நன்னிலம் ராஜ கோபால கனபாடிகள் அவரது ஸந்தேஹ நிவாரணி புத்தகம், பாகம் -3 பக்கம் 79ல் கணவனோ மனைவியோ இல்லதவர்கள் கட்டாயம் இந்த 60,70, 80 சாந்திகளை செய்து கொள்ளத்தான் வேண்டுமென்று எழுதி இருக்கிறார். மனித உடலிலும், குடும்பத்திலும் ஏற்படும் ஒரு சில தோஷங்களுக்கு பரிஹாரமாக இந்த சாந்தி கர்மாக்கள் செய்ய படுகிறது. இவற்றை செய்து கொள்ளாவிட்டல் இது அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் பாதிக்கலாம் என்பதால் அவசியம் செய்து கொள்ளவேண்டும் என எழுதி உள்ளார். ஆதலால் சிறிய முறையிலாவது அவசியம் செய்து கொள்ள வேண்டும்.