• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Common Punyahavachanam procedure

ஆபஸ்தம்ப பூர்வ ப்ரயோகம் என்னும் புத்தகம் ராம கிருஷ்ண மடம் வெளியிட்ட புத்தகத்தில் உள்ளது. ஆன் லையனில் வாங்கி கொள்ளலாம்.
 
Namaste.....please find attached the step by step procedure..Punyaha mantra and avahana mantra in English.
 

Attachments

  • Punyahavachanam pooja Vidhanam_English.pdf
    103.4 KB · Views: 1,336
Hello iyerram,
Thanks for the information. But I am not able to download the pdf and it is greyed out.
How can I download this?
Thanks
yengee
 
புண்யாஹ வாசனம்.





இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

, க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய)


ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜ ஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷசாம்அபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.பவித்ரத்தா ல்கும்ப ஜலத்தை மேற்கிலிருந்து கிழக்காக நகர்த்தவும்.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:


பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே

.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;


தீர்த்த ப்ரார்தனை:



ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம:



ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;


உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேத நான்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜான் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.


கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உபகரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்


பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாயத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.

ப்ராசனம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்.
 

Latest ads

Back
Top