமாகவும், ஹிந்து மத சம்பிரதாயங்களைக் கிண்டல் செய்யும் விதமாகவும், பல நிகழ்ச்சிகளை ஒலி/ஒளி பரப்பியும், பல கட்டுரைகளையும் செய்திகளையும் பிரசுரித்தும், இன்றைய இளைய தலைமுறையினர் மனங்களில் ஹிந்து மதத்தைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
தனியார் ஊடகங்கள்தான் இவ்வாறு இருக்கின்றன என்றால் அரசு நிறுவனங்கள் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இயங்குகின்றன. ஆகாஷவாணியும் தூர்தர்ஷனும் இன்று கிறுத்துவமயமாக ஆகிக்கொண்டு வருகின்றன. இந்த அரசு நிறுவனங்களிலும், மற்றும் பிரஸ்ஸார் பாரதி அமைப்பிலும் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை உள்ளவர்களாகவும், கிறுத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் போலி மதச்சார்பின்மைவாதிகளாகவும் இருக்கின்றனர்.
தற்போது ‘பொதிகை’ என்று அழைக்கப்பட்டு வரும் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒரு பரிபூரண கிறுத்துவ நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது என்றால் அது மிகையாகாது.
கிறுத்துவப் ‘பொதிகை’
”பொதிகை” என்று அழைக்கப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் பல பெயர்களில் கிறுத்துவ மதப்பிரசாரம் நடந்துகொண்டிருக்கின்றது. சந்தோஷமான வாழ்க்கை (Happy Living), வாழ்க்கையில் வெற்றி பெறுவது (Success in Life), வாழ்க்கையில் முன்னேறுவது (Progress in Life), தனிப்பட்ட சிறப்பு குணநலன்களைப் பெறுக்கிக் கொள்வது (Personality Development), என்கிற போர்வையில் வெறும் கிறுத்துவ மதப் பிரசாரம் அப்பட்டமாய் நடந்து கொண்டிருக்கிறது பொதிகையில். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ஏதோ மனிதவள மேம்பாட்டுக்காக என்று நினைத்தால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிகழ்ச்சிகளில் தோன்றி நடத்துபவர்கள் மெத்தப் படித்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அல்ல; அவர்கள் வெறும் பங்குத் தந்தைகளும், பாஸ்டர்களும், எவாங்கலிஸ்டுகளும்தான்! இவர்கள் மனிதவளம் மேம்படுத்தும் போர்வையில் மனித மனங்களை அறுவடை செய்கின்றார்கள்.
விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களெல்லாம் (Slots for Sponsored Programs) கிறுத்துவ மதப்பிரசார நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதற்கு, சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பதவிகளில் பணிபுரிபவர்களே மறைமுகமாக உதவி செய்வதாகத் தெரிகிறது. அவர்கள் “நிலையத்தின் நிதி வருவாய் பெருகும்” என்று சொல்லி நிலைய இயக்குனரை நம்பச் செய்வதாகவும் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணமாகப் பெறும்போது பொதிகையில் குறைந்த செலவு மட்டுமே ஆவதால் இந்தக் கிறுத்துவ நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் அதிக அறுவடையும் நிறைய மகசூலும் கிடைக்கிறது. கிறுத்துவத்தின் அனைத்துப் பிரிவனருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் சேர்ந்து அறுவடை செய்யச் செய்ய மகத்தான மகசூல் பெறுகிறார்கள்.

