Coimbatore District Temples-அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்

Status
Not open for further replies.
Coimbatore District Temples-அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்

Coimbatore District Temples-அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர்- 641 655. கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

+91- 99428 41439.


T_500_92.jpg



பொது தகவல்:

பிரகாரத்தில் பஞ்சலிங்கம், சகஸ்ரலிங்கம், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். மேற்கு நோக்கி சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரக மண்டபமும் உள்ளது.

கோயிலுக்கு எதிரே வெளியில் தீப ஸ்தம்பம் உள்ளது. இதில் வாலி, சிவபூஜை செய்த சிற்பம் இருக்கிறது. அருகிலுள்ள அரச மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகில் பாண வடிவில் சிவலிங்கம் இருக்கிறது. இருபுறமும் ராகு, கேது உள்ளது.

தல வரலாறு:

சுக்ரீவனின் அண்ணன் வாலி, ஒரு தோஷ நிவர்த்திக்காக சில தலங்களில் சிவனை வழிபட்டார். அவ்வாறு அவரால் வழிபடப்பட்ட தலம் இது. வாலி வழிபட்டதால் இங்கு சிவன், "வாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

தலபெருமை:

சேவலுடன் முருகன்: சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவ்விரு சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் இடது கையில் சேவல் வைத்திருக்கிறார். பொதுவாக முருகன் தலங்களில் சுவாமி, கையில் சேவல் கொடிதான் வைத்திருப்பார். இங்கு சேவலை வைத்திருப்பது வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் சிம்மம் இருக்கிறது. வள்ளி, தெய்வானை உடன் இருக்கின்றனர். இங்கு நடராஜர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இந்த மூர்த்தி மிகவும் விசேஷமானவர். விசேஷமான 5 தலத்து நடராஜர்களின் உருவத்தை ஒன்று சேர்த்து இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஆருத்ராதரிசன விழா சிறப்பாக நடக்கிறது.

“இத்தலம் நடு சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. தல விநாயகரின் திருநாமம். அனுக்கை விநாயகர். 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது

பிரார்த்தனை

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவன், அம்பாள், முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால்தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.



இருப்பிடம் :
கோவையில் இருந்து 48 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. கோபி, அந்தியூர் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்கிறது. திருப்பூரில் இருந்து செல்பவர்கள் 14 கி.மீ., தூரத்தில் அவிநாசி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
கோயம்புத்தூர்

தங்கும் வசதி :
கோயம்புத்தூர்

Valeeswarar Temple : Valeeswarar Valeeswarar Temple Details | Valeeswarar - Chevur | Tamilnadu Temple | ??????????
 
PJ SIR, Being a coimbatorian , i am much interested to visit this temple .Thanks for the info .Murali sharma

Dear Murali Sir

Thanks for reading my Temple Threads.

Kindly post any suggestion about any Temple in Coimbatore District for me to post a Thread on that Temple, I will be very Happy to do so.

God Bless you and your Family

Regards

P J
 
Status
Not open for further replies.
Back
Top