• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Andal Thoothu

ஸ்ரீ ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 1)

நாளை(17/07/2021),ஆடி மாதப்பிறப்பு. இந்த மாதம் பகவானுக்கும், நித்யசூரி களுக்கும்,தேவ/தேவதைகளுக்கும் உகந்தமாதம்.பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் யோகநித்திரை
துவங்கும் மாதம். தேவர்களின் ஒரு நாள் என்பது, நமது ஒரு ஆண்டுக்காலமாகும். தை முதல் ஆனி முடிய அவர்களது பகல்நாள்.ஆடி முதல் மார்கழி வரை அவர்களது இரவுநாள்.எனவே அவர்கள் நித்திரை கொள்ளும் முன் அவர்களைப் போற்றிப்பாடி, வணங்கி, திருப்பள்ளி கொள்ள வைக்கிறோம்.அதே போல மார்கழி மாதத்தில் அவர்களை, நித்திரை
யிலிருந்து,திருப்பள்ளிஎழுச்சி பாடித் துயில் எழுப்பி விஸ்வரூப தரிசனம் சேவிக்கிறோம்.ஆடிமாதத்திலும்,மார்கழி மாதத்திலும் நம்மை முற்றிலும் பகவத் சம்பந்தமான கைங்கர்யங்களில் ஈடுபடு
த்திக் கொள்ள வேண்டும் என்று முன்னோர் வகுத்துவைத்திருக்கிறார்கள்.

இந்த உலகத்துக்கே, ஆதாரமாக விளங்கும் பூமிப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த மாதம் ஆடி மாதம்!
பூமாலை சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் !
பாமாலை பாடிக் கொடுத்த நாச்சியார் ஆண்டாள்!!
ஆண்டாள் ஆயர்பாடிக் கண்ணனைப் பாடினார்!
திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடினார்!!
ஆண்டாள் பாடிய "திருப்பாவை" அறியாதார் இல்லை.
"கோதை தமிழ் ஐயைந்தும்,ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வமபு" என்பது பூர்வர் வாக்கு.
ஆண்டாள் பாடிய இன்னொரு பாமாலையான "நாச்சியார் திருமொழியும்"திருமால் அடியார்கள் நன்றாக அறிவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக"ஆடி ஆனந்தம்" என்னும் தொடரில்,ஆடி மாதம் முழுதும் பூமிப்பிராட்டியார் ஆண்டாள் வைபவங்களை அநுபவித்தோம்.2019ல் ஆண்டாள் வைபவங்கள்,ஆண்டாள் அவதார ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் உற்சவ விசேஷங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.
2020ல் பல்வேறு ஆசார்ய ஸ்வாமிகள் ஆண்டாளைப் போற்றிப் பாடிய பாசுரங்கள்/ஸ்லோகங்களை
"ஆண்டாள் போற்றி" என்று அநுபவித்தோம்.

இந்த ஆண்டு, ஆண்டாள் பாடிய பாசுரங்
களில் சிலவற்றை தேர்ந்தெடுத்துப் பார்ப்போம்.திருப்பாவைப் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஒவ்வொரு மார்கழிமாதத்திலும் பார்த்து வருகிறோம்.
ஆண்டாள் பாடிய இரண்டாவது பிரபந்தம்
"நாச்சியார் திருமொழி"பூதேவி நாச்சியார்/கோதை நாச்சியார் அருளிச் செய்த திருமொழி ஆதலால் நாச்சியார் திருமொழி.ஒரே நாயகன் ஸ்ரீமந் நாராயணின் நாயகி பாடியதால் நாய்ச்சியார் திருமொழி என்றும் சொல்லுவர்.இந்தத் திருமொழியின் 143 பாசுரங்களின், ஆழ்ந்த அர்த்தங்களையும் இந்த ஒரு மாத காலத்துக்குள் பார்ப்பது என்பது சற்றே கடினமான காரியம்.
எனவே நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கண்ணபிரானுக்கு அனுப்பிய "தூது" பாசுரங்களை எடுத்து "ஆண்டாள் தூது" என்னும் தலைப்பில் அநுபவிப்போம்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தூது:

ஸ்ரீராமாயணத்தில்,திருவடி ஆஞ்சநேயர்
ஸ்ரீராமரின் தூதுவராக,இலங்கை அசோகவனத்தில் இருந்த சீதாப் பிராட்டிக்கு நற்செய்தி கொண்டு சென்றார்.மகா பாரதத்தில் சாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணரே பாண்டவ தூதராக கெளரவர் சபைக்குச் சென்றார்.
பக்தன் சென்ற தூது பலித்தது;பகவான் சென்ற தூது பலிக்கவில்லை !

ஆழ்வார்கள் பக்தி மேலீட்டால்,தங்களை எம்பெருமானிடம் சேர்த்துவிடும்படி பலரையும் தூது விட்டார்கள்.நெஞ்சு விடு தூதில் தம் நெஞ்சத்தையே தூது விட்டார்கள்.
பறவைகள்--குயில்,கிளி,நாரை--,
வண்டு,பூக்கள்,மேகம்,மழை ஆகிய வற்றைத் தூது விட்டார்கள்
திருமங்கை ஆழ்வார் காக்கை,
செம்போத்து,கோழி,பல்லிக்குட்டி ஆகியவற்றையும் தூது விட்டார் !!

ஆண்டாள் அனுப்பிய தூதுவர்கள்:

ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானிடம் கைங்கர்யம்(பறை) வேண்டிப் பிரார்த்தித்தார்.--
'பறை தருதியாகில்'
'பாடிப் பறை கொண்டு',
'இறைவா ! நீ தாராய் பறை',
"குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது,இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா !,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு,
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று"
"அங்கு அப்பறை கொண்ட ஆற்றை"

கைங்கர்யம் கிடைத்தாலும், ஆண்டாள் விரும்பியபடி, எம்பெருமானோடு சேர முடியவில்லை.அந்த ஆற்றாமையால் அவரோடு சேர வேண்டும், அவரை எப்படியாவது விரைவில் அடைந்து விட வேண்டும் என்னும் ஆர்த்தியில் விளைந்தவையே நாச்சியார் திருமொழி பாசுரங்கள்.பக்தி மிகத் தீவிரமானால் எப்படியாவது,யார் மூலமாவது எம்பெருமானை உடனே அடைந்து விட வேண்டும் என்னும் பேர்ஆர்த்தி யினால்,அவருக்குத் தூது விடுகிறார்.

ஆண்டாளின் தூதுவர்கள்:
1.காம தேவன் மன்மதன்
2.நெஞ்சு.
3.குயில்
4.மயில்
4.சங்கு(பாஞ்சஜன்யம்)
5.மேகம்.
6.மழை
7.கடல்
8.காந்தல் மலர்கள்
9.தோழிகள்

(-அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1626500473613.png


1626500483480.png


1626500491174.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 2)

ஆண்டாள் திருப்பாவையில்,"உன் தன்னைப் பிறவி பெரும் தனைப் புண்ணியம் யாமுடையோம்" என்று பிராப்ய ஸ்வீகாரமும் பண்ணி
உபாயமாக எம்பெருமானைப் பற்றி ப்ராப்யத்தையும்
"உனக்கே நாம் ஆட் செய்வோம்" என்று நிஷ்கரித்து- அவன் உகப்புக்காகவே கைங்கர்யம் செய்வது என்னும் இந்தப் பிரதிபத்தி செய்தார்.இது ஒன்றே ஒரு ஜீவாத்மாவுக்கு வேண்டுவது. ஆண்டாளிடம் அது குறைவின்றி இருந்தது.எம்பெருமான் பக்கலிலே ஆட்கொள்ளும் ஆர்த்தியும் கரை புரண்டு இருந்தது.ஆனால் ஜீவனின் பிரதி
பத்தியும்,பரமனின் ஆர்த்தியும் இருந்தும் ஜீவன் பரமனைஅடையமுடியவில்லை
எனவே ஜீவனான ஆண்டாள் கலக்கமடைந்து,அபிமதமான மிகப் பிரியமானவரான ஸ்ரீகிருஷ்ணர்
தம்மைப்பிரிந்தார்,என்றுவியாகூலப்பட்டு,
காதலர்கள் கூடுகைக்கு மடல் எடுக்குமா போலே காமதேவன் மன்மதனிடம்,காம ஸமாஸ்ரயணம்--காமதேவனிடம் பிரார்த்தனை- பண்ணுகிறார் நாச்சியார் திருமொழி முதல் பதிகத்தில்.
மன்மதன் விடு தூது !!

மன்மதனிடம் வேண்டுவது,ஆண்டாள் சொரூபத்துக்குத் தகுமா ?

வைணவர்கள் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தவிர,மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்.எம்பெருமானையே உபாயமாகவும்,உபேயமாகவும் பற்றி இருப்பவர்கள்.அப்படியிருக்க, "உனக்கே நாம் ஆட்செய்வோம்; மற்றை நம் காமங்கள் மாற்று" என்று வேண்டிய பரமபாகவதை ஆண்டாள்,வேதியர்கோன் பட்டர்பிரான் பெரியாழ்வார் குலத்தில் உதித்த விளக்கு, போயும்,போயும் இந்த தாழ்ந்த தேவதாந்திரமான மன்மதனிடம் உபாயம் வேண்டலாமா?
"சத்வ நிஷ்டரான சாத்விகரோடே சேர்ந்து பகவத் சமாஸ்ரயணம் பண்ணக் கடவதாய் இருக்க,சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தவள் ரஜோ குண பிரசுரரான தேவதைகள் காலிலே விழும்படி என் ?"

இந்த ஐயம் எழுவது இயல்பே.இதற்கு விளக்கமளித்த பூர்வாசார்யர்கள்,
"கிட்டும் பலன் ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத எம்பெருமானே என்னும் பட்சத்தில்,இந்த உபாயத்துக்குத் தட்டில்லை" என்கிறார்கள்.சாதாரண மனித புருஷனிடம் சேர்த்து விடு என்று மன்மதனிடம் வேண்டுவார்கள் லோகத்தார்.ஆண்டாளோ பரமபுருஷ னிடம் சேர்த்துவிடு என்றல்லவா கேட்டார்.
மன்மதன் தெய்வீகத் தம்பதிகளையும் சேர்த்து வைத்தவனாயிற்றே. தவம் செய்து கொண்டிருந்த பரமசிவனார் மீது மன்மத அம்பு எய்து,பார்வதி தேவியுடன் சேர்த்து வைத்தானே.(அதனால் கோபமுற்ற சிவன் அவனை எரித்தார்.
அதனால் அங்கனாக இருந்தவன் அனங்கன் ஆனான்).

எனவே எம்பெருமானை அடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, ஏற்கனவே தெய்வீகத்தம்பதிகளை சேர்த்து வைத்த மன்மதனை ஆண்டாள் வேண்டியது அவரது சொரூபத்துக்குக் குறையில்லை என்று விளக்குகிறார்கள்

பெரிய வாச்சான் பிள்ளை,இதற்கு சில பிரமாணங்களையும் உரைக்கிறார்.

1.ஸ்ரீராமபிரானை அல்லது, அறியாத அயோத்யாவாசிகள்,அவர் எல்லா நலங்களும் பெற்று,எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று,கோசல நாட்டில் உள்ள பர தேவதைகள் கோவில்களில் ஒவ்வொரு நாளும் ராமர் பெயரில் அர்ச்சனை செய்தார்கள்.
2.ஆஞ்சநேயர் தமது ராம கைங்கர்யம் வெற்றியடைய வேண்டி,சில தேவதை களை பூஜித்தார்.
3.பெருமாளைப் பிரிந்த அநபாயிநியான சீதாப்பிராட்டி "பெருமாள் அளவில் உண்டான நித்ய சம்ச்லேஷ அர்த்தமாக
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்று -எல்லா தேவதைகள்" பக்கலில் வேண்டியது போலேயும்"
4.நம்மாழ்வாரும்
"தெய்வங்காள் -என் செய்கேன்..."
(திருவாய்மொழி-5-4-:cool:என்று
தேவதைகளை முன்னிட்டால் போலே

நாச்சியார் திருமொழி முதல் பாசுரம்:

"தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்,
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து,அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா !
உய்யுமாம் கொலோ ! என்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்;
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே !"
(1-1)

"தை,மாதம் முழுவதும் தரையைத் தூய்மையாக விளக்கி, குளிர்ந்த வட்ட வடிவக் கோலம் இட்டு அலங்கரித்தேன். மாசி மாதத்தின் முதல் பருவமான வளர்பிறைக் காலத்தில், வெண்பட்டு மணல் தூவி, தெருவினையும் அலங்கரித்தேன் மன்மதனே! உன்னையும் உன் தம்பி சாமனையும் வணங்கி, நான் உய்வு பெறுவேனோ? என்று சொல்லி நோன்பு நோற்றேன். எங்கும் பிரகாசிக்கும்படி வெம்மையான தழல்நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட அந்தத்
திருமலைநாதன் வேங்கடவருக்கு அந்தரங்கக் கைங்கரியம் செய்யும்படி என்னை விதிக்கவேண்டும்"

தையொரு திங்களும்:
தை மாதம் முழுவதும் மன்மதனை வேண்டுகிறார்.எம்பெருமானை ஒரு நாள்,ஒரு முறை வேண்டினாலே அவர் மிகுந்த உகப்படைவார்.ஆனால் மன்மதன்
சாதாரண பலன் கொடுத்தாலும்,தானும் ஒரு தேவதை என்னும் செருக்கோடு இருப்பதால் அதிகமான வேண்டுதலை எதிர்பார்க்கிறான்! ஆதலால் ஒரு மாதம்.

தரை விளக்கித்:
"திருக் கண்ணமங்கை ஆண்டான்
(கோயில் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தது)போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல சுத்தி பண்ணுகிற படி இறே இது"

தண் மண்டலமிட்டு :
--குளிர்ந்த, தர்ச நீயமான வட்ட வடிவமான கோலம் இட்டு.
--ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்து.
--சில பூஜைகள்/வேண்டுதல் பிரார்த்தனை பண்ணும் போது ஒரு மண்டலகாலம் சேவிக்க வேண்டும் என்று இருப்பது போலவும்.
--இந்த பூமி மண்டலத்திலே செய்து அறியாதது(எம்பெருமானிடம் சேர்த்து விடுமாறு மன்மதனை வேண்டுவது) ஒன்றை ஆண்டாள் செய்வது.

மாசி முன்னாள்:
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு
பஷத்தில்(வளர்பிறை)நின்று அனுஷ்டிக்க வேண்டும்

ஐய நுண் மணல் கொண்டு தெருவணி
ந்து-அழகினுக்கு அலங்கரித்த :
மன்மதனின் சௌகுமார்யத்துக்குச் சேரும்படி நுண்ணிய/மிருதுவான மணலைக் கொண்டு,அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே, அவன் வருகையைக் கொண்டாடுவதே,பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து.

அனங்க தேவா:
மன்மதன் தான் எரிந்து அழிந்தாலும்
பிரிந்தாரை சேர்த்தவைத்த(சிவன்-பார்வதி) குணத்தைக் கொண்டாடி.

உய்யுமாம் கொலோ,என்று சொல்லி:
இவ்வாறு ஆண்டாள் ஐயத்துடன் கேட்பது--வைஷ்ணவ லக்ஷணமான "பேறு தப்பாது என்று அத்யவசித்து" இருக்காமல்,மன்மதனை வேண்டியது
விநாசத்தை விளைப்பதான செயலாக
முடியுமோ என்று முதலில் ஐயுற்று,பின்
உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்:
ததீயரோடு--பாகவத கோஷ்டியாரோடு கூடிக் குளிர்ந்த, எம்பெருமானைப் பாடிப் போந்த வாசனையாலே(திருப்பாவை),
லக்ஷ்மணரோடு,சேர்ந்த ராமரைப் பற்றுவது போலே,காமன் தம்பி சாமனையும் முன்னிட்டு அஞ்சலி செய்கிறார்.

வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே :

ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகளுக்கு சேவை கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவனான பரமாத்மா
சம்சாரிகளும் இப்பேற்றை பெற்று வாழ வேண்டும் என்று,வைகுந்த வான் போகம் தன்னை இழந்து,ஆஸரீத(,அடியார்களின்)
விரோதி நிரசன சீலனான சக்கரத்தாழ் வானைக் கையிலே பொருந்தும்படி ஏந்தியவராய்,திருமலையிலே வந்து நின்றருளும் திருவேங்கடவருக்கு என்னை சேர்த்து விடு.

"அக்கையும் திருவாழியுமான சேர்த்தி அழகை காண வேணும்(உகவாதவரை அழியச் செய்கைக்கும்-உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் பரிகரமான சக்கரம்) என்று ஆசைப் படுகிற என்னை,அவனுடனே சேர்த்து விட வல்லையே; அவனோ அந்நியனாய் வந்து நின்றான்;எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே"

(ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமியின் வியாக்யானத்தின் அடிப்படையில்.)

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1626586709725.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 3)

2."வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து,வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து,
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா !
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு,கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி,
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே"(நாச்சியார் திருமொழி1-2)

விளக்கவுரை:

"வெள்ளையான பட்டுப்போன்ற மெல்லிய மணலை தெருவில் நிரப்பி, நீ வரும் வழியை மென்மையானதாக ஆக்கி வைத்தேன்,காமதேவா ! கீழ்வானம் வெளுப்பதற்கு முன்பே நீர்த்துறைக்குச் சென்று நீராடித் தூய்மையானேன். முட்களும்/எறுமபுகளும் இல்லாத சுள்ளிகளைப் பொறுக்கி எடுத்து,அதனை நெருப்பில் இட்டு வேள்வி செய்தேன்… காமதேவனே, உன் உதவியை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறேன். கடல்வண்ணனாகிய கண்ணனின் பேர் எழுதி, பகாசுரன் என்னும்புள்ளின்வாய் பிளந்த அவனிடத்தில்,நான் சேரும்படி இலக்காக வைத்து, தேன் ஒழுகும் பூக்களால் ஆன அம்பினைத் தொடுக்க வேண்டும்."

"வெள்ளை, நுண், மணல் கொண்டு, தெருவணிந்து ":

ஆண்டாள், சத்வகுண பிரசுரனான சர்வேஸ்வரன் ஸ்ரீகிருஷ்ணரோடு தனக்கு ஏற்பட்ட சம்பந்தத்தால்,
சத்வ குண நிறமான வெண்மை, சுகுமாரனான எம்பெருமான் திருவடி களுக்கு ஏற்ற மென்மைஆகியவற்றை
யே அறிவார்.ஆதலால் தான் அறிந்த
வற்றை வைத்து,ரஜோ குணம் கொண்ட மன்மதனையும் விளிக்கிறார்.
அன்றிக்கே,அவனுடைய சௌகுமார்யத் தாலும்,வெள்ளையாய்,நுண்ணியதாய் இருக்கும் மணலால்,அவன் வரும் வழியை அலங்கரித்து !

"வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து":

கிழக்கு வெளுப்பதற்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி முடித்து.
"கீழ்வானம் வெள்ளென்று","நாட்காலே நீராடி"-என்று கிருஷ்ணரை நோக்கி
அதிகாலையில் எழுந்துநீராடிய வாசனையாலே,இவனை நோக்கிச் செய்கிறது.

"துறை படிந்து":

ஸ்ரீ பரதாழ்வார்,நந்திகிராமத்திலிருந்து,
ஸ்ரீராமரது பாதுகைகளை சிம்மாசன
த்தில் வைத்து நாடாண்ட காலத்தில்,
ராமரைப் பிரிந்த விரஹம் ஆறும்படி,மிக அதிகாலையில் எழுந்து சரயுவில் நீராடியபடி,கிருஷ்ணரைப் பிரிந்த ஆண்டாள் நீராடியது என்கிறார் பெரிய வாச்சான் பிள்ளை.

"முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து":

ஹோமம் வளர்ப்பதற்கான அக்னியில் சேர்ப்பதற்காக முள்ளும்,எறும்பும் இல்லாத சுத்தமான இளமையான சமித்துக்குச்சிகளால் மன்மதனை வேண்டி ஹோமம் செய்தது.
"சமித்தை அக்னியிலே போர மடுத்தனையும் கிருஷ்ணனை போர அணைக்கலாம் என்று இருக்கிறாள்"
"பெரியாழ்வார் பகவத் சமாராதான ரூபமாகச் செல்லும் அக்னி ஹோத்ர ஹோமத்துக்கு,வேண்டுவன எடுத்து கை நீட்டக் கடவள் இறே"இப்போது இவனுக்காகச் செய்கிறாளே என்று வியக்கிறார் பிள்ளை.

"முயன்று உன்னை நோற்கின்றேன் காம
தேவா !"

சீதாப்பிராட்டி போல,பெருமாளே கதி என்னும்படி, அவரே என்று அறுதி இட்டு இருக்கக் கடவ நான் இப்போது அவரைப் பெறுவதற்கு,உன் காலிலே விழுந்து படுகிற யத்னம் எல்லாம் கண்டாயே !

"கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு,கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி":

சாணையில் ஏற்றி கூர்மையாக்க வேண்டாமல்,எப்போதும் இலக்கை (விரும்பியவரைச் சேர்த்துவைப்பது) எய்தும்படி கூர்மையாக இருக்கும் மன்மத பாணத்தில்,மது/தேன் சொட்டுகின்ற புஷ்பங்களைத் தொடுத்துக் கொண்டு,
கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திருநாமத்தை அம்பிலே எழுதிக் கொண்டு.
அன்றிக்கே இதயத்திலே எழுதிக் கொண்டு என்றுமாம்.
ஒவ்வொரு மலராகத் தொடுத்து, ஒவ்வொரு திருநாமமாக எழுதி சஹஸ்ரநாம பாண அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுவுமாம்

"புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர் இலக்கினில் புக என்னை எய்க்கிற்றியே":

கொக்கு வடிவில் வந்த பகாசுரனுடைய வாயைக் கிழித்த விரோதி நிரசன சீலனான கண்ணபிரான் பக்கலிலே
நான் சென்று சேரும் படி பண்ண வேண்டும்.கர தூஷண யுத்தத்தில் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட காயங்கள் உடனே ஆறி மறையும்படி,சீதாப்பிராட்டி அவரை அரவணைத்தார்.அதைப் போல
நான் எம்பெருமானை அணைக்கும் படி பண்ண வேண்டும் என்று மன்மதனிடம் வேண்டுகிறார்.(ராமரைத் தாக்கியவை வலிமையான போர் அம்புகள்.ஆனால் கிருஷ்ணரைத் தாக்குவது,வலிமையான பக்தியைப் பறை சாற்றும், மென்மையான
மலர்க்கணைகள் !)

3."மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு,முப்போது முன்னடி வணங்கி,
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து,உன்னை வைதிடாமே,
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு,கோவிந்தன் என்பதோர் பேரெழுதி,
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே !"

விளக்கவுரை :

"மன்மதனே ! காலை,பகல்,மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், ஊமத்தம்பூவை யும் முருக்கம்பூவையும் உன் திருவடியில் போட்டு வணங்கி நோன்பு நோற்றேன்.
நீ தத்துவம் இல்லாதவன்; நீ பொய்யன் என்று நான் நெஞ்சு கொதித்து, என் வாயினால் உன்னை வையாதபடி நீயே பார்த்துக் கொள். கொத்துக் கொத்தாகப் பூக்களை அடக்கிய மலர்க்கணையைத் தொடுத்து, கோவிந்தன் எனும் பெயரை இதயத்தில் எழுதிக்கொண்டு, வியக்கத் தக்க வித்தகனாகிய வேங்கடவாணன் ஆகிய விளக்கினில் நான் புகும்படி நீயே செய்யவேண்டும்"

"மத்த நன்னறு மலர்முருக்க மலர் கொண்டு":
ரஜோ குண பிரசுரனான மன்மதனுக்கு அநுரூபமாக இருக்கும்படி மதகரமான புஷ்பங்களான ஊமத்தம்பூ,முருக்கம்பூ
(பலாசமரப் பூ) கொண்டு.
உயர்ந்த, தூய்மையான, சாத்வீகமான திருத்துழாய் பறிக்கும் குடியில் பிறந்தவள் இறே இப்போது இவனுக்கு இவற்றைத் தேடுகிறாள் !

"முப்போது முன்னடி வணங்கி"

ஒரு பொழுதில் தொழுகை செய்தாலே மிகையாக எண்ணும் கண்ணபிரானைப் பற்றிய ஆண்டாள், கால ஷேப அர்த்தமாகவும்,ஸ்வயம் போக்யமாகவும் –
பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்த ஆண்டாள் இப்படி இவனை. காலை,மதியம்,மாலை என்று திரி சந்தியும் தொழ வேண்டி வந்ததே.

"தத்துவமிலி என்று நெஞ்செரிந்து,
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே"

இவனை ஆஸ்ரயித்தால் பெருவதொரு பலம் இல்லை என்றும்,இவன் பொய் சொல்பவன் என்றும் நெஞ்சு கொதித்து, வாயாலே வசைபாடி பலரும் அறியும் படி வைதிடாமல் இருக்க வேண்டுமானால் தம் பிரார்த்தனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.

அந்த எம்பெருமானையே பலவாறும் வைதவர் அல்லவா ஆண்டாள்--
"தருமம் அறியாக் குறும்பன்", "பொருத்தமிலி"
"புறம்போல் உள்ளும் கரியான்"
"ஏலாப் பொய்கள் உரைப்பான்"
"பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்" என்றெல்லாம் ! அப்படியிருக்க மன்மதனை எப்படியெல்லாம் வைய நேரிடும் என்பதை அவன் உணர்ந்து உடனே செயலாற்ற வேண்டும் என்று பயமுறுத்துகிறது.

"கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு"

நூறும்,பத்தும்,ஆயிரமுமாக ஸ்ரீராமச்
சந்திரப் பெருமாள் திருச்சரங்களைத் தொடுத்து விடுமா போலே(தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல),நீயும் கொத்து கொத்தான புஷ்பங்களைத் தொடுத்துக் கொண்டு.

:கோவிந்தன் என்பதோர் பேரெழுதி"

எங்களுடைய ரஷணத்துக்கு என்றே முடி சூடி இருக்கிறவனுடைய,திருநாமத்தை நெஞ்சிலே எழுதிக்கொண்டு
கோ= கோபர்கள்/அடியார்கள் /பூமண்டலம்/வாக்கு
விந்தன்= ரக்ஷிப்பவன்.
கோவர்த்தன கிரியைச் சுமந்து கோக்களையும்/கோபாலர்களையும் ரக்ஷித்ததால்,இந்திரன் கோவிந்த பட்டாபிஷேகம் செய்து,'கோவிந்தன்'
என்னும் முடிசூட்டிய வைபவம்.

"வித்தகன் வேங்கட வாணன் என்னும்"

பரம பதத்தில் நித்ய சூரிகள் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்திருக்க,
பரமபதநாதன் அவ்விருப்பை விட்டு,
கானமும், வானரமும், வேடரும் இருக்கும் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் !
வானரமும்,யானையும் திருவிளக்கு இடுவதையும், திருவாராதனம் பண்ணுதையும் ஏற்று உகந்திருக்கும்
வித்தகன் !

"வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே !"

பரம பதத்தில் எம்பெருமானின் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது (பிரகாசமாக ஒளிர வாய்ப்பில்லாமல்);
திருமலையிலே வந்து நின்ற பின்பே
ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து(அடியார்கள் வேண்டும் வரங்களை அருளிதரும் உகப்பால்,
பிரகாசம் கூடிக்கொண்டே இருக்கிறது).

குன்றத்தில் இட்ட விளக்காய் அருளொளி வீசும்,"வேடார் திருவேங்கடம் மேய விளக்கே" என்னும்படியான,அந்த விளக்கில் புகும்படி என்னை விதிக்க வேண்டும்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1626665168262.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 4)

4."சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் ! காம தேவா !
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே" (1-4)

விளக்கவுரை :

காமதேவனே, சுவற்றில் புராணனான (பல காலமாக இருந்துவருபவன் - புராணன்) உன் பெயரை எழுதி வைத்தேன். உனது கொடியான சுறா மீன் கொடிகளையும், உன் வாகனமான குதிரைகளையும் (துரங்கங்கள்) , சாமரம் வீசும் பெண்களையும் (கவரிப் பிணாக்கள்), கரும்பு வில்லையும் உனக்குக் காட்டிக்கொடுத்தேன். என் இளமைப் பிராயம் தொட்டே, கண்ணபிரானையே (துவரைப் பிரானுக்கே) நினைத்து வளர்ந்து வந்தேன். அவ்வாறே என் முலைகளை-பக்தியை- அந்தக் கண்ணனுக்கே என்று சங்கல்பம் செய்துகொண்டேன். விரைவில் எனது ஆசைகளை (கண்ணனை அடைய வேண்டும்) நிறைவேற்றித் தரவேண்டும்.

சுவரில் புராண நின் பேர் எழுதிச்:

கண்ணனை அடையவேண்டும் என்னும் ஆர்த்தியாலே,மன்மதனை வேண்டிய ஆண்டாள்,கிருஷ்ணரை ஸ்மரித்தவாறே இவனை மறக்கக் கூடுமே! அப்படி மறக்காமல் இருக்க, மிக நெடுங்காலமாக வழங்கி வரும்(புராண),அவன் பெயரை நன்கு விளங்குமாறு ஒரு சுவரில் எழுதி வைத்தது.கண்ணன் எம்பெருமான் திருநாமங்களை 'வாயினால் பாடி',
'பாடிப் பறை கொண்ட' ஆண்டாள் இவன் நாமத்தை எழுதிப் பாட வேண்டிய தாயிற்றே !
அன்றிக்கே "புராண"என்பது,
பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன்(சிவன்-பார்வதி) என்னவுமாம் !

சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும்!

சுறவ--ஒரு வகை மீன்.
துரங்கம்--குதிரை
கருடத்வஜனோடே(கருடக்கொடி கொண்ட கிருஷ்ணர்) வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –
மகரத்வஜனை(மீன் கொடி கொண்ட மன்மதன்) நினைக்கும்படியாய் வந்து விழுந்ததது
துரங்கங்களும் :
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து,இவனுடைய குதிரைகளை நினைத்திருப்பது !

கவரிப் பிணாக்ககளும்--காமதேவனுக்கு சாமரம் வீசும் பிணாக்கள் என்னும் பெண்கள்.பரமபத நாதனுக்கு சாமரம் வீசும் 'விமலா'என்னும் ஸ்தரீகளை, ஸ்மரிப்பதைத் தவிர்த்து,இவனுக்கு சாமரம் இடுகிற 'பிணாக்களை' அல்லவா நினைக்கிறது.

கருப்பு வில்லும்:
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து காமதேவனின் கரும்பு வில்லை யாய்த்து நினைக்கிறது.

காட்டித் தந்தேன் கண்டாய் :
தன் நெஞ்சில் படிந்தவற்றை அவனுக்கு அறிவித்தார்."வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள்"

காம தேவா-
"அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை "--புராணப்படி மன்மதன் திருமாலின் குமாரன்.எனவே பூமிப்பிராட்டி ஆண்டாள் கிருஷ்ணரை மணம் புரிவதால்,அவன் ஆண்டாளுக்கும் மகன் ஆகிறானே !

அவரைப் பிராயம் தொடங்கி –
(அவரை)விதை விதைத்த பருவம்/பிராயம் தொடங்கி--ஆண்டாள் பிறந்தது முதலே.அன்றிக்கே சிறு பிராயம் தொடங்கியே, கிருஷ்ணராகிய அவரையே நெஞ்சில் வரிந்து என்னவுமாம்.