‘பொதிகை’ பொழியும் கிறுத்துவ மழை
பொதிகையில் எத்தனை விதமான கிறுத்துவ மதப்பிரசார நிகழ்ச்சிகள் வருகின்றது என்று பார்ப்போம்:
காலை 5.30 – “விக்டரி டுடே” (Victory Today-தினமும்)
காலை 8.30 – “சந்தோஷமாய் வாழ” (தினமும்)
காலை 9.30 – “வாருங்கள் முன்னேறலாம்” (திங்கள், புதன், வெள்ளி)
மாலை 9.00 – “நீடூழி வாழ்க” (தினமும்)
மாலை 10.30 – “வெற்றியும் வாழ்வும்” (தினமும்)
ஞாயிறு காலை 10.30 – “ஆராதனை உமக்கே”
காலை 8.15 – “வரலாற்றில் வாழ்வோர்” (சனி மற்றும் ஞாயிறு) – ஜாய்ஸ் மேயெர்ஸ் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற எவாங்கலிக்கர் நடத்தும் இந்நிகழ்ச்சி, தமிழ் மட்டுமல்லாமல் பஞ்சாபி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பஞ்சாப் மற்றும் ஆந்திர ஆகாஷவாணி, தூர்தர்ஷன் நிலையங்களிலும் ஒலி/ஒளி பரப்ப படுகிறது.
மாலை 10.10 – “புனிதத்தை நோக்கியே” – சர்ச்சில் நடக்கும் ஞாயிறு தொழுகையின் படப்பிடிப்பு.
பொதிகையின் ஒளிபரப்பு நேரம் காலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கு முடிவடைகிறது. இரவு 11 மணியிலிருந்து காலை 5.30 மணி வரை காண்பிக்கப்படுவது மறு ஒளிபரப்பு தான்.
“வந்தேமாதரம்” நீக்கல்; “தேவ மந்திரம்” நுழைத்தல்
இதில் மிகவும் முக்கியமான, நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய, விஷயம் என்னவென்றால், தினமும் காலை 5.30 மணிக்கு இசைக்கப்படவேண்டிய “வந்தேமாதரம்” பாடல், கிறுத்துவ நிகழ்ச்சிக்காக வேண்டி, சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கே தேசபக்திக்கு இடமில்லை. தேவன் பக்தியைவிட தேசபக்தி முக்கியமா என்ன? அதாவது பொதிகையானது விடியும்போது தேவனின் ஆசீர்வாதத்துடன் விடியவேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், பொதிகையின் நேயர்களும் ‘பாவிகளே’ என்ற மொழியைக் கேட்டுத் தான் விழிக்க வேண்டும் அல்லது ‘பாவிகளை’ மன்னிக்கும் ஏசுவின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். ஏனென்றால் பொதிகையின் நேயர்கள் அனைவரும் பாவிகள் அல்லவா!
தற்போது பள்ளிகளில் தேர்வுக்காலம் ஆதலால் தினமும் காலை 5 மணிக்கு “காண்போம் கற்போம்” நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. ஆயினும் 5 மணிக்கு அந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் கூட வந்தேமாதரம் இசைக்கப்படுவதில்லை. பின்னர் மீண்டும் 5.30 மணிக்கு எவாங்கலிஸ்ட் வந்துவிடுகிறார். அனைத்து தூர்தர்ஷன் நிலையங்களும் காலை 5.30 மணிக்கு வந்தேமாதரம் தேசியப் பாடலுடன் துவங்கபடவேண்டும். ஆனால் சென்னை தொலைக்காட்சி நிலையம் மட்டும் தேவ மந்திரத்துடன் துவங்கும். இந்த அநியாயத்தைத் தமிழர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் திராவிட மாயையில் தேசபக்தியைத் தொலைத்துவிட்டனர்!
கிறுத்துவப் பொதிகையின் பாதிப்பு
nagpur_christian_conversion-202x299.jpg
பொய்கை கிறுத்துவமயமாக்கப்பட்டதன் விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாதிப்புகள் என்னமாதிரியானவை என்று பார்ப்போம்:
கிறுத்துவ மதப்பிரசாரத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைக்கிறது. அரசாங்கமே கிறுத்துவ மதத்தை ஆதரிப்பதாக மதப்பிரசாரகர்கள் மக்களிடையே பிரசாரம் செய்து அப்பாவி மக்களை ஏமாற்ற ஏதுவாக இருக்கிறது.
வாழ்க்கையில் முன்னேறவும், நீடூழி வாழவும், மகிழ்ச்சியாக வாழவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் கிறுத்துவம் உதவுகிறது என்கிற எண்ணத்தை அப்பாவி மக்களின் மனதில் அரசு அங்கீகாரத்துடன் ஏற்படுத்துகிறார்கள் எவாங்கலிக்கர்கள். நிகழ்ச்சியின் தலைப்புகளே இவ்வுண்மையை உறுதி படுத்துகின்றன.
கிராமப்புரங்களில் தனியார் சானல்களைவிட தூர்தர்ஷனின் சேர்வும், அடைவும், தாக்கமும் அதிகம். புயல் எச்சரிக்கை, நோய் தாக்குதல் எச்சரிக்கை, வானிலை, குடும்பக்கட்டுப்பாடு பிரசாரம், அரசின் கொள்கைகள் விளக்க விளம்பரங்கள், கல்வி மற்றும் மருத்துவ சம்பந்தமான விளம்பரங்கள், வயலும் வாழ்வும் போன்ற வேளாண்மை நிகழ்ச்சிகள் என்று பல விதமான நிகழ்ச்சிகளைப் பார்த்து தூர்தர்ஷனின் மீது, நம் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்டுள்ள அரசாங்க நிறுவனம் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டுள்ள மக்கள், அந்தச் சானலில் கிறுத்துவம் பேசப்படுகிறபோது அதையும் சுலபமாக நம்பிவிடுகிறார்கள். தூர்தர்ஷனின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கிறுத்துவ நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி பயங்கரமான அறுவடை செய்கிறார்கள்.
