கோ தான பலன்கள் and கோ தானத்தின் வகைகள்
தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் "கோ தானம்" என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும்.
உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3-க்குள் அமைவது உத்தமம் என்றும் 2-க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது. 3-லிருந்து 5-க்குள் அமைந்தால் மனத்திருப்தியையும் 1-ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும்.
பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.
பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதை பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும்.
அல்லது ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். அதை விட
சித்தர்கள் ரிஷிகள் வாழும் இடங்கள், ஜீவ சமாதிகளுக்கு தானம் செய்வது கோடி கோடி மடங்கு பலன். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம். கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும்.
பசுவை அந்தனர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம்.
தானம் தரவேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும். பட்டுத்துணி அதன் மீது அணிவித்து அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும்.
தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
பசு தானம் மட்டும் அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தரவேண்டும்.
கோ தானத்தின் வகைகள்:-
கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம்.
யாகம் ஆரம்பிக்கும் பொழுதும்,
சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும்.
தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம்.
ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம்.
ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு. ஒருவர் இறந்த 12-ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு #வைதரணி_கோ_தானம் என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது.
வருடப்பிறப்பிலும் புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று பசுவை தானம் செய்ய வேண்டும்.
ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகுகிறது.
பசுவை தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்கள், ஆசிரமங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனை கொடுக்கும்.
பசுவை தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும். பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும் பராமரிக்கலாம்.
பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனைஅடைவார்கள்.
கோதான பலன்கள்:-
இந்திரன் இருக்குமிடம் இந்திரலோகம் என்றும்,
பித்ருக்கள் இருக்குமிடம் பித்ருக்கள் லோகம் என்றும்,
விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்குமிடம் கோ லோகம் என்று கூறப்பட்டுள்ளது.
பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார்.
தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
ஆலயங்களுக்கு பசுதானம் செய்தல்:-
ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்த பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள்
பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும் அதற்கு தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.
கோ தானம் கொடுப்பது எப்படி? பிரசித்தி பெற்ற தலம் பிரயாகை. இது அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகிறது. இதற்கு தனிப்பெருமை உண்டு. அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்றும் கூறுவர்.
கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம்.
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம். இந்தப் பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு.
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து தான தர்மங்கள் செய்ய வேண்டும். இந்த இடத்தில் கோ தானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ அத்தனை வருட காலம் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எந்த தானம் கொடுத்தாலும் அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்க வேண்டும்.
தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும்.
கோ தானம் கொடுப்பது என்றால் நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து (இளங்கன்று சிறந்தது) பசுவுக்கு அலங்காரம் செய்து கொம்பில், கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலன் இல்லை. நல்ல கறவை மாடு, இளங்கன்று என்றால், ஒரு வருஷத்துக்கு பால் கறந்து சாப்பிடுவர்.
சிலர் பூஜைக்கும் அபிஷேகத்துக்கும் அதன் பாலை பயன்டுத்துவர். இதனால் பசுவை தானம் செய்த புண்ணியமும், பூஜை அபிஷேகத்துக்குப் பசும்பால் கிடைக்க உதவி செய்த புண்ணியமும் கிடைக்கிறது. ஒரு தடவை இப்படியொரு கோ தானம் செய்து விட்டால், நிரந்தர புண்ணியம் கிடைக்கும்.
(இன்றுவரை எத்தனையோ சித்த வனங்கள், ஆஸ்ரமங்கள், ஆலயங்களில் நாட்டு பசுக்கள் பராமரிக்க படுகின்றன. தினமும் கோ பூஜை நடைபெறுகின்றது. கோ தானம் செய்ய , உங்கள் குடும்ப நலனுக்காக கோ பூஜை செய்ய பசுக்களுக்கு தேவையான புல்/ புண்ணாக்கு போன்ற தீவினங்கள் வழங்கி வழிபாட்டை செய்யுங்கள்....)
கோமாதா ஸ்தோத்திரம்:
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம:
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே:
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம:
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம:
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்:
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம:
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம:
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம:
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்:
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்.
ஓம் கோமாதா போற்றி
ஓம் காமதேனுவே நமஹ
கோவத்ச துவாதசி திதியில் மட்டும் பசுவை வனங்கினால் பாவம் விலகும்
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து
ஓம் நமோ நாராயணாய
கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியம் தரும் கோ பூஜை ...!