என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-

எப்போதும் கண்ணனை ஆதரித்து வணங்கி,அவ்வாதரமே எருவாக வளர்ந்து,அளவுகடந்த பக்தியால் உண்டு பெருத்த முலைகளை (ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பக்திப் பிரவாகத்துக்கு முலைகள் உருவகப் படுத்தப்படுகின்றன)

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்,
தொழுது வைத்தேன்:

துவரை நகர் அதிபதி--துவாரகையின் ஈசன் கண்ணுனுக்காக என்று சங்கல்பித்து பக்தி பூண்டு,அவன் குணங்களையே போற்றும் இந்தப் பக்திப்பிரவாகம் என்னும் குணத்தைத் தொழுது வைத்தேன்.

ஒல்லை விதிக்கிற்றியே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே;
இனி என் செவ்வி அழிவதற்கு முன்பே அவரிடம் சேர்க்க வல்லையே !!

5."வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே (1-5)


விளக்கவுரை:

ஆண்டாளின் தீவிர பக்தி இந்தப் பாட்டில் தெரிகிறது. வானுலகில் வாழும் தேவர்களுக்கென்று, அந்தணர்கள் செய்து வைத்த அவிசு-ஹவிஸ்- ஆனதை, காட்டில் திரியும் நரியானது, யாகம் செய்யும் இடத்தில் புகுந்து, முகர்ந்து பார்ப்பது போல, தன் விஷயத்தில், கையில் சங்கு சக்கரம் வைத்துள்ள உத்தமனுக்கு என்று வளர்ந்த மார்பகத்தை, மானிடர் எவருக்கேனும் என்று யாராவது பேசினார்கள் என்றால் (அதாவது தன்னை நாரணனுக்கு அல்லாது மற்ற எவருக்கேனும் மனம் முடித்துக் கொடுத்தால்) அந்த நொடியிலேயே அவள் உயிர் அவளை விட்டுச் சென்றுவிடும் என்கிறாள்.

வானிடை வாழும் அவ்வானவர்க்கு-
போக பூமியான, சொர்க்க லோகத்தில் வர்த்திக்கக் கடவராய் -விலஷண ஜன்மாக்களாய் இருக்கிற தேவர்களுக்கு.

மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப:

இங்கு உள்ள வேதம் படித்த அந்தணர்கள் தேவர்களுக்குத் தாம் செய்யும் யாகங்களில் உண்டாக்கின ஹவிஸ்- பிரசாதத்தை,மனித நடமாட்டம் இல்லாத காட்டிலே சஞ்சரிப்பதொரு நரி/நாய் போன்ற விலங்கினம் வந்து,அவற்றை
மோப்பம் பிடித்து/முகர்ந்து பார்த்து/,வாய் வைத்து/ அந்தப் பதார்த்தங்கள்,
தேவர்களுக்குப் படைக்க முடியாதபடி
தூஷிப்பது போலே

ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று,
உன்னித்தெழுந்த என் தடமுலைகள்:

வெறும் புறத்திலே ஆலத்தி(கண் திருஷ்டி போகச் செய்யும் திருவந்திக்
காப்பு) வழிக்க வேண்டி இருக்கிற அழகிய திரு மேனியிலே,திருவாழி
யையும் ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும் தரித்து இருப்பானாய்,அவ்வழகு, தன்னைப் பிறருக்கு என்று இருக்கையாலே உத்தமனாய் இருக்கிறவனுக்கு என்று அனுசந்தித்து,அவ்வனுசந்தானமே நீராக வளர்ந்த என் முலைகள்.

மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய்:

எம்பெருமானுக்கும் தெரியாமல்,
எனக்கும் தெரியாமல்,ஒரு சாதாரண மானிடனுக்கு,என்னை மணம் முடித்து வைப்பதாக நாட்டிலே யாராவது பேசினாலும்,அது என் காதில் விழாவிட்டாலும்,அப்படி ஒரு பேச்சு வந்தாலே,அது பொறுக்காமல் நான்
உயிரை விடுவேன் என்று தெரிந்து கொள்வாய்.

ராவணன் ஸ்ரீராமரின் மாயா சிரசைக் காட்டிய போது,சீதாப்பிராட்டி கலங்காமல் உயிர் துறக்காமல் இருந்ததற்குக் காரணம் ஸ்ரீராமர் உயிருடன் இருந்தார் என்பதே.ஸ்ரீராமர் இருந்தால் பிராட்டி இருப்பார்.இல்லையென்றால் இருக்க மாட்டார்.அது போலவே ஆண்டாள் தன்னைக் கண்ணனுக்காகவே வரித்து இருந்தார்; அதற்கு அபச்சாரம் ஏற்படும்படி,அவர் அறியாமலே வேறு யாரேனும் ஆண்டாளை மானிடர் ஒருவருக்கு மணம் முடிக்கலாம் என்று சும்மா,ஒரு பேச்சுக்கேனும் சொன்னாலும் பிராட்டி உயிர் தரிக்க மாட்டார்

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
ஸ்ரீவில்லிபுத்தூர்:
1.ஆண்டாள் சூடிக்களைந்த மாலையைச் சூட்டிக்கொண்ட வடபத்ர சாயி.
2.ஆண்டாள்.

1626752861707.png


1626752870458.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 5)

6."உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு,வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா !
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் (1-6)

விளக்கவுரை:

"காமதேவனே !
அழகிய உருவம் உடையவர்கள்,
இளையவர்கள், நல்லவர்கள், சாத்திரங்களில் வல்லுனர்கள்-- இவர்களின் துணைகொண்டு, பங்குனி மாதப் பெரிய திருநாளில் விடியற்காலை யில்,நீ இருக்கும் இடத்தில் வந்து
உன்னை வணங்குகின்றேன்.
கரிய உடை அணிந்தது போல் உள்ள மேகம் போன்ற வண்ணம் உடையவனும்,
காயாம்பூ போன்றவனும், கருவிளை என்னும் காக்கணப்பூ போன்ற வண்ணம் உடையவனுமான,அந்தக் கண்ணனது தாமரை போன்ற முகத்தில் உள்ள திருக்கண்களால் என்னை நோக்கச் செய்ய வேண்டும்,என்பதற்காக"

உருவுடையார்,இளையார்கள், நல்லார், ஒத்து வல்லார்களைக் கொண்டு:

அழகிய வடிவுடையாராய்,இளையவராய்
விருத்தவான்களாய்,காமனைப் பாடும் காம சூத்ரம் கற்று வல்லவராய்
இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு.

கண்ணனைச் சேவிக்கச் செல்லும் போது,சொரூபரூப குண நலன்கள் உடைய,வேதம் வல்லார்கள் ஆழ்வார்
களின் அருளிச்செயல் வல்லார்களை முன்னாகக் கொண்டு செல்வர்.ஆனால் காமனிடம் வேண்டிச் செல்லும் போது,
அவன் இயல்புக்குத் தகுந்தவர்களை முன் நிறுத்தினால் தானே அவன் மகிழ்வான்.

"நிஷ்டர் பகவத் குண அநுபவம் பண்ணி,
சத்வ ,போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு சாத்விகரைக் கூடக் கொண்டு இழியுமா போலே,
ரஜோ குண பிரசுரமானவனை(காமன்) ஆஸ்ரியைக்கு அதிலே தேசிகரைக்
(கற்றறிந்தவர்கள்) கொண்டு இழிகிறாள்"
(பெரிய வாச்சான் பிள்ளை)

வைகல் தெருவிடை எதிர் கொண்டு:
நாள் தோறும் மன்மதன் வருகிற வழியிலே எதிர் கொண்டு

பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன்:

பங்குனி மாதப் பெரிய திருநாளிலே கலங்காதே, தெளிந்து இருந்து, உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை(தணியாத ஆர்வம்).
கண்ணனை நோக்கும் போது நெஞ்சு கலங்கி,இளகி,பரிவுகொண்டு,தெளிவில்லாமல் இருக்கும்.அங்கு எம்பெருமானை நோக்குவது/சேவிப்பதே பலம்.ஆனால் இவனிடம் காரியம் ஆக வேண்டுமே !
கலங்காமல் திருந்த நோக்கி இருந்தால் தானே சாதிக்க முடியும் !

கருவுடை முகில் வண்ணன் :

நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்,
"எல்லாம் பட்டும் பெற வேண்டும் படி அன்றோ அவன் வடிவு படைத்த படி"

காயா வண்ணன்:

நெஞ்சிலே பட்ட இருள்--கொதிப்பைத் தணித்து குளிரவைக்கும் வண்ணம் மைப்படி மேனியான்.

கருவிளை போல் வண்ணன்:

கண்டார் கண்ணுக்கு நெய்த்து--பள,பள
வென்று ஒளியும் கண்ணின் வண்ணம் உடையவன்.

கமல வண்ணத் திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய்:

தாமரையின் நிறம் போலே, இருக்கிற காந்தியை உடைத்தான திருமுகத்தில் உண்டான திருக் கண்களாலே,
கண்ணபிரான் விசேஷ கடாஷம் பண்ணும் படியாக அருள்வாய்.

சோலை பார்வை என்னும், பொதுவான சமுதாய பார்வையாக அல்லாமல்,என் அவயவங்கள் தோறும் அவர் கடாஷித்து அருள வேண்டும்.நம் ஆற்றாமைக்காக நோக்காமல்,அவரது ஆற்றாமை தீரும்படி நோக்கும்படி பண்ணுவாயாக.அவர் போக்யமாக உகந்து அநுபவிக்கும்படி !

7.காயுடை நெல்லொடு, கரும்பு அமைத்துக், கட்டி,அரிசி,அவல் அமைத்து,
வாயுடை மறையவர் மந்திரத்தால், மன்மதனே ! உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்,
சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே(1-7)

விளக்கவுரை:

மன்மதனே! காய்களோடு, பசுமையான நெல், கரும்பு, கரும்புக்கட்டி (வெல்லம்), அரிசி, அவல் இவற்றைக் கொண்டு சுவையான பதார்த்தத்தைச் சமைத்து, உனக்குப் படைத்து, நல்ல வாக்கு வன்மையுடைய, வேதம் ஓதும் அந்தணர்களை மந்திரம் சொல்ல வைத்து உன்னை வணங்குகிறேன். முன்பொருநாள் உலகை(தேயம்-தேசம்)அளந்தவனான திரிவிக்ரமன் தன் திருக்கைகளால் எனது ஒளியுடைய வயிற்றையும், மென்மையான மார்பையும் தீண்டும் வண்ணம் நீ செய்ய வேண்டும். அவ்வாறு செய்து, எனக்கு அப்பேறு கிட்டினால், இவ்வுலகில் நான் மிகுந்த புகழோடு இருப்பேன்"

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து:

ரஜோ குண பிரசுரனான மன்மதனுக்குப் பிடிக்கும், பதார்த்தங்களைத் தந்து வணங்குதல்.பால் மாறாத பசுங்காய் நெல்லோடு கூட,கரும்பும் வைத்து,
கரும்பு வெல்லம்(கட்டி) -பச்சரிசியோடு சமைத்து,அவலும் சேர்த்துப் படைத்தல்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனுக்கு,
பால்சோறு மூட,நெய் பெய்து நைவேத்யம்
செய்த ஆண்டாள்,இவனுக்கு இத்தனை செய்கிறார் !!

வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்:

நல்ல ஸ்வரத்தை(ஸ்பஷ்டமான உச்சரிப்பு,
கேட்பதற்கு இனிமையாகச் சொல்லுதல்)
உடையராய் இருக்கிற மறையவர் உண்டு.
அதில் மிகச் சிறந்தவர்களைக் கொண்டு மந்திரம் சொல்ல வைத்து, உன்னை ஆஸ்ரயிக்கிறேன்-

தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்:

வாமன மூர்த்தியாய்த் தோன்றி,
நெடிது, உயர்ந்து,வளர்ந்த, திருவிக்கிரமப் பெருமான், உலகோர் அனைவரையும்,அசேதனங்களையும்
வரையறை இன்றி,அனைத்தையும்
தம் திருவடிகளால் தீண்டி அநுக்ரஹம் செய்தார்.அவர் தம் திருக்கைகளால் என்னைத் தீண்ட வேண்டும்.திருவடி ஸ்பரிசம் அனைவருக்கும் கிடைத்தது.
ஆனால் ஆண்டாள் அனைவரையும் போலவா?

ஒருத்தி மகனாய்ப் பிறந்து,
ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணபிரானைத் தன் பூமாலையாலும்,பாமாலையாலும் விலங்கிட்டுக் கட்டிய "ஒரே ஒருத்தி" ஆயிற்றே ! ஆதலால் திருக்கை ஸ்பரிசம்
ஏற்படும்படி செய்ய வேண்டும்.

சாயுடை வயிறும், என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே:

ஒளியை உடைத்தான மென்மையான வயிறும்,கண்ணனுக்கு ஆட்செய்த பக்தியால் திளைத்த மார்பும்,அவர் ஸ்பரிசத்தால் நிலைத்த புகழைப் பெயும்.(ஆண்டாளின் கிருஷ்ண பக்தி கிருஷ்ணரே அநுபவித்து முடிக்க முடியாத தன்மையானது).
"அவன் திருக்கையாலே தீண்டுகையே நிலை நின்ற புகழ் !"
திருப்பாவையியில் கிடைத்த "நாடு புகழும் பரிசு"(களை) விட,மிக,மிக உயர்ந்ததான எம்பெருமானது திருக்கை தீண்டல் "தரணி முழுதும் புகழும் பரிசு" !!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.கமல வண்ணத் திருவுடை முகம்.
2.திரிவிக்ரம பெருமாள்.
3.காயாம் பூ.
4.கருவிளை--சங்குப் பூ.
5.காயுடை நெல்.


1626877671180.png

1626877678805.png

1626877685614.png

1626877691573.png

1626877697745.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 6)

8."மாசுடை உடம்போடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு,
தேசுடைத் திறலுடைக் காமதேவா ! நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்,
பேசுவது ஒன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்,
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய்(1-8)


விளக்கவுரை :

பிரிந்தாரை சேர்த்து வைக்கும் தேசு(தேஜஸ்),அவர்களின் விரோதிகளை ஒழித்து சேர்த்து வைக்கும் மிடுக்குடைய எம்பெருமான் காமதேவா !
அழுக்கேறிய உடம்புடனும், எண்ணெய் கூடத் தேய்க்காமல் சரியாக வாராத தலையுடனும், ஒருவேளை உணவு உண்டு மெலிந்து,சிவந்த இதழ்கள் வெளுத்திருக்கின்ற நான், உன்னை நோக்கி நோன்பு இருக்கின்றேன் என்பதை,மனதில் குறித்துக் கொள் !
என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும் வண்ணம் கேசவநம்பியின் மணவாட்டி ஆகி அவனுக்குச் சேவை செய்வாள் என்னும் பெரும் பேற்றை எனக்கு அருள்வாயாக !

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு:

நாளும் அதிகாலையில் எழுந்து குளித்து ஆச்சாரமாக இருக்கும் ஆண்டாள்,
"சுரும்பார் குழல் கோதை" என்னும்படி நீண்ட,சுருளான,கருமையான கூந்தலையுடைய,கொண்டை முடி அலங்காரத்திற்கே பெயர் பெற்ற ஆண்டாள்,
தன் தலைமுடியில் சூட்டிய பூமாலையை
எம்பெருமானுக்குத் தந்த சுடர்க்கொடி--
இங்கே இவனை நோக்கி உக்கிரமாக/தவமாக--குளிக்காமல்,அதனால் அழுக்கேறிய உடம்புடன்,தலைக்கு எண்ணெயிட்டு வாராமல் வறண்ட கூந்தலுடன்,ஒரு நேரமே உணவு கொள்வதால் மெலிந்த தேகத்துடன்,
காய்ந்து போய் வெளுத்திருக்கும் வாயுடன்(தாம்பூலம் இடாமல்) நோன்பிருக்கிறார் என்றால் பலத்தின் அவசியத்தையும்,நோன்பின்/விரதத்தின் தீவிரத்தையும் குறிக்கிறது.
"இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் நசையாலே,சத்தை கிடக்க வேண்டும் அளவாய்த்து உஜ்ஜீவிப்பது "

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் !
பேசுவது ஒன்று இங்கு உண்டு:

நோற்கின்ற என்னும் நிகழ் காலப் பிரயோகம், இடை விடாமல் நோற்கின்ற தொடர் நோன்பையும், நோன்பின் தீவிரத்தையும் சொல்கிறது.ஆதலால் இதன் தீவிரத்தை உணர்ந்து,தனக்கு மன்மதன் கடன்பட்டிருக்கிறான்;
கண்ணனுடன் உடனே சேர்த்து வைத்தால் மட்டுமே அவன் பட்ட கடனைத் தீர்க்க முடியும் என்று உணர்த்துகிறார்.

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்:

என் சத்தை(ஜீவாத்மாவின் லட்சியம்/குறிக்கோளான எம்பெருமான் திருவடிகளில் சேர வேண்டும்) ,தலைமை பெருவதொரு பிரகாரம் ,விரோதி நிரசன சீலனாய்,கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிற எம்பெருமானின் திருவடிகளில் புகல் அடைவதான, ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணுவாய் !

பரமாத்மா ஒருவரே ஒரே சிறந்த ஆண்மகன்; புருஷோத்தமன்.மற்ற ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண் தன்மையுடையவர்களே.எனவே ஆண்டாள் பெண்ணான தன்னைச் சேர்க்க வேண்டினாலும்,
"பெண்மையைத் தலையுடைத்தாக்கும்"
என்பது அனைத்து ஜீவர்களின் பெண்மையையும்,அனைவரையும் அவர் திருவடியில் சேர்த்து உஜ்ஜீவிக்க வேண்டியதையும் குறிக்கிறது.

கேசவ நம்பியைத் கால் பிடிப்பாள்:

கேசவன்--குதிரைவடிவில் வந்த கேசி என்னும் விரோதி அரக்கனைக் கொன்றதால் விரோதிநிரசனம்.
நம்பி--கல்யாண குளங்களில் பூரணன்.

சென்ற பாசுரத்தில்,"திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்"என்றவர்,
"கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்" என்கிறாரே இங்கு? திருவடியில் புகுவது தானே இறுதி லட்சியம்/பலன்.கைகளால் தீண்ட ஆசைப்பட்டாலும்,
"முதலில் இருந்து,முதலான திருவடிகளை யே அடைந்து கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநுரூபமான பரமபுருஷார்த்தம்"
அவ்வாறே அரங்கனின் திருவடிகளில் ஒன்றினார் கோதை நாச்சியார் !

9."தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் !
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே, பணி செய்து வாழப் பெறா விடில் நான்,
அழுது அழுது அலமந்து, 'அம்மா' வழங்க ஆற்றவும் அதுவுனக்கு உறைக்கும் கண்டாய் !
உழுவது ஓர் எருத்தினை, நுகங்கொடு
பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே" (1-9)


விளக்கவுரை :

"மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது,உன் திருவடி வணங்கித் தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன்; எந்தக் குறையுமின்றி பார் முழுதும் சூழ்ந்த கடல் வண்ணன், கண்ணனுக்கே பணி செய்து வாழும் பாக்கியம் பெறாவிடில், நான் அழுது அழுது தடுமாறிப் போய், 'அம்மா' என அரற்ற, மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவு வலிக்கும் கண்டாய் !.
உழுகின்ற எருதினை ஏர் பிடித்த நுகம் கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து அதற்கு உணவு கொடுக்காமல் ஒதுக்கினாப் போல பாவம் உனக்கு வரும்."

தொழுது முப்போது உன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்:

"சத்வ நிஷ்டராய் இருப்பார் சமாராதன காலங்களில் அவகாஹனம் பண்ணி
சமாராதனம் தலைக் கட்டின அநந்தரம்
திருவடிகளிலே விழுந்து,நான் தொடங்கின சமாராதானம் தலைக் கட்டினேன்;திரு உள்ளத்துக்கு பாங்கான படியே போது போக்கி அருள வேணும் -என்று ஸ்தோத்ர ரூபமான வற்றை விண்ணப்பம் செய்யுமா போலே
அவற்றை எல்லாம் இவன் பக்கலிலே செய்கிறாள்".திருவாராதனை முடியும் சமயம் சாற்றுமறைப் பாசுரங்களைப் பாடி
எம்பெருமான் திருவாராதனையை உகந்து ஏற்று அருள வேண்டும் என்பது போல,இந்தப் பதிகத்தின் இறுதிக்கு வந்த பிராட்டி சாற்றுமறைப் பாசுரமாக இதைக் கொள்ளலாம்.

பழுதின்றிப் :

"ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி,வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்" என்னும்படி
ஒரு பழுதும் இல்லாமல் எம்பெருமானு க்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.

பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்:
பாருலகைச்,சூழ்ந்த கடல் போலே இருக்கிற கருநீலநிறம் உடையவனுக்கே அடிமை செய்து வாழ முடியாவிட்டால் .

அழுது அழுது, அலமந்து,'அம்மா' வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் :

நான் அழுது அழுது ,தடுமாறி விழுந்து,
"அம்மா,அம்மா" என்று அழுது அரற்றிக் கொண்டு,(வாழ்க்கை வெறுத்து) திரிந்து
அலைந்து கொண்டிருப்பது உனக்கு உறைக்கும் பார்த்துக் கொள்
"சரணா கதனை நோக்கா விட்டால்
இவனுடைய பாபபலத்தை அவன் அநு பவித்து,அவனுடைய ஸூஹ்ருத பலம் இவன் பக்கலிலே வருவதாக சொல்லா நின்றது இறே"

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு,
பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே:

ஒருவன் தனது,நிலத்தை உழுவதற்கு எருத்தை நன்றாகப் பயன்படுத்தி வேலை வாங்கிக் கொண்டு, பின்னர் அதனை,
அந்த நுகத்தடியாலேயே நெட்டித்தள்ளி,
அதற்குத் தீவனம் இடாமல் விரட்டி அடிப்பது போல இருப்பது, உனது அலட்சியப் போக்கு, என்று மன்மதனை எச்சரிக்கிறார் ஆண்டாள்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)


1626878658377.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 6)

8."மாசுடை உடம்போடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு,
தேசுடைத் திறலுடைக் காமதேவா ! நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்,
பேசுவது ஒன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்,
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய்(1-8)


விளக்கவுரை :

பிரிந்தாரை சேர்த்து வைக்கும் தேசு(தேஜஸ்),அவர்களின் விரோதிகளை ஒழித்து சேர்த்து வைக்கும் மிடுக்குடைய எம்பெருமான் காமதேவா !
அழுக்கேறிய உடம்புடனும், எண்ணெய் கூடத் தேய்க்காமல் சரியாக வாராத தலையுடனும், ஒருவேளை உணவு உண்டு மெலிந்து,சிவந்த இதழ்கள் வெளுத்திருக்கின்ற நான், உன்னை நோக்கி நோன்பு இருக்கின்றேன் என்பதை,மனதில் குறித்துக் கொள் !
என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும் வண்ணம் கேசவநம்பியின் மணவாட்டி ஆகி அவனுக்குச் சேவை செய்வாள் என்னும் பெரும் பேற்றை எனக்கு அருள்வாயாக !

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு:

நாளும் அதிகாலையில் எழுந்து குளித்து ஆச்சாரமாக இருக்கும் ஆண்டாள்,
"சுரும்பார் குழல் கோதை" என்னும்படி நீண்ட,சுருளான,கருமையான கூந்தலையுடைய,கொண்டை முடி அலங்காரத்திற்கே பெயர் பெற்ற ஆண்டாள்,
தன் தலைமுடியில் சூட்டிய பூமாலையை
எம்பெருமானுக்குத் தந்த சுடர்க்கொடி--
இங்கே இவனை நோக்கி உக்கிரமாக/தவமாக--குளிக்காமல்,அதனால் அழுக்கேறிய உடம்புடன்,தலைக்கு எண்ணெயிட்டு வாராமல் வறண்ட கூந்தலுடன்,ஒரு நேரமே உணவு கொள்வதால் மெலிந்த தேகத்துடன்,
காய்ந்து போய் வெளுத்திருக்கும் வாயுடன்(தாம்பூலம் இடாமல்) நோன்பிருக்கிறார் என்றால் பலத்தின் அவசியத்தையும்,நோன்பின்/விரதத்தின் தீவிரத்தையும் குறிக்கிறது.
"இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் நசையாலே,சத்தை கிடக்க வேண்டும் அளவாய்த்து உஜ்ஜீவிப்பது "

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் !
பேசுவது ஒன்று இங்கு உண்டு:

நோற்கின்ற என்னும் நிகழ் காலப் பிரயோகம், இடை விடாமல் நோற்கின்ற தொடர் நோன்பையும், நோன்பின் தீவிரத்தையும் சொல்கிறது.ஆதலால் இதன் தீவிரத்தை உணர்ந்து,தனக்கு மன்மதன் கடன்பட்டிருக்கிறான்;
கண்ணனுடன் உடனே சேர்த்து வைத்தால் மட்டுமே அவன் பட்ட கடனைத் தீர்க்க முடியும் என்று உணர்த்துகிறார்.

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்:

என் சத்தை(ஜீவாத்மாவின் லட்சியம்/குறிக்கோளான எம்பெருமான் திருவடிகளில் சேர வேண்டும்) ,தலைமை பெருவதொரு பிரகாரம் ,விரோதி நிரசன சீலனாய்,கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிற எம்பெருமானின் திருவடிகளில் புகல் அடைவதான, ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணுவாய் !

பரமாத்மா ஒருவரே ஒரே சிறந்த ஆண்மகன்; புருஷோத்தமன்.மற்ற ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண் தன்மையுடையவர்களே.எனவே ஆண்டாள் பெண்ணான தன்னைச் சேர்க்க வேண்டினாலும்,
"பெண்மையைத் தலையுடைத்தாக்கும்"
என்பது அனைத்து ஜீவர்களின் பெண்மையையும்,அனைவரையும் அவர் திருவடியில் சேர்த்து உஜ்ஜீவிக்க வேண்டியதையும் குறிக்கிறது.

கேசவ நம்பியைத் கால் பிடிப்பாள்:

கேசவன்--குதிரைவடிவில் வந்த கேசி என்னும் விரோதி அரக்கனைக் கொன்றதால் விரோதிநிரசனம்.
நம்பி--கல்யாண குளங்களில் பூரணன்.

சென்ற பாசுரத்தில்,"திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்"என்றவர்,
"கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்" என்கிறாரே இங்கு? திருவடியில் புகுவது தானே இறுதி லட்சியம்/பலன்.கைகளால் தீண்ட ஆசைப்பட்டாலும்,
"முதலில் இருந்து,முதலான திருவடிகளை யே அடைந்து கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநுரூபமான பரமபுருஷார்த்தம்"
அவ்வாறே அரங்கனின் திருவடிகளில் ஒன்றினார் கோதை நாச்சியார் !

9."தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் !
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே, பணி செய்து வாழப் பெறா விடில் நான்,
அழுது அழுது அலமந்து, 'அம்மா' வழங்க ஆற்றவும் அதுவுனக்கு உறைக்கும் கண்டாய் !
உழுவது ஓர் எருத்தினை, நுகங்கொடு
பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே" (1-9)


விளக்கவுரை :

"மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது,உன் திருவடி வணங்கித் தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன்; எந்தக் குறையுமின்றி பார் முழுதும் சூழ்ந்த கடல் வண்ணன், கண்ணனுக்கே பணி செய்து வாழும் பாக்கியம் பெறாவிடில், நான் அழுது அழுது தடுமாறிப் போய், 'அம்மா' என அரற்ற, மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவு வலிக்கும் கண்டாய் !.
உழுகின்ற எருதினை ஏர் பிடித்த நுகம் கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து அதற்கு உணவு கொடுக்காமல் ஒதுக்கினாப் போல பாவம் உனக்கு வரும்."

தொழுது முப்போது உன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்:

"சத்வ நிஷ்டராய் இருப்பார் சமாராதன காலங்களில் அவகாஹனம் பண்ணி
சமாராதனம் தலைக் கட்டின அநந்தரம்
திருவடிகளிலே விழுந்து,நான் தொடங்கின சமாராதானம் தலைக் கட்டினேன்;திரு உள்ளத்துக்கு பாங்கான படியே போது போக்கி அருள வேணும் -என்று ஸ்தோத்ர ரூபமான வற்றை விண்ணப்பம் செய்யுமா போலே
அவற்றை எல்லாம் இவன் பக்கலிலே செய்கிறாள்".திருவாராதனை முடியும் சமயம் சாற்றுமறைப் பாசுரங்களைப் பாடி
எம்பெருமான் திருவாராதனையை உகந்து ஏற்று அருள வேண்டும் என்பது போல,இந்தப் பதிகத்தின் இறுதிக்கு வந்த பிராட்டி சாற்றுமறைப் பாசுரமாக இதைக் கொள்ளலாம்.

பழுதின்றிப் :

"ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி,வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்" என்னும்படி
ஒரு பழுதும் இல்லாமல் எம்பெருமானு க்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.

பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்:
பாருலகைச்,சூழ்ந்த கடல் போலே இருக்கிற கருநீலநிறம் உடையவனுக்கே அடிமை செய்து வாழ முடியாவிட்டால் .

அழுது அழுது, அலமந்து,'அம்மா' வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் :

நான் அழுது அழுது ,தடுமாறி விழுந்து,
"அம்மா,அம்மா" என்று அழுது அரற்றிக் கொண்டு,(வாழ்க்கை வெறுத்து) திரிந்து
அலைந்து கொண்டிருப்பது உனக்கு உறைக்கும் பார்த்துக் கொள்
"சரணா கதனை நோக்கா விட்டால்
இவனுடைய பாபபலத்தை அவன் அநு பவித்து,அவனுடைய ஸூஹ்ருத பலம் இவன் பக்கலிலே வருவதாக சொல்லா நின்றது இறே"

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு,
பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே:

ஒருவன் தனது,நிலத்தை உழுவதற்கு எருத்தை நன்றாகப் பயன்படுத்தி வேலை வாங்கிக் கொண்டு, பின்னர் அதனை,
அந்த நுகத்தடியாலேயே நெட்டித்தள்ளி,
அதற்குத் தீவனம் இடாமல் விரட்டி அடிப்பது போல இருப்பது, உனது அலட்சியப் போக்கு, என்று மன்மதனை எச்சரிக்கிறார் ஆண்டாள்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1626963468512.png

1626963476189.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 8)


சிற்றில் சிதையேல் !

தம்மை அடைவதற்கு,பரமபக்தையான ஆண்டாள்,காமதேவன் மூலம் தூது விடும்படி பண்ணிவிட்டோமே; நாம் உடனே சென்று ஆட்கொண்டிருந்தால் ஆண்டாள் காமதேவனை வேண்டும்படி நேர்ந்திருக்காதே என்று கண்ணபிரான் திருவுள்ளம் மிக நொந்து விட்டார்.
ஆதலால் காமன் முயற்சி செய்யும் முன்பே,தாமே விரைந்து சென்று ஆண்டாளையும்,அவர்தம் தோழிகளை
யும் ஆட்கொள்ளச் சென்றார். ஆனால் அவர் வந்தவுடன், தங்களை இவ்வளவு தூரம் அலைக்கழித்த கண்ணனிடம் ஒரு சிறு பொய் ஊடல்,கொண்டு அவரைக் கவனியாதே மணலில் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் கோபமுற்ற கண்ணன் அவர்கள் கட்டிய வீடுகளை காலால் உதைத்து சிதைத்து விட்டார். அப்படி வந்து, அவர்கள் கட்டிய சிற்று இல்லத்தை சிதைக்க வேண்டாம் என்று "சிற்றில் வந்து சிதையேல்" என்று பத்து பாசுரங்கள் பாடினார்.இப்படி மணல்வீடு கட்டி இடித்து,செய்த விளையாட்டில் கண்ணனோடு சேர்ந்து மிகவும் இன்புற்றனர் அவர்கள் இன்பத்தின் எல்லையையே அடையும் போது,இதற்கு மேல் அவர்கள் தரிக்க மாட்டார்கள் என்று கண்ணன் அவர்களைப் பிரிந்து விட்டார்.