கிறுத்துவ மதபோதகர்களும் அவர்களின் உதவியாளர்களும் தற்போது கிராமம் கிராமமாகச் சென்று, பொதிகை நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டி, தங்கள் மதமே அரசு அங்கீகாரம் பெற்ற மதம் என்றும், தங்கள் மதத்திற்கு மாறினால் கிறுத்துவ நிறுவனங்கள் செய்யும் உதவிகள் மட்டுமில்லாமல் அரசாங்க சலுகைகளும் ஏராளமாகக் கிடைக்கும் என்றும் தீவிரமாகப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
செவந்த் டே அட்வெண்டிஸ்ட் (Seventh Day Adventist) என்கிற கிறுத்துவ பிரிவைச் சேர்ந்த ரான் வாட்ஸ் (Dr.Ron Watts) என்கிற கனடா நாட்டு எவாங்கலிக்கர் மற்றும் அவருடைய அமெரிக்க மனைவி தாரதி வாட்ஸ் (Dorothy Watts) சுற்றுலா விஸாவில் (Tourist VISA) இந்தியா வந்து தமிழக-கர்நாடக எல்லையில் ஓசூரில் ஒரு தலைமையகம் அமைத்து 1970-களிலிருந்து தென்னிந்தியாவில் தீவிரமாக மதமாற்றத்தில் இயங்கி வருகிறார்கள். அவர்கள் மீது பல புகார்கள் சென்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, மாநில அரசு அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி 2003-ல் ஆணை பிறப்பித்தும், அரசங்கத்தில் அக்வனிக்க வேண்டியவர்களை கவனிக்கும் விதத்தில் கவனித்து, தங்கள் மதமாற்ற வேலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். (The State Government ordered the Dharmapuri District Collector to deport Ron Watts and his American wife, Dorothy Watts. A deportation order against him dated 05/09/2003 Letter No: 3608/A1/2003-1 given by Tmt R.Vasantha, B.A., Under Secratary to Government, Public (Foreigners) Department, Secretariat, Chennai-600 009, addressed to the Collector of Dharmapuri and received by the collector on 12 Sept, 2003). ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தால் மறைமுகமாக நிதி ஒதுக்கப்பட்டு இத்தாலிய பெண்மணியான சோனியா அரசாங்கத்தின் மறைமுக உதவியுடன் இந்தியாவில் நுழைக்கப்பட்ட “ஜோஷுவா 2000” (Joshua Project - 2000) என்கிற திட்டத்தின் படி பல கோடி டாலர்கள் பல எவாங்கலிக்க நிறுவனங்கள் மூலம் மதமாற்றத்திற்காகச் செலவு செய்யப்படுகிறது. மாரநாதா ஊழியர்கள் சர்வதேச அமைப்பு (Maranatha Volunteers International) என்கிற அமைப்பும் இந்தியக் களத்தில் இறங்கியுள்ளது. பைபிள் ஃபார் த வேர்ல்டு (Bible For the World), காமன் குளோபல் மினிஸ்ட்ரீஸ் போர்டு (Common Global Ministries Board), யுனைடட் சர்ச்சு போர்டு ஃபார் வேர்ல்டு மினிஸ்ட்ரீஸ் (United Church Board for World Ministries) ஆகிய அமெரிக்க தீவிர கிறுத்துவ இயக்கங்களும் வேலை செய்கின்றன. கிறிஸ்டியன் ஸாலிடேரிட்டி வேர்ல்டுவைட் (Christian Solidarity Worldwide), கான்ராட் அடெனௌர் ஃபௌண்டேஷன் (Konrad Adenauer Foundation), வேர்ல்டு விஷன் (World Vision) ஆகிய அமைப்புகள் நிலங்கள் கையகப்படுத்டுவதற்கும், அரசியல் ஆதரவு பெறுவதற்கும் பெரிதும் உதவுகின்றன.
இந்தியாவிலேயே தலைமையகம் கொண்டுள்ள சாது செல்லப்பா, பால் தினகரன் போன்ற பல எவாங்கலிக்கர்களும் பலகோடி டாலர்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுகின்றனர். தமிழகத்திற்குச் சராசரியாக வந்துகொண்டிருந்த 700 கோடி ரூபாய், சோனியா அரசு 2004-ல் பதவி ஏற்றதிலிருந்து 2300 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப் பூர்வமான தகவல். அரசுக்குத் தெரிந்து வருகின்ற நிதியே இவ்வளவு என்றால் தெரியாமல் வருகின்ற நிதியை வாசகர்கள் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்!. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 200 கோடி ரூபாய் சிலுவை நடுவதற்கும், சர்ச்சு கட்டுவதற்கும், ஆன்மா அறுவடை செய்து மதமாற்றம் செய்வதற்கும் செலவு செய்யப்படுகிறது. இந்த இயக்கங்கள் அனைத்தும் இப்போது பொதிகை மூலம் அரசாங்க அங்கீகாரம் பெற்று, ஊர் ஊராகச் சென்று சிறப்பான மகசூல் பார்க்கின்றனர். (மேற்கண்ட விஷயங்களைப் பற்றிய விவ்ரமான அனைத்து தகவல்களையும் இந்த லிங்குகளில் பார்க்கலாம் - http://www.harekrsna.com/sun/features/04-07/conversions.pdf மற்றும் http://www.vigilonline.com/index.php?option=com_content&task=view&id=1073&Itemid=1 மற்றும் http://www.mha.nic.in/fcra.htm).