************
கோ பூஜையில் இந்த சுலோகத்தைச்
சொல்லி வணங்குவது சிறப்புடையது.
சர்வதாமதுகே- தேவி
சர்வதீர்த்தா பிஷேபினி
பாவனே ஸுரபிஸ்ரேஸ்டே
தேவி-துய்யம்-நமோஸ்துதே”.
அனைத்துவித தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.
மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்ட வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.
எனவே, பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் பசுவை நீராட்டி முகத்திலும் பின்புறமும் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுக்கள் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பசுவை வலம் வந்து மும்முறை கோவந்தனம் செய்ய வேண்டும். பசுவிற்கு கொஞ்சம் வெல்லம் கலந்த அரிசி மற்றும் அகத்திக்கீரை அளித்திடல் வேண்டும்.
*ஆஸ்வீஜ கிருஷ்ண பக்ஷ துவாதஸியை கோவத்ஸ துவாதஸி என்று கொண்டாடப்படுகிறது!
ஸ்தீரிகள் புருஷர்கள் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரும் அனுஷ்டிக்கலாம். செலவு ஏதுமில்லாமல் தெய்வ அனுக்ரஹத்தை பெறக்கூடிய வழிகளில் இதுவும் ஒன்று. அன்றைய தினம் முக்கியமாக யதா சக்தி கோவிற்கும் கன்றுக்குட்டிக்கும் ஆகாரம் கொடுப்பது விசேஷமானது. கோஸம்ரக்ஷணை என்பது விசேஷமானது!
கோவின் (பசுவின்) தேகத்தினுள் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸான்னித்தியம் கொண்டுள்ளனர். முக்கியமாக அதன் பின் பக்கம் மஹாலக்ஷ்மி ஸான்னித்தியம் கொண்டிருக்கிறாள். கோவினை ப்ரீதி செய்வதாலே (அந்தர்யாமியான ஸ்ரீ ஹரியை), கோதானம் செய்வதாலே, அதற்கு எத்தனை ரோமங்கள் உள்ளதோ அத்தனை ஆயிரம் வருஷங்கள் ஸ்வர்காதி லோகங்களில் வாசம் கிடைக்கிறது. ஆகவே கோசேவையானது எப்போதும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாக ஸாஸ்திரங்களில் உரைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில விஸேஷமான பர்வகாலங்களில், குறிப்பிட்ட தினங்களில், சுப காரியங்களின் அங்கமாக கோபூஜையானது வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் கோ பூஜைக்கு விசேஷமான ஒரு தினமாக சாஸ்திரம் குறிப்பிடுவது ஆஸ்வீஜ மாத (ஐப்பசி) கிருஷ்ண பக்ஷ துவாதஸி ஆகும். அதாவது தீபாவளிக்கு முன்னால் வரக்கூடிய துவாதஸி. வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. கோ - வத்ஸ என்றால் கன்றுடன் கூடிய பசுவை குறிப்பதாகும். பசுவிற்கும் கன்றுக்குட்டிக்கும் சந்தனம் மஞ்சள் குங்குமம் பூசி புஷ்ப மாலையினால் அலங்காரம் செய்து அதன் வால் பகுதியிலோ எதிரிலோ அர்க்யம் கொடுத்து பூஜிக்க வேண்டும்.!
அர்க்ய ஸ்லோகம்:
"கோ ஷீரம் கோ க்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்"
தர்ம ஸிந்துவில் இந்த ஸ்லோகம் சொல்லப்பட்டு, அதன் அர்த்தமானது!
"பாற்கடலிலே பிறந்த என் தாயே, தேவர்களும் அசுரர்களும் உன்னை கொண்டாடுகின்றனர். எல்லா தேவர்களும் உன்னுள்ளே இருப்பதினாலே, இந்த அர்க்யத்தை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்ய வேண்டும்!
என்ற விதத்திலே அர்க்யத்தை கொடுத்து, அந்த பசுவுக்கும் கன்றுக்குட்டிக்கும் புல், பழங்கள், அரிசி, வெல்லம் ஆகியவற்றைக் கொடுத்து கீழ்க்கண்டவாறு சொல்லி சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்!
ஸுரபி த்வம் ஜகந்மாதா தேவி விஷ்ணுபதே ஸ்திதா | ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்த மிமம் க்ரஸ ||
ஸர்வதேவ மயே! தேவி! ஸர்வ தேவைஸ்ச ஸத்க்ருதா ! மாதர் மமா(அ)பி லஷிதம் ஸபலம் குரு நந்தினி!