குருந்திடைக் கூறை பணியாய்!!
🙌👐👋🙌👐👋👐👋
கண்ணனோடு சம்ஸ்லேஷத்தில் மகழ்ந்த அவர்கள் இப்போது விஸ்லேஷ த்தில் பெரிதும் துயருற்றனர்.
இந்தப் பெண்கள் கண்ணனோடு சேர்ந்து விளையாடுவதைப் பிடிக்காத ஊர்க்
காரர்கள் இவர்களை நிலவறையில் அடைத்து வைத்து விட்டனர். அவர்கள் அதிலிருந்து மீள்வதற்காக, நோன்பு நோற்க பனிநீராட வேண்டும் என்று ஊராரிடம் அனுமதி பெற்று ஆற்றில் நீராட வந்தனர்.அவர்கள் தங்கள் மேலாடைகளையும்/நீராடி உடுத்தும் ஆடைகளையும் ஆற்றங்கரையில் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி நீராடச் சென்றனர்.அப்போது அங்கு வந்த கண்ணன் அவர்கள் அறியாமல் அவ்வாடைகளைக் எடுத்துச் சென்று குருந்த மரத்தின் மேல் ஏறி,
அவ்வாடைகளாலேயே தன்னை மறைத்துக் கொண்டு மரத்தின் மேல் அமர்ந்து கொண்டார்.உடைகளைக் காணாத பெண்கள் பெரிதும் கலக்கமுற்று, இங்கும் அங்கும் பார்த்து மரத்தின் மீது இருப்பதைக் கண்டனர்.
கண்ணன் அங்கிருப்பதைக் கண்டு அவரிடம் பலவாறாகக் கெஞ்சி "குருந்திடைக் கூறை பணியாய்" என்று பாடிய பாசுரங்கள் மூன்றாம் பதிகத்தில் இருப்பவை.
"இவனும் பெண்களுடைய பரியட்டங்கள் எல்லாம் வாரிக் கொண்டு போய் குருந்தின் மேலே ஏறி இருக்க,
இவர்களும் அநுவர்த்தித்தும் (பிரார்த்தித்து வேண்டியும்) வைதும்-
இப்படி பஹூ பிரகாரங்களாலே
அவனுக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி சிலவற்றைச் செய்து,
அவனும் கொடுக்க இவர்களும் பெற்றார்களாய் நின்றது.இவனும் இவை கொடுத்து அவர்களும் அவை பெற்று
சம்ஸ்லேஷம் வ்ருத்தமானாலும் அது தானும் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது இறே".

கூடிடு கூடலே !!

அவர்களுக்கு முகம் கொடுத்து,துகில் எடுத்து மறைத்து விளையாடி, அவர்களை
மகழ்வித்த,கண்ணன் மீண்டும் மறைந்து விட்டார்.சம்ஷ்லேஸத்தில் மகிழ்ந்து திளைத்திருந்தவர்கள் மீண்டும் விஷ்லேசத்தில் பிரிந்து துயருற்று எப்படிக் கண்ணனை அடையலாம் என்று முயற்சிக்கறார்கள்.

அதற்காக சோழிகளை உருட்டி விளையாடும் ஒரு விளையாட்டைத் துணைக் கொள்கிறார் ஆண்டாள்
தரையில் ஒரு பெரிய வட்டம் இட்டு,அதற்குள் பல வட்டங்களை இட்டு சோழிகளை உருட்டி வீசினால் குறிப்பிட்ட வட்டத்துக்குள் விழும் சோழிகளின் எண்ணிக்கை இரட்டைப்படையில் இருந்தால் விருப்பம் நிறைவேறும் என்பது இந்த விளையாட்டின் நம்பிக்கை.இந்த விளையாட்டு "கூடல்/கூடலிழைத்தல்/கூடல் வளைத்தல்/கூடற்குறி" என்னும் பெயர்களால் அறியப்படுகிறது.எனவே ஆண்டாள் சோழிகளை உருட்டி இரட்டைப்படையில் விழுந்தால் கண்ணனிடம் சேர்ந்து விட முடியும் என்று நம்பி ஒவ்வொரு முறை சோழி உருட்டி வீசும் போதும்,ஒவ்வொரு பாசுரம் சொல்லி எம்பெருமானோடு "கூடிடு கூடலே" என்று வேண்டுகிறார்,
நான்காம் பதிகத்தில்.

எம்பெருமானை அடைவதற்காக வேறெந்த உபாயமும் தேவை இல்லாதிருக்க,ஆண்டாள் தமது அதீத ஆர்த்தியால்,மன்மதனை உபாயமாகப் பற்றினார்.மன்மதனாவது பரவாயில்லை அறிவுள்ள/பிரிந்தாரைத் சேர்த்து வைப்பதில் வல்லமையுடைய--சேதநநான தேவதை.அவனிடம் வேண்டினால் அவன் நிறைவேற்றி வைப்பான்.ஆனால் இங்கு ஒரு மிக,மிகச் சாதாரணமான(மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடக்கூடிய) அசேதநமான விளையாட்டைத் தேர்ந்தெடுககலாமா??
உலகோர் பரம சேதனான பரமாத்விடம் பிரார்த்தித்து,அசேதன லெளகீக லாபங்களைக் பெறுவர். ஆனால் இங்கு
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு
அசேதனமான கூடலின் காலிலே விழுகிறார்.
"வ்ருத்த ஹீனனான கிருஷ்ணனை --ஆசாரம் இல்லாத(ஜீவர்களுக்காக ஆசாரங்களை நியமித்த பரமாத்வுக்கு ஆசாரம் அவசியமில்லை!);
கைம்முதல் எதிர்பாராத கிருஷ்ணனை
வ்ருத்தவதியாய்ப் பெறப் பார்க்கிறாள் (ஆசாரசீலரான பெரியாழ்வார் வம்சத்தில் தோன்றிய;
கைம்முதலாக சோழிவிளையாட்டைக் கொண்டு!!)

இங்கு கூடல்/சோழிவிளையாட்டு என்பதன் உள்ளுறைப் பொருள்"மனம்/நெஞ்சு" என்பதாகும்."கூடிடு கூடலே" என்பது,எம்பெருமானோடு "கூடிடு மனமே" என்று கொள்ள வேண்டும்.
எனவே இந்தப் பதிகத்தை,
"மனம்/நெஞ்சு விடு தூது"என்று கொண்டு அனுபவிப்பதே சரி. அப்படியாயினும் நெஞ்சு என்பதும் ஒரு அசேதநம் தானே.(24 தத்துவங்களுள் ஒன்று).என்றாலும் அலைபாயும் அந்த நெஞ்சை வயப்படுத்தி எம்பெருமான் பக்கல் திருப்பி,அவரை அடைவதற்கு முயற்சிக்கிறார்.

இனி கூடலை எப்படி விளையாடுகிறார்/
நெஞ்சுக்கு என்ன சேதி சொல்லி அனுப்புகிறார் என்று உரைக்கும், ஆண்டாள் பாடிய பாசுரங்களை அடுத்த பதிவுகளில் அநுபவிப்போம்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1627110883974.png

1627110890921.png

1627110897557.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 7)

10."கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக், கழலிணை பணிந்து, அங்கு ஓர் கரி அலற,
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று,
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை,
விருப்புடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே"
(1-10-))


விளக்கவுரை :

கரும்பு வில்லையும், மலர்களாலே செய்யப்பட்ட அம்புகளையும்-மலர்க்கணைகள்- உடையவனான மன்மதனின் ஒன்றுக்கொன்று ஒப்பான அடிகளை வணங்கி, வடமதுரையில் வில் விழவு நடக்கும் அரங்கின் வாசலில் இருந்த ஒப்பற்ற குவலயாபீடம் என்னும் யானை அலறும்படி அதன் கொம்பை முறித்து, கொக்கு வடிவில் வந்த பகாசுரனுடைய வாயைக் கிழித்துப் போட்டவனாய், நீல ரத்னம் போன்ற வடிவழகை உடையவனான கண்ணன் எம்பெருமானுடன் என்னைச் சேர்த்துவிட வேண்டும்,என்று மலைகள் போன்ற மாளிகைகள் நிறைந்து தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளோர்க்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய விருப்பத்தின் பேரில் பிறந்த இனிய தமிழ்ப்பாமாலையை பாடவல்லவர்கள் நித்யசூரிகள் நாயகனான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவார்கள்

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து:

"சார்ங்கம் உதைத்த சரமழை"
"சார்ங்கம் என்னும் வில்லாண்டான்"
"சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது"--என்றெல்லாம் எம்பெருமான் கண்ணனைச் பாட வேண்டிய ஆண்டாள்
இவனுடைய கரும்பு வில்லையும் அம்பையும் சொல்லி,இவன் காலிலே விழும்படியானது ஆண்டாளுடைய பிராப்ய த்வரை--கண்ணனை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்பதற்கு வழியல்லா வழியையும் ஏற்கத் தூண்டியது.

அங்கு ஓர் கரி அலற, மருப்பினை ஒசித்துப், புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று:

குவலயா பீடம் என்னும் கம்சனின் பட்டத்து யானை,பிளிறி அலறும்படியாக அதன் கொம்பை அநாயாசமாக முறித்து,
பகாசுரனை என்னும் கொக்கின் வாயைக் கிழித்து,
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனான கண்ணனோடு என்னைச் சேர்த்து விடு --
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –என்று.

அநிஷ்ட நிவர்த்தகன்--அநிஷ்டங்களான குவலயாபீடத்தையும்,பகாசுரனையும் கொன்று அழித்ததால்-- ப்ராபகன் ! --சாதனம் !!
மணி வண்ணன் கண்ணன் --பிராப்யன் !!
--சாத்யம் !!

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை:

மலைகளைக் கொண்டு வந்து சேர்த்து ஒரு மலை மாலை கட்டி வைத்தாற்போலே
இருக்கிற அழகிய நெடிய மாடங்கள் நிறைந்த ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்குத் தலைவரான பெரியாழ்வார் திருமகளாருடைய-

விருப்புடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே:

ஆர்த்தியால் பாடிய-பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் மாலையைப் பாட வல்லார்கள்--
"சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து
பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி,காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே,இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற நித்ய சூரிகளோடே ஒரு கோவையாக...அனுபவிக்கப் பெறுவார்கள்"

எம்பெருமானை அடைவதற்காக ஆண்டாள் பட்ட பாட்டைப் படாமல்--இவ்வாறாக வழியல்லா வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி இராமல்,
நம்மாழ்வார்/திருமங்கை ஆழ்வார் போல மடலூர்தல் போன்றவையும் செய்யாமல், எளிதாக எம்பெருமான் திருவடிகளை அடையலாம்.

நாமும் இந்தப் பாசுரங்களை அவற்றின் அர்த்த விசேஷங்கள் அறிந்து அநுஸந்தானம் செய்து,எம்பெருமான் திருவடிகளை அடைவோமாக!!!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)


1627111386957.png


1627111394359.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 9)


4-1:"தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட,
கொள்ளுமாகில், நீ கூடிடு கூடிலே !"


இந்த முதல் பாசுரத்தில் அர்ச்சாவதார பெருமாள் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நெஞ்சைக் கூடுமாறு தூது விடுகிறார்.அந்த அழகரே திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்
கிறார் என்பதால் இப்பாசுரத்தின் மூலம் ஸ்ரீரங்கநாதப் பெருமாளோடு, கூடவும் பிரார்த்திக்கிறார்.இரண்டாம் பாசுரத்தில் "காட்டில் வேங்கடம்,கண்ணபுர நகர்" என்று திருவேங்கடவர்,திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் பக்கல் சேர்த்து விட நெஞ்சைக் கூடுமாறு, அனுப்புகிறார்.
அடுத்து வரும் பத்துப் பாசுரங்களில்
ஒன்பதில் கிருஷ்ணாவதாரத்தை
யும்,ஒன்றில் திரிவிக்கிரம அவதாரத்தையும் பாடுகிறார்.

விளக்கவுரை :

ஒரு நொடிப்பொழுதும் பிரியமாட்டாமல் நிக்தியாநுபவம் பண்ணிக் கொண்டு மங்களாசாஸந பரராயிருக்கும் பல,பல நித்யசூரிகள் கைதொழப் பெற்றவனாய், அந்த நித்யசூரிகள் அநுபவிக்கும் அந்த அநுபவத்தை,இந்த லோகத்தில் வாழும் சம்சாரிகட்கும் அருள்புரியத் திருவுள்ளம் பற்றித்,திருமாலிருஞ்சோலைமலையிலே வந்து ஸந்நிஹிகனாய்,எழுந்தருளி
இருக்கிற எம்பெருமான் குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்புகாட்டித் தென்திசை இலங்கை நோக்கித் துயிலுமிடமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு அப்பெருமானுக்குத் திருவடி வருடும்படியான பாக்கியம் இன்று நமக்கு வாய்க்குமாகில், கூடலே/நெஞ்சே ! நீ கூடி விடுவாயாக !!

தெள்ளியார் :

"காதாசித்க சம்ஸ்லேஷத்துக்கு தான் இன்று இருந்து"-இங்குள்ளோர் எம்பெருமானோடு ஏற்படும் அநுபவம் கூடலும்,பிரிவுமாக மாறி,மாறி இருக்க,
அதனால் கலங்கிய மனதுடன் இருக்கி றார்கள்.ஆனால் வைகுண்டத்தில் உள்ள நித்யசூரிகள் மிகத் தெளிந்தவர்களாக எம்பெருமானோடு ஏற்படும் அநுபவத்தை சதாகாலமும் நொடிப் பொழுதும் பிரியாமல் பெறுகிறார்கள்.
பலர்:
ஸ்ரீவைகுண்டம் என்னும் நித்யவிபூதி,
லீலா விபூதியான மற்ற எல்லா லோகங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியது.எனவே அங்கு தெள்ளியார் பலர் இருந்து,கூடல் போன்ற உபாயங்கள் இல்லாமலேயே ஸ்ரீமந் நாராயணனை அநுபவித்து வர,இங்கு தான் ஒருத்தி
யுமாய்,நித்ய அநுபவமும் கிட்டாமல் கூடல் இழைக்க வேண்டியிருக்கிறதே !
தன்னோடு சேர்ந்து கூடல் இருப்பதற்கும் கூட யாரும் வருவதில்லையே !

"இங்கு வ்ருத்த கீரத்தநத்துக்கும்"---எம்பெருமானை அடையும் வ்ருத்திகளை/நோன்புகளை/பிரார்த்தனைகளைச் செய்வதற்கும் ஆளில்லை !
"அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா !பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே"

கைதொழும்:

நித்யம்/எப்போதும் எம்பெருமானைத் தொழுவதே யாத்ரையாய்/பொழுது போக்காய் இருப்பவர்கள்

தேவனார்:

அவர்கள் எப்போதும் தொழுது கொண்டு இருப்பதால்,ஒளி பொருந்தி நிற்கும்
எம்பெருமான்.

வள்ளல் -மாலிரும் சோலை:

செல்வந்தராய் இருப்பவர் கையிலே செல்வம் மிகுந்திருந்தாலும் கொஞ்சம்
குறைந்தாலும் அதை இழப்பாக நினைத்து இருக்குமா போலே,
நித்ய விபூதியும்,நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும்,அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே,இவ்வுலகில் சம்சாரிகள் படும் துயரை நினைத்து,தாமும் துயருற்று
உடம்பு வெளுத்து பரமபத இருப்பை இங்கு உள்ளோரும் பெற வேணும் என்னும் கிருபையாலே,அங்கிருந்து இரங்கி/இறங்கி,திருமலை அளவும் வந்து (திருமாலிருஞ் சோலை தென்திருமலை, தென் திருவேங்கடம் என்று அறியப் படுகிறது)
தன்னை அனுபவிப்பதற்கு வாய்ப்பைத் தந்து நிற்கும் வள்ளல் தன்மையைச் சொல்கிறது.இங்குள்ள ஜீவாத்மாக்கள் அனைவரையும், திருத்திப் பணிகொண்டு
உய்விக்க வேண்டும் என்பதில் மாலாக(பைத்தியமாக) இருக்கும் வள்ளல் இருக்கும் சோலை !!

"நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே, இவை அழிந்தது கொண்டு
தன்னை சர்வஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது"

மணாளனார்:

தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து--
கோபீகா ஸ்திரீகளைப்,போலே யமுனா தீரங்களிலே,பிருந்தா வனத்திலே
இரவிலும் இருட்டிலும் தேடி ஒளியாமல்
பெரியாழ்வார் பெற்ற பெண் பிள்ளை
யைக் கைத்தலம் பற்றுவதற்காகவே வந்து நிற்கிறார் திருமாலிருஞ்சோலை மலையில் -அழகர்-மணாளனார்--
அழகிய மணவாளர்!

மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து:

கைப்படித்த நாச்சியார் முகம் காட்டுவது, மலையில் மண்டபத்தில்/சபையில் நின்று கொண்டிருக்குமு நிலையில் அல்லவே;பள்ளி கொள்ளும் இடத்தில் தான் ஆயிற்றே."பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில்"என்று பராசர பட்டர் அருளிச் செய்தார்.கோயில் என்றால் திருவரங்கம் பெரிய கோயில்.
மேலும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் திருமாலிருஞ் சோலை அழகர் மற்றும் அனைத்து திவ்யதேச எம்பெருமான்
களும் நித்யம் பள்ளி கொள்வதற்கு திருவரங்கத்துக்கு எழுந்தருள்கிறார்கள் என்பது ஐதீகம்.

அடி கொட்டிட :

பள்ளி கொள்ளும் போது அதற்கேற்றாற் போல,பெருமாளின் திருவடிகளை--நாள் முழுதும் கால் வலிக்க நின்ற களைப்பு தீர,--திருவடி பிடித்து,வருடி கைங்கர்யம்
செய்ய வேண்டியிருப்பது.
கைங்கர்யம் செய்து, ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வேண்டியதைச் சொல்கிறது.

கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே ! :

அதில் எம்பெருமானது உபாய அம்சம் இருக்கும் படி,அதாவது அவர் நினைவாலே,பிரீதியாலே நமக்கு கைங்கர்யம் அருள்வதாகத் திருவுள்ளம் பற்றினால்,அதைப் பெறாப் "பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி"அப்படி அவரால் பேறு கிடைக்கும் பட்சத்தில் நெஞ்சே அவரிடம் கூடி கைங்கர்யத்தில் திளைப்பாயாக !

அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்,அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே என்பது
ஆண்டாளின் பிராப்ய த்வரையைக் காட்டுகிறது.பேறு தப்பாது என்று இருந்தாலும்,பேற்றுக்குத் த்வரிக்க வேண்டியிருக்கும் நிலையில் இப்படிச் செய்கிறார்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
1,2: வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்,
மற்றவை: நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை--ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரங்கமன்னார்.


1627197093327.png



1627197101222.png


1627197108303.png


1627197119269.png


1627197127569.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 10)


4.2 "காட்டில் வேங்கடம்,கண்ணபுரநகர்,
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்,
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே !"

முதல் பாசுரத்தில் பெருமானின் தெற்கு வீட்டையும்-திருமாலிருஞ் சோலை,மேற்கு வீட்டையும் திருவரங்கம்,இந்தப் பாசுரத்
தில் வடக்கு வீட்டையும்--திருவேங்கடம்,
கிழக்கு வீட்டையும் திருக்கண்ணபுரம்-பாடுகிறார்.

விளக்கவுரை :

"எம்பெருமான் என்னோடு சேர்ந்திருக்க வேண்டுமென்று திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்து நிற்கிறான்; எனக்கு இசைவு உண்டோ இல்லையோ என்று சந்தேகித்துத் தயங்கி நிற்கிறான் போலும் ;அப்பெருமான் என்னுடைய ஆதுரத்தை நன்கறிந்து, சடக்கென ஓடிவந்து என் கைகளைப்பற்றித் தன்னோடு அணைத்துக் கொள்ளும் தருணம் வாய்க்க வேண்டும்"

"அவன் என்னைப் பெறுகைக்கு சாதனானுஷ்டானம் பண்ணுகையிலே--(தவமிருந்து கிடப்பதில்),உத்யுக்தரைப் போலே(நம்மாழ்வாரைப் பெறுகைக்கு திருக்கடித்தானப்பெருமாள் தவமிருந்தது போல)இருந்தான்;அதன் பலம் நான் பெறும் படி பண்ணவல்லையே என்கிறாள்"

காட்டில் வேங்கடம், கண்ணபுரநகர்:

மலைக் காட்டிலே உள்ள திருவேங்கடம் அல்லது காட்டை இல்லமாக உடைய திருவேங்கடம்.ஸ்ரீராமபிரான் தண்ட காரண்யத்தில்(சித்ரகூடம்) ரிஷிகளோடே இருந்து, வனவாச ரசம் அனுபவித்தால் போலேயாய் இருப்பது,சந்திரகிரி/நல்லமலா காடுகளில் உள்ள திருமலை யில் திருவேங்கடவரின் இருப்பு.
திரு அயோத்யையில் இருக்குமா போலே யாய்த்து,திருக் கண்ண புரத்திலே எழுந்தருளி இருக்கும் இருப்பு.அன்றியே பிருந்தாவனமும்(காடு)திருவாய்ப்பாடியும்
(நகரம்) போலே ஆதல்.
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்து கொண்டு இருப்பவரான எம்பெருமான்
"கானமும் வானரமும் வேடுமான"
இவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு திருமலையிலும்,கண்ணபுரத்
திலும் வந்து தவம் செய்து நிற்கிறார் !

வாட்டமின்றி :

பரம பதத்தில் நித்ய சூரிகள் அனுபவிக்கக் கடவ நாம்,அவ்விடத்தை விட்டு இவர்கள் நடுவே நிற்கிறோமே என்று திரு உள்ளத்திலே ஒரு வாட்டமும் இல்லாமல்.

மகிழ்ந்துறை வாமனன்:

வானவர்கள் நடுவே நிரதிசய ஆனந்த உக்தனாய் இருக்குமா போலே
நிரவதிக ப்ரீதி உக்தனாய் இருந்து,
அவதாரங்கள் போல் வந்து சில காலம் இருந்து சென்று விடாமல்,காலமுள்ள
ளவும், என்றென்றும், நித்ய வாசம் பண்ணுகிற பெருமான்,தன்னுடைமை
யான என்னை(ஆண்டாளைப்)பெறுகை
க்கு இங்கு வந்து,உகப்போடு வாமனைனைப் போலே இரக்கின்றார்.

ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்:

அசுரப் பிரக்ருதியான மகாபலி முன்னே, ஓரடிக் கழஞ்சு மண்ணுக்கு பதறி வாமன பிரம்மச்சாரியாய் விரைந்து வந்த பெருமான்,உயர்ந்த வேதியர் குல விளக்கான,பக்தியின் பூரண வடிவமான தன்னைக் கைப்பற்ற ஓடோடி வர மாட்டாரோ !!

ஸ்ரீராமர்,சீதாப்பிராட்டியை கைத்தலம் பற்றி,"அனன்யார்ஹமாம் படி பிடித்து " --அவருக்கு மட்டுமே உரித்தான சொத்து என்னும்படி பிடித்ததை-சீதை அநுபவித்
தது போல தானும் அனுபவிக்க வேண்டும் என்கிறார்.

தன்னோடும் கூட்டுமாகில்:

எம்பெருமானது கர ஸ்பர்சத்தாலேயே துவண்டு மயங்கிய நிலையில் இருக்க,மேலும் அவர் அணைத்து ஏறிட்டுக் கொள்ளுமாகில்;

நீ கூடிடு கூடலே:

அவர் அநுக்ரஹத்தில் குறையில்லாமல் இருக்கும் போது,மனதே ! மயங்காமல்,
கலங்காமல் அவரோடு கூடிடு.
" எம்பெருமான் எதிர் சூழல் புக்கு திரிந்தாலும்,பேற்றைப் பெறுகைக்கு இசைவு இச்சை வேணுமே"என்றபடி.

4.3:"பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே !"


விளக்கவுரை :


"எம்பெருமானின் திருநாபீகமலத்தில் பிறந்த பிரம்மாவும்,புகழ்பெற்ற நித்யசூரிகளும் பாடித் துதிப்பதற்குத் தகுந்த புருஷோத்தமனாய், அழகிய ஒளி படைத்த நெற்றியை உடைய தேவகிப் பிராட்டியுனுடைய சிறந்த பிள்ளையாய், மிக்க பெரும் நற்குணங்களை உடைய வசுதேவருடைய,மாட்சிமை பொருந்திய பிள்ளையான கண்ணன் என்னிடத்தில் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு"

பூ மகன்,புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன்:

எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய தாமரைப்பூவில் தோன்றிய பிரம்மாவும்,நித்யசூரிகளும் போற்றுவத
ற்குத் தகுந்த கல்யாண குணங்களை உடைய பெருமகன் !
அன்றிக்கே பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்தப் பூவுலகும்,விண்ணுலகும்--லீலாவிபூதியும்,நித்யவிபூதியும் போற்றுவதற்கு உரிய திருமகன்.
இரண்டு கரையில்(நித்ய/லீலாவிபூதிகள்)
உள்ளவர்களும் நடுவே போகிற ஓடத்தை அழைக்குமா போலே !

அணி வாணுதல் தேவகி மாமகன்:

அழகிய ஒளியை உடைத்தாய்,வேறு ஒரு ஆபரணம் பூணவேண்டாதபடி அழகிய நெற்றியை உடைய தேவகிக்கு மாமகன்.
தேவகி வளர்த்த செருக்காலே மகன் அல்ல உடன் பிறந்தான் என்னலாம் படி,
மிக்க மகன்.தேவகி சிங்கம்,யசோதை இளஞ்சிங்கமாக வளர்ந்த கண்ணன், கண்ணனையே ஸ்மரித்து அவரைக் காண வேண்டும் என்னும் ஆர்த்தியுடன் இருக்கும் தேவகிக்குத் தம்பி போன்று இருக்கிறாராம்.

மிகு சீர் வசுதேவர் தம் கோமகன் :
தசரத சக்கரவர்த்திக்கு, ஸ்ரீராமர் போல நியாம்யன்--தந்தை சொல்படி நடப்பவன்- அல்லன்.
ஸ்ரீகிருஷ்ணர் தந்தை வசுதேவரையும்
(நந்தகோபரையும்) நியமிக்கும்-- தம் சொல்படி கேட்கவைக்கும்-- மகன்.

"அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக் கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை"

வரில்,கூடிடு கூடலே !

இரண்டு பிறப்பாலும் உள்ள ,இருவர் சாயையும் தோற்ற --யசோதை இளஞ்சிங்கமாகவும்/நந்தகோபன் குமரனாகவும்,தேவகி மைந்தனாகவும்,வசுதேவர் தம் கோமகனாகவும் கம்பீரமாக அவர் நடந்து நடந்து வந்தால்,நெஞ்சே நீ கூடி, என்னையும் அவரையும் கூட்டுவாய் !

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).
படங்கள்:
1,2 : காட்டில் வேங்கடம்.
3,4 : கண்ணபுர நகர்.
5.மகிழ்ந்துறை வாமனன்.

1627269103951.png

1627269110019.png

1627269115444.png

1627269121950.png

1627269128799.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 11)

4-4: "ஆய்ச்சிமார்களும், ஆயரும் அஞ்சிட,
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து,
வாய்த்த காளியன் மேல் நடமாடிய,
கூத்தனார் வரில், கூடிடு கூடலே !"


விளக்கவுரை :

ஆயர்களும்,ஆய்ச்சியர்களும் அஞ்சும்
படிக்கு--யமுநாநதியின் ஒர் மடுவில் இருந்து கொண்டு, அம்மடு முழுவதையும்
விஷமாக்கிக் கொண்டிருந்த காளியன் என்னும், கொடிய நூறு தலை நாகத்தைத் தண்டிப்பதற்காக,கண்ணபிரான் அம்மடுவிற்குச் அருகிலுள்ளதொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து, அந்நாகத்தின் படங்களின் மேல் ஏறிக் குதித்தாடி காளிங்க நர்த்தனம் செய்து அவனை அடக்கினார்.அந்தக் கண்ணன் வந்தால் கூடிடு நெஞ்சே !

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட:

பயமே ஸ்வாபம் ஆன ஆய்ச்சியர்களும்,
பயம் என்பதே அறியாதவர்களான ஆயர்களும்,பாலகனான கண்ணன் கொடிய விஷப்பாம்பின் மேல் குதிப்பதைப் பார்த்துக்/கேட்டு,
கண்ணனுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பெரிதும் அஞ்சினர்.
"உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்",போல்வாரும்
காளிங்கன நர்த்தனம் நடந்து கொண்டிருந்த இடம் போர்க்களம் போல இருந்ததால்,மிகவும் அஞ்சினர்.

பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து;

காளிங்கன் உமிழ்ந்த விஷத்தால் முழுதும் பட்டுக் காய்ந்து போன கடம்பமரம் கண்ணபிரானின் --திருவடிகள் பட்டவுடனே தளிர்த்துப்
பூத்தது.'அங்கோல தைலம்'என்னும் ஒரு தைலத்தை ஒரு மாங்கொட்டையில் தடவி பூமியில் நட்டினால், அது அப்போதே,செடி
யாகி,மரமாகி,மாம்பழம் தருமாம்.அப்படி ஒன்றும் இங்கும் நடக்காதபோதும்
பூத்ததே ! ஏனென்றால் திருவடி பட்டால் கல்லும் பெண்ணும் ஆகும்போது, (ஸ்ரீராமர் திருவடிபட்டு,கல்லாகக் கிடந்த அகலிகை சாப விமோசனம் பெற்றது),
திருவடி ஸ்பரிசத்தால் கடம்பு பூக்காதோ !!

நீள் கடம்பு :

காளிங்கன் தலைகளில் சரியாக விழும்படி கடம்ப மரத்தின் மிக உயரமான இடத்தில் ஏறி (நீச்சல்வீரர்கள் உயர்ந்த மேடையிலிருந்து குதிப்பது போல)
யமுனை நதியில் பாய்ந்தார்.

புகப் பாய்ந்த :

கண்ணனது கால்கள் காளிங்கனின் தலைகள் மீது ஆழ அழுந்தும் படி குதிக்க,அவன் தலைகள் ஆற்றின் ஆழத்துக்கே செல்லும்படி.

வாய்த்த காளியன்:

கொடிய விஷத்தைக் கொண்டவன் ஆனாலும், எம்பெருமான் திருவடிகளை தன் தலையாலே தாங்கும் பேறு அவனுக்கு வாய்த்ததே! பக்தி என்னும் அமிர்தம் பொதிந்த என் மார்பில் நர்த்தனம் ஆட வேண்டிய கண்ணன், விஷம் கொண்ட,அவன் தலையில் ஆடினாரே! காளிங்கன் தலை பெற்ற பேறு என் மார்பு பெற வில்லையே என்கிறார்.