தனியார் ஊடகங்களின் பாதிப்பு
இப்படி அனைத்து ஊடகங்களிலும் இந்து எதிர்ப்பும் இந்து துவேஷமும் எவாறு சாத்தியமாகின்றது என்று சிந்திக்கும்போது அடிப்படையில் ஒரு முக்கியமான விஷயம் நமக்குப் புலப்படுகின்றது.
ac01-300x300.jpg
அதாவது நம் நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஜர்னலிஸம், விஷுவல் கம்ம்யுனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மீடியா துறை போன்ற ஊடகத்துறை சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்கள் இருப்பது பெரும்பாலும் கிறுத்துவ கல்லூரிகளில்தான். இக்கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் கிறுத்துவர்களும், இடது சாரி சிந்தனை உள்ளவர்களும்தான். இக்கல்லூரிகளில் பயிலும் ஹிந்து மாணவர்கள் கூட நாளடைவில் ஸூடோ செக்யூலரிஸ்டுகளாக மாற்றப்பட்டு விடுகிறார்கள். இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பத்திரிகைத் துறைக்கும், மின் ஊடக நிறுவனங்களுக்கும் வேலைக்குச் செல்லுகிறார்கள். ஒவ்வொரு பத்திரிகையின் ஆசிரியர் குழுவையும், ஒவ்வொரு சானலின் ஆசிரியர் குழுவையும், அந்நிறுவனங்களில் வேலை செய்யும் முக்கிய நிருபர்களையும், அப்பத்திரிகைகளில் எழுதும் கட்டுரையாளர்களையும் பட்டியல் போட்டுப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட 95% சிறுபான்மையினரும், இடது சாரி சிந்தனை உள்ளவர்களும், திராவிட இனவெறியர்களும், ஸூடோ செக்யூலரிஸ்டுகளுமாக இருப்பார்கள். இம்மாதிரியான சூழலில் ஹிந்து துவேஷமும், எதிர்ப்பும் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?
இந்த தனியார் நிறுவனங்களுடன் பொதிகையும் தூர்தர்ஷனும் சேர்ந்துகொண்டால் கேட்கவா வேண்டும்? ஒரு பக்கம் தனியார் நிறுவனங்கள் ஹிந்து துவேஷத்தை விஷமெனக் கக்க, மறுபக்கம் தூர்தர்ஷனும், ஆகாஷவாணியும் கிறுத்துவ மதப்பிரசாரம் பொழிய, கிறுத்துவ நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான், அறுவடைதான், மகசூல்தான்!
அவமானப்பட்ட பொதிகை
ஒரு பக்கம் ஹிந்துக்களுக்கு எதிராக இயங்கிகொண்டிருந்தாலும், பணத்திற்காகப் புராண இதிகாசங்களைப் பற்றிய தொடர்களை ஒளிபரப்பியும், வைகுண்ட ஏகாதசி, சிவ ராத்திரி போன்ற முக்கியமான விசேஷ தினங்களில் திருவிழாக்களை நேரலையாக ஒளிபரப்பியும், ஹிந்துக்களின் கால்களில் விழுவதற்கு இந்த ஊடக நிறுவனங்கள் வெட்கப்படுவதில்லை. போட்டி போட்டுக்கொண்டு நேரலை ஒளிபரப்பு செய்வார்கள். பொதிகையும் அவ்வாறு செய்ய முயன்று எவாங்கலிக்கரினால் அவமானப்பட்டு நின்றது. சென்ற வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கமும், திருவல்லிக்கேணியும் மாற்றி மாற்றிக் காண்பிக்க முடிவு செய்து, விடியற்காலை ஆரம்பித்து காலை ஆறு மணியளவிற்குப் போகும் என்பதால், அந்த ஒரு தினம் மட்டும் ‘விக்டரி டுடே’ மதப்பிரசார நிகழ்ச்சியாளர்களை அரை மணி நேரம் தள்ளி வைக்கச் சொல்லிக் கேட்டுப்பார்த்தது பொதிகை. அவர்கள் மறுத்துவிட்டனர். (ஆண்டு முழுவதற்கும் ஒப்பந்தம் போட்டாகிவிட்டதே!) எனவே சரியாகக் காலை ஐந்தரை மணிக்கு வைகுண்ட ஏகாதசி நேரலை ஒளிபரப்பை அரைகுறையாக முடித்துக்கொண்டு முகத்தில் கரி பூசிக்கொண்டது பொதிகை.
 
