Aadi Maha Ashtami

சங்கடங்கள் தீர்க்கும் ஆடி மாத சனி மகா அஷ்டமி

இந்நாளின் சிறப்புகள் என்ன?இன்று செய்ய வேண்டிய பரிகார வழிபாடு விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

இன்று(16-8-25) காலபைரவருக்கு மிகவும் உகந்த சக்தி வாய்ந்த தேய்பிறை அஷ்டமி திதி.

சனிக்கிழமை அன்று இந்த அஷ்டமி திதி வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு.

இந்த அஷ்டமி திதியை *சனி மஹா அஷ்டமி திதி*என்று சொல்லுவார்கள்.

சனி பகவானுக்கு, குருவாக இருப்பவர் கால பைரவர்.

ஆகவே சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள், எல்லாம் இன்றைய தினம் கட்டாயமாக கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

இன்று (16-8-2025) சனிக் கிழமை அதிகாலை 1-41 முதல் இரவு 11-13வரை தேய் பிறை அஷ்டமி திதியாக அமைந்துள்ளது.

சனிக்கிழமை வரும் பிரதோஷம்
சனி மகா பிரதோஷம் என்று சொல்லப்படுவதைப்போல சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி
சனி மகா அஷ்டமி என்று அழைக்கப்படுகின்றது.

இதன் மூலம் இந்த நாளின் சிறப்பை அறிந்துகொள்ளலாம்.

அஷ்டமி, நம் துயர்துடைக்கும் திதி.

இந்த நாளில் செய்யும் இறைவழிபாடு நமக்கு ஆகச்சிறந்த நன்மைகளைக் கொண்டுவரும்.

அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உரியது.

சிவபெருமானின் அம்சமான காலபைரவர் கார்த்திகை மாத சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி தினம் ஒன்றில் அவதரித்துத் தீமைகளை அழித்தார் என்கின்றன புராணங்கள்.

எனவே, இந்த நாளில் நாம் செய்யும் பைரவர் வழிபாடு நம் வாழ்வில் உள்ள துன்பங்களை அனைத்தையும் நீக்கும் என்பதால் இந்த தினம் பிரதோஷத்துக்கு இணையான ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி நாளின் சிறப்புகள்:

``திதிகளுள் நடுநாயகமாக அமைந்திருப்பது அஷ்டமி திதி.

அஷ்டமி திதியில் இறைவழிபாடு செய்வது சகல விதமான கஷ்டங்களையும் போக்கும்.

நோய்கள், கடன்கள், எதிரிகள் போன்றவற்றில் இருந்து நம்மை விடுவிக்கக்கூடியவை

உக்கிரமான தெய்வங்கள். அந்த வகையில் அஷ்டமி திதிக்கு உரிய தெய்வங்களாக பைரவரையும் துர்கையையும் வழிபடுகிறோம்.

சிவாம்சமான கால பைரவர் சனியின் குருவாகப் போற்றி வழிபடப் பெறுகிறார்.

கால பைரவரை சனிக்கிழமையும் தேய்பிறை அஷ்டமி திதியும் சேர்ந்து வரும் நாளில் வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மூலம் நட்சத்திரம், அஸ்வினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம், கேது திசை நடப்பவர்கள், கேது புத்தி நடப்பவர்கள் எல்லாம் இன்றைய தினம் கால பைரவரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மட்டும்தான் இன்று காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.

எல்லோருமே இன்றைய தினம் கால பைரவரை வழிபாடு செய்யலாம். கண்கலங்க வைக்கும் கஷ்டம்.

அனைத்தும் உங்களை விட்டு நீங்கும். எதிரி தொல்லை நீங்கும். கண் திருஷ்டி விலகும். எல்லா நன்மைகளும் உங்களை வந்து அடையும்.

செங்கல்பட்டு -திருப்போரூர் செல்லும் வழியில் உள்ள திருவடிசூலம் ஆதிபரமேஸ்வரி
மகா ஆரண்ய க்ஷேத்திரத்தில் அன்னை கருமாரி அம்மன் ஆலயத்தில் பிரமாண்டமாகக் காட்சி அருளும் அஷ்டபுஜ பைரவருக்கு அஷ்டமி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அதிலும் சனி மகா அஷ்டமியை நாளில் உலக நன்மைக்காக அஷ்டபுஜ கால பைரவருக்கு அஷ்ட விதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சனி மகா பிரதோஷத்துக்கு இணையாகச் சொல்லப்படுகிற தேய்பிறை சனிக்கிழமை அஷ்டமி திதி சனி மகா அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விசேஷமான அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்''

திருவடிசூலத்தில் அருளும் அஷ்டபுஜ கால பைரவரை இன்று மாலை,நாம் வீட்டிலிருந்தே மனதில் நினைத்து வணங்கி சகல நன்மைகளையும் பெறலாம்.

மேலும் சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமிதிதியன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

கடன் தொல்லைகள் தீரும்.

மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன்கள் பெருகும்.

தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

இன்றைய தினம் சிறப்பாக கால பைரவரை எப்படி வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக இந்த கடன் தொல்லையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் காலபைரவரை இன்றைய தினம் எப்படி வழிபாடு செய்வது? என்ன பரிகாரம் செய்வது?
என்று பார்க்கலாம்.

பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

காலபைரவரை மனதார நினைத்து ஒரு வெற்றிலையில் 7 மிளகு வைக்க வேண்டும்.

ஒவ்வொரு மிளகாக வெற்றிலையில் வைக்கும் போது, “ஓம் கால பைரவரே துணை” என்று சொல்ல வேண்டும்.

(ஏழு முறை மந்திரத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு மிளகு வைக்கும் போதும் ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லுங்கள். ஏழு மிளகு, ஏழு முறை மந்திரம்).

பிறகு, அந்த வெற்றிலையில் வைத்திருக்கும் மிளகை சுருட்டி, ஒரு நூல் போட்டு, கட்டி, உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, பைரவரிடம் உங்களுடைய பிரார்த்தனையை வையுங்கள்.

ஒரே ஒரு பிரார்த்தனையாக இருக்கட்டும்.

பிறகு அந்த வெற்றிலை மூட்டையை பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள்.

வழக்கம் போல ஒரு கற்பூர ஆராத்தி காண்பித்து, உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் இருந்தபடியே இன்றைய தினம், இந்த பரிகாரத்தை செய்யவும்.

இரண்டு நாளுக்கு ஒருமுறை வாடிய வெற்றிலையில் இருந்து மிளகை எடுத்து, புது வெற்றிலையில் வைத்து சுருட்டி நூல் போட்டு கட்டி பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

அடுத்து தேய்பிறை அஷ்டமி திதி வருவதற்குள், நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தீர்களோ, அதை அந்த காலபைரவர் தீர்த்து வைப்பார்.

கடன் தொல்லை நீங்க வேண்டும், எதிரி தொல்லை நீங்க வேண்டும், ஏவல் பில்லி சூனியம் விலக வேண்டும் என்று, என்ன பிரார்த்தனை வைக்க வேண்டும் என்றாலும், இந்த வெற்றிலை மிளகு பரிகாரத்தை இன்று நீங்கள் செய்யலாம்.

சனிக்கிழமையோடு வந்திருப்பதால் இந்த நாளுக்கு அதிக அற்புதம் வாய்ந்த பலன் இருக்கிறது.

இன்று இரவு 11-13மணி வரை அஷ்டமி திதி இருக்கிறது. ஆகவே இன்று இரவு 11 மணிக்கு முன்பு எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

தவறு கிடையாது.
 
Back
Top