மேல் நடமாடிய:

பகவான், காளிங்கனை அடக்க, அவன் தலைமேல் குதித்த போது,அவன் நூறு தலைகள் மேலெழுந்தன.அவை அனைத்தையும் அழுத்தி அடக்க, கண்ணன் அவன் தலைகள் மேல் மாறி மாறிக் குதித்தது,(முதல் தலை/3 ஆம் தலை, 2,ஆம் தலை/4 ஆம் தலை இப்படியாக நூறு தலைகள் மேலும்) ஓர் அற்புதமான நாட்டிய வைபவம் போல இருந்ததாம்.இது வரை பார்த்திராத/அறிந்திராத நடன அசைவுகள் எல்லாம்
"ந்ருத்த(நாட்டிய) சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே !
ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே !!"

கூத்தனார் வரில்,கூடிடு கூடலே !

அவ்வாறு அருமையாக நாட்டியம் ஆடிய ஒசிவோடே(ஆடிய அங்கங்கள் முழுதும் ஓய்ந்து நிற்கும் முன்பே.அந்த நளின அசைவுகளோடு வந்து அணைக்க வரும் போது,இசைந்து கூடிடு நெஞ்சே !

4.5:"மாட மாளிகை சூழ் மதுரைப் பதி,
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு,
ஓடை மா மதயானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே"


விளக்கவுரை :

"வில்விழாவென்ற வ்யாஜம் வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்டு, ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்சனுடைய அரண்மனையை நோக்கிச் செல்லுகை யில், அவ்வரண்மனைவாசல் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடம் என்னும் மதயானை கோபித்துவர, அதனை எதிர்த்து அதன் தந்தங்கள் இரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அந்த யானையைக் கொன்ற கண்ணபிரான்
மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே நம் வீட்டைத் தேடிக் கொண்டு,நம்முடைய வீதியின் நடுவிலே வந்து கூடுமாகில
நீ கூடிடு "

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி-நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு :

கண்ணன் வில் விழவுக்கு என்று தான் வந்தார்.ஆனால் ஆண்டாள்/கோபிகை
கள் தன்னை ஆட்கொள்ளவே அங்கு வருவதாகக் கொள்கிறார்.அவர் இவர்கள் வசிக்கும் தெரு என்று எது,எது என்று எல்லோரிடமும் ஆரவாரமாக விசாரித்துத் தெரிந்து கொண்டு அந்தத் தெருவின் நடுவில் ஒரு மன்னர் கம்பீரமாக வருவது போல,ராஜ நடை போட்டு,இவர்களைக் காணப் போகிறோம் என்னும் ஆர்த்தி மேலிட்டு,இன்னும் மிடுக்காக வந்தாராம்.

மாலாகாரரர் வைபவம்:

கண்ணன் வடமதுரைக்கு வந்தவுடன்,
கம்சனைப் பார்க்கச் செல்லும் முன் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொள்ள
வேண்டுமென்று, அந்த ஊரிலுள்ள மாலாகாரரைத் தேடிச் சென்று நல்ல மாலைகளை வாங்கி அணிந்து கொண்டார். மாலாகாரரின் வீடு பிரதானமான தெருவில் இல்லையே; முடுக்குத் தெருவிலே (சந்துக்குள்) தான் அவரது வீடு இருப்பது. பிரதான பெரும் தெரு எல்லாம் தேடிக் கடந்து சென்று, முடுக்குத் தெருவிலே கண்டு கொண்டு சென்றாரே.அது போலவே நம்-ஆண்டாள்
வீடு இருக்கும் தெருவை நாடித் தேடிக் கண்டு பிடித்து வந்தார்.

அவர் மாலாகாரரைத் தேடிச் சென்றதில் அவரது பிரசாத பரமௌ-செளலப்ய குணமே-தேடிச் சென்று ஆட்கொள்ளு
வது- விஞ்சி இருப்பது.
அவர் தாம் "நாதன்"--சர்வ வல்லமை/பரத்துவம் பொருந்திய பரமாத்மா என்று
எண்ணியிருந்தால், மாலாகாரரை அவர் இருக்குமிடத்துக்கு அன்றோ அழைத்திரு
ப்பார்.ரிஷிகளும்,முனிவர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தும் சேவிக்க முடியாத எம்பெரு மானை,யாரும் தேடித் பெறாத நிதியை,
நான் இருந்த இடத்திலேயே சேவிக்க/எடுத்துக் கொள்ளும் பேறு பெற்றார் மாலாகாரரர். ஸ்வரூப அநுகுணமாக பெற்ற நிதியை, மாலாகாரர் விரும்பிய
படி மாலை கட்டி சூட்டி,தமக்குத் தக்கவாறு மாற்றி அர்ச்சனம் வந்தனம் போன்றவற்றால் அனுபவிப்பேன் என்று அவர் சொல்கிறாராம்.கண்ணன் அவர் வீடு தேடி வந்த போது முன்னிரவுப் பொழுதானதால்,அவரிடமிருந்த புஷ்பங்கள் அனைத்தையும் மாலை கட்டி விற்றுவிட்டார்.மீதமிருந்தவை ஏதோ நாலு புஷ்பங்கள்.அவற்றைக் கொண்டு என்ன மாலை கட்ட முடியுமோ அதைக் கட்டி மிகுந்த ஆர்த்தியுடன் "சூட்டு தன் மாலைகள் தூயனவாகக்"கொள்ளும்படி கொடுத்தார்.(அவர் தனக்காகவோ/தன்
குடும்பத்தாருக்காகவோ என்றும் எந்த மாலை/பூச்சரத்தையும் எடுத்து வைப்தில்லை).

ஸ்ரீபெரிய வாச்சான்பிள்ளை தமது வியாக்யானத்தில் மாலாகாரரர் வைபவத்தை விஸ்தாரமாக விளக்கிச் சொல்லக் காரணம் என்ன? ஆண்டாளும்,
அவரது திருத்தகப்பனார் பெரியாழ்வாரும் பூமாலை கூடிக் கொடுத்த மாலாகாரர்களே.ஆதலால் அவர்களை மாலாகாரரர் வழி வந்தவர்களை என்று கொள்ளலாம்.அந்த மாலாகாரருக்குக் கண்ணன் தந்தருளிய ஒப்பற்ற அநுபவத்தைத் தனக்கும் அருள் வேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகிறார்.

நம் தெரு :

ஆண்டாள் திருவாய்ப்பாடியை தன் ஊராகக் கொண்டது போல,கண்ணன் செல்லும் இடமெல்லாம் ஆண்டாளின் ஊரே/ தெருவே .வட மதுரை மா நகரிலும் ஒரு நாச்சியார் திருமாளிகை உண்டே!
உகந்து அருளிய இடம் எங்கும்
ஓரோர் திருமாளிகை உண்டு –அனைத்து திவ்ய தேசங்களிலும் ஆண்டாள் சந்நிதி இருக்கிறதே !

ஓடை மா மதயானை யுதைத்தவன்:

பெரிய முக படாம் பூட்டிக்கொண்டு,மதம் பிடிக்கும்படியான உணவுகளை உண்டு, மதம் பிடித்து செருக்கித் நிமிர்ந்து நின்ற குவலயாபீடம் என்னும் யானையை உதைத்தது அளித்தவர்.

கூடுமாகில்,நீ கூடிடு கூடலே !

விரோதி நிரசனம் செய்து உன்னைத் தேடி வரும் போது,நீ கூடிடு நெஞ்சே !!
(மாலாகாரர் போல).

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).
படங்கள்:
1.வாய்த்த காளியன் மேல் நடமாடி.
2.ஓடை மா மதயானை உதைத்து.
3.மாலாகாரரர் வைபவம்.
4.நாடி நம் தெருவே வந்திட்டு (திருவல்லிக்கேணி).

1627362334944.png

1627362343054.png

1627362349977.png

1627362358014.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 12)

4-6:"அற்றவன், மருத முறிய நடை
கற்றவன், கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன்,திகழும் மதுரைப்பதி
கொற்றவன், வரில் கூடிடு கூடலே"


விளக்கவுரை:

"எனக்காகவே அற்றுத் தீர்ந்தவன்,
மருத மரம் முறிய நடந்தவன்,
கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் ஆகிய கண்ணபிரான் வருவானெனில் நீ கூடிடு கூடலே."

"அற்றவன்":

ஸ்ரீகண்ணபிரான் ஆண்டாளுக்காகவே நெடுங்காலம் முன்பே அற்றுத் தீர்ந்தவர்--
ஆண்டாளுக்காகவே அவதரித்தவர் !
"பரித்ரானாய சாதுனாம்" என்னும் பகவத் கீதை ஸ்லோகத்தில் சொன்னபடி,
சாதுக்களைக் காப்பதற்காகஅவதரித்தார்.
பெரியாழ்வாரும்,மற்ற ஆழ்வார்களும் மிகச் சிறந்த சாதுக்கள் தானே.அந்த ஆழ்வார்களின் "அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்,ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்"
தோன்றிய ஆண்டாளும் சாதுவே.எனவே அவர் அவதரித்ததே ஆண்டாளைக் காப்பதற்காக/கைப்பிடிக்க !! பெரியாழ்வாரும் ஆண்டாள் அவதரிப்ப தற்கு முன்பே,தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால்,அந்தப் பெண்ணை
எம்பெருமானுக்கே அற்றவள் ஆக்கிவிடத்
தீர்மானித்திருந்தாராம் !!

மருதம் முறிய நடை "கற்றவன்" :

முன்னொரு காலத்தில் நாரத முனிவரின் சாபத்தினால் குபேர புத்திரர்களான நளகூபரன், மணிக்ரீவன் ஆகியோர் யமளார்ஜுனம் என்னும் மருத மரங்களாய் மாறி, பல ஆண்டுகள் மரங்களாகவே இருந்தனர்.பாலகன் கண்ணன் கோகுலத்தில் வெண்ணெய் திருடுதல் போன்ற தீம்புகளைச் செய்து வந்ததால்,ஒருநாள் யசோதை கண்ணன் எங்கும் நகர்ந்து செல்லாதபடி உரலோடு சேர்த்துக் கட்டி வைத்தாள்.ஆனால் யசோதை அந்தப் பக்கம் சென்றதும்,
கண்ணன் தாம் கட்டுப் பட்ட, உரலையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.அவ்வாறு தவழ்ந்து-நடந்து சென்ற போது, வழியில் இருந்த இரு மராமரங்களுக்கு நடுவில் உரல் சிக்கிக் கொண்டது.ஆதனால் ஏற்பட்ட அதிர்வால் மரங்கள் இரண்டும் முறிந்து விழுந்தன.
குபேர புத்திரர்கள் சாப விமோசனம் பெற்றுச் சென்றனர்.

இவ்வாறு கண்ணன், அவரை அறியாத பால்யப் பருவத்திலேயே விரோதிகளைப் போக்கினார்.பால்யத்திலேயே விரோதி நிரசனம் செய்த கண்ணன்,ஆண்டாளை அடைவதற்கான விரோதி/தடைகளையும் நிரசனம் செய்து அதிவிரைவில் அவரைக் கைப்பற்ற வேண்டும் என்பதாம்.

கஞ்சனை வஞ்சனையில் "செற்றவன்":

கண்ணனைக் கொல்வதற்காக கம்சன் பல வஞ்சனைகள் செய்தான்.
அரக்கர்களை நேராக அநுப்பாமல்
பல்வேறு வடிவங்களில் ஏவினான்.
அப்படி வஞ்சனை செய்த கம்சனை அந்த வஞ்சனையாலே கொன்று அழித்தவர்.

தர்ம யுத்தமே பண்ண வேண்டும் என்று
ஸ்ரீராமபிரானைப் போலே இருந்தால்
கம்சனின் வஞ்சனமே தலைக் கட்டும் !
பல அரக்கர்களை அனுப்பியும் கண்ணனை ஒன்றும் செய்ய முடியாத
தால்,வட மதுரைக்கு அழைத்து,குவலயா
பீடத்தை ஏவினால், கண்ணனால் தப்பித்துப் பிழைக்க முடியாது என்று இறுமாந்திருந்தான் கம்சன்.யானை எப்படியும் கண்ணனைக் கொன்று விடும் என்று, தன் மருமகன் கண்ணன் போய் விட்டானே, என்று ஊரார் முன்னிலையில் அழ வேண்டுமே என்று, தன் கண்களில் கண்ணீர் வருவதற்கான மருந்தைத் தடவிக் கொண்டு தயாராக இருந்தானாம்!(முதன் முதலில் 'கிளிசரின்' போட்டு அழுதவன் கம்சன் தானோ !!).

ஆனால் கண்ணன் அந்தக் கம்சனை அநாயாசமாகக் குஞ்சி பிடித்து இழுத்துக் கொன்றதால், அவனது இரு மனைவி களையும் நிஜமாகவே அழ வைத்து விட்டார் !!

திகழும் மதுரைப்பதி "கொற்றவன்":

நாட்டை ஆண்ட மன்னன் கம்சனைக் கொன்றதால் ராஜகுல வழக்கப்படி,இனி வென்ற கண்ணன் தானே, மதுராபுரி நாட்டுக்கு மன்னன் ஆக வேண்டும்.
ஆனால் கண்ணன் கம்சனின் தந்தையும்,
தம் பாட்டனாருமான 'உக்ரசேனனை' மன்னனாக நியமித்தார்.வயதான உக்ரசேனன் பெயருக்குத் தான் மன்னன்.நடந்தது கண்ணனின் ஆட்சியே;
எனவே கண்ணனே மன்னவன்/கொற்றவன் ! ஆண்டாளுக்கு அவன் அற்றவன் மட்டுமல்ல.கொற்றவனும் கூட.

கொற்றவன் வரில் கூடிடு கூடலே !

மன்னர்களுக்கு ஒரு காரியம் செய்ய/ஓரிடத்துக்குச் செல்ல யாரேனும் தூண்ட/ஞாபகப் படுத்த வேண்டுமே ! ஆதலால் நெஞ்சே ! நீ அவரைத் தூண்டி இங்கு வரச் செய்து என்னோடு சேர்த்து விடுவாயாக !!

ஆண்டாளின் தமிழ்நடை:

ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரம் பாசுரங்களுமே தேன் சொட்டும் தமிழ்ப் பாசுரங்கள்.ஆழ்வார்களின் தமிழ்நடை யின் அழகுக்கு/அருமைக்கு/மகுடம் சூட்டுவது போல இருப்பவை அவர்களின் சந்ததியான ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையும்,நாச்சியார்திருமொழியும்
ஆண்டாளின் ஒவ்வொரு பாசுரமும் தமிழுக்கு ஓர் ஒப்பற்ற ஆபரணமாகத் திகழ்கிறது. உதாரணத்துக்கு இந்தப் பாசுரத்தில், ஆண்டாள்
'அற்றவன்', 'கற்றவன்','செற்றவன்'
'கொற்றவன்' என்னும் நான்கு சொற்களைக் கொண்டு ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்தின் சிறப்பான வைபவங்களை எத்தனை அழகாக/எளிதாக/தெளிவாகப் பாடியுள்ளார் !!!!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.அற்றவன்.
2 ,3**கற்றவன்
4.செற்றவன்
5.கொற்றவன்.(ஸ்ரீகிருஷ்ணரும்,உக்ரசேனரும்)

**3.கோகுலத்தில் உள்ள உகல்பந்தன் என்னுமிடத்தில் உள்ள கண்ணனைக் கட்டிய உரலும்,முறிந்த மருத மரத்தின் ஒரு பகுதியும்.

1627443906273.png


1627443914851.png


1627443922492.png


1627443931827.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 13)

4-7:"அன்று இன்னாதான செய் சிசுபாலனும்,
நின்ற நீள் மருதும், எருதும், புள்ளும்,
வென்றி வேல் விறல் கஞ்சனும், வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே"

விளக்கவுரை :

"அன்று --ருக்மணிப்பிராட்டி கண்ணனை மணம்புரியத் தடையாக இருந்து,
இன்னல்கள் செய்த சிசுபாலனையும், உயர்ந்து நின்ற மருதமரங்களையும், நப்பின்னையை மணம் புரிவதற்காக ஏழு எருதுகளையும்,பகாசுரன் என்னும் கொக்கு வடிவில் வந்த அரக்கனையும், வெற்றி தரும் வேலைக் கொண்டிருந்த வீரனாம் கம்சனையும், கொன்ற கண்ணபிரான் வருவாரெனில்,நீ கூடிடு நெஞ்சே!!"

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்:

இன்று கண்ணனின் பிரிவாற்றாமை யால், ஆண்டாள் காமதேவனையும்,
நெஞ்சையும்,பறவைகளையும் தூது அனுப்புவது போல,அன்று கண்ணனுடன் கூட விரும்பிய ருக்மணிப் பிராட்டி, கண்ணபிரானுக்கு ஏழு பாடல்கள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதி ஒரு மூத்த அந்தணரிடம் கொடுத்துத் தூது அனுப்பினார்--உலகில் முதன்முதலாக எழுதிய காதல் கடிதம் !!(அந்தத் தூது கைம்மேல் பலன் கொடுத்தது.
எம்பெருமான் உடனே வந்து ருக்மணியைக் கைத்தலம் பற்றி, தம்மோடு அழைத்துச் சென்றார்; அப்படி தனக்கும் நடக்க வேண்டும் என்று விரும்பும் ஆண்டாள், அந்த வைபவத்தை யும் துணைக் கொள்கிறார்).ஆனால், ருக்மணியும்,கண்ணனும் இணையக் கூடாது, என்று எண்ணிய ருக்மணியின் அண்ணன் ருக்மி, கண்ணனை எதிரியாக நினைத்து, நிந்தித்து வந்த சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்து விட்டான்.மண நாளும் வந்தது;சிசுபாலன் மாப்பிள்ளை அநுஷ்டிக்க வேண்டிய விரதங்களைக் கூட முடித்து விட்டான்.அப்போது கண்ணன் வந்து,எதிர்த்த சிசுபாலனை
(ருக்மியையும்) வீழ்த்தி,ருக்மணியைக் காப்பாற்றி தேரில் ஏற்றிச் சென்றார்.

நின்ற நீள் மருதும்:

சிசுபாலனாவது ஒருவனாக தனியே இன்னாதன செய்தான்.ஆனால் நின்ற மருத மரங்கள் இரண்டாக,இன்னல் செய்தன.அவையும் முறிந்து விழுந்து அழியுமாறு செய்தார்.நீள் மருது என்றால், அவை சாய்ந்து யார் மீதாவது விழுந்தால் அவர்களைப் பிழைக்க விடாது என்பதாம்
ஆனால்முறிந்ததால் நீண்டது,குறைந்தது
ஆகி அவையே பிழைக்க முடியவில்லை.

எருதும்:

இங்கு கண்ணன் நப்பின்னைப் பிராட்டி
யை மணப்பதற்கு,ஏழு எருதுகளுடன் போரிட்டு அடக்கிய வைபவம் சொல்லப் படுகிறது.அந்த எருதுகள் கண்ணனை நலிய நின்றன--காலநேமி என்னும் அரக்கனின் ஏழு அசுரப்பிள்ளைகளே பெரிய எருது வடிவம் எடுத்துக் கொண்டு வந்து கண்ணனைக் கொல்ல சமயம் பார்த்துக் கொண்டிருந்தன--ஆனால் அவை கண்ணனால் நலிந்து மாண்டு போயின.

முதல் விரோதி நிரசனத்ததில் ஒருவனும்,பின் இருவரும், இப்போது ஏழு பேரும் சொல்லப்படுகின்றனர்.கண்ணன் எத்தனை எதிரிகள் வந்தாலும் அநாயாச
மாக வீழ்த்துவார் என்று பெருமை கொள்கிறார் ஆண்டாள்.விரோதிகள் எத்தன்மையராக இருந்தாலும்--மனிதன்,மரங்கள்,விலங்குகள்,அடுத்துச் சொல்லப்போகும் பறவை மற்றும் அசுரன்--அவர்களை நிரசித்து விடுவார்

புள்ளும்:

பகாசுரன் என்னும் அரக்கன் கொக்கு வடிவு எடுத்துக் கொண்டு பாலகிருஷ்ணரை அழிக்க வந்த போது,
கிருஷ்ணர் கொக்கின் வாயைப் பிளந்து/கிழித்துக் கொன்றார்.

வென்றி வேல் விறல் கஞ்சனும்-- வீழ:

வெற்றியை தரும் வேலை உடையவனும்,
அந்த வேலாயுதமும் மிகையாம் படியான புஜபலம் உடையவனும்,மேலே சொன்ன பகாசுரன் முதலான பல அசுரர்களைக் கண்ணனைக் கொல்வதற்கு அனுப்பிய
வனும் ஆன கம்சனையும் கீழே இழுத்துப் போட்டு உதைத்து,வதம் செய்தார்.

முன் கொன்றவன்:

இவ்வாறாக எதிர்த்து வந்த விரோதி
களை எல்லாம் ஒவ்வொருவராக,
அடுத்தடுத்து எல்லோர் முன்னிலை யிலும் தம் வீரம்/பலம் தோன்றும்படி கொன்ற கண்ணபிரான்.
கண்ணன் ஆண்டாளைக் கைப்பிடிக்க வேண்டும் என்தற்காகவே அவதரித்தார் என்பதைச் சென்ற பாசுரத்தில்
பார்த்தோம்.ஆனால் அது நிறைவேறு வதற்குள் அவரை எதிர்த்து ஏகப்பட்ட விரோதிகள் வந்ததால்,அவர்களை வரிசையாக வீழ்த்தி நிரசித்து விட்டு, இப்போது ஆண்டாளை ஆட்கொள்வதே சித்தமாய் வருகிறார்.அவர் அப்படி வரும்போது,அவரோடு கூடிடும்படி தம் நெஞ்சிடம் உரைக்கிறார.

4-8"ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன், விரை சூழ் துவராபதிக்
காவலன்,கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன்,வரில் கூடிடு கூடலே"


விளக்கவுரை :

"பக்தியும் பரிவும் உடையவர் தம் மனத்தன்றி வேறு ஒருவர் மனத்திலும் நில்லாதவன், நறுமணம் சூழ்ந்த துவாரகாபதியின் காவல் மன்னனும்,
துவாரகையின் மன்னன் ஆயினும்,
மிகுந்த செளலப்பத்துடன், கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலன் வருவாரெனில் நீ கூடிடு நெஞ்சே !"

ஆவல் உடையார் :

பேறு தப்பாது என்றிருந்தாலும் பேற்றுக்குத் த்வரித்து,குண அத்வசாயம் இருந்தாலும்,அதிக்ரமணமாக,அதி தீவிர ஆவலால் தூண்டப்பட்டு(ஆர்வக்
கோளாறு)வழியல்லா வழியாகினும் சரியென்று செல்லுதல்--ஆண்டாள் செய்த பாவை நோன்பு நோற்பது,
காமனை ஆராதிப்பது,
சிற்றில்இழைப்பது,பனி நீராடுவது,
கூடல் இழைப்பது இவை எல்லாம் ஆவலின் வெளிப்பாடுகளே !

அன்பு உடையார்:

எம்பெருமானை தம் பிரியமான குழந்தை போல பாவித்து அன்பு செய்தல்;
அவரது பரத்துவத்தை மறந்து,அவருக்கு என்ன ஆபத்து நேரிடுமோ என்று பயந்து
பதறி பொங்கும் பரிவைப் பொழிதல்.
ஆண்டாளின் திருத்தகப்பனார்
பெரியாழ்வார்,
"பல்லாண்டு,பல்லாண்டு,பல்லாயிரத்தாண்டு ......மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு" என்று மங்களாசாசனம் செய்தது.
பரம பதத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கு யாரும் விரோதிகள் இல்லை,யாராலும் ஆபத்து நேர முடியாது என்பதை வேத விற்பன்னரான பெரியாழ்வார் அறிந்திருந்தாலும்,அங்கிருக்கும் நித்ய சூரிகளிடம் இமைப்பொழுதும் உறங்காமல் பகவானை ரட்சிக்கும்படி வேண்டுகிறார்.
நித்யசூரிகள் கண்ணை இமைக்கவே மாட்டார்கள்/உறங்கவே மாட்டார்கள் என்பது பெரியாழ்வாருக்குத் தெரியாமல் இல்லை.அதீத அன்பாலும்,பொங்கும் பரிவாலும்,
"உறகல் ,உறகல்,உறகல் ஒண்
சுடராழியே ! சங்கே !.......
உறகல் பள்ளியறை குறிக் கொண்மின் !!"
என்று பாடுகிறார்.

தம் மனத்தன்றி மேவான்:

தங்கள் குடியில் உள்ளார்--ஆவலும் அன்பும் நிறைந்திருக்கும் பன்னிரண்டு ஆழ்வார்களின் குடி--அந்த ஆழ்வார்க ளின் அஞ்சும் குடியில் உள்ளோரின் மனம் அன்றி,வேறொருவர் மனம் மேவி இருக்க மாட்டார் எம்பெருமான்.
"அரவத் தமளியினோடும்,அழகிய பாற்கடலோடும்,
அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி
வந்து புகுந்து"என்று பெரியாழ்வார் பாடியபடி.

விரை சூழ் துவராபதி:

நறுமணம் சூழ்ந்திருக்கும் துவாரகையின் ஈசன்/ காவலன்/மன்னன் ! என்ன நுறுமணம்? கண்ணபிரான் நரகாசுரனைக் கொன்று அவன் சிறைப்படித்து வைத்திருந்த பதினாறாயிரத்து நூற்றெட்டு பெண்க ளையும் விடுவித்தார்.நரகாசுரனின் அடிமைகளாக சிறையில் இருந்ததால்,
அவர்களை மணம் புரிய யாரும் முன்வரவில்லை.ஆதலால் கண்ணனே அவர்கள் அனைவரையும் மணம் புரிந்து துவாரகைக்கு அழைத்து வந்தார்.
துவாரகாபதிக் காவலனின் மகிஷிகளான அவர்கள் அந்தத் தகுதிக்கேற்ப நன்றாகப் பூச்சூடிக்
கொள்ள வேண்டுமே ! அவர்கள் அனைவரின் பூமாலைஅலங்காரத்தாலும்,
பூக்கள் நிறைந்த நந்தவனங்களாலும் துவாரகாபுரி என்றும் நறுமணம் நிறைந்திருந்ததாம் !

அந்த ஊர்ப் பூக்கள் போராமே,சத்யபாமா பிராட்டி வேண்டியபடி, கிருஷ்ணர் சொர்க்கத்தில் இருந்த பாரிஜாத மலர் மரத்தையும் பிடுங்கி வந்து துவாரகையின் தங்கள் நந்தவனத்தில் நட்டார்.அதனால் சொர்க்கத்தின் மணமும் சேர்ந்து கொண்டது !!

துவராபதிக் காவலன்:

துவராபதிக்கு மட்டுமல்லாமல் ஜகம் முழுதுக்குமே காவலன்."ஜகத் வியாபார லீலை பண்ணுபவன்"
பிரம்மாவுக்கும்,சிவனுக்கும் அந்தர்யாமி யாய் இருந்து படைத்தல்,அழித்தல் ஆகியவற்றையும் தாமே நின்று காத்தல் தொழிலையும் செய்து ஜகத்வியாபாரம் பண்ணுபவன்.

கன்று மேய்த்துவிளையாடும் கோவலன்(கோ பாலன்) வரில்:

கண்ணன் துவாரகைக் காவலன் ஆவதற்கு முன்னமே கன்று மேய்த்தாரே !
ஆனால் ஆண்டாள் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடுகிறார் என்கிறாரே? ஆண்டாள் பிற்காலத்தில் இந்த வைபவங்களைப் பாடுவதால்,
அவரது பரத்துவத்தை, முதலில் பாடி அவர் எத்தனை உயர்ந்தவர் என்று கோடிட்டு,அதன்பின் அந்த நிலையிலி
ருந்த,இவர் கன்று மேய்த்தாரே என்று செளலப்யத்தையும்,நீர்மையையும் பாடுகிறார்.

"காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன்" என்பதில் மூன்று அற்புதமான அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன:

1.ஜகத்துக்குக் காவலன் என்றால் அந்த ஜகத்தில் கன்றுகளும் அடக்கம்; அவற்றுக்குத் தகுந்தாற் போல அவற்றை,மேய்த்து விளையாடிக் காத்தார்.கன்று மேய்த்தல் என்னும் ஒரு சாதாரண வேலையாக இருந்தாலும் அவர் தாமே முன்வந்து செய்யும் சீரிய செளலப்யம் !
2.கன்று மேய்ப்பதே அவதாரத்தின் பிரதான நோக்கம்--துவாரகாபதிக் காவலன் என்பதெல்லாம் கூடச் சேர்ந்தது.

"சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே" என்னும் திருவிருத்தப் பாசுரப்படி.

3.ஜகத் காவலன் -ஜகத்வியாபார லீலை தானே எப்போதும் செய்து கொண்டிரு
ப்பதால்--அவற்றை எல்லாம் சில காலம் பிரம்மா முதலானோரிடம் ஒப்படைத்து விட்டு,செளலப்ய நேர்மை குணங்களைக் காட்டும் வண்ணம் "கன்று மேய்த்து விளையாடும் கோவலன்" வேலை மட்டுமே, செய்வதற்காக, கோகுலத்துக்கு வந்து விட்டாராம்

நித்யசூரிகளைக் காப்பதைக் காட்டிலும்,
ஜீவர்களைக் காப்பதைக் காட்டிலும்,
பசு,எருமை போன்ற கற்றினங்களைக் காப்பதைக் காட்டிலும், கன்றுகளை மேய்த்துக் காப்பதையே எம்பெருமான் பெரிதும் உகப்பார் !

காவலன்/கோவலன் Vs ஆவல்/அன்பு :

இந்தப் பாசுரத்தில் "காவலன்" என்னும் சொல் எம்பெருமானது பரத்துவத்தையும்,ரஷகத்துவத்தையும் குறிக்கிறது."கோவலன்" என்னும் சொல் அவரது "செளலப்யத்தை க் குறிக்கிறது.
"ஆவல்" "அன்பு" ஆகிய குணங்கள் நம் போன்ற சரணாகதனுக்கு இருக்க வேண்டியது.இவையே சரணாகதி லட்சணங்களான"ஆகிஞ்ஜன்யம்,அநந்யகதித்துவம்"என்று கொள்ளலாம்.
"எம்பெருமானது பரத்துவ/ரக்ஷக,சௌலப்யங்களுக்கு குறை இல்லை .எனது ஆவல், அன்பு அபி நிவேசங்களுக்கும் குறை இல்லை "

இருவர் பக்கலிலும் உள்ள குணங்களுக்குக் குறையில்லை என்னும் போது,நெஞ்சே ஏன் தயக்கம் ? உடனே கூடிவிடு.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).

படங்கள்:
1.சிசுபாலன் வீழ--ருக்மணி கல்யாணம்;
2.மருதும் வீழ;
3.எருதும் வீழ ;
4.புள்ளும் வீழ;
5.கஞ்சனும் வீழ ;
6.காவலன் !
7.கோவலன் !!


1627547655878.png

1627547666581.png


1627547679168.png


1627547687449.png


1627547695737.png


1627547713353.png

1627547721653.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 14)

4-9:"கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று,
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்,
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே"


விளக்கவுரை:

"முற்காலத்திலே,முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும்,முஞ்ஜியும், பவித்ரமும், தண்டுமான கோலம் பூண்ட வாமந ரூபியாய்,மாவலியின் பெரு வேள்வியில் சென்று,மேலுலகங்களையும்
கீழுலகங்களையும்,ஒவ்வோரடியாலே
அளந்து கொண்ட திரிவிக்ரமன்
வருவானாகில் கூடிடு !!!