"மஹாவிஷ்ணுவுக்கு ப்ரியமாக பக்கத்தில் இருக்கும் ஜகன்மாதாவே, எல்லா தேவர்களுக்கும் இருப்பிடமாக இருக்கக்கூடிய தேவியே, என் மனோ இஷ்டங்களை பூர்த்தி செய்து பலன் தர வேண்டும் தாயே!"
என்று கோவுக்கும் கன்றுகுட்டிக்கும் புஷ்பாஞ்சலி செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.!
ஸ்தீரிகள் புருஷர்கள் குழந்தைகள் என எல்லோரும் இந்த துவாதஸியில் கோபூஜை கோசேவை கோஸம்ரக்ஷனை செய்வதாலே ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ஞானம் பக்தி வைராக்கியம் இவற்றை அருளி பகவான் ரக்ஷனை செய்கிறார். கோ ஸம்ரக்ஷணையின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கவே கோபாலகனாக கிருஷ்ண பகவான் அவதரித்தார் என்று பாகவதம் மகாபாரதம் போன்ற கிரந்தங்களில் நமக்கு உணர்த்துகின்றன. கிருஷ்ணனின் மகிமையை கொண்டாடும் விதத்தில் நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததை போற்றும் விதத்தில் நாம் செய்யும் தீபாவளி உற்சவத்திற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இந்த இந்த கோ பூஜை ஆனது உரைக்கப்பட்டுள்ளது மிகவும் விஸேஷமாகும்!
இந்த ஒரு சேவையை சத்காரியத்தை செய்து பகவானுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகுவோம்!
பாரதி ரமண முக்ய ப்ராண அந்தர்கத கோபால கிருஷ்ணருடைய பாதாரவிந்தங்களில் சமர்ப்பணம் செய்வோம்!
ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். தோல் நோய் குணமாக்குமாம்.
ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின், முன்னோர்களில் 7 தலைமுறையினர் முக்தியடைவார்களாம்.
அதிகாலையில் எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல்,
‘சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே’
என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.
பசு காயத்ரி மந்திரம்:
‘ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்’
பசுவும் லக்ஷ்மியும்
மஹா பாரத அனுசாசன பர்வ கடைசி பகுதிகளில் இன்னொரு ருசிகரமான கதை வியாசர் எழுதியிருக்கிறார். அதை பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல, அதையே ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொல்கிறார்.
''பசுஞ்சாணம் சிறப்பு மிக்கது. ஸ்ரேஷ்டமானது. பரிசுத்தமானது. அதில் ஸ்ரீ லட்சுமி வாசம் செயகிறாள். இது எப்படி நிகழ்ந்தது என்பது தான் நான் சொல்லும் கதை.
அழகு தேவதையாக ஸ்ரீ லட்சுமி தேவி ஒருநாள் ஒரு பசுக்கூட்டத்தை அடைகிறாள். அவளது அழகைபார்த்து வியந்தன பசுக்கள். ஆச்சர்யமாக பார்த்தன.
''யார் நீ அழகு தேவதையே, எங்கிருந்து இவ்வளவு அழகைப் பெற்றாய். எங்கே செல்கிறாய்? உன் மேனி பொன்மயமாக பளபளக்கிறதே. உன்னைப் பற்றி சொல் '' என்றன பசுக்கள்
'நான் தான் ஸ்ரீ என்று அழைக்கப்படும் லட்சுமி. என்னை சகல ஜீவராசிகளும் விரும்புகிறார்கள். அசுரர்களை நான் அடையாததால் எவ்வளவோ முயன்று தோற்றார்கள். தேவர்கள் என்னை போற்றி பயன் பெற்றார்கள். விவஸ்வதன் , சோமன், விஷ்ணு, வருணன், அக்னி, ஆகியோர் என்னை அடைந்ததால் சக்தி அடைந்தனர். என்னை வேண்டிய ரிஷிகளும் சந்தோஷமடைந்தனர். பசுக்களே நீங்கள் புனிதமானவர்கள். என்னால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் சக்தி என்னிடமும் உள்ளது. எனவே உங்கள் ஒவ்வொருவருள்ளும் நான் உறைய விரும்புகிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறாள் ஸ்ரீ லட்சுமி.
