Bharathi Paappaa paattu

Status
Not open for further replies.
I imagined as to how today's children would view Subramanya Bharathiyaar's "Paappaa Paattu" and the result is below. I am not pessimistic. I have given my views as I thought is the fact today.

பாரதியின் பாப்பா பாட்டு பாப்பாவின் பாரதி பாட்டு


ஓடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்து உட்கார்ந்தோம் பாரதி - டி.வி. முன்னே
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா ஒடுங்கிப் போனோம் பாரதி
கூடி விளையாடு பாப்பா - ஒரு அடுக்குமாடிக் குடியில் அடைந்தோம் பாரதி
குழந்தையை வையாதே பாப்பா அடுத்த வீட்டு குழந்தையை அறியோம் பாரதி

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக் கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா குருமா செய்தோம் பாரதி
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது வாலைக் குழைத்துவரும் நாய் - அதன்
மனிதர்க்கு தோழனடி பாப்பா வாலில் பட்டாசு வைப்போம் பாரதி

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு காலை எழும்போதே கடுப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு கல்விகற்க செல்லும் பரபரப்பு
மாலை முழுதும் விளையாட்டு - என்று மாலை முழுதும் வீட்டுப்பாடம் - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா வழக்கப் படுதிக்கொண்டோம் பாரதி

பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம் பாதகஞ் செய்வோர் பலர் - எம்மைப்
பயங்கொள்ள லாகாது பாப்பா பள்ளியிலும் துரத்துகிறார் பாரதி
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் ஓடி ஒளிகிறோம் பாரதி - ஒரு
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ஓரமாய் ஒதுங்கியழுதோம் பாரதி

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் சாதிக லிருக்கிறது பாரதி - எங்கள்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் சான்றிதழ் பகரு மதனை
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு இட ஒதுக்கீடு பெற்றோர் மேலோர் - அது
நிறைய உடையவர்கள மேலோர் இல்லாமல் போனோர் கீழோர்

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள் தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா தாயென்று நினைத்த காரணத்தால்
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் இரண்டையும் விட்டுவிட்டு - வெளிநாட்டில்
ஆன்றோர்கள் தேசமடி paaப்பா இரண்டாம் குடிமக்களானோம் பாரதி



Loka samasta sukhino bavantu.
 
After spelling corrections you may give only the nakkal /nagal kavithai .

If you want to give both side by side, then please use

two different lines- one for the 'original' poem and the other for 'nagal' poem;

or better still with two different fonts/colors/or both.
 
Thank you, VR for the suggestion. I am placing it again as per your advice.

பாரதியின் பாப்பா பாட்டு
பாப்பாவின் பாரதி பாட்டு

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

ஒய்ந்து உட்கார்ந்தோம் பாரதி - t.v. முன்னே
ஒடுங்கிப் போனோம் பாரதி
அடுக்குமாடிக் குடியில் அடைந்தோம் பாரதி
அடுத்த வீட்டு குழந்தையை அறியோம் பாரதி

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
குருமா செய்தோம் பாரதி
வாலைக் குழைத்துவரும் நாய் - அதன்
வாலில் பட்டாசு வைப்போம் பாரதி

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

காலை எழும்போதே கடுப்பு - பின்பு
கல்விகற்க செல்லும் பரபரப்பு
மாலை முழுதும் வீட்டுப்பாடம் - என்று
வழக்கப் படுதிக்கொண்டோம் பாரதி

பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

பாதகஞ் செய்வோர் பலர் - எம்மைப்
பள்ளியிலும் துரத்துகிறார் பாரதி
ஓடி ஒளிகிறோம் பாரதி - ஒரு
ஓரமாய் ஒதுங்கியழுதோம் பாரதி

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள மேலோர்

சாதிக ளிருக்கிறது பாரதி - எங்கள்
சான்றிதழ் பகரு மதனை
இட ஒதுக்கீடு பெற்றோர் மேலோர் - அது
இல்லாமல் போனோர் கீழோர்

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று நினைத்த காரணத்தால்
இரண்டையும் விட்டுவிட்டு - வெளிநாட்டில்
இரண்டாம் குடிமக்களானோம் பாரதி





Loka samasta sukhino bavantu.


 
Status
Not open for further replies.
Back
Top