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று :

ஒரு வைதீக பிரம்மச்சாரி பாலகனாக, யஜ்ஞ்ஞோபவீதமும்(பூநூல்),க்ருஷ்ணாஜினமும்(மான்தோல்)முஞ்சியும்(அரையிற்
கட்டும் நாணற் கயிறு)பவித்ரமும்
(வெள்ளை வஸ்த்ரம்)தண்டும்(பலாசமரத் தண்டு) நன்றாக பொருந்தியிருந்த அழகிய கோலம்.ஏற்றுக் கொண்ட வாமன வேடத்துக்கு மிகப் பொருந்திய கோலம்.
பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்ய ஒப்பனையிலும் அழகியதாய் இருந்ததாம்.

பண்டு மாவலி தன்,பெரு வேள்வியில்:

பண்டைய காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி நடத்திய பெரிய வேள்வியில்
வாமனப் பெருமானாக எழுந்தருளியது.
பல ரிஷிகளும்,முனிவர்களும், சக்ர
வர்த்திகளும் ஒரு பலன் வேண்டி,
பெருமாளைப் பிரார்த்தித்து வேள்வி/யாகம் செய்வார்கள்.எம்பெருமானும் அவர்கள் வேண்டிய பலனைத் தந்தருள்
வார்.ஆனால் மாவலி செய்த வேள்வி
யில் எம்பெருமானே பிரத்யட்சமாக எழுந்தருளினார்.அதுவும் பொதுவாக யாகத்தின் முடிவில் தான் பலன் கிடைக்கும்.அங்கு யாக ஆரம்ப நிலையிலேயே வாமனமூர்த்தி எழுந்தருளினார்.

ஆனால் ஆண்டாள்/கோபிகைகள் மார்கழி முழுதும் திருப்பாவை நோன்பு இருந்தும்,அவர் முகம் காட்டவில்லையே.!
அதற்கு மேலும் வழியல்லா வழியாக, தூது விடுத்தும், அநுக்ரஹம் செய்ய வில்லையே !மாவலிபெற்ற பேற்றை அடியோங்கள் பெற வில்லையே !

அண்டமும் நிலனும் அடி யொன்றினால்:

அவர் தன்னுடைய உடைமை என்றால்,
ஓரடி நிலத்தையும் விடாமல் அளந்து பெற்று விடுவார்.நாங்களும் அவர் உடைமை தானே; எங்களை வந்து ஏன் ஆட்கொள்ளவில்லை? ஒருவேளை நம் நெஞ்சு தான் கூடாமல் இருக்கிறதோ?

இங்கு அடியொன்றினால் என்பது, ஓரடியில் நிலத்தை அளந்ததையும்,
மற்றோர் அடியில் அண்டத்தை அளந்ததையும் குறிக்கிறது.
"மூன்றடி நிமிர்த்து" என்னும்படி, மூன்றடி அளந்தார் என்றால், மூன்றாவது அடியால் எந்த உலகை அளந்தார் என்று நஞ்சீயர்,பட்டரைக் கேட்க,பட்டர்,
"வேத புருஷன் தானே -இரண்டடியால் அளந்த இடம் எல்லாரும் அறியும்.
நீ மூன்று அடியால் அளந்த இடம் உனக்கே தெரியும் என்று காணாமல் விட்டான்; அத்தனை அவன் அளந்தமை யுண்டு ;அவனுக்கே தெரியும் அத்தனை "-என்று அருளிச் செய்தார்.
இரண்டு அடிகாளால் அளந்ததைப் பார்த்தவர்கள் பலர்.மூன்றாம் அடியால் அளந்ததைக் கண்டவர் யாருமில்லை.
அவர் ஒருவருக்கே தெரியும் என்பதாம்.--
இதற்கு இரண்டு ஐதீகங்கள் சொல்லப்படுகின்றன.
1.மாவலியின் ஒப்பற்ற உதாரகுணமே ஒரு உலகம் என்று, அவன் தலையை அளந்தார்.
2.ஈரேழு பதிநாலு லோகங்களையும் தாண்டிய பரமபதம் ஆகிற நித்யோலகத்தை அளந்தார்.

கொண்டவன் வரில் கூடிடு கூடலே!

அந்த உலகளந்த நாதன் வந்தால் கூடிடு நெஞ்சே.

4.10."பழகு நான் மறையின் பொருளாய் மதமொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே "


விளக்கவுரை:

"அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்,
மத ஜலம் பெருகி நின்ற கஜேந்தராழ் வான் என்னும் யானை,துயர் நீங்கி வாழும்படி கிருபை செய்தருளினவனாய்,
எம்மை ஈடுபடுத்த வல்ல பேரழகை உடையனாய்,அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருந்து மகழ்பவனுமான கண்ணபிரான்
வரக் கூடுமாகில் கூடிடு"

பழகு நான் மறையின் பொருளாய்:

எக்காலத்தில் தோன்றியது என்று யாராலும் அறுதியிட முடியாத மிகத் தொன்மையான, ஒரு புருஷனால் சொல்லப்படாத,/இயற்றப்படாத வேதங்கள் உரைக்கும் பொருள்/ அர்த்தம்-
எம்பெருமான் விஷ்ணுவே என்பதை ஆழ்வார்கள்/ஆசார்யர்கள்/மகான்கள் அறுதியிட்டு உரைத்துள்ளார்கள்.

"பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,

பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்,பெருகிய புனலொடு நிலனும்,

கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்
ஏழு மா மலைகளும் விசும்பும்,

அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான்-
அரங்க மாநகர் அமர்ந்தானே"(பெரிய திருமொழி 5-4-1.

"வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய "
என்று பகவான் கிருஷ்ணரே கீதையில் செப்பியபடி.:

மத மொழுகு வாரணம் உய்ய அளித்த
எம் அழகனார்:

வாரணமாகிய கஜேந்திராழ்வானின் கூக்குரலைக் கேட்டவுடனே,பரமபதத்தில் வீற்றிருந்த எம்பெருமான் அரைகுலையத்,
தலைகுலைய விழுந்தோடி,ஆடை,
ஆபரணம்,அலங்கல் முதலியவற்றை பொருத்தமின்றி மாற்றி,மாற்றி அணிந்து கொண்டு புறப்பட்ட அழகு, ஆண்டாளைக் கொள்ளை கொண்டதால் "எம் அழகனார்"

சென்ற பாசுரத்தில் ஆடை/ஆபரணங்கள் நன்றாகப் பொருந்திய "கொண்ட கோல" அழகைப் பாடிய ஆண்டாள்,
இப்பாசுரத்தில் அவை பொருந்தாமேல் இருந்தாலும் அதுவும் ஒரு தனி அழகே என்கிறார்.

வாரணத்தின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த அழகா ! அடியேன் உன்னைப் பலவாறு ஸ்தோத்திரம் செய்து பாசுரங்கள் பாடியும் நீ வரவில்லையே !

அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்:

"கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும்"--ஆய்ச்சியர்களு
க்கு,கண்ணன் முகம் காட்டாவிடில் அவர்கள் ஆவி தங்காத நிலையில் உள்ள அவர்கள் கண்ணன் மேல் கோபம் கொண்டு,நம்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்ட கண்ணன் நம்மிடம் வராமல் போவாரோ? அப்படி வந்தால் அவருக்கு முகம் காட்டப் போவதில்லை என்று வைராக்யமாய் இருந்தார்கள்.
ஆனால் கண்ணன் வந்த போது,அவரது அழகிய புன்னகைக்கும்,அருள் மொழிக்கும் மயங்கி மனம் தீர்ந்து மேல்விழுந்து அடையும்படி பிச்சேறிக் கிடந்தனராம்.அவர்கள் சிந்தையைக் கலக்கி வாழ்வுகள் செய்தும், தாழ்வுகள் சொல்லியும்,அவர்கள் நெஞ்சில் குழைந்திருக்க வல்லவர்.

"கோலப் பாதத்தையும் -அணி மிகு தாமரைக் கையையும்
தலை மிசை வைத்து வாழ்வுகள் செய்தும்
அடியேன் குடியேன் குழைந்து கலந்து கலக்க வல்லவன் "

ஆய்ச்சியர்களிடம் வந்து குழைந்தது போல, என் இன்னாப்பை தீர்த்து கலக்குமாகில் கூடிடு !!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.கொண்ட கோலக் குறளுருவாய்.
2.அண்டமும் நிலனும் அடியொன்றி.
3.வாரணம் உய்ய அளித்த அழகனார்.
4.அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார்

1627615769358.png

1627615776611.png

1627615784100.png

1627615790517.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 15)

4-11"ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக், குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே !"
விளக்கவுரை:

"ஊடலோடே கூடியிருக்கை,
குறைகளை உணர்த்துகை,
பிறகு கூடி உகந்திருக்கை-- இப்படிப் பட்ட காரியங்களிலேஅநாதி காலமாக,
நிறைந்த புகழையுடைய ஆயர்குலப் பெண்கள் இழைத்த கூடலைப் பற்றி,
அழகிய கேச முடியை யுடைய ஆண்டாள் அருளிச் செய்த,பத்துப் பாட்டுக்களை யும்,ஓத வல்லவர்களுக்கு எம்பெருமானைப் பிரிந்து துக்கம் அடையும் படியான,பாவம் இல்லையாம்"

ஊடல், கூடல் :

ஆய்ச்சியர் கண்ணணோடு ஊடல் கொண்டிருக்கும் போதே கூடியும்--சேர்ந்தும் இருப்பார்கள்.ஊடல் முடிந்து கூடல்,கூடல் முடிந்து ஊடல் என்பதில்லை.
"ப்ரணயரோஷ ஸஹிதைகளாய்" இருந்தார்கள்.அதிக ஊடல் கொண்டால் அவர் சென்று விடுவாரோ என்னும் பயத்தில் ஊடலிலே கூடல், கூடலிலே ஊடல் என்று நடந்து கொண்டிருப்பார்கள்.

உணர்தல் :

கண்ணன் குறைகளை அவரிடம் எடுத்துச் சொல்லி அவருக்கு உணர்த்துதல்."குறை ஒன்றும் இல்லை கோவிந்தா !" என்று பாடிய ஆண்டாள் கோஷ்டி, கண்ணனிடம் அப்படி என்ன குறை கண்டார்கள் ?
அவர் சொன்ன நேரத்துக்கு வராமை,
அவர்களைக் காக்க வைத்தது,பூச்சூட்டி விடாதது,அவர்களை விட்டு விட்டு,அவர் மட்டும் பூமாலை சூடியது,ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தராதது, ஒருத்தியுடன் விளையாட வருகிறேன் என்று சொல்லிவிட்டு, இன்னொருத்தி
யுடன் சென்றது.....போன்றவை.

புணர்தல்:


அவர்கள் உணர்த்திய பின்,
"எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி" கண்ணன் அவர்களிடம் இறங்கி வந்து ஷாமணம் பண்ணி-- வருந்தி(!),அதனால் அவர்கள் மகிழ்ந்து விஸ்லேஷம்/ப்ரணயகலகம் நீங்கி ஸம்ஸ்லேஷத்தில் திளைப்பது.
"உங்கள் ஆசை, அன்பு,காதல்,வேட்கை, அவா வளர்க்கத் தான் பிரிந்தேன்--
என்றன போல்வன சொல்லி புணர்வான் இறே"

ஊடல்,கூடல்,உணர்தல் ஆய்ச்சியர்கள் பக்கலிலிருந்து.புணர்தல் கண்ணனின் பக்கலிலிருந்து.தம்முடைய உடமைகளை ஒன்று விடாமல் கூட்டிக் கொண்டு செல்வதே அவதார நோக்கமாயிருக்க அவர் எப்போதும்/யாரும் ஊடல் புரிய மாட்டார்.

நீடு நின்ற... ஆய்ச்சியர்:

கண்ணனோடு ஊடுவதும், கூடுவதுமாக இதுவே யாத்ரையாய்/வாழ்க்கையாய் நீண்ட நெடுங்காலமாய் இப்படியே இருக்கும் ஆய்ச்சியர்கள்.

நிறை புகழ் ஆய்ச்சியர் :

கண்ணனோடு ஊடல் செய்வதில் புகழ் பெற்ற ஆய்ச்சியர்.
"இவர்களுக்கு நிறை புகழாவது –
கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்,இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் என்னும் புகழ் காண்"என்று எம்பார் அருளிச் செய்வர்.அதாவது ஒருத்தி கண்ணனைச் சேர்த்துக் கொள்ளாமல்,நான்கு நாட்கள் காக்க வைப்பாள்.இன்னொருத்தி பத்து நாள் காக்க வைப்பாள்.இவ்வாறு கண்ணபிரானையே காக்க வைக்கக் கூடியவர்கள் வேறு யாரேனும் உண்டோ?
இந்தப் புகழ்--நிறைபுகழ்--திருவாய்ப்பாடி ஆய்ச்சியர்களுக்கே உரித்தானது.

குழல் கோதை:

அழகிய கேசத்துக்கு/தலைமுடிக்குப் பெயர் பெற்ற ஆண்டாள்.ஆண்டாள் கொண்டை என்றாலே என்றும் அழகு/பேரழகு. ஆண்டாள் தன் அழகிய கேசத்தால்/ கொண்டையால்,அதில் சூடிய மாலையால்,சூடிக் கொடுத்த மாலையால் "எம்பெருமானை இவளை நோக்கிக் கூடல் இழைப்பிக்க வல்லவள்"
என்பதாம்.

முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே !

இந்தப் பதிகத்தில்,இதற்கு முன் பாடிய பத்துப் பாசுரங்களையும் அர்த்தம் உணர்ந்து பாட வல்லார்கள் பாவம் நீங்கி உய்வடைவார்கள்.அவர்கள் ஆய்ச்சியரை
/ஆண்டாளைப் போலே கூடல் இழைக்க வேண்டாதபடி,எம்பெருமான் திருவடிகளை அடைய முடியும் !!

நாச்சியார் திருமொழி -பதிகம் 5
குயில் விடு தூது !

"நீ கூடிடு கூடலே" என்று பத்துப் பாசுரங்கள் பாடிய பின்னும், அந்தக் கூடல் விளையாட்டோ அல்லது நெஞ்சோ "கூடுவேன்" என்றோ,"கூடேன்" என்றோ எந்தப் பதிலும் சொல்லவில்லை.கூடல் விளையாட்டும்/நெஞ்சும் அசேதநப் பொருட்கள் ஆனதால் அவை சொல்லவில்லையோ என்று ஐயம் உற்றார்.ஆனால் மனம் தளராத ஆண்டாள் வேறு என்ன செய்து அவரை அடையலாம் என்று சிந்திக்கிறார்.
முன்பு தானும் கண்ணனுமாய் சேர்ந்து இருந்த போது, அங்கிருந்த குயில் ஒன்று,அவர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகளைக் கேட்டு"பிரதி வசனம் பண்ணியது" --திருப்பிக் கூவியது/சொன்னது--நினைவுக்கு வர அந்தக் குயிலைத் தூது அனுப்பலாம் என்று தீர்மானித்தார்.அந்தக் குயில் கேட்டதற்கு பதில் சொன்னதாலும்,நல்ல அறிவுடைய
தாயும்(நன்றாகப் பறக்கும்; இனிமை
யாகப் பாடும்) இருந்ததால், குயில் நம் வார்த்தையைக் கேட்டு கண்ணன் இருப்பிடத்துக்கு உடனே பறந்து சென்று,தன் இனிமையான குரலால் சேதி சொல்லும் என்று குயில் மூலம் தூது விடுகிறார்--இப்பதிகத்தின் பத்துப் பாசுரங்களில்.

குயில் ஒரு சாதாரணப் பறவை, பேசத்தெரியாதது;(அது கூவுவதையே பேசுவதாகக் கொள்கிறார்.) ஆண்டாள் இப்படிப்பட்ட குயிலின் காலில் விழுந்து,
கண்ணபிரானிடம் தம்மைச் சேர்க்குமாறு தூது விடலாமோ?

"ராவணனைப் பார்த்து -நீ என்னையும் அவனையும் சேர்க்க வல்லையே -என்னுமவர்கள்- இத்தைப் பெற்றால் விடார்கள் இறே" என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.

ஸ்ரீராமாயணத்தில் சீதாப்பிராட்டி ராவணனிடம்"நீ என்னை ராமரிடம் சேர்த்து வை" என்றாரே! மிக மோசமான பிரதிகூலனான இராவணனிடம் சீதாப்பிராட்டி கேட்டது சரியென்றால்,
அநுகூலனான குயிலிடம் கேட்பது
தவறாகாது !

சீதை நேராக ராவணனிடம் இவ்வாறு கேட்கவில்லை.ஆனால் அசோக வனத்தில்,பிராட்டி ராவணுனுக்கு உரைத்த உபதேசத்தில்,
"இலங்கையைக் காக்கவேண்டும் என்றும்,உனக்குப் கோரமான அழிவு வேண்டாம் என்றும் எண்ணினால்,
புருஷோத்தமன் ஸ்ரீராமருடன் நட்புக் கொள்வாயாக"(சுந்தரகாண்டம் 21-19) என்றும்
"அறம் அறிந்த அவர்,சரணமடைந்தவர்
களிடம் பேரன்பு கொண்டவர்(கை விட மாட்டார்) என்பது எல்லோருக்கும் தெரியும்;ஆதலால் நீ உயிரோடு இருக்க விரும்பினால்,அவருடன் நட்புக்கொள்"
(21-20) என்றும் சொன்னார்.
ஸ்ரீராமரிடமிருந்து கவர்ந்து வந்த பிராட்டியை மீண்டும் அவரிடம் சேர்த்தால்/ஒப்படைத்தால் தானே அவரோடு நட்புக் கொள்ள முடியும்.
எனவே "நட்புக் கொள்"என்பதில் "என்னை ராமனிடம் சேர்த்து விடு"என்னும் அர்த்தம் பொதிந்திருக்கிறது என்கிறார் பிள்ளை.

இப்பதிகப் பாசுரங்களை அடுத்த பதிவுகளில் அநுபவிப்போம்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)


1627707347477.png

1627707353981.png

1627707361034.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 16)

நாச்சியார் திருமொழி-5:
குயில் விடு தூது !!

குயில் மூலம் எம்பெருமானை அடைய விழைதல் என்பதின் உள்ளுறைப் பொருள், ஆசார்யர் மூலம் எம்பெருமான் திருவடிகளில் சரணடைவது என்று பூர்வாசார்யர்கள் உரைப்பர்.குயிலின் இரண்டு சிறகுகள் ஆசார்யரின் ஞானம்,அநுஷ்டானம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.குயில் சிறகுகளை விரித்துப் பறப்பதுபோல,ஞானம்,
அநுஷ்டானம் இவை நன்றாகவே உடைய ஆசார்யர் எம்பெருமானிடம் தம் சீடர்களைக் கொண்டு சேர்க்கிறார்.

5-1:"மன்னு பெரும் புகழ் மாதவன்,
மா மணி வண்ணன், மணி முடி மைந்தன்,
தன்னை உகந்தது காரணமாக,என் சங்கு இழக்கும் வழக்குண்டே !
புன்னை, குருக்கத்தி, நாழல், செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே !
பன்னி எப்போதும் இருந்து விரைந்து, என் பவளவாயன் வரக் கூவாய் !!"


விளக்கவுரை:

"புன்னை,குருக்கத்தி,கோங்கு,சுரபுன்னை முதலிய பல மரங்கள் நிறைந்த பசுமையான சோலையிலே வாழுகின்ற
குயிலே!
என்றும் நித்யமாய் எழுந்தருளியிருப்பவ
ராய்,அளவில்லாத புகழையுடையவராய்,
ஸ்ரீய: பதியாய்,நீலமணி போன்றநிறத்தை
உடையராய்,நவமணிகள் அழுத்திச்
செய்த திருமுடியைச் சூடியிருப்பவராய்,
மிடுக்கையுடையவராய் ஆன எம்பெருமானை அடைய ஆசைப்பட்டதே,
காரணமாக,என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம் உண்டோ இவ்வுலகில்? 'இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ ?'
பவளம் போலப் பழுத்த திருவதரத்தை யுடையனான என் நாயகர் கண்ணன் என்னிடம் வந்து சேரும்படி,எப்போதும்-இரவும் பகலும் பன்னி இருந்து–அவரது திருநாமங்களைச் சொல்லிக் கொண்டு விரைந்து கூவுவாயாக !"

"எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –
மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யாவிடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்"

அண்ட சராசரங்கள் முழுதும் உள்ள சேதந,
அசேதநப் பொருட்களை மிகச் சரியாக நடத்தவல்ல(சூரியன் உதிப்பது,தீ சுடுவது,
நீர் குளிர்வது, கடல் பூமியை விழுங்கா
மல் இருப்பது,பல கோடி ஜீவாத்மாக்க
ளின் தேக இயக்கங்கள் போன்ற கோடிக்கணக்கான நடைமுறைகள்)
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்--மணிமுடி மைந்தன் என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் முறை தவறிவிட்டாரே.அவர் அதைப் பொருந்தச் செய்யுமாறு செய்வது உன்னுடைய பொறுப்பு என்று பெரிய பொறுப்பை(குயில் தலையில் பலாக்காய்) குயிலிடம் ஒப்படைக்கிறார் ஆண்டாள்.

"இத்தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ; தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ"

என்னிடம் ஏதேனும் குறையிருப்பதால் அவரை இழக்கின்றேனோ என்றால் இல்லை.அவருக்கென்றே 'ஆவலும் அன்பும்' கொண்டு அற்றவள் அல்லவோ நான்.(அவரைத் தவிர வேறு அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்.
அப்படி இருப்பவர்களைத் தானே அவர் உகக்கிறார்).
அவர் பக்கலில் குறை உண்டோ என்றால்,அவர் "குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்; காவலன்; கோவலன்;குண பூரணர்"
பின் ஏன் நான் அவரை இழக்கிறேன் !

மன்னு பெரும் புகழ்:

மன்னு---அவரது கல்யாண குணங்களான
ஸ்வாமித்வம்,வாத்ஸல்யம்,செளசீல்யம்,
செளலப்யம்,மார்த்தவம் போன்றவை என்றும்/எப்போதும்/எக்காலமும்
விலகாமல் விளங்குமாறும்,

பெரும்---அந்தக் கல்யாண குணங்கள் அளவிட முடியாத அளவில்நிறைந்த
தாயும்,--
"ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண"-
இன்னார்-இனியார் என்று பார்க்காமல்,
எவரையும் எந்த நேரத்திலும் ஆட்கொள்
ளும் தன்மை உடைத்ததாயும்,
புகழ்--ஒரு சிறு குறையும் இல்லாமல்-
'உயர்வற உயர்நலம் உடையவனான'
-கல்யாண குணங்களே பூர்ணமாகப் பிரகாசிக்கும்--
இப்படி எல்லாம் நிறைந்திருந்தும் நான் ஏன் இழக்கிறேன் ?

மாதவன்:

மா--ஸ்ரீ--பிராட்டியுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணன்.மஹாலட்சுமித் தாயார்,
"அகலகில்லேன் இறையுமென்று"
அவர் மார்பில் உறைந்திருந்து,
ஜீவாத்மாக்களுக்காக--நாம் செய்யும் அளவற்ற பாவங்களை மறைத்து/மன்னித்து- எப்போதும் பரிந்து பேசி புருஷஹாரம் செய்து,அவரது கல்யாண குணங்களை நம் மீது பொழியச் செய்கிறார். பெரியபிராட்டியாரோடு இருந்தும் நான் அவரை இழக்கிறேனே !

மாதவன் -மா மணி வண்ணன் :

நீலமணி நிறத்தில் பேரழகுடன் திகழ்பவர்.அந்த அழகும் அவருக்காக இல்லையாம்.பெரிய பிராட்டியாருக்கு ஆகவாம்.என்னைப் போன்ற பக்தர்கள் தன் திருமேனி அழைக்க காட்டி ஈர்ப்பவர்--
அந்த அழகனை இழக்கிறேனே!

அந்த அழகு இழக்கலாம் படியாகவா
இருக்கிறது?

மணி முடி மைந்தன்:

இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவரையா நான் இழக்கிறேன்?
அவர் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகர்.நிரங்குச ஸ்வதந்திரர்.மணி முடி சூட்டிக்கொண்டு பிரஜைகளின் "ரஷணத்திலே தீஷித்து"--அனைவரையும் காப்பாற்றுவேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு-இருப்பவர்.

ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை அவர்,
அசக்தனாய் இருக்குமாகில்.ஆனால் அவர் மைந்தன்/மிடுக்கை உடையவர்/ஸர்வ சக்திமான்.
இப்படிப் பட்டவரை நான் இழக்கிறேனே !

தன்னை உகந்தது காரணமாக,என் சங்கு இழக்கும் வழக்குண்டே :

அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா நான்? ப்ராப்தனை அன்றோ ஆசைப்பட்டேன்! இழக்கக் கடவேனோ ?
அவர் திருவடிகளிலே சரணடைந்தவர்
கள் அதற்குப்பின் பாவங்களை அநு
பவிப்பார்களோ? அவர் அவற்றை ஒழித்துப் போக்கி விடுவார் அன்றோ?

இல்லையென்றால் அவரே தான் அவற்றை அநுபவிக்க வேண்டும்.!!
---ஆண்டாளுக்கு என்ன தைரியம் பாருங்கள்? "நான் தேவரீரை உகந்து சரணடைந்து விட்டேன்.தேவரீர்
'சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி'
(சரணடைந்த உன்னை, எல்லாப் பாவங்களிலும் இருந்து விடுவிக்கிறேன்) என்று மெய்ம்மைப் பெருவார்த்தை சொன்னீரே(கீதா ஸரம ஸ்லோகம்).
ஆதலால் எனது பாவங்களைப் போக்கும்; அல்லது எனது பாவங்களை தேவரீர் ஏற்று அநுபவித்து,என்னை அப்பாவங்
களிலிருந்து விடுவித்து,சேர்த்துக் கொள்ளும்" என்று பிரார்த்திக்கிறாரா/எச்சரிக்கிறாரா/பயம் உறுத்துகிறாரா !!!

ஆதலால் அவரை உகந்து சரணடைந்த
பின்னும்,அவர் இன்னும் என்னை ஏற்காததால்,என் தேகம் மெலிந்து,
கைகள் மெலிந்து,கைகளில் இருந்த
வளையல்கள் கழன்று விழுந்து விட்டனவே ! இப்படி ஒரு வழக்கம்/நியாயம் உண்டோ?
என் ஆர்த்தியைக் கண்டு ஏற்கா விட்டாலும்,அவரது மெய்ம்மைப் பெருவார்த்தைப்படி நடுநிலையில் நின்று,நீதி வழங்கவும் இல்லையே !

புன்னை,குருக்கத்தி,நாழல், செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே:

புன்னை,குருக்கத்தி,கோங்கு,சுர புன்னை முதலிய பல மரங்கள் நிறைந்த பசுமையான சோலையிலே வாழுகின்ற
குயிலே!
இது வயிறு எரிந்து சொல்கிற ஒரு வஞ்சப் புகழ்ச்சி அணி!
கண்ணனுடன் கூடாத எனக்கு "மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க(மலர்ப் படுக்கையும் சுடுகிறது),குயிலே நீ மட்டும் பசுமையான சோலையில் வித,விதமான மரங்களில் உள்ள பொந்துகளில்--
காலை,மதியம்,மாலை,இரவு போன்ற தட்ப வெப்பங்களுக்கு ஏற்றவாறும்,
வசந்தகாலம்,குளிர்காலம்,மழை/வேனிற் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்றவாறும் மாறிப்,மாறிப் படுத்துக் கொண்டு சுகமாய்ப் பாடிக் கொண்டு இருக்கிறாயே !!

இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த குயில், "புலம்பிக் கொண்டே இருக்கிறாய்;
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீ சொல்லவில்லையே ! அதைச் சொல் !" என்றது.

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்:

நான் அனுப்பிச் செல்லும் நீ எம்பெருமானிடம் சென்று, அவரது திருநாமங்களைத் தொடர்ந்து சொல்லி/பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.ஒரு முறை/ஒரு பொழுது மட்டும் சொல்லாமல்
இரவு/பகல் முழுதும் சொல்லிக்
கொண்டே இரு.உன்னுடைய இனிமையான குரல் கேட்கும் அவர், உடனே எழுந்து என்னிடம் விரைந்து ஓடி வரவேண்டும்படி கூவுவாய் ! வெறுமனே சொல்லிவிட்டு வராமல்,அங்கே இருந்து அவரைக் கையோடு கூட்டி வருவாயாக.
கஜேந்திரன் என்னும் யானை, மடுவின் கரையிலே,முதலையிடம் இடர்ப்பட்ட போது,அவர்,"அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே" விரைந்து வருமாறு கூவுவாய் !!

அப்படி அவர்,கடந்த முறை என்னோடு சேர்ந்து இருந்து,பின் விடை பெற்றுப் போகும் போது,என்னை அணைத்து,
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்படிக்கு ஒரு புன்னகை புரிந்து,அந்தப் புன்னகை
யை வைத்துக் கொண்டு,அவர் மீண்டும் வரும் வரை ஜீவித்திருக்கும்படி(பயிர்கள் நன்றாக விளைய வயலில் நீர் நிறைத்து விடுவது போல்) செய்துவிட்டு சென்றார்.
அவருடைய பவளம் போலச் சிவந்த அதரத்தில் புரிந்த அந்த மயக்கும் புன்னகையோடே வந்து என்னை அணைத்து ஆட்கொள்ளும்படி கூவுவாயாக !

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.பாசுர விளக்கம்.
2.மற்றவை--ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடி இரண்டாம் வெள்ளி

1627874352444.png



1627874362060.png


1627874372060.png


1627874382487.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 17)

5-2"வெள்ளை விளி சங்கு, இடம் கையில் கொண்ட விமலன், எனக்கு உருக் காட்டான்,
உள்ளம் புகுந்து என்னை நைவித்து, நாளும் உயிர்ப் பெய்து, கூத்தாட்டுக் காணும் !
கள்ளவிழ் செண்பகப் பூ மலர்க் கோதிக், களித்து இசை பாடும் குயிலே !
மெள்ள இருந்து, மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் !!"


விளக்கவுரை:

"தேன் ஒழுகுமாறு பூத்துள்ள
செண்பகப் பூவிலே உள்ள ஸாரமான அம்சத்தை அநுபவித்துக் கொண்டு
(கோது எல்லாம்புறந்தள்ளிவிட்டு),
அதனால் ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே !
சுத்த ஸ்வபாவமாய் ,கைங்கர்ய ருசி யுடையாரை,அழைப்பதாய் இருக்கும்
ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை இடக் கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற பவித்ரனான பரம புருஷன்,தனது திவ்யமங்கள விக்ரஹத்தை,எனக்கு சேவை தர
மாட்டேனென்கிறார்.மேலும் என்னுடைய
இதயத்துக்குள் வந்து புகுந்து,என்னை நைந்து போகும் படி பண்ணி,நாள் தோறும் பிராணனை எடுத்து,என்னைத்
தத்தளிக்கச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.நீ செய்ய வேண்டிய
தென்னவென்றால்,என் அருகில் இருந்து கொண்டு,உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல்,எனக்காகத் திருவேங்கட மலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் இங்கே,வரும்படியாகக் கூப்பிடுவாய்"

முதலில் எம்பெருமானைப் பிரிந்து உயிர் தரிக்க மாட்டாது இருக்கும் தனது நிலையை அறிவித்து விட்டு,அதற்கான
பரிஹாரத்தை குயில் மூலம் பண்ணச் சொல்கிறார்.