continuation

அரசியல் சாஸனத்திற்கு எதிரான பொதிகை
அரசியல் சாஸனத்தின்படி இந்தியா ஒரு மதச்சர்பற்ற நாடு. ஆகாஷவாணியும் தூர்தர்ஷனும் பொது ஒலி/ஒளி பரப்பு ஸ்தாபனங்கள் என்கிறபடியால் அவை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சார்பாக நடந்து கொள்வது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஒரு மதத்தினரின் விசேஷ தினங்களில் அவர்களின் ஆன்மீக கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தவறில்லை. பாரதத்தைப் பொருத்தவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் கொண்டது. நாடு முழுவதும் உயர்ந்து நிற்கும் ஆலயங்கள் நம் பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கின்றன. நமது கட்டடக்கலையின் அழகையும் சிற்பக்கலையின் சிறப்பையும் பகன்று, அவை மூலம் நம் கலாசாரத்தின் மகோன்னதத்தை இவ்வுலகிற்குப் பிரதிபலிக்கின்றன. அறுபதாண்டுகளே வயது கொண்ட அரசியல் சாஸனத்தில் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிவிட்டதால் இந்த நாட்டின் ஹிந்துத்தன்மை மறைந்து விடாது. மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது ஆட்சி முறைக்காகத் தானேயொழிய, இந்த நாட்டின் கலாசாரத்தையோ பண்பாட்டையோ மாற்றியமைக்க அல்ல. இந்த நாடு ஹிந்து நாடு, இந்த நாட்டின் கலாசாரம் ஹிந்து கலாசாரம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. எனவே ஹிந்துப் பண்டிகைகளின் போது நடக்கும் வழிபாடுகளையும், திருவிழாக்களையும் ஒளிபரப்புவதும், அதன் மூலம் மக்களிடையே நம் பண்பாட்டின் மகிமையை எடுத்துச் செல்வதும் அரசு ஸ்தாபனமான தூர்தர்ஷனின் கடமை.
கிறுத்துவமும் இஸ்லாமும் வெளியிலிருந்து வந்தவர்கள் நம் தேசத்தில் திணித்த மதங்கள். இந்த மண்ணின் மதங்கள் அல்ல. அவர்களின் கலாசாரமும்ம் பண்பாடும் வேறுபட்டவை. ஆயினும் அம்மதங்களுக்கு மாற்றபட்டவர்கள் கணிசமான அளவில் இந்த தேசத்தில் குடிமக்களாக வாழ்ந்து வருவதால், அவர்களின் பண்டிகைகளையும் வழிபாட்டுத் திருவிழாக்களையும், மதச்சார்பற்ற ஆட்சிமுறை காரணமாக, ஒளிபரப்புவதும் சரியானதே. அதில் குற்றம் காண்பதும் தவறு. ஆனால் திருவிழாக்கள் என்பது வேறு, மதப்பிரசாரம் என்பது வேறு. பொதிகைத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை கிறுத்துவ மதப்பிரசாரத்தை ஒளிபரப்புகிறது. மேலும் அவ்வொளிபரப்புகளில், இந்த தேசத்தின் கலாசாரமும், ஆன்மீகமும், இந்த மண்ணின் தெய்வங்களும் அவ்வப்போது கொச்சை படுத்தப்படுகின்றன. மதச்சார்பற்ற ஆட்சிமுறையில் இவ்வாறு ஒரு மதத்தின் பிரசாரத்தை ஒரு பொது ஊடக நிறுவனம் செய்வதென்பதும், பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதும், அரசியல் சாஸனத்தை மீறிய அதற்கு எதிரான செயல்.
சட்டத்தை மீறிய பொதிகை
ஆகாஷவானி, தூர்தர்ஷன் ஆகிய பொது ஒலி/ஒளி பரப்பு ஸ்தாபனங்களுக்கு என்று “நிகழ்ச்சிகளுக்கான நியதிகள்” (Program Code) இருக்கின்றன. (http://www.ddindia.gov.in/Business/Commercial+And+Sales/Code+for+Commercial+Advertisements.htm) அதில் உள்ள பல க்ஷரத்துகளை பொதிகை கிறுத்துவ மதப்பிரசாரத்தை அனுமதித்ததன் மூலம் மீறியுள்ளது. உதாரணத்திற்கு, எவாங்கலிக்க பிரசாரகர்கள் விக்ரஹ வழிபாட்டை கொச்சைப்படுத்தி விமரிசனம் செய்வதும், கிறுத்துவரல்லாத மற்ற மதத்தவர்களை “பாவிகளே” என்று அழைப்பதும், மற்ற மதத்தவரைப் புண்படுத்தக்கூடாது, தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது ஆகிய விதிகளை மீறுகின்றன.