''செல்வ லட்சுமி, நீ ஒரு இடத்தில், ஒருவரிடத்தில், நிலைத்திருப்பதில்லை. இடம் மாற்றி மாற்றி இருப்பவள். நீ இருக்கும் இடம் சுபிக்ஷமாக இருக்கிறது, உன்னை பெற்றவர்கள் மட்டும் சந்தோஷம் அடைகிறார்கள். நாங்கள் எல்லோருக்கும் சந்தோஷம் தருபவர்கள். எங்கள் செல்வம் எல்லோருக்கும் சமமானது. நீ எங்களுக்கு தேவை இல்லை அம்மா. வேறு எங்காவது செல்.'' என்றன பசுக்கள்.
''பசுக்களே, நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறதா?. நான் எளிதில் ஒருவருக்கு கிடைப்பவள் இல்லை என்பது கவனம் இருக்கட்டும். நான் கிடைக்க எத்தனையோ பேர் தவம் கிடக்கிறார்கள் என்று தெரியாதா? நான் வேண்டாமா? என்னை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு நல்லது தானே. உங்கள் சிறப்பு மேலும் உயருமே. தேடாமல் கிடைத்ததற்கு என்றுமே மதிப்பில்லை என்பது உங்கள் போக்கிலிருந்து நன்றாக எனக்கு புரிகிறது. மீண்டும் சொல்கிறேன் நான் கிடைத்தற்கரியவள். தானாக வந்த லக்ஷ்மியை வேண்டாமென்று சொல்லாதீர்கள் பசுக்களே ''.
'' லட்சுமி, அம்மா, லட்சுமி அவசரப்பட்டு பேசாதே. நாங்கள் உன்னை வேண்டாமென்று சொல்லவில்லை. தேவையில்லை என்று தானே சொன்னோம். நீ இல்லாமலேயே நாங்கள் சந்தோஷமாகவே இருக்கிறோம்.
''கோ மாதாக்களே , நான் தானாகவே வந்து கேட்டும் நீங்கள் என்னை வேண்டாமென்று உதறி விட்டீர்கள் என்ற அவப் பெயர் எனக்கு ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் எல்லோருக்கும் உதவுபவர்கள், எனக்கும் உதவி என்னை ஏற்றுக் கொள்ளுங்களேன். என் வேண்டுகோளை நிராகரிக்காமல் என்னை ஏற்றால் உங்கள் மதிப்பும் உயரும். மேலும் மேலும் உங்களின் பெருமை பேசப்படும். எனக்கும் மகிழ்ச்சி.
''சரி அம்மா''. இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. நீ எங்களோடு இரு.'' என்றன பசுக்கள்.
''பசுக்களே உங்கள் உடலில் எந்த பாகத்தில் நான் குடியேறட்டும். உங்கள் உடலின் எந்த பாகமும் புண்யம் கொண்டது. எனவே உங்கள் பின்புறம் கூட எனக்கு போதும்'' என்றாள் லட்சுமி.
பசுக்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து
''அம்மா லட்சுமி நீ எங்கள் கோமியத்திலும், சாணத்திலும் இருந்தால் எங்களுக்கு புண்யம் கிடைக்கும் தாயே '' என்று லக்ஷ்மிக்கு இடம் கொடுத்தன.
"பசுக்களே, எனக்கு அடைக்கலம் கொடுத்த உங்களுக்கு என் ஆசி பூரணமாக இருக்கட்டும். இந்த நிமிஷத்தில் இருந்து உங்களில் நான் உண்டு. உங்கள் பெருமையும் எல்லோராலும் போற்றப்படும் . உங்கள் கோமியம், சாணம் புனிதம் வாய்ந்த பொருள்களாக மதிக்கப்பட்டு எல்லா சுப காரியங்களிலும் ஏற்றுக் கொள்ளப் படும் '' ன்று சொல்லி மறைந்தாள் ஸ்ரீ லட்சுமி.
பசுங்கோமியம் பஞ்சகவ்யத்தில் ஒரு முக்கிய வஸ்து. பசுஞ்சாணம் பரிசுத்தம் தருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் அதற்கு என்றும் மரியாதை மதிப்பு கௌரவம் உண்டு. அது லட்சுமி வாசம் செய்வதால் லக்ஷ்மிகரமானது.
பசுங்கோமியம் ஒரு சிறந்த ஒளஷதம், மருந்து என்று மருத்துவர்கள் சொல்கிறார்களே.பசுஞ்சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி என்றும் விடாமல் சொல்கிறார்களே. படிக்கிறோமே .