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட :

நீலவண்ணத் திருமேனிக்கு பொருந்தும் வண்ணம்,வெண்மையை உடைத்த சங்கு!

கைங்கர்யபரர்களை/அடியார்களை கைங்கர்யம் செய்ய வாருங்கள் என்று அழைப்பாரைப் போல இருக்கிற
த்வனியை--ஒலிமுழக்கத்தை உடைய சங்கு!! சங்கின் வெண்மை நிறம் ஜீவர்கள் எம்பெருமானுக்கு சேஷப் பட்டிருப்பவர்கள் என்பதைக் குறிக்கிறது.சங்கின் ஒலி அந்த சேஷத்வத்தைப் பிரதிபலிக்கும் கைங்கர்யம் செய்வதைக் குறிக்கிறது. அத்தகைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை இடக்கையிலே தரித்த.(வலக்கை ஆழி என்பது சொல்லாமலே விளங்குவது. )

அவர் சங்கு,சக்கரங்கள் ஏந்தியிருந்தா
லும்/இல்லையென்றாலும் அழகன்.
அவருக்கு பக்தர்கள் திருவாராதனை செய்து, சேவித்துக் கொண்டிருப்பார்கள்.
(இப்பாசுரத்தில் வேங்கடவரை வரச் சொல்வதால்,அவர் சில காலம் சங்கு சக்கரங்கள் இல்லாமல் இருந்ததும்,ஸ்ரீ ராமாநுஜர் சென்று சங்கு,சக்கரங்கள் ஏந்தச் செய்ததும் கருத்தில் கொள்ளவும்.)

ராஜ புத்திரனை மிகவும் நேசிக்கும்
காதலி,அவன் கையிலே உள்ள மோதிரத்தின் அழகுக்கும் மயங்குவது
போலே,"கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகுக்குப் போலே காணும் இவள்(ஆண்டாள்) தோற்று இருப்பது !"

விமலன் :
அவரது திவ்யமங்கள விக்ரஹங்களும், திவ்ய ஆயுதங்களும்(தோஷமற்ற),
பக்தர்கள் சேவித்துப் பரவசப்படுவதற்கே என்று இருப்பவர்.
"பிறருக்காக நம் வடிவு கண்டது என்று இருக்குமவன்"

எனக்கு உருக்காட்டான்:

அவரை அடைய வேண்டும் என்னும் ஆசையின் எல்லையில் நிற்கிற எனக்கு –
அவருடைய அழகுத் திருமேனி வடிவைக்
காட்டாதே, யாருக்கு காட்டப் போகிறார் ?
பரமபதத்தில் உள்ள நித்யசூரிகளுக்குக் காட்டுவாரோ? அவர்கள் நித்யமும் எக்காலத்தும் அவரோடு தானே இருக்கிறார்கள்."மீனுக்கு தண்ணீர் வார்ப்பாரைப் போலே" அவர்களுக்குத் தனியாகக் காட்ட வேண்டுமோ?
அல்லது அவரது மேன்மை/கல்யாண குணங்களை அறியாத சாதாரண மனிதர்களுக்குக் காட்டிக் கொண்டிருப்பாரோ?

"எம்பெருமான் வாசி வல்லீர்.....
இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே !" என்று திருமங்கை ஆழ்வார் பாடியது போல--
"பக்தர்களுக்குள் வாசி--வேறுபாடு அறியாமல் அனைவருக்கும் அருள் பொழிவதற்காக அர்ச்சாவதாரம் எடுத்துக் கொண்டு திவ்ய தேசங்களில் எழுந்தருளியுள்ள நீர் இங்கே வாசி--வேறுபாடு- பார்க்க பார்த்தீராகில்,
உம்முடைய உடம்பை நீரே கட்டிக் கொண்டு கிடந்து வாழ்ந்து போம்"

தாகம் எடுத்தவனுக்குத் தண்ணீர் வாராதாரைப் போலே,என் தாகத்தைத் தணிக்க மாட்டேன் என்கிறாரே !

உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்:

அவர் என் இதயத்திலே வந்து புகுந்து வீற்றிருப்பதால்,அவர் வடிவை ஒரு வினாடியும் மறக்கமுடியவில்லை.வேறு எதிலும் கவனம்/நாட்டம் செல்லவில்லை.

"நினைந்து நைந்து -உள் கரைந்து உருகி "என்னும்படி என் நினைவில் நின்று என்னை நைவிக்கிறார்.

இதயத்தில் சந்நிஹிதரைப் போலே பிரகாசித்து நிற்பதால்,மிக அருகே வந்து விட்டார் என்று,அணைக்கக் கை நீட்டி
கைக்குள் அகப்படாமையாலே,நோவு பட்டு,பின்னையும் முடிந்து பிழைக்கவும் பெறாதே,(செத்துப் பிழைத்து,செத்துப் பிழைப்பது போல) ஜீவிப்பதாய் நினைத்து இருக்கிற என்னை ,இப்படி துடிக்க விட்டு, இதுவே பொழுது போக்காக,விளையாட்டாக அல்லவா இருக்கிறார் அவர் !!

கள்ளவிழ் செண்பகப் பூமலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே !

நான் இப்படி நைந்து,உருகி,நோவு பட்டு நிற்க,உனக்கென்ன ! சுகவாசியாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே !

தேன் வடிந்து கொண்டிருக்கும் செண்பகப் பூக்களிலே உள்ள கோது
களை/வேண்டாதவைகளை நீக்கி, சத்தான தூய தேன் பருகி,விரிந்த மெத்தென்ற மலரில் அமர்ந்து/படுத்துக் கொண்டு அந்த இனிமையான மயக்க
த்தில் இசை பாடிக் கொண்டிருக்கிறாய்.
கண்ணன் வந்து பூச்சூடிவிட்டால் தான் நான் பூச்சூடுவேன்.அவர் வராததால்
பூக்களை நான் வெறுத்திருக்க
பூக்களிலே, நீ சந்தோஷமாக இருப்பது உனக்கு அடுக்குமா??

மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது, என் வேங்கடவன் வரக் கூவாய்:

இங்கே என் அருகேயே இருந்து, மிக மெதுவாக,பாதி விழுங்கிய சொற்களைச் சொல்லிக்கொண்டு, அதனால் களைப்ப
டைந்ததாக பாவனை பண்ணி, அதற்கு ஒரு பரிஹாரம் தேடிக்கொண்டிருக்காமல்,
உடனே சென்று என் வேங்கடவன் வரும் வண்ணம் சப்தமாகக் கூவுவாயே !

மிதிலையில் புறச் சோலையிலே பிராட்டியைக் கைப் பிடிக்கைக்காக, ஸ்ரீராமபிரான் வந்து நின்று கொண்டு இருந்தது போலே(அயோத்தியிலிருந்து தசரதன் முதலானோர் வருவதற்காகக் காத்திருந்து),எனக்காகத் திருமலையில் வந்து நின்றுகொண்டிருக்கும் திருவேங்கடவரை(அவரே கண்ணனே;
கண்ணனே அவர்) நாலடி எடுத்து வைத்து,விரைந்து ஸ்ரீவில்லிபுத்தூர்
வரும்படி நீ கூவ வல்லையே !!
அவர் பரமபதத்தை விட்டு திருமலை யிலே வந்து நிற்பதே என்னுடைய
சுயம்வரத்துக்குத் தானே !

அயோத்தியிலியிருந்து மிதிலை வந்த ராமர் புறச்சோலையிலிருந்து (அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தினர் மாளிகை இருந்த இடம்) நாலடி வைத்தால் சீதை இருக்கும் ஜனகர் திருமாளிகையை அடைந்து விடலாம்.
விபீஷணனைக் கடாட்சிக்க அயோத்தி
யிலிருந்து திருப்புல்லாணிக் கரை வரை வந்த ராமர்,சுக்ரீவனிடம் நாலடி சென்று,விபீஷணனை அழைத்து வாரும் என்றார்.பரமபதத்திலிருந்து இதற்காக
வே வந்துள்ள திருவேங்கடவர் நாலடியில் வில்லிபுத்தூரை அடையலாமே !

ஜீவாத்மாக்களை உய்விப்பதற்காக, எம்பெருமான் பரமபதத்திலிருந்து பல காத தூரம் இறங்கி வந்து திருமலை மற்றும் திவ்ய தேசங்களில் எழுந்தருளி
இருக்கிறார்.ஆனால் ஆசார்யர் மூலம் உபதேசம் பெற்று வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.ஆசார்யர் பஞ்சசம்ஸ்ஹாரம் செய்து நாலடி இட்டுச் சென்று நம்மை அவரிடம் சேர்ப்பிக்கிறார்
என்பதாம்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)


1627874681035.png

1627874687421.png


1627874694316.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 18)

5.3:"மாதலி, தேர் முன்பு கோல் கொள்ள, மாயன் இராவணன் மேல் சரமாரி,
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த, தலைவன் வர எங்கும் காணேன் !
போதலர் காவில் புதுமணம் நாறப், பொறி வண்டின் காமரம் கேட்டு,உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே ! என் கரு மாணிக்கம் வரக் கூவாய் !!"


விளக்கவுரை:

"சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புதிதான பரிமளம் வீச,அழகிய வண்டின்
'காமரம்'என்னும் பண்ணிசையைக்
கேட்டுக் கொண்டு,உன் பேடையோடு சுகமாக வாழ்கிற குயிலே!
மாதலி என்னும் தேரோட்டி தேரின் முன்னே,கோலைக் கொண்டு தன் தேரை நடத்த,மாயாவியான ராவணன் மேலே
அவனுடைய பிரதானமான தலை,பல
முறை அற்று அற்று விழும்படி சார்ங்க (அம்பு) மழை பெய்வித்த,ஸ்ரீராமருடைய வரவை,ஒரு திக்கிலும் காண்கிறேன் இல்லை.ஆதலால், என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
நீலரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ்வெம்பெருமான்
இங்கே வரும்படியாக நீ கூவுவாயாக !!"

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள:

இந்திரனின் தேரோட்டியான மாதலி, ஸ்ரீராமரின் தேரின் முன்னால் இருந்து தேரோட்ட !
"தேர் முன்பு" -- இந்திரன் புரிந்த போர்
களில் எல்லாம் அவர் தோற்றுப் புறமுது
கிட்டு ஓடியதால்,இந்திரன் தேரைப் பின்புறமாக ஓட்டியே பழகிய மாதலி, இப்போது தான் முன்புறம் செல்லும்படி தேர் ஓட்டுகிறான் என்பதாம்.
இராவணன் தேருக்கு எதிராக, முன்புறம் ஓட்டினான் என்றும் கொள்ளலாம்.

மாயன் இராவணன்:

நேர்மையான போர்முறைகளின்படி போர் செய்யாமல், வஞ்சகமாக,சூது செய்து போரிடும் மாயாவி/கபட ராவணன்.
ஸ்ரீராமர் மறைந்தார் என்று சீதை முன்னும்,சீதை மறைந்தார் என்று ராமர் முன்னும் நாடகமாடியது.நேரே நின்று போரிடாமல்,மாயமாக மறைந்து நின்று போரிட்டது. வஞ்சனைக் கபடங்கள் செய்யும் மாயன்.

சீதாப்பிராட்டி இராவணனை நோக்கி,
"ஸ்ரீராமர் ஒரு கம்பீரமான யானை என்றால் நீ ஒரு சிறு முயல்;அவரோ சிம்ஹ ராஜா,நீயோ ஒரு நீச நரிக்கு ஒப்பானவன்;ஒரு சமுத்திரத்தை எச்சில் நீரோடு ஒப்பிடலாமா ! மிக உயர்ந்த பழ ரசமும், இலந்தைப் பழச்சாறும் ஒன்றாகுமா?
நீ ஒரு கோழை ! ராம,லட்சுமணர்களோடு நேராகப் போராடத் தைரியம் இல்லாமல், மாய மாரீச மானை அனுப்பி,ராஜ புத்திரர்
களை அகற்றி விட்டு,என்னைத் தனியாக இருக்கச் செய்து தானே,நீ என்னைக் கொண்டு வந்தாய்" என்று ராவணனது நீசத்தனத்தையும்,மாயத்தனத்தையும் சொன்னபடி.

(இராவணன்) மேல் சரமாரி:

'தாழாதே சார்ங்கமுதைத்த சரமழை போல
என்னும்படி ஸ்ரீராமர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் ஒன்று நூறாகி,
நூறு ஆயிரமாகி ஒரு நொடியில் சரம் சரமாகச் சென்று இராவணன் படைகளைத் தாக்கின.

தாய் தலை, அற்று அற்று,வீழத் தொடுத்த தலைவன்:

இராவண வதத்தில் முதலில்,அவனது பிரதானமான தலை அற்று விழ,ராமரின்
திருச்சரங்கள் பண்ணின பாக்யத்தாலே, அவன் தலை,அறுக்க அறுக்க முளைத்ததாம்.கர,தூஷண வதத்துக்குப் பின் பல ஆண்டுகள் வேலையற்று இருந்த ஸ்ரீராமரின் அம்புகள் இராவண யுத்தத்தை எதிர்நோக்கி இருந்தனவாம். அந்த அம்பு, ஒரே தாக்குதலில் ராவணன் தலையை அறுத்துக் கொல்ல வல்லது.
ஆனால் அப்படி ஒரு நொடியில் யுத்தம் முடிந்தால், அம்புக்கு சுவாரஸ்யம் குன்றி, திருப்தி அடையாதாம்.எனவே அம்பின் தீராத பசிக்குத் தீனி போட ஒவ்வொரு தலையாக முளைத்ததாம்(இதற்காகவே
இராவணன் பத்துத் தலைகள் கொண்டிரு
ந்தான் !)ராமர் அதை ஒரு விளையாட்டாக
/பொழுது போக்காகக் கொண்டு அவனைக் கொன்றார்.

தலைவன் வர எங்கும் காணேன்:

இத்தனை பெருமை வாய்ந்த என் தலைவன், எம்பெருமான்,என்னை ஆட்கொள்ள வரும் வழி மேல், விழி வைத்துக் காத்துக்கொண்டே இருக்கி
றேன்.என் கண்ணுக்கு எட்டிய தூரம்,
மறையப் பார்த்து நிற்கிறேன்.
ஆனால் அவர் வரக் காணேன்.

போதலர் காவில் புதுமணம் நாறப்,பொறி வண்டின் காமரம் கேட்டு :

மிகச் சிறந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலை;அப்போது அலர்ந்த மாதிரியே எப்போதும் இருக்கும்,அபரிமிதமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் சோலை.அந்தச் சோலையில்
ரசாயனத் திரவியங்கள் கலந்து செய்தது போல,கண்ணைக் கவரும் வண்ணக் கலவையில் இருக்கும் வண்டு ஒன்று
"காமரம்"-என்ற பண்ணை இசைக்க அதற்கு ஆனந்தமாக பெண்வண்டு தலையாட்ட,பின்னர் அது பாட,இது கேட்டு இன்புற்றிருக்க,அதைக் கேட்டு பரவசம் அடையும் குயிலே !

உன் காதலியோடு உடன் வாழ் குயிலே:

அந்த இசைகானத்தைக் கேட்டு நீ,உன் பேடையொடு மிகப் பரவசமாக இந்த உலகையே மறந்து,இன்புற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயே !
"தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி, பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே,உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே"

என் கரு மாணிக்கம் வரக் கூவாய்:

தன் கருநீலத் திருமேனி அழகைக் காட்டி
என்னைஅனந்யார்ஹம்(அவருக்கே உடமையாக்கியவன்)ஆக்கினவர் வரக் கூவாய்.கரு நீல வண்ணத்தில்,
அழகிய அங்கங்களை உடைய சூரன்
வரக் கூவாய் !!

5-4:"என்புருகி, இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா,பல நாளும்
துன்பக் கடல் புக்கு, வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் !
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே !
பொன்புரை மேனிக், கருளக் கொடி யுடைப், புண்ணியனை வரக் கூவாய் !"


விளக்கவுரை:

"ஓ குயிலே! என்னுடைய எலும்புகள் கூட உருகிப் போனது மட்டுமல்லாமல்,சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடாமல் கிடக்கின்றன.நெடுங்காலமாக
எம்பெருமானைப் பிரிந்த ஆற்றாமை என்னும் துன்பக் கடலிலே அழுந்தி,
ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்
உழல்கின்றேன் !அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டு நிற்கிறேன் !
அன்பு உடையவர்களைப் பிரிவதனால் உண்டாகும் துக்கத்தை நீயும் அறிவாய் அன்றோ?–பொன் போன்ற மேனியை உடையவராய்க், கருடக் கொடி உடைய வரான,தர்மமே வடிவெடுத்தவரான
கண்ண பிரானை,வரும்படி கூவுவாய்"

என்புருகி:

என்னுடைய தோல் மெலிந்து உருவழிந்து போனதோடு,எலும்புகளும் உருகி சிறுத்து விட்டன.

இன வேல் நெடும் கண்கள்:

ஒரு வேல்முனையை நோக்கி,
இன்னொரு வேல் முனை இப்படி இரண்டு,மூன்று வரிசைகளாக அநேகம் வேல்களை ஒருமுகமாகச் சேர்த்து வைத்தால் போல மிக நீண்டு விரிந்த கண்கள்--கண்களின் நீளத்துக்கு மட்டுமே வேல் உவமை--வேல் நெடும் கண்கள்.
விரித்துப் பார்க்கும் பரப்புக்கு ஒவ்வாது.
"ஓராளும் ஒரு நோக்கும் நேராய்,
அவ்வளவு அல்லாத பரப்பை உடைத்தான கண்கள்"-ஆண்டாள் ஒரு விழி விளித்தால் ஒரு கண்ணனை முழுதும் விழுங்கி விடும் அளவுக்கை விரிந்த கண்கள் ! அடுத்த பார்வைக்கு இன்னொரு கண்ணன் வர வேண்டுமாம் !

இமை பொருந்தா,பல நாளும்
துன்பக் கடல் புக்கு:

அத்தகைய கண்கள்,எம்பெருமானது பிரிவாற்றாமையால்,பல காலமாக இமையோடு இமை சேராமல்--சிறிது நேரமும் தூங்க முடியாமல் துன்பக்கடலில்
புகுந்து நீந்திக் கொண்டிருக்கின்றன.

சீதாப்பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமர் பிரிவாற்றாமையால் தூக்கம் வராமல் துக்கக் கடலில் தத்தளித்தார்.ராஜ குமார
ர்களாய்,செல்வப் பிள்ளைகளாய் இருப்பார் பாதிப் பொழுது நித்திரை
யோடே இருந்து, பொழுது போக்குவதாய் இருக்க நித்திரையே இல்லையாமல் துன்புற்றார் ராமர்.சிறிது நேரம் உறங்கி மற்ற நேரம் விழித்து உணர்ந்து இருப்பாரோ? இல்லை தூங்கவே இல்லை; விழித்து இருந்த நேரத்திலும் உணர்ச்சியற்ற நிலையில் இருந்தார்;புற உலக சிந்தனையே அற்று இருந்தார்.

இப்படி பிராட்டியைப் பிரிந்த அநித்ரை
யாலே நோவு பட்டுக் கடந்ததாலே ஸ்ரீராமரின் "புருஷோத்த மத்வம்" நன்றாகப் பரிமளித்ததாம் !!

ஆனால் என்னைப் பிரிந்து அவ்வாறு இருக்க வேண்டிய எம்பெருமான்,
என்னைப் பார்க்க வராமல் மறந்து இருக்கிறாரே ! என்னைப் பிரிந்து அவர் படும் பாட்டை(ராமர் பட்டபடி) நான் பட்டுக் கொண்டிருக்கிறேனே !

வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்:

இந்த சம்சாரம் என்னும் மகாசமுத்திரத்தி
ல் தத்தளிக்கும் நான், இதைக் கடந்து மீள்வதற்கு,ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமந்நாராயணன் என்னும் ஓர் தோணி கிடைக்காமல் உழல்கிறேனே !
முதலில் அருகாமையில் இருக்கும்,
உகந்து அருளின நிலங்களிலே-திவ்ய தேசங்களில் தோணியைத் தேடிச் சென்றபோது,அங்கு அவர் அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே,அடுத்து அவர் எடுத்த விபவ அவதாரங்களிலே போய்த் தேடிய போது எம்பெருமான் அவதார காலம் முடிந்து தன்னுடைச் சோதியான பரமபதம் சென்று விட்டார்! எனவே பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானே அந்தத் தோணியை நல்க வேண்டும்.
"அபிநிவேசம் கரை புரண்டு
அதனுடைய அலாபத்தாலே" அந்தப் பெரிய பரமபதம்/பரமபத நாதன் ஒரு மரத்தோணி என்றால் நான் தத்தளிக்கும் துன்பக் கடல் எத்தனை பெரியது என்று
என்று குயிலுக்கு உணர்த்துகிறார்.

அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே !

ஏய் குயிலே ! பிரிவாற்றாமையாலே படுகிற கவலை நீ அறியாமல் இல்லையே.

சென்ற பாசுரத்தில் "உன் காதலியோடு உடன் வாழ் குயிலே" என்று சொன்ன ஆண்டாள் இதில் "பிரிவுறு நோயது நீயும் அறிதி" என்கிறாரே !
சம்ஸ்லேஷம் உண்டானால் விஸ்லேஷம் அவ்வப்போது தலைகாட்டுமே;அதனால் குயிலும் அதை அறியும்.

பொன்புரை மேனி :

முன்பு தன்னோடு சம்ஸ்லேஷித்து இருந்த போது, பொன் போலே திகழ்கிற வடிவும் தானுமாக நின்ற நிலையில் இருந்த அவர்,பிரிந்த போதும் அதன் சுவடே தெரியாமல் அதே ஒளியோடு/மினுக்கோடு இருக்கிறாரே என்று குத்திக்
காட்டுகிறார்.
பிரிவாற்றாமையாலே நொந்து ஏக்கத்தில்
இருந்தார் ஆகில்,நான் குயிலின் காலில் விழப் பார்த்து இருப்பாரோ? வந்து என்னை ஆட்கொண்டிருப்பாரே !!

கருளக் கொடியுடைய :

அடியார்களின் ரஷணத்துக்கு என்றே
த்வஜம் கட்டி--சங்கல்பம் செய்து இருக்கிறவர்.

புண்ணியன்:

தர்மமே உருவெடுத்து நிற்கும் நாயகன்.

ராமரும்,சீதையும் சம்ஸ்லேஷ தசையிலே -தனித்திருந்த ஒரு சமயத்தில்,சீதை
"தர்மங்களில் நீர் விரும்பி இருப்பது எது
என்று கேட்க,"பிறர் நோவு படப் பொறுக்க மாட்டேன்.இதுவே காண்; நாம் வெளிறு கழிந்த(குறை/குற்றம் இல்லாத) தர்மமாக நினைத்து இருப்பது" என்று சொன்னார்.
அந்த அற்புதமான வார்த்தையையும் அவருடைய ஆளான ஆஞ்சநேயர் மூலம் சொல்லி அனுப்பாமல்,அவர் தம் திருவாய் மலர்ந்து அருளியதை பிராட்டி நேராகச் செவியுற்றார்.ஆண்டாளாக அவதரித்த பிராட்டி அதை நினைவூட்டி,
பிறர் நோவு படப் பொறுக்க மாட்டாத 'புண்ணியனான'அவருக்கு நான் நோவு பட்டிருப்பது தெரியவில்லையா? என்கிறார்.

இவ்வாறாக பொன்புரை மேனியன்,
கருளக் கொடியான்,புண்ணியன் என்று அவரது மேன்மையை உரைக்கும் அதே சமயத்தில்,அவர் தர்மம் அறியாமல் இருப்பதைக் குத்திக் காட்டியும் விடுகிறார்.

வரக் கூவாய் :

பிறர் நோவு பட பொறுக்க மாட்டாத அவர் ஏதோ ஒரு ஷணம் என்னை மறந்து இருக்கலாம்.எனவே நீ போய் அவரிடம் இவற்றை எல்லாம் அப்படியே ஒப்பிக்காமல்,அவர் வருவதற்கு இணக்கமாக, சிறிதளவு, மென்மையாகச் சொல்வாயாக !!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1627978814012.png


1627978822004.png


1627978829355.png

1627978836148.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 19)

5-5"மென்னடை அன்னம் பரந்து விளை யாசடும் வில்லி புத்தூர் உறைவான் தன்,
பொன்னடி காண்பதோர் ஆசையினால், என் பொரு கயல் கண் இணை துஞ்சா,
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை,
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே ! உலகளந்தான் வரக் கூவாய் !"


விளக்கவுரை:


மந்தகதியில் நடக்கும் அன்னப் பறவை
கள்,எங்கும் பரவி விளையாடுவதற்கு இருப்பிடமான ஸ்ரீவில்லிபுத்தூரிலே,
எழுந்தருளியிருக்கிற எம்பெருமானு டைய,அழகிய திருவடிகளைக் காண வேணுமென்னும் ஆசையினாலே,
ஒன்றோடு ஒன்று சண்டையிடும் வண்ணம் அமைந்த, இரண்டு கெண்டை
கள்,போன்ற எனது கண்கள் உறங்க வில்லை. ஓ குயிலே! திரிவிக்ரமனாய் உலகங்களை அளந்த பெருமான் இங்கே வரும்படி கூவாய் ! அப்படி கூவுவாயாகில்
அக்கார அடிசிலையும், பாலமுதையும்
ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை, உன்னோடு தோழமை கொள்ளுமாறு செய்வேன்"

மென்னடை அன்னம் பரந்து விளையா
டும் வில்லி புத்தூர் உறைவான்:

மிக மெதுவாக மந்தகதியில் நடக்கும், அன்னப்பறவைகள் அதிக அளவில் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்.அன்னம் போல மென்னடை நடக்கும் ஆண்டாளும்/தோழிகளும் எம்பெருமானைப் போற்றிப் பாடும் ஊர்.
பரம பதத்திலே நித்ய சூரிகள் சதாசர்வ காலமும், சேவித்து ஸ்தோத்ரம் பண்ணிப் படுபவரான எம்பெருமான் அதை விட்டு,
என்னோடு சேர்ந்து விளையாடும் இந்த அன்னங்களைப் பார்த்துப் போது போக்கைக்காக வன்றோ இங்கே -ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து,வடபத்ரிசாயி ஆக எழுந்தருளி இருக்கிறார்.
அன்னங்களைப் பார்த்துப் பேசி அவர்கள் மூலம் ஆண்டாளைச் சேர்த்துக் கொள்வாராம்.வடபத்ரிசாயிப் பெருமாள் சந்நிதி "திருப்பாற்கடல்"என்று அழைக்கப்
படுகிறது.இந்தச் சந்நிதியில்,
"வில்லிபுத்தூர் உறைவான்"என்றும் தனியாக ஒரு பெருமாள் எழுந்தருளி உள்ளார்.

தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால், என் பொரு கயல் கண் இணை துஞ்சா :


பரமபதத்திலிருந்து என் ஊருக்கே வந்து சேர்ந்தவரையும் காணப் பெறாமல்,
துக்கம் மேலிட்டு என் கண்கள் தூக்கமில்லாமல் தவிக்கின்றனவே !

"வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்" என்று சென்ற பாசுரத்
தில் சொன்னது சரியென்று ஏற்கலாம்; அது தூரஸ்தம் ஆகையாலே ; ஆனால் தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே,நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள், என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று
நம்பிள்ளை,நஞ்ஜீயரைக் கேட்டார்.

அதற்கு நஞ்ஜீயர்"உள்ளுக்குப் புக்கால் குறி அழியாமே, நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள்.
ஸ்ரீ பரதாழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து !
உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தை
க்கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும்;பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும்" என்று அருளிச் செய்தார்.

ஆண்டாள் வடபெருங்கோயிலுடையான் சந்நிதிக்குள் சென்றால், நம்மைப் போல,பெருமாளைப் சேவித்து விட்டு ஏதும் நடக்காத மாதிரி,நமக்குள் எந்த மாற்றமும் ஏற்படாமல் வரமாட்டார். ஆண்டாள் பெருமாளைச் சேவித்த மாத்திரத்தில் தன்னிலை மறந்து,
மயக்கமுற்று விழுந்து விடுவார்.
மயக்கம் தெளிந்தாலும் அவர் நினைவாலே கண்ணீர் பெருகி மீண்டும் மயங்கி உருகுவார். அயோத்தியில், ஸ்ரீராமரைக் காணாத பரதன் அழுது,
அழற்றியது போல,தவக்கோலம் பூண்டு,சோகித்து,தன்னை வருத்திக் கொண்டு பதினான்கு ஆண்டுகள் இருந்தது போல,பெருமாளை அடைவதற்காக தன்னிலை மறந்து தன்னை வருத்திக் கொள்வார்.

இதற்குப் பயந்து,ஆண்டாளின் பெற்றோர்
தங்கள் மகளை சந்நிதிக்கு அழைத்துப் போவதே இல்லையாம் !
நம்மாழ்வாருக்குப் பின் அவதரித்த பெரியாழ்வாருக்கு,நம்மாழ்வார் பராங்குச நாயகியாக பட்ட பாடு தெரியுமே --
"குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி
செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் "(திருவாய் மொழி -6-5-5) பாசுரத்தில் சொன்னபடி,பராங்குச நாயகியின் தாயார் தொலைவில்லி மங்கலம் தேவர்பிரானை பராங்குச நாயகிக்கு(ஆழ்வாருக்கு) சேவிக்க வைத்தார்.ஆழ்வார் அன்று முதல்,
தன்னை மறந்து, மழை பெய்தது போல கண்ணீர் பெருகி,சிந்தையுள் பெருமாளின் கல்யாண குணங்களை நினைந்து மயங்கி, அவ்வூர் இருக்கும் திசையை உற்று நோக்கித் தொழுது கொண்டே இருந்தாராம் !

என் பொரு கயல் கண் இணை துஞ்சா :

ஒன்றோடு ஒன்று போரிடத் தயாராய் இருக்கும் கெண்டை மீன்கள் போல விரிந்து விழித்து இருக்கும் என் கண்கள் அவர் பொன்னடி காணாமல் இமை மூடித் தூங்க மறுக்கின்றன.இத்தகைய கண்பார்வைக்கு இலக்கான,கண்ணன் படவேண்டிய பாட்டை நான் படுகின்றேனே !

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை:

நாளும் நான்,அக்கார அடிசிலும்,
பாலமுதும் நன்றாக ஊட்டிச் செல்லமாக வளர்த்த என் அழகான கிளி.(ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கார அடிசில் மிகச் சிறப்பாகப் பெயர் பெற்றது).என் கையிலேயே இருந்து என்னோடு பேசிக் கொண்டிருக்கும் பேறு பெற்ற கிளி.எந்நேரமும் என்னோடேயே,என் வேலையாக இருப்பதால்,பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி சிலாகித்துக் கொண்டு போகிற என் கிளியை

உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே !

அந்தச் சிறந்த கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவிப்பேன்;கிளியோடு சேர்ந்து நானும் தோழமை கொள்ளுவேன்
அந்தக் கிளியைப் போலே உனக்கும் இன்னடிசிலோடு,பாலமுதூட்டி பாங்காகப்
பார்த்துக் கொள்வேன்.'கொள்விப்பன்' என்னாது, 'கொள்வன்' என்று சொன்னது இந்த அர்த்தங்களை உணர்த்துகிறது.