அதே போல “பிரஸார் பாரதி (இந்திய ஒலி/ஒளிபரப்பு ஸ்தாபனம்) சட்டம் 1990”-ம் மீறப்பட்டுள்ளது. (http://www.ddindia.gov.in/Information/Acts+And+Guidelines) இந்தச் சட்டத்தில் தூர்தர்ஷன் ஆகாஷவாணி போன்ற பொது ஒலி/ஒளி பரப்பு ஸ்தாபனங்கள் எவ்விதம் இயங்கவேண்டும் என்று நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல க்ஷரத்துக்களை பொதிகை மீறியுள்ளது.
நிர்வாகத்தின் அலட்சியம்
ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில், நான் மேலே கொடுத்துள்ள அனைத்துத் தகவல்களையும் அளித்து, பொதிகை சட்டத்தையும், அரசியல் சாஸனத்தையும் மீறியுள்ளது என்று தெரிவித்து, இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்துச் சரி செய்யுமாறு வேண்டி, தூர்தர்ஷனின் தலைமை இயக்குனர் திருமதி அருணா ஷர்மா அவர்களுக்கு மின் அஞ்சல் (இ-மெயில் கடிதம்) அனுப்பியிருந்தேன். அந்தக்கடிதத்தின் நகல்களை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி அம்பிகா சோனி, இணையமைச்சர் டாக்டர் S. ஜெகத்ரக்ஷகன், ராஜ்ய சபை எதிர்கட்சித் தலைவர் திரு. அருண் ஜேட்லி, லோக் சபை எதிர்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், பாஜக தலைவர் திரு. நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் திரு. அத்வானி, பிரஸார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் திரு. B.S. லல்லி, தூர்தர்ஷன் துணைத் தலைமை இயக்குனர்கள் திரு.அஷோக் ஜெய்ல்கானி, திரு. R.வெங்கடேஸ்வரலு, திருமதி உஷா பாஸின் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தேன். கடிதத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ஏற்பையும், நடவடிக்கை எடுக்கப்போவதற்கான உறுதியையும் தெரிவித்து பதில் அளிக்குமாறும் திருமதி அருணா ஷர்மாவிடம் வேண்டியிருந்தேன். ஆனால் இந்தக் கட்டுரை எழுதும் வரை பதில் இல்லை. இனியும் வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
இதனிடையே, தில்லியில் நடைபெற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஜெகத்ரக்ஷகன், “கிறுத்துவ மதப் பிரசாரத்திற்கென்றே ‘ஆசீர்வாதம்’ போன்ற பல தனிப்பட்ட சானல்கள் இருக்கும்போது, பொதிகை ஏன் அந்நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது?” என்று கேட்டு சென்னை கேந்திரத்தின் அதிகாரிகளைக் கடிந்துகொண்டதாக நமக்குத் தகவல்கள் வந்துள்ளன.
முடிவுரை
அமைச்சகமும், நிர்வாகமும் அலட்சியமாக இருப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் அமைதியாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து தூர்தர்ஷன் சானல்களிலும் கிறுத்துவ மழைதான் பொழியும். எனவே, வாசகர்கள் அனைவரும் தூர்தர்ஷன் தலைமை இயக்குனர் திருமதி அருணா ஷர்மா அவர்களுக்குக் கீழ்கண்ட இ-மெயில் முகவரியில், தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கடிதம் அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன். கடிதத்தின் நகல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கும், பிரஸார் பாரதி தலைமை நிர்வாக அலுவலருக்கும், அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் சக்திக்கு என்றுமே மதிப்பு உண்டு. வெற்றியும் நிச்சயம்.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரிகள்:
Ms. Aruna Sharma, Director General, Doordarshan [email protected]
Ms.Ambika Soni, Minister, Information and Broadcasting and [email protected]
Dr.S.Jagathrakshakan, Minister of state, Information and Broadcasting [email protected]
Ashok Jailkhani Dep.Director Gen (Program)
R.Venkateswarlu Dep.Director Gen (Program)
Ms.Usha Bhasin Dir.General Gen (Program)
B.S.Lalli, CEO PB
 
