Coimbatore District Temples-அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திர&#

Status
Not open for further replies.
Coimbatore District Temples-அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திர&#

Coimbatore District Temples-அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில் கோயம்புத்தூர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

T_500_1497.jpg



பொது தகவல்:


முன் மண்டபத்தில் மகாலட்சுமி, பக்த ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. லட்சுமி ஹயக்ரீவர் பஞ்சலோக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

தல வரலாறு:

பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் ஒருவன் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தான். ஒரு முறை அவன் கொங்கு தேசம் எனப்படும் இப்பகுதிக்கு வந்தபோது காஞ்சி வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்ய விரும்பினான். அதன் அடிப்படையில் இங்கு ஒரு கோயில் கட்டி பெருமாளை பிரதிஷ்டை செய்து கரிவரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டி வழிபட்டான். வந்த மன்னன், பெருமாளுக்கு கோவையில் ஒரு கோயில் அமைத்து வழிபட விரும்பினான். எனவே கோவையில் உள்ள கோட்டையில் திருகோயில் அமைத்து, பெருமாளை பிரதிஷ்டை செய்தான்.

தலபெருமை:

கொங்கு நாட்டிலுள்ள பெருமாள் கோயில்களில் இக்கோயிலுக்குள்ள தனிச்சிறப்பு. உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதுதான். பொதுவாக பெருமாள் கோயில்களில் வடக்குமுகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தெற்குமுகமாகவும் வடக்கு முகமாகவும் இரண்டு சொர்க்க வாயில்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தற்போது பாதுகாப்பு கருதி தெற்கு வாயில் மூடப்பட்டுள்ளது.


பிரார்த்தனை


கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகின்றனர்.

இங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் துளசி மாலை சாற்றி, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


இருப்பிடம் :
கோவை மாநகரில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு எதிரே உள்ள சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
கோயம்புத்தூர்

தங்கும் வசதி :
கோயம்புத்தூர்



Kari varadaraja perumal Temple : Kari varadaraja perumal Kari varadaraja perumal Temple Details | Kari varadaraja perumal- Ukkadam | Tamilnadu Temple | ??????????? ????????
 
Status
Not open for further replies.
Back
Top