உலகளந்தான் வரக் கூவாய்:

இத்தகைய அழகிய கிளியோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு ! என்னைப் பெருமாளோடு சேர்த்து வைக்கும் ஏற்றமும் உனக்கு !

எம்பெருமான் வந்து கைக்கொள்ளும் பேறு எனக்கு !(இந்த வியாபாரம் நன்றாக இருக்கிறதே !)

கூவினால் நீ கிளியைக் கைப்பிடிப்பாய் !
எம்பெருமான் என்னைக் கைத்தலம் பற்றுவார் !!

எம்பெருமானின் குணங்களைப் போற்றும் வண்ணம் எத்தனையோ திருநாமங்கள் இருக்க,இங்கு ஏன்
"உலகளந்தான்" ?

அவர் திரிவிக்ரமனாய் உலகளந்த போது,எல்லாரோடும் வரையாதே--இன்னார்/இனியார் என்று வேறுபாடு காட்டாதே அனைத்து சேதந/அசேதநங்
கள் மீதும் தம் திருவடிகளைப் பொருத்தி
யவர் அன்றோ! குயிலாகிய நீ கூவினா
லும் வரக்கடவர்.யாரும் பிரார்த்திக்காத போதே எல்லோருக்கும் அநுக்ரஹம் செய்த உலகளந்தான்,நீ கூவிப் கூவிப் பிரார்த்திக்காத போது நிச்சயம் வருவார் !

உயர்ந்த உள்ளுறைப் பொருள்

குயிலைத் தூது விடுதல் என்பது ஆசார்யர் மூலம் எம்பெருமானைப் பற்றுதல் என்பதை ஏற்கனவே
பார்த்தோம்.அவ்வாறாக அடியார் என்பவர்,தானே ஆசார்யருக்கு அடிமையாகி தன்னுடைய உடைமை களையும் ஆசார்யருக்கு அடிமை ஆக்கவேண்டும் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம்."என்னையும்,என் உடமையையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு ” என்னும்படிக்கு.
இந்தப் பாசுரத்தில் குயிலுக்கு(ஆசார்யர்) தன்னுடைய உடைமையான கிளியைத் தோழமை செய்வதன் மூலம்,அடிமை செய்விக்கிறார் என்பது உயர்ந்த உள்ளுறைப் பொருள்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள் :
1.வில்லிபுத்தூர் உறைவான்-- ஸ்ரீ வடபத்ரி
சாயி.
2,3: ஆண்டாள்/கிளி.
மற்றவை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர உற்சவம் முதல் நாள்--துவஜாரோஹணம்.

1628052113063.png

1628052119860.png

1628052127421.png

1628052135094.png


1628052145570.png


1628052155060.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 20)

5-6"எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும், இருடீகேசன் வலி செய்ய,
முத்தன்ன வெண் முறுவல்,செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்!
கொத்தலர் காவில், மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே !
என் தத்துவனை வரக் கூவிற்றியாகில்
தலை அல்லால் கைம்மாறு இலேனே "


விளக்கவுரை:

பூக்கள் கொத்துக் கொத்தாக மலரும்
சோலையிலே,அழகான,சுகமான ஒரு இடத்திலே உறங்குகின்ற இளங்குயிலே!

எல்லா திசைகளிலும்,தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை வாய்ந்த,காண்போர்களின் இந்திரியங்
களை எல்லாம் கொள்ளைகொள்ளுபவன்
ஆன எம்பெருமான் தன்னை எனக்குக் காட்டாமல்,மி(மு)றுக்குக்களைப் பண்ண, அதனால்,என்னுடைய முத்துப் போல் வெளுத்த முறுவலும்,சிவந்தஅதரமும், மார்பகங்களும் அழகு அழியும்படிக்கு வெளுத்துப் போயின.நான் உயிர்
தரித்திருப்பதற்கு மூல காரணமான/தத்துவமான அந்த எம்பெருமானை,
இங்கே வரும்படி கூவினாயானால்,
என் வாழ் நாள் உள்ளவளவும், என் தலையை உன் காலிலே வைத்து சேவை செய்வது தவிர வேறொரு பிரதி உபகாரம் அறியேன்.

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் :

எந்தத் திசையிலும்,எங்கு பார்த்தாலும் துர்மாநிகளாய்--தனக்கு மிஞ்சியவன் இல்லை என்று மிகுந்த அகங்காரம் உடையர்களான-- ப்ரஹ்மாதி தேவர்கள்-தென் திசையில் யமன்,வட திசையில் குபேரன்,கிழக்கே இந்திரன்,மேற்கே வருணன் மற்றும் பல தேவர்கள் பல கோணங்களில்-- இப்படியாக
அவரவர் அபிமானங்கள்/கர்வங்கள் தொலைந்து, எம்பெருமான் திருவடி களில் தண்டம் சமர்ப்பித்து,அவரைக் கீர்த்தனம்/ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இருடீகேசன் வலிசெய்ய:

இப்படி சர்வ தேவர்களும்/ஜனங்களும் வணங்கத்தக்கவராய் இருக்கிறவர் என் சர்வ இந்திரியங்களையும், கொள்ளை கொண்ட பின்னர், தன்னுடைய செளலப்ய குணத்தை எனக்குக் காட்டி என்னை ஆட்கொள்ளாமல்,சத்ருக்களு
டைய கோஷ்டியில் காட்டும் மிறுக்குகளை
என்னிடம் செய்கிறார்.

முத்தன்ன வெண் முறுவல்,செய்ய வாயும், முலையும்,அழகு அழிந்தேன் நான்

நான் எனது முத்துப் போன்ற பற்களால் செய்யும் புன்னகை மற(றை)ந்து போனது.சிவந்த அதரமும் (இயற்கை
யாகவே சிவந்த அதரங்களுக்கு,மேலும் சிவப்பிட்டு),ஓரிடு சிவப்பும் வேண்டாத மார்பகங்களும் அழகு இழந்து வெளிறிப் போயின.

என்னிடம் மிறுக்குகள் பண்ணுகைக்காக-
தனக்கு ஜீவனமாகக் கொள்வதையும்-தாரகம்(முறுவல்),போஷகம்(அதரம்),
போக்யம்(மார்பகம்) அழித்து நிற்கிறார்.
நானன்றோ அவர்;அப்படியிருக்க
என்னை அழிய விட்டு,நாளை அவர் என்னைத் தேடி வருகையில்,நான் அழகிழந்து,ஒளியிழந்து இருப்பதைப் பார்த்து துடி,துடிக்கப் போகிறார்.

கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே !

பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும், அழகிய சோலையில் நல்ல வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து,
மலர் படுக்கையில் தூங்கிக் கொண்டி
ருக்கும் குயிலே !

எம்பெருமான் மிறுக்கால்,நான் இங்கே அழகிழந்து, அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தும், நீ கிடந்து சுகமாய் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்றால் உனக்கு எத்தனை ஆணவம் ?

என் தத்துவனை வரக் கூகிற்றியாகில்:

நான் ஜீவித்திருப்பதற்கு மூல காரண மான,எனக்கு சத்தா ஹேதுவான-நான் சத்தை பெற்று ஒரு ஜீவனாக இருப்ப
தற்குக் காரணமான,பர தத்துவனை வரும்படி கூவுவாயாகில்--

"இது கூவி அழைக்க வேண்டும்படி, அவன் வரவு தாழ்க்கச் செய்தேயும்,
தன் சத்தை அவன், என்று இருக்கிறாள் காணும்"
ராவணன் சீதாப்பிராட்டியிடம் ஸ்ரீராமரின் மாயா சிரசைக் காட்டி,ராமரைக் கொன்று விட்டதாகச் சொன்ன போது,பிராட்டி உடனே பெருந்துக்க முற்று கண்ணீர் பெருக அழுதார்.ஆனால் ராமர் உயிர் துறந்தார் என்று கேட்ட அடுத்த நொடியே,
சீதை உயிர் விட்டிருக்க வேண்டும் அன்றோ? என்று நம்பிள்ளை -நஞ்ஜீயரைக் கேட்க,

"ஜ்ஞானம் அன்று- இவள் ஜீவனத்துக்கு ஹேது -பெருமாள் சத்தை யாய்த்து –
அவள் உளராகையாலே இருந்தாள் காணும் "என்று அருளிச் செய்தார் நஞ்ஜீயர்.--சீதையின் உயிர்த்துடிப்பே பெருமாள்-ராமர் என்னும் சத்தை/சத்து.ஆதலால் அந்தச் சத்தை இல்லை யென்றால்,(அந்தச் செய்தி சீதைக்குத் தெரியாமல் இருந்தாலும்) அந்தக் கணமே சீதை உயிர்விட்டிருப்பார்.ராமர் இல்லை என்னும் செய்தி/ஞானம் அவருக்கு அவசியம் இல்லை.

எம்பெருமான் உளன் ஆகில் நான் உளேனாம் படியாய்(உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன்.வேறு எந்த அழகும்,ஆசையும்,நினைவுப் இல்லாமல்) வைத்திருக்கிற அவர் வரும்படி கூவ வல்லை.

தலை யல்லால் கைம்மாறு இலேனே :

தலையை அறுத்துக் கொடுத்துச் செய்யும் கைம்மாறு அல்ல இது;
காலமெல்லாம் உன் திருவடிகளில் தலையால் வணங்கி,உனக்குப் கைங்கர்யம் செய்வேன் என்பதாகும்.

"நீ பண்ணின உபகாரத்துக்கு இத்தலையால் செய்வது ஒன்று உண்டோ என்று என் தலையை உனக்காக்கி,
காலம் எல்லாம் உன் காலிலே வணங்கி வர்த்திக்கும் அத்தனை என்கிறாள்"
(நஞ்ஜீயர் உரைத்ததாக நம்பிள்ளை).

5-7:"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால், என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக், குதுகலித்து,ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே ! உனக்கு என்ன மறைந்து உறைவு,ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில்,
நீ சாலத் தருமம் பெறுதி"


விளக்கவுரை:

"அழகிய குயிலே!
அலைகள் பொங்கும், திருப் பாற்கடலில்
பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடு,
பிரியாதே கூடியிருக்க வேணுமென்னும் ஆசையினால்,எனது மார்பகம் கிளர்ந்து
குதூகலித்து எனது உயிரை உருக்கி வியாககூலப் படுத்துகிறது. என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்தி
ருப்பதனால்,உன்னால் எனக்கு என்ன பயன்? திருவாழியும்,திருச்சங்கும் கதை
யும் பொருந்திய திருக் கைகளுடைய பெருமான் இங்கே வரும்படி நீ கூவுவாய் ஆகில் மிகவும் தர்மம் செய்தாய் ஆவாய்.

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்:

உயர்ந்த பரமபதமே இருப்பிடமாய் இருக்க அதை விட்டு வந்து, அவருடைய ஸ்வ சந்நிதானத்தாலே திரைக் கிளப்பத்
தை உடைத்தான திருப் பாற் கடலிலே
பள்ளி கொண்டு அருளுகிறவனை.

பொங்கிய பாற்கடல் என்பது--சாதாரண ஒரு சந்திரனைக் கண்டாலே கடல் பொங்கும் போது,சிறந்த பத்து சந்திரர்
களைக் கண்டால் கடல் பொங்குவதற்கு அளவுண்டோ? சந்திரன் தன் தோஷங்கள் நீங்க பாற்கடல்நாதன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துப் பிரார்த்தித்து தோஷம் நீங்கப் பெற்றான்.ஆதலால் சந்திரன் பத்து உருவங்களை எடுத்துக் கொண்டு,பாற்கடல்நாதன் திருவடிகளில் விழுந்து கிடக்கிறான்.அந்தப் பத்து சந்திரர்களே எம்பெருமானின் பத்து வட்ட வடிவமான நகங்களாவன.எனவே பத்துச் சந்திரர்களை ஒரே சமயத்தில் கடல் கண்டால் கடல் பொங்குவது எவ்வளவு பெரிதாக இருக்கும் ?(ஸ்ரீவரதராஜ ஸ்தவத்தை எடுத்துக் காட்டுகிறார் பெரிய வாச்சான் பிள்ளை)

மேலும் "சந்த்ரமா மனசோ ஜாதா"
(புருஷஸுக்தம்)-என்பதால் எம்பெருமா
னின் மனதிலிருந்து உருவானவன் சந்திரன், ஆதலால்,அவர் தம் திருவுள்ளத்திலிருந்து ஒரு சிறிய திவலை அவனுக்கும்அளித்திருப்பார
ன்றோ ! -அப்படிப்பட்ட சந்திரனைக் கண்டாலே கிளர்ந்து பொங்கும் கடல்,
அந்தப் பரமாத்மா தானே வந்து படுகாடு கிடந்தால் சொல்ல வேண்டுமோ ?

புணர்வதோர் ஆசையினால்:

அவனோடு சேர்ந்து கலக்க வேணும் என்கிற ஆசையினாலே –

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் :

அவரை அடைய வேண்டும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தேயும், ஸ்த்ரீத்வத்தை/பெண்மையைக் கருதி நான் அடங்கி அமைதியாக இருந்தாலும்,
என் தேக அவயவமான மார்பகம் இதை அறியாதன்றோ? என்னைப் போல ஆறி இருக்காமல் எம்பெருமான் வருகிறார் என்று உற்சாக மிகுதியால் பருத்து நிற்கின்றன.அவை மார்புக்கு சுமையாய்
நின்று,நெஞ்சை நலிந்து என்னுயிரை உருக்குவதாய் உள்ளன.

அங்குயிலே,உனக்கு என்ன மறைந்து உறைவு:

அழகிய குயிலே !நான் இவ்வாறு கிலேசப் பட்டு,பிரிவாற்றாமை என்னும் துக்கக்கடலில் தத்தளிக்க,நீ வெய்யில் காணாமல் இருக்கும் இடத்தில்,
என்னிடமிருந்தும் மறைந்து/விலகி மலர்ப் படுக்கையில் படுத்து சுகமாக இருக்கிறாயே?

ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை:

அடியார்களுக்கு, விரோதி நிரசனம் பண்ணுவதற்காக ,அந்த சமயத்தில்
தேட வேண்டாத படி,அவர்களின் ரஷணத்துக்காக எப்போதும் சங்கு,
சக்கரம்,தண்டு முதலான ஆயுதங்களைக் தரித்துக் கொண்டு இருக்கிறவரை வரும்படி கூவுதியாகில்.
(இங்கு ஆண்டாளின் விரோதி அவர் வராதது தானே.மற்றவர்களின் விரோதி
யைத் தொலைக்க ஆயுதங்கள் ஏந்திக் கொண்டிருப்பவர்,என் விரோதியைத் தொலைக்க அவரே வந்தாலே போதுமே!)

வரக் கூவில்:

அவர் வரும்படி,வாக் தர்மமாக நீ கூவுவாய்.அப்படி ஒரு வாக்கைச் சொல்வதால் நான் சத்தை பெறுவேன்.
உன்னுடைய ஒரு வாய்ச்சொல்லாலே,
தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து ஆற்றுவதைப் போல,என் துயரத்தை ஆற்ற முடியும்.

நீ சாலத் தருமம் பெறுதி:

நான் சத்தை பெறாவிட்டால் உயிரிழப்பேன்.நான் தரிக்கவில்லை என்றால் எம்பெருமான் தரிக்க மாட்டார்.எம்பெருமான் இல்லாமல்
இந்த ஜகமே,உபய விபூதிகளே இல்லாமல் போய்விடும்.எனவே நீ அவரிடம் சொல்லும் வார்த்தையால் இந்த ஜகத்தையே ரஷித்தாய் என்னும் ஏற்றம்-ஜகத்தை ரஷித்த தர்மம் என்னும் பெரும் பேறு பெருவாய் !!

முன்பொரு யுகத்தில் ஒரு ஆண்புறா தன் பேடையைக் கொன்ற,வேடன் என்றும் பாராது,அவன் பசியாற்றத் தானே நெருப்பில் விழுந்து, வெந்து உணவானது.அத்தகைய பறவை இனத்தைச் சேர்ந்த நீ உன்னை அழிக்க வேண்டாமல்,உனக்கு எந்தத் துன்பமும் நேராமல்,எம்பெருமானை இங்கு வருமாறு கூவுதல் என்னும் யுக்தி செய்தால் போதும்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).
படங்கள்:
1.தத்துவன்--ஆடி 18ல் சேவை சாதித்தபடி
2 ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சந்நிதியில்,
ஆண்டாள் ஸ்ரீபத்ரிநாராயணர் அலங்காரத்தில்.
3,4: ஸ்ரீரங்கம் பரமபத நாதன் சந்நிதியில்
ஆண்டாள் மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி அலங்காரத்தில்; உற்சவர் 'மருதம் முறிய
நடை கற்றவன்' அலங்காரத்தில்.

1628150163404.png


1628150171455.png


1628150179074.png


1628150187637.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 21)

5-8"சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன்,பொருத்தமுடையன்,
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம்,நானும் அவனும் அறிதும் !
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே ! திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில், அவனை நான் செய்வன காணே !

விளக்கவுரை:


மாந்தோப்பிலேயே இருந்து,நல்ல இனிப்பான மாம்பழங்களை உண்டு,
இனிப்புத் தெவிட்ட,அதற்காக,சிவந்த மாந்துளிர்களை வாயலகால் கொத்துகிற இளங்குயிலே!
தனது வில்லை வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய பெரிய திருக்கைகளை யுடையனாய், சகலவித சாமர்த்தியமும் உடையனான எம்பெருமான்,பிரியம் செலுத்துவதிலும் வல்லமை பெற்றவன்;
அவரும் நானும் ஆக இருவரும் சேர்ந்தி
ருந்தபோது எங்களுக்குள் ரஹஸ்யமாக
செய்து கொண்ட சங்கேதத்தை/சங்கல்பத்தை நாங்கள் இருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார்; தற்போது தூரமான இடத்தில் இருக்கிற திருமாலை,இங்கு விரைந்து வரும்படி கூவுகை ஆகில், அவர் இங்கு வருவார்.அதன்பின் அவர் விஷயத்தில்,
நான் செய்யப் போகிற மிறுக்குக்களைக காணக் கடவை"

சார்ங்கம் வளைய வலிக்கும்:

ஸ்ரீராமபிரான் வில் பிடித்த பிடியிலும்,
வில் வளைத்த படியிலும் தோற்று இருந்த
வீர பத்னி சீதாப்பிராட்டி.
"ராம சாபாஸ்ரயாம் வநே" என்கிறபடியே
ராமரின் வீர வில்லுக்கு ஆஸ்ரயணப்
பட்டு இருந்தார்.அவ்வாறாக எம்பெருமா
னின் சார்ங்கத்துக்கு/அதை அவர் பிடித்த கம்பீரத்துக்கும் தோற்று இருக்கிறார் ஆண்டாள்.

தடக்கைச் சதுரன் :

நீண்ட பெரிய கைகளை உடையவர்.
வில்லை வளைக்கையில் மேலும் அழகாகத் தோன்றும் கைகள்.
எதிரிகள் வில் பொகடும்படி வில் பிடிக்கும் சாமர்த்தியம் உடையவர்
அவர் வில்லைப் பிடித்திருக்கும்
வீர அழகைப் பார்க்கும் எந்த எதிரியும் தன் ஆயுதத்தைக் கீழே போட்டுவிடுவான்.
ஆயுதத்தைக் கீழே போட்ட விபீஷணன் வீரனாகக் கொண்டாடப் பட்டு வாழ்ந்தார்.
ஆயுதத்தைக் கீழே போடாத ராவணன் வீழ்ந்து மடிந்தான்.

பொருத்தமுடையன் :

வில்லைச் செலுத்தும் வீர பராக்கிரம
த்துக்கு இணையாகப் சொல்லுமளவு,
பிரணியித்வத்திலும்--அன்புடையார் மீது பிரியம் செலுத்துவதிலும்-- சிறந்தவர்.
சிறந்த வீரனான தலைவன் பிரியமான காதலனாகவும் இருந்தால்,தலைவியின் காதல், அளவு கடந்து இருக்குமன்றோ?

நாங்கள் எம்மில் இருந்தொட்டிய, கச் சங்கம் நானும் அவனும் அறிதும்:

முன்பு நானும்,எம்பெருமானும் சேர்ந்து இருந்த போது நாங்கள் எங்களுக்குள்
"இன்றியமையாமை--ஒருவரை ஒழிய ஒருவர் உளோம்" என்று ஒரு கச்சங்கம்/சங்கல்பம் செய்து கொண்டோம்.--
'நீயின்றி நான் ஜீவித்திருக்க மாட்டேன்'
என்று அவரும்,'தேவரீர் இன்றி நான் ஜீவித்திருக்க மாட்டேன்'என்று நானும் சங்கல்பம் செய்து கொண்டோம்.
ரகசியமாகச் செய்து கொண்ட அந்த சங்கல்பம் அவரும்,நானும் மட்டுமே அறிவோம். "பிறருக்கு தெரிவது ஒன்று இல்லை காண் எங்கள் நிலை"

ஸ்ரீராமர் அநுமனிடம்,"நான் சீதையை விட்டு ஒரு ஷணம் தரிக்க மாட்டேன்"
என்றார்.தூது வந்த அநுமனிடம்,"ஸ்ரீராமர் ஒரு மாதத்துக்குள் வந்து என்னைக் காப்பாற்றாவிட்டால் நான் உயிர் தரிக்க மாட்டேன்" என்றார் சீதை.அங்கு அவர்கள் பிரிந்திருந்தார்கள்;வேறு,வேறுவிதமாகச் சங்கல்பம் செய்தனர்.ஆனால் நாங்கள் முன்பு கூடியிருந்த போது,ஒரேமாதிரியாக
"ஒருவரை ஒழிய, ஒருவர் உளோம்"என்று சங்கல்பம் செய்தோம்.அதை அநுமனிடம் சொல்லி அனுப்பியது போல்,நான் உன்னிடம் சொல்கிறேன்.

பரம ரஹஸ்யமான திருமந்திரத்தை எம்பெருமான் நரனுக்கு உபதேசித்து,அது வழி,வழியாக உபதேசிக்கப்பட்டு,
ஆசார்யரிடம் வந்து சேர்ந்தது(அவர் சிஷ்யனுக்கு உபதேசித்து, எம்பெருமான் திருவடிகளை அடையச் செய்கிறார் ).அது போல,முன்பு,ஆண்டாளுக்கும்/பெருமானு
க்கும் இடையே நடந்த இந்த ரகசிய சங்கல்ப வார்த்தையை ஆசார்ய ஸ்தானத்தில் இருக்கும் குயிலுக்கு உரைத்து,எம்பெருமானோடு சேர்த்து வைக்கும்படி சொல்கிறார்.
ஸ்ரீராமாயணத்திலும் ஸ்ரீ ராமரும்,
சீதையும் தங்கள் திருவுள்ளத்தில் ரகசியமாக இருந்த சங்கல்பத்தை ஆசார்ய ஸ்தானத்தில் இருந்த அநுமனிடம் உரைத்தார்கள்.

தேன்கனி மாம் பொழில் செந்தளிர்
கோதும் சிறு குயிலே:

இளங்குயிலே ! என் கார்யம் செய்து தலைக் கட்ட வேண்டிய நீயோ,நான் படும் பாட்டைக் கண்டு கொள்ளாமல்,நல்ல தேன் போன்று இனிக்கும் மாம்பழத்தை தெவிட்டும் அளவு உண்டுவிட்டு,அந்தப் தெவிட்டைப் போக்கி மீண்டும் உண்பதற்காக,துவர்ப்புச் சுவையுள்ள
சிவந்த,மாந்தளிர்களை குத்தி உண்டு கொண்டிருக்கிறாய்.

திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில்:

நீ திருமால் இருக்கும் அந்த இடத்துக்கு விரைந்து சென்று,அவரிடம் நான் சொன்னதைச் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமே நான் வேண்டுவது !
திருமால் என்பதால் திருவாகிய
மஹாலக்ஷ்மிப் பிராட்டியார்
புருஷஹாரமும் உதவும் என்பதாம்.
நம் குற்றங்களைப் பொறுப்பித்து,
அவரைப் பதறி நடந்து வரப் பண்ண
வல்ல பெரியபிராட்டியார் அருகே இருப்பதால்,அவர் பதறி நடந்து வரும்படி நீ சடக்கெனக் கூவுவாயாக !

அவனை நான் செய்வன காணே :

நான் படுகிற கிலேசத்துக்கு/ஆற்றாமைக்கு உனக்கு ஒரு பிரயோ
ஜனம்/பலம் இல்லை என்றல்லவோ நீ நினைக்கிறாய் .நீ சென்று கூவியபின் அவர் என்னிடம் வந்து சேரும் சமயத்தில்,
அவர் என்னைப் பிரிந்து,நெடுநாள் என்னைப் படுத்தின பாட்டை எல்லாம் உனக்கெதிரில் நீ பார்க்கும்படி,அவரைப் பாடாயப் படுத்துவேன்.அது கண்டு (சந்தோஷப்படுவதே) உனக்குப் பலம்.

அவர் வந்தால்,நான் முகத்தை மாறவைத்து/தூக்கி வைத்துக்
கொள்வேன்.என் முகத்தைக் காண்பதே அவருக்கு பரவசமூட்டும்.நெடு நாள் பட்டினி கிடந்தவன் முன்னே சோற்றை இட்டு வைத்து,உண்ண முடியாதபடி தடுத்தால்,அவன் கிடந்தது தவிப்பது போலே,அவரும் கிடந்து துடிப்பதைப் பார்ப்பாய் குயிலே ! (ஆண்டாள் முகத்தைப் பார்த்து லயித்தால் அவருக்குப் பசியாறும்.ஆனால்,
ஆண்டாள் அருகேயே இருந்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டால்,அவர் என்ன பாடுபடுவார் ?)

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
1.சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன்,
2,3,4:பொருத்த முடையன்:

2.ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்,
ஆண்டாள் மூலவர்--திருமாலிருஞ் சோலை பரமஸ்வாமி(மூலவர்) அலங்காரத்தில்.
3.ஆண்டாள் உற்சவர் கள்ளழகர்
(உற்சவர்) அலங்காரத்தில்.
4.நூறுதடா வெண்ணெய்,நூறுதடா நிறைந்த அக்கார அடிசில் வைத்தேன்.

1628220814059.png


1628220821363.png


1628220830431.png


1628220838977.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 22)

5-9"பைங்கிளி வண்ணன் சிரீதரன், என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்;
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே ! குறிக் கொண்டிது, நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல், பொன்வளை கொண்டு தருதல்,
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்"


விளக்கவுரை :


மிக்க ஒளியை உடைய வண்டுகள்,மது உண்ட மயக்கத்தாலே,இசை பாடி நின்ற சோலையிலே,களித்து விளையாடுகிற குயிலே !
நான் சொல்லுகிற இதனை நீ பராக்குப்
பார்க்காமல் கவனமாய்க் கேள் !
பசுங்கிளி போன்ற நிறத்தையுடைய னான ச்ரிய பதி, என்கிற ஒரு வலையிலே
நான் சிக்கிக் கொண்டு கிடக்கிறேன்;
நீ இந்தச் சோலையிலே தொடர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பினால்,திருவாழி
யும், திருச்சங்கும் உடையனான எம்பெருமான்,இங்கே வரும்படி கூவுதல், நான் இழந்த பொன் வளையல்களைக் கொண்டு வந்து கொடுத்தல் ஆகிய இவை இரண்டுள் எதாவதொரு காரியம்
நீ கட்டாயம் செய்து தீர வேண்டும்.

பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே ! குறிக் கொண்டிது !நீ கேள்

என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி,அழகாக மினுமினுத்துக் கொண்டிருக்கும், வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே,
அந்த இசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ திரிந்து கொண்டிருந்தாலும், நான் உன்னை விடுவேன் அல்லேன்.நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.ஏனோ தானோ என்று பராக்குப் பார்த்துக்கொண்டு கேட்காமல், வண்டுகளின் இசையிலிருந்து உன் காதுகளை விடுவித்து,என் வாய்ச் சொல்லைக் குறிப்பாக கேள் !

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப் பட்டிருந்தேன்:

பைங்கிளி போல,பசுமையும்,மஞ்சளும் கலந்த ஒரு வசீகர வண்ணனான சிரீதரன்- லக்ஷ்மிபதி ஆகிய எம்பெருமானின் பாச வலையில் நான் அகப்பட்டிருக்கிறேன்.(பாசம் என்றால் அவரது நேசம் என்னும் வலை அல்லது அவர் வீசிய பாசக்கயிறால் கட்டுண்டு, என்று இருவகைகளிலும் கொள்ளலாம்)
எனக்கு உண்டாயிருக்கும் இந்த நோய் என்னால் தீர்த்துக் கொள்ள முடியாதது.
அவன் வடிவழகு முதலியவற்றில் தோற்றுப் போய்,நடக்கவும் கூட முடியாத மயக்க நிலையில்,இருந்த இடத்திலேயே கிடந்து தவிக்கும்படியான அவஸ்தையில் துவழ்கிறேன்.

""முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுலே அகப்பட்டேன் -என்றும்
"கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் "என்றும்
சொல்லுகிறபடியே மாதவன் ஆகிற வலையிலே நான் அகப்பட்டுக் கொண்டேன்"

இதைக் கேட்ட குயில், "நீ எம்பெருமான் வலையில் அகப்பட்டு இருந்தால் நல்லது தானே ! ஏன் புலம்புகிறாய்? மேலும் இதில் நான் என்ன செய்ய முடியும்"என்று சொல்லி விட்டு,மீண்டும் வண்டுகளின் இசையை அநுபவிப்பதாகக் கொண்டு, பாராமுகமாய் இருக்கிறது.

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல், பொன்வளை கொண்டு தருதல்,
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும் !

இதற்கு முந்தைய பாசுரங்களிலும்,இந்தப் பாசுரத்திலும் ஆண்டாள் படும் துன்பத்தை,நன்றாகப் புரியும் படி சொல்லியும்,குயில் ஏதோ புரியாத படி,
நான் என்ன செய்ய முடியும் என்று பாசாங்கு செய்ய,ஆண்டாள் சற்றே கோபமாக மிரட்டும் தொனியில் சொல்கிறார்.

குயிலே நீ இச் சோலையில் இருந்து தானே, வாழ வேண்டும்.என்னை அலட்சியம் செய்தால் (என்னுடைய) இச்சோலையில் உனக்கு வாழ முடியுமோ?
அவர் வராவிட்டால் நான் முடிந்து
போவேன்.நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கி-நன்றாகப் பராமரித்து-தருவார் யார்?

ஒன்று,வலக்கை ஆழி, இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவ வேண்டும்,அல்லது-
என் பொன் வளையல்களை என் கையில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்
நீ இங்கு வாழ வேண்டுமானால்,இவை இரண்டினுள் ஒன்றை நீ உடனே,
செய்தாக வேண்டும்.

எம்பெருமானது பிரிவால் களைந்த,கை வளைகள் கை தங்குவது எம்பெருமான் சம்ஸ்லேஷத்தால் மட்டுமே ஆகும்;
அதுவும் அவர் வந்தால் அன்றி ஆகாதே !.