Dear Shri Rajaraman Sethuraman,

First of all I apologize that I can only read Tamil but am not good when it comes to writing.

You will probably be surprised that there has so far been no response to your post on such an important issue. May be it is due to your posting in Tamil, I don't know. Anyway, you will find not only Pothigai but many other channels set up exclusively for spreading Christianity. We have similar channels for spreading Hinduism as well. Your complaint is about the National channel encouraging Christianity. Well, so long as we say that we are a secular democratic nation, we cannot stop someone from trying to spread his or her religion whose practice is allowed by our Constitution.

Having said that, let me also add some other points relevant to the issue. The previous Pope had desired that in the 21st. century, all of Asia should be converted to Christianity. So, large scale funds started flowing into India for this purpose. You will also observe that of late (say, the last 10 to 15 years) Krishna worship has gained very great popularity through Bhagavatha Sapthahams, Geetha studies and lectures, and a myriad other ways. All these have resulted in marginalization of Rama who was very much more popular in the past than nowadays. Why do you think this has happened? It is not simply because people find Ramayanam or Sundarakaandam boring or not worth readingand hearing, but because there is a concerted campaign to promote Krishna as the foremost symbol of Hinduism, to the exclusion of Rama, Siva, Ambika etc. (In fact there was a lady swamiji who used to advocate to her bhaktas that in kaliyuga, hereafter, Siva should not be worshipped and that Vishnu and Krishna only could lead one to saayujyam. A relative of mine, who was an ardent disciple of this Mathaji, therefore, destroyed all pictures and images of all other Gods in his house!) ISKCON also subscribes to a similar ideology about Krishna being even greater than Vishnu, as per Gaudiya (Chaithanya's) teachings.

You should also read some of the books coming from Christian scholars about Christ & Krishna, Christian influences in Hinduism etc., to get an inkling of what may be in store. Once Krishna becomes the vanguard of the Hindus, it is easy to absorb Christ(na) and convert the people to Christianity, I feel.

So long as the vast majority of Hindus are unconcerned about all these, you and I will only be crying in the wilderness.
 
Dear All,

Now a days everything is in the way of sponsorships to get money and business etc.. so all these channels are doing the same to stand in the market.( i have seen max tamil channel having sponsored religious speeches on these religions) in DD kerala also there some sponsor programmes on Baghavat geetha / bagavatham etc.

i feel all state run medias should have some controle on these programmes, that there should some slot for every religion. even though it is sponsored.

Ananth
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top