• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

300 பாடகர்கள் பங்கேற்கும் பாரதி பஞ்சரத்ன க&#30

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
300 பாடகர்கள் பங்கேற்கும் பாரதி பஞ்சரத்ன க&#30

300 பாடகர்கள் பங்கேற்கும் பாரதி பஞ்சரத்ன கீர்த்தனை

சென்னை:மயிலாப்பூரில் வரும், டிச., 11ம் தேதி, 300 பாடகர்கள் பங்கேற்கும், 'பாரதி பஞ்சரத்ன கீர்த்தனை' நடைபெற உள்ளது. 'வானவில் பண்பாட்டு மையம்' சார்பில், வரும் டிச., 10, 11ம் தேதிகளில், பாரதி விழா கொண்டாடப்பட உள்ளது.


இது குறித்து, அதன் நிர்வாகிகள், இல.கணேசன், நல்லி குப்புசாமி, எழிலன், கவிஞர் ரவி, ஷோபனா ஆகியோர் கூறியதாவது:கடந்த, 1984 முதல் வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி இல்லத்தில், ஜதிபல்லக்கு மற்றும் பாரதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. டிச., 10ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, திருவல்லிக்கேணி, என்.கே.டி., தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எம்.பி.எஸ்., சென்னை இளைஞர் குழுவினரின் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெறும்; தொடர