இப்படி இரண்டு பஷமாக சாமார்த்திய
மாகச் சொன்னதற்கு அடி--
சாவித்திரி தன் கணவன்,சத்யவானது உயிரைக் கவர்ந்த யமனிடம் அவனை மீண்டும் உயிர் பிழைப்பிக்க வேண்டும் என்று வேண்ட,யமன் மறுத்து விட்டான்.
மாறாக,சாவித்திரி மீண்டும்,யமனிடம்
தனக்குப் பல பிள்ளைகள் பிறக்கும்படி அருளவும், என்று வேண்ட யமனும் அப்படியே அருளினான.பதிவிரதையான சாவித்திரி கணவன் சத்தியவான் உயிரோடு இருந்தால் தான் பிள்ளை பெறமுடியும் !! அதைப் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி !
ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும்படிக்கு.

எம்பெருமானுக்கு பல ஆச்சரியமான திருநாமங்கள் இருக்க,'சங்கோடு சக்கரத்தான்' என்றது ஏன்?
"அவருடைய ஆபரணத்தை யாவது--சங்கு,சக்கரம்- இங்கே கொண்டு சேர்
அல்லது என்னுடைய ஆபரணத்தை--பொன்வளை- யாவது கொண்டு கொடு"-என்னும் ரசமான இடம்.அவரை விட்டுப் பிரியாதே அவரோடு பொருந்தி இருக்கும் சங்கு,சக்கரம் என்னிடம் வர வேண்டு
மென்றால்,அவர் இங்கு வந்தாக வேண்டும்.ஆண்டாள் இழந்த பொன்வளைகளை மீண்டும் அணிய வேண்டும் என்றாலும்,அவர் வந்தால் தானே அணிய முடியும்(ஆண்டாளுடைய பொன்வளைகளை அவர் கவர்ந்து சென்றுவிட்டார்; அவர் வந்தால் தானே பொன்வளை வரும்./அல்லது அவரது பிரிவாற்றாமையால் தேகம் தளர்ந்து கை மெலிந்து வளையல்கள கழன்று விழுந்து விட்டன; அவர் வந்தால் அந்த உற்சாகத்தால் தேகம் பூரித்து,கை பருக்கும்.வளைகள் அணிந்தால் விழாமல் கையில் பொருந்தி இருக்கும்!)

அற்புதமான,ஆசார்ய--சிஷ்ய பாவனை !

ஆண்டாள் குயிலிடம்(ஆசார்ய நிலை) "இச்சோலையில் நீ வாழ வேண்டும் என்றால்/மாம்பழ ரசத்தைப் பருகிக் கொண்டு,வண்டுகளின் இன்னிசையைக் கேட்டுக் கொண்டு சுகமாக இருக்க வேண்டுமானால்,நான் அன்றோ, இச்சோலையை உனக்கு நோக்கி-நன்றாகப் பராமரித்துத் தரமுடியும்.(எனவே நான் முடிந்து போகாதிருக்க, அவரை வரும்படி கூவு)" என்று சொல்லியது,
"தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவன்"
(சிஷ்யன்,ஆசார்யர் செளகரியமாக வாழ எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்) என்னும் நுண்ணறிவை உணர்த்துகிறது.
"ஆசார்யன் சிஷ்யன் ஆருயிரைப் பேணுமவன்"(ஆசார்யர் சிஷ்யனின் ஆத்மயாத்திரையைப் பேணி,அவனை எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பார்)
என்னும்படிக்கு எம்பெருமானை ஆண்டாளோடு சேர்ப்பித்து வைக்கிறது குயில்.இங்கு குயில், எம்பெருமானைக் கூவி வரும்படி செய்து,உண்மையிலேயே
ஆண்டாளின் உயிரையும் காப்பாற்று கிறது !

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
ஸ்ரீரங்கம் பரமபதநாதர் சந்நிதியில்--
1.ஆண்டாள் மூலவர்--அழகிய மணவாளராக
2.ஆண்டாள் உற்சவர்--மந்திரக்கோடி உடுத்தி/மணமாலை சூட்டி...
3,4,5: மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்ற...

1628254804176.png

1628254811680.png

1628254818926.png

1628254826458.png

1628254833545.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 23)

5-10:"அன்று உலகம் அளந்தானை உகந்து, அடிமைக் கண் அவன் வலி செய்ய,
தென்றலும் திங்களும் ஊடறுத்து, என்னை நலியும் முறைமை அறியேன் !
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே ! நீயும் குயிலே !
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்"


விளக்கவுரை :

"மஹாபலி பலம் பொருந்தி கொழுத்தி
ருந்த அக் காலத்தில்,மூவுலகங்களையும் அளந்த எம்பெருமான் விஷயத்திலே
உகந்து,நான் கைங்கர்யத்தை ஆசைப்பட,
அவர் கைங்கரியத்திலே வஞ்சனை செய்தார்.அதனால் நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே,தென்றல் காற்றும் குளிர்ச்சியான பூரண நிலவும், என் உடலைப் பிளந்து கொண்டு,உள்ளே புகுந்து இம்சிக்கும் நியாயத்தை
அறிகின்றிலேன் .ஓ குயிலே! என் நலனை விரும்பும் நீயும்,எந்நாளும்
இந்தச் சோலையிலே,இடைவிடாமல்
இருந்து கொண்டு என்னை இம்சிக்காதே
இன்றைக்கு ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி நீ கூவாமற் போனால்
இந்தச் சோலையிலிருந்து உன்னைத் துரத்தி விடுவேன் !"

அன்று உலகம் அளந்தானை உகந்து :

"வசிஷ்ட சண்டாள விவாகம் அற வரையாதே"–ஞானி--சாமான்யன்,
இன்னார்--இனியார் என்று வேறுபாடு இல்லாமல்,எல்லோர் தலையிலும் திருவடிகளை வைத்து அநுக்ரஹம் செய்த உலகளந்த பெருமானை--தூங்குகிற குழந்தைக்கு ஆசைப் பட்டு,குழந்தை அறியாத/கேட்காத போதே,தாய்ப்பால் ஊட்டும் தாயைப் போலே-- எம்பெருமான் திருவடிகள் தங்கள் தலையில் வைத்து ஆசீர்வதித்தார் என்பதை அவர்கள் அறியாமலே,அவர்களின்
தலைகளில் தனது திருவடிகளை வைத்தவனை---உகந்து.

அடிமைக் கண் அவன் வலி செய்ய :

எம்பெருமானின் அடிமையான நான் ஒன்றைப் பெறுவது,பின்னர்அதனை இழப்பது என்று இப்படியா நான் ஆசைப் பட்டது?சத்தை பெற்று ப்ராப்திபலமான கைங்கர்யம் எப்போதும் சித்திக்க வேண்டும் அன்றோ நான் ஆசைப்பட்டது.
ஆனால் அடிமை செய்யும் எனக்கு கைங்கர்யம் தந்தருளி,இடையே அவர் மிறுக்கடிக்கிறாரே !

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் :

எம்பெருமானைப் பிரிந்து நான் அல்லல் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த,
இதமான தென்றலும்,குளிர்ச்சியான சந்திரனும் தங்கள் சுபாவத்துக்கு மாறாக,
இவளை வாட்ட இது தான் சமயம் என்று,கங்கணம் கட்டிக் கொண்டு என்னை இம்சிக்கின்றன.பிரியமானவர்
களைச் சேர்த்து வைப்பதே தென்றல்/திங்களின் வேலை.ஆனால் நாங்கள் பிரிந்திருக்கும் சமயத்தில் இவர்கள் வந்தால் தென்றலும் காயும்;நிலவும் சுடும்.இவர்கள் என்னை வந்து இம்சிப்பது என்ன நியாயம்? நான் ஆசைப்பட்ட எம்பெருமானின் மேன்மை ஒன்றும் அறியாத இவைகள் வந்து என்னை நலிவது என்ன முறையோ?
நான் அறியேன்.
"அடிமையில் வாசி அவை அறியா விறே
அவன் அளந்த கால் வாசியும் கூட அறியாதவை இறே"

ஸ்ரீராமரைப் பிரிந்த சீதையை,"ராவணன் நடுவே வந்து நலிந்தால் போலே
தென்றலும் சந்திரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கு ஈடாக இருப்பதொரு
முறை யுண்டாக அறிகிறிலேன்"
'முறை உண்டாக அறிகிலேன்' -- பிரியமானவர்களைச் சேர்த்து வைப்பதே தென்றல்/சந்திரனின் முறையாக உண்டாக,பிரிப்பது என்னும் முறை உண்டாக அறிகிலேன்.சீதையையும்,
ராமரையும் சேர்த்து வைத்த தென்றலின்-வாயுவின் புத்திரனான, திருவடி அநுமனுக்கு இருந்த விவேகத்தில் ஒரு கால் கூறும் தகப்பன் வாயுவுக்கு இல்லையே !

சீதையைப் பிரிந்த ராமர்,லஷ்மணரோடு பம்பா நதி தீரத்தில் கிஷ்கிந்தையில் இருந்த போது,பம்பைப் பக்கமிருந்து வீசும் மாருதம்,அங்கே மலர்வனத்தில் இருந்த,தாமரை/செங்கழுநீர் மலர்களைத் தடவிக் கொண்டு நல்ல நறுமணத்தோடு வீசுவது அவருக்கு சோகத்தைத் தருவதாக லஷ்மணரிடம் சொன்னார்.அந்தத் தென்றல்,ராமர் காதுப்பக்கம் வந்து ஊதிக்கொண்டு செல்வது,சீதையின் மூச்சுக்காற்று அவர் காதுபட வீசுவதைப் போல இருப்பதால்
மேலும் அதிகமாக சோகித்தார்.அது போல இந்தத் தென்றல் ஆண்டாளைப் படுத்துகிறது.

என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே:

அவை என்னை நலிகிற நலிவு காதாசித்தம்--தென்றல் வீசும் போதும்,நிலா குளிரும் போதும் மட்டுமே.
ஆனால் நீ எப்போதும் என்னோடு இந்தச் சோலையிலே இருந்து கொண்டே என்னை நோவு படுத்தாதே !
நாம் இருவரும் ஒரே இடத்தில் இருந்து வாழ்வதால் வந்த அந்யோந்யத்தை பயன்படுத்தி (எனக்கு உதவுவதற்கு மாறாக) என்னை இம்சிக்க வேண்டாம்.

நீயும் குயிலே ! இன்று நாராயணனை வரக் கூவாயேல் :

நாரங்களான சேதந/அசேதநங்களை உடையவரான அவர் என்னை உடையவனாய்,எனக்கு எஜமானனாய் இருப்பதால் என்னைப் புறக்கணிக்
காதே ! இந்த உடைமை அழைத்தால் வருவோரோ என்றும் புறக்கணிக்காதே ! அவருக்கு ஒவ்வொரு சிறு உடைமையும் மிகவும் விருப்பமுடையது.ஆதலால் என்னோடு இருப்பதில் விரும்பும் இருக்கிறவரை வரும்படி கூவவில்லை
என்றால்....

இங்குத்தை நின்றும் துரப்பன்-

உன்னை இந்தச் சோலையிலிருந்து,
துரத்தி விடுவேன் என்று எச்சரிக்கிறார்.
ஆண்டாள் மிரட்டுவது போலத் தோன்றி
னாலும்,அப்படிச் செய்யக் கூடியவர் அல்லவே ஆண்டாள்.இதில் சொல்ல வருவது--அவர் வரும்படி நீ செய்யவில்லை என்றால்,நான் உயிர் தரிக்காது முடிந்து விடுவேன்.பின்னர் யார்,இந்தச் சோலையைப் பராமரித்து,
வளர்ப்பார்கள்? சோலையே அழிந்து விடும்.நீ இங்கிருந்து போய்த்தானே
ஆக வேண்டும்.

——————————————————————

5-11:"விண்ணுற நீண்டடி தாவிய
மைந்தனை, வேல் கண் மடந்தை விரும்பி,
கண்ணுற வென் கடல் வண்ணனைக், கூவு கரும் குயிலே ! என்ற மாற்றம்,
பண்ணு, நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன,
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே"


விளக்கவுரை:

வேல் போன்ற கண்களை யுடையவளாய்,
பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய், ஸ்வரூபம் விளங்கும் நான்கு வேதங்களையும் ஓதின ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகள் ஆண்டாள்.
அவர் அடைய விரும்பிய,உலகளந்த பெருமாளை-- திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக நெடுக வளர்ந்து உலகங்களை வியாபித்த மிடுக்கை யுடைய கடல் வண்ணனான எம்பெருமானை-- வரும்படி கூவுவாய் கருங் குயிலே! என்று அருளிச் செய்த பாசுரங்களால் ஆன, போக்யமான இந்தஸ்ரீ ஸூக்தி மாலையை ஓத வல்லவர்கள், "நமோ நாராயணாய"என்று எம்பெருமானுக்கு நித்யமும், அந்தரங்கக் கைங்கர்யம் செய்யும் பேறு பெறுவார்கள்"

இத் திருமொழியை ஓத வல்லவர்கள்
ஸ்வரூப அநுரூபமான புருஷார்த்தத்தை பெறுவார்--ஜீவனின் சொரூபத்துக்குத் தக்க நித்ய லோகமான பரமபதத்தில் நித்ய கைங்கர்யம் செய்வார்கள் என்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை –

உலகளந்த பெருமாள் ஒருவரிடத்தில் ஒன்றைக் கொள்ள/பெற நினைத்தால்,
அவர்களுக்கு ஒன்றும் மிச்சம்/மீதம் இல்லாதபடி முழுதாக அள்ளிக் கொள்வார்.
வாமனனாக வந்த அவர் மாவலியிடம் மூன்றடி மண் இரக்க,மண் கொடுத்த
வனுக்கு ,இருக்க இடம் இன்றியே,பரக்க வைத்து அளந்து விட்டாரே.அந்த பற்பபாதனை நான் விரும்புவதால் சர்வ ஸ்வத்தையும் இழந்து,சந்தியில் நின்று சங்கடப்படுகிறேன், என்று ஆண்டாள் இதன்மூலம் உணர்த்துகிறார்.

வேல் கண் மடந்தை விரும்பி,கண்ணுற,
என் கடல்வண்ணனை:

பல வேல்கள் ஒன்று கூடி,ஒரு முகத்திலே அமைந்திருப்பது போல,கூர்மையான பார்வையுடைய ஆண்டாள் எம்பெருமானை தன் வேல்கண் பார்வைக்கு இரையாக்கத் தேடுகிறாராம்.
இவருடைய நேரான,கூர்மையான,
விழுங்கிவிடும் பார்வை அவரைப் பிச்சை எடுக்கும்படி படுத்துமாம் ! மூன்றடி மண் பிச்சை எடுத்த அவர்,ஆண்டாள் கண் பார்வை கிடைக்கப் பிச்சை எடுக்கும் படியாம்.
"என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன்"

கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே ! என்ற மாற்றம் :

கருமை நிறக் குயில்,கருநீலக் கடல் நிற கண்ணனைக் கூவுவது பொருத்தமாக இருக்குமே.உன் வடிவைக் காட்டி,அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும் என்று சொன்ன பத்துப் பாசுரங்கள்.

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன:

ஸ்வர பிரதானமான--வேதங்களை ஸ்வர சுத்தியுடன் ஓத வல்லவர்கள் வாழும்
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான-வேதம் வல்லார்களின் தலைவரான பெரியாழ்வார் திருமகள்,கோதை நாச்சியார் சொன்ன.

நண்ணுறு வாசக மாலை வல்லார்:

அனைவரும் விரும்பி சேவிக்கும்படியான,
போக்யமான பாசுரங்களால் கோர்த்த பாமாலை;எம்பெருமானை சிந்தனையில் வைத்துப் போற்ற உகந்த பாமாலை.
எம்பெருமானின் கல்யாண குணங்களை
ப்பேசவந்த வேதங்கள் பலவற்றையும் பரக்கச் சொன்னதால்,சொல்ல வேண்டிய குணங்களைச் சரியாகச் சொல்லாதது போல் அல்லாமல்,அவருடைய குணங் களை நன்றாகஎடுத்து உரைக்கும்படி,
பாடுவோர்/கேட்போர் உள்ளம் உருகும்படி,
அமைந்த பாமாலை--இந்தப் பாமாலையை அர்த்தமறிந்து பாட வல்லார்.

நமோ நாராயணாய என்பாரே :

"நமோ நாராயணா என்று,பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து
ஏத்துவார் பல்லாண்டே "என்பது ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வார் வார்த்தை.பெரியாழ்வார் குலத்துக்கே உண்டான உயர்ந்த குணமான,எம்பெருமானுக்கு"பல்லாண்டு,பல்லாண்டு"என்று மங்களாசாசனம் செய்வதைப் பலமாகப் பெறுவர்.
"நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார், நமோ நாராயணா என்று பல்லாண்டும் ஏத்துவர்" என்று கொண்டு, இப்பூவுலகில் நல்லகாலம் வரப்பெற்று,பல்லாண்டு பாடுவோர்,
இங்கே கிடைத்த பேற்றை பரமபதத்தில் பெற்று நித்யமும்,எப்போதும் மங்களா
சாசனம் செய்து கொண்டிருப்பார்கள்.

மேலும் இந்தப் பாசுரங்களைப் பாட வல்லார், திருஅஷ்டாக்ஷர மந்திரமான திருமந்திரத்தை(ப்ரணவத்துடன் கூடிய நமோ நாராயணாய) அநுசந்திப்பவர்கள்,
பெறக்கூடிய பலனைப் பெறுவார்கள் என்றும் கொள்ளலாம்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சந்நிதி--பரமபத நாதர் அலங்காரம்.
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதி:
2.ஆண்டாள் மூலவர்--திருவேங்கடமுடையான்
3.ஆண்டாள் உற்சவர்--குடமாடு கூத்தன்
4.மூலவரும்,உற்சவரும்.

1628399147121.png


1628399191286.png


1628399200495.png


1628399209440.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 24)

ஆண்டாள்,குயிலைப் பலவாறாக
உயர்த்தி வைத்து வேண்டியும், இறுதியில்
எச்சரித்து/ மிரட்டிப் பார்த்தும் தூது சென்று, ஸ்ரீகண்ணபிரானை வரும்ப்படி,
கூவ வில்லை.கூடல் விளையாட்டு
(நெஞ்சு) கூட்டி வைக்கவில்லை.குயிலும் கூவவில்லை.அவரை அடைய வேண்டும் என்னும் தாபம் அதிவேகமாக உந்த, இனி
ஒரு கணமும் தாமதிக்காமல் அவரை அடைய என்ன செய்யலாம் என்று ஆண்டாள் மனம் அலைபாய்ந்து கொண்டி
ருக்க,அவர் ஏன் வராமல் இருக்கிறார்?அவரும் ஆண்டாளை அடைய வேண்டும் என்று விரும்பினாலும்,ஆண்டாளின் பக்தியை இன்னும் பெருக்க வேண்டும், பக்தியும் சொட்டும் பாசுரங்களைக் கேட்க வேண்டும் என்று அவர் திருவுள்ளம் பற்றியதால் அவர் முகம் காட்டாமல் இருக்கிறார்.

கனாக்கண்டேன் தோழீ,நான் !

ஆனால் ஒரேயடியாக தாமதித்தால், ஆண்டாள் உயிர் தரிக்கமாட்டார்என்பதை அறிந்த எம்பெருமான் அவரது கனவில் முகம் காட்டினார்.முகம் காட்டினார் என்றால் எப்படி.--மாப்பிள்ளைக் கோலத்
தில் அழகியமணவாளனாக,
"வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து
வந்து",வைதீக திருமணத்தில் நடக்க வேண்டிய எல்லா சடங்குகளும் குறைவற நடத்திக் காட்டி,ஆண்டாள் விரும்பியபடி கைத்தலம் பற்றி விட்டார்.இந்தத் திவ்ய திருமண வைபவங்கள் ஒவ்வொன்றை
யும் ஆண்டாள் தன் தோழியிடம் "கனாக்கண்டேன் தோழீ நான்" என்று அழகாக விவரிக்கிறார் "வாரணமாயிரம்" பதிகத்தில்(6).மணநீர் மஞ்சனமாட்டும் அளவும் கனாக் கண்டது சொல்லப் பட்டிருந்தாலும்,ஸம்ஸலேஷமும் கனவில் நடந்ததாகக் கொள்ளவேண்டும்.
கண்விழித்த ஆண்டாள், "ஓ! இவை யாவும் வெறும் கனவாய்ப் போயினவே !
அவர் இப்படியா நம்மை வஞ்சித்தார்? அவர் எப்போது நேரில் வரப் போகிறா
ரோ" என்று மேலும் வியாகூலப்பட்டு, என்ன செய்வது என்று தோன்றாமல் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தார்.

சங்கு விடு தூது !!

ஆண்டாள்,தன்னைப் போல கனவில்,
கண்ணபிரானது திருவாய் அமுதத்தைப் பருகினவராய் அல்லாமல்,நித்யமும் அவரது திருவாய் அமுதத்தைப் பருகும் அநுபவம் பெற்றவர் யாரேனும் உளரோ?அன்றி அவர் நம்மை வஞ்சித்தது போலவே,அவர்களையும் வஞ்சித்திருப் பாரோ? என்று சிந்தித்த போது,அவரது இடது திருக்கரத்தில் நித்யவாசம் செய்கிற பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்காழ்வான்,இடைவிடாது அவரது திருவாயமுதத்தை அநுபவிக்கும்(அவர் வாயில் வைத்து ஊதுவதால்) பாக்யம் உடையவன் என்று உணர்ந்தார்.அவன் பெற்ற பேறு தான் என்னே! என்று அவன் மேல் ஒரு பக்கம் ஆச்சரியமான பிரீதியும்,மறு பக்கம் சற்றே பொறாமை
யும் கொண்டார்.அவனையே இடை
விடாது நினைத்துக் கொண்டிருந்ததால்,
சங்காழ்வான் ஆண்டாள் கண்ணெதிரே தோன்ற," ஓ! பாஞ்சஜன்யமே கண்ணபிரானது திருப்பவளத்தின் இன் அமுதத்தை இடைவிடாது அநுபவிக்கும் பேறு பெற்றாயே; அத்திருவாயின் பரிமளமும்,அவ்வமுதத்தின் ரசமும் எப்படி இருந்தது?சிறிது சொன்னாய் ஆனால்,
காதினாலாவது கேட்டு மகிழ்கிறேன்"
என்று சொல்வதாகப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார் ஏழாம் பதிகத்தில்.

சங்கின் அநுபவத்தைச் சொல்லும்படி தானே கேட்கிறார்.தூது அனுப்ப வில்லையே? தன் மனநிலையை சங்கிடம் சொல்லி,கண்ணனிடம் தனக்காகப் பேசச் சொல்ல வில்லயே?
என்பதற்கான விளக்கம்:

"ஆண்டாளுடைய பாக்யம் இருந்தபடி –
புதியதொரு குரங்கைப் பார்த்து –கதமூரூ கதம் பாஹூ-(சுந்தர -35-4)-என்னாதே,தேசிகரைக் கேட்கப் பெற்றாள் இறே"(பெரிய வாச்சான் பிள்ளை)

ஸ்ரீராமாயணத்தில் தூதுவராகச் சென்ற அநுமனிடம்,சீதை ராமரின் சேம நலங்
களை விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
சீதையைச் சந்தித்துத் திரும்பிய
அநுமனிடம் ராமர்"கதமூரு கணம் பாஹூ"--"சீதையுடைய நடையழகு எப்படியிருக்கிறது? தோளழகு எப்படி இருக்கிறது? சொல்வாய்" என்று வினவினார்.ஸ்ரீராமருக்கும்,சீதைக்கும் ஒரு சில நாட்களே அறிமுகமாயிருந்த ஒரு குரங்கைப்பார்த்து அந்தரங்கமான விஷயங்களை அவர்கள் கேட்டார்கள்.
ஆனால் ஆண்டாள் அப்படி ஒரு குரங்கை
ப்பார்த்துக் கேட்காமல்,பெருமானைவிட்டு ஒருநொடிப்பொழுதும் நீங்காமல் நித்ய அநுபவம் பண்ணிக் கொண்டிருக்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் சங்கிடம் ஆசார்ய ஸ்தானத்தில் உள்ள(தேசிகரை)
திருச்சங்காழ்வானிடம் கேட்கும் பேறு பெற்றவர்.ராம தூதன் அநுமனைப் போல பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பது, ஆசார்யரைப் போல அடியாரை(சீடனை) எம்பெருமான் திருவடியில் சேர்த்து விடுவது --என்னும் இவற்றின் அநுபவத்தை சங்காழ்வானிடம் கேட்டுப் பெறலாம் என்று நினைக்கிறார் ஆண்டாள்.ஆண்டாளின் புண்பட்ட மனதுக்குத் தகுந்த மருந்தாக, சங்காழ்வானின் பதில் இருக்கும். ஆண்டாள் எம்பெருமானோடு நித்யவாசம் பண்ணும் அநுபவத்தை
திருச்சங்கிடம் கேட்டுப் பெறுவதும் ஒரு வகைத் தூது என்று கொண்டு,
இப்பதிகத்தில் உள்ள பாசுரங்களை அநுபவிப்போம்.

பாஞ்சஜன்யத்திடம் கேட்கும் அளவுக்கு
என்ன மகிமை ?

எம்பெருமானின் திருவாயமுதம் அநுபவத்தைச் சொல்லும் அளவுக்கு, பாஞ்சஜன்யத்துக்கு உண்டான சிறப்பு பற்றி பெரிய வாச்சான் பிள்ளை சொல்வது:

1-திரை வளைத்தால் அதுக்குள்ளே வர்த்திக்கும் கூனர் குறளரைப் போலே
அவனைக் கை விடாதே அந்தரங்கனாய் இருக்கையாலும்--எம்பெருமான் சந்நிதி
யில் சில ஆராதனைகளுக்காக திரை இடும்போது அர்ச்சகர்கள் தவிர யாரும் மற்றவரை வெளியே அனுப்பி விடுவார்கள்.ஆனால் செயல் திறன் குறைபாடுள்ள கூனர்,குள்ளர் போன்றவர்களை அங்கேயே இருக்க விடுவர்.அவர்கள் போல,உள்ளேயே,
அவரை விடாமல் உடனிருப்பதால்.

2-தாங்கள் அனுபவிக்கும் துறையிலே இழிந்து அனுபவிக்கும் நிலயனாய் இருக்கையாலும்.--கனவில் தான் அனுபவித்த கண்ணனின் திருவாய் அமுதத்தை எப்போதும அநுவிப்பதால் அந்தத் துறையில் வல்லவர்.

3-தங்களைப் போலே காதாசித்கம் அன்றிக்கே நித்ய சம்ஸ்லேஷம் பண்ணி வர்த்திக்கும் ஒருவனாகையாலும்--
அந்தரங்கமாக இருக்கும் சில சமயங்களில்,பெறும் அநுபவத்தைச் போலல்லாமல் நித்யமாக எம்பெருமான்
வாயமுத அனுபவம் பெறும் சங்காழ்வான்.

4-இனி வினை யுண்டானால் திருவாழி யாழ்வான் திருக் கையை விட்டுப் போய் வியாபாரிக்கும்
–கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் (திருவாய் -10-6-8)
இவன் வினை முடுக முடுக திருப் பவளத்திலே அணையும் அத்தனை--
சங்கொடு சக்கரம் என்று இரண்டு ஆயுத ஆபரணங்களும் ஒன்றாகவே சொல்லப் படும் நிலையில்,சக்கரமானது எம்பெருமான் நியமிக்கும் போது,அவரது திருக்கையை விட்டுப் போய் சிரித்தபடி
கைங்கர்யத்தை முடித்து விட்டு,மீண்டும் வந்து அவரது கையில் நிற்கிறது.ஆனால்
சங்கு இருந்த இடத்திலேயே இருந்து,
அதுவும் உத்தமமான எம்பெருமான் திருவாயில் நின்று,அவரை விட்டுப் பிரியாமல் முழங்கி விட்டு,அங்கேயே இருக்கிறது.அதுவும் ஆற்றக்கூடிய செயல் பெரிதானது/முக்கியமானது
என்றால்,அது அவர் திருவாயில் உள்ளே நன்றாகப் புகுந்து,அதிக நேரம் நின்று ஊதும்.--குருஷேத்ரத்தில் நின்று ஊதியம் போல.

5-இனி உகவாத கம்சாதிகள் காணாமைக்கு இறே –உபசம்ஹர -என்றது--
ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த போது,நான்கு திருக்கரங்களுடன்,சங்கு,சக்கரங்களோடு தோன்றினார்.ஆனால் கம்சனுக்கு, அவரது அவதார ரஹஸ்யம் தெரியக்
கூடாது என்று,வசுதேவர்,இவற்றை மறைத்துக் கொள் என்று வேண்ட,
கிருஷ்ணர் அவற்றை மறைத்துக் கொண்டு சாதாரணக் குழந்தையாகத்
தோற்மளித்தார்.அப்படியிருக்க அவரிடம் சங்கு எப்படி வந்தது? கம்சனுக்கு தாம் யார் என்பது தெரியக்கூடாது என்பதற்
காககத் தான் மறைத்தார்.ஆனால் அநுகூலர்களுக்குக் காட்டினார்.

6- உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவே இருக்கும் இறே;
வாய்க்கரையிலே போய் இருந்து ஆர்ப்பரவம் பண்ணி
அவார்ப்பரத்திலேயே எதிரிகள் கெடும்படி இருப்பானுமாய்-
இவனை உகவாத கம்சாதிகள் காணாத படி---அவரை உகந்த கோபிகைகள்,
அவருக்கு கம்சனால் நேரிடும் ஆபத்துக்
களிலிருந்து அவரை எப்படிக் காப்பாற்று
வது என்று கவலைப்பட்டிருக்க,கண்ணன் தம்மிடம் இருக்கும் சங்கு,சக்கரங்களைக் காண்பித்து,கவலைப்படாதீர்கள்;இந்தச் சங்கு சக்கரங்கள் என்னைக் காப்பாற்றி விடும் என்று தைரியப்படுத்தினாராம்.

7.இவர்கள் தான் ஸ்யாமமான திருமேனியை அனுபவித்தால்
அதுக்கு பரபாகமான வெண்மையை உடையவன்-ஆகையாலே
சேர அனுசந்திக்க வேண்டி இருக்கும் இறே--கண்ணன் நல்ல கருப்பு நிறத்தில் இருப்பதால் அவரது திவ்ய அழகுத் திருமேனியை சரியாகச் சேவிக்க முடியவில்லையாம்.அவரது கையில் ஏந்தியிருக்கும் தூய வெண்மை நிறத்தில் இருக்கும் சங்கு,வெளிப் படுத்தும் பிரகாசம் அவர் திருமேனியை
நன்றாகச் சேவிக்க உதவுகிறது.

"வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் "என்றும் –
"பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் "--என்றும் ஆண்டாள் பாடியிருப்பதால்,
அவர் இந்த வண்ணச்சேர்க்கையை
விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.

8- இனி இவன் வார்த்தை கேட்டால்
அவன் வார்த்தை கேட்டால் போலே இனியதாயும் இருக்கும் இறே –-
திருச்சங்கின் வாய் வார்த்தை கேட்டால்
எம்பெருமானின் வார்த்தை கேட்பது போல இனிமையாக இருக்கும்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
ஸ்ரீவில்லிபுத்தூர் திருஆடிப்பூர உற்சவம்
5 ஆம் நாள்--ஐந்து கருட சேவை--
பெரியாழ்வார்,ஆண்டாள்,ரங்கமன்னார்,
பெரிய பெருமாள்(வடபத்ர சாயி),
திருத்தங்கல் அப்பன்,ஸ்ரீநிவாசப் பெருமாள்,சுந்தரராஜப் பெருமாள்.


1628489103950.png


1628489112991.png


1628489122169.png


1628489136842.png


1628489144814.png


1628489153752.png


1628489163507.png
 

Latest ads

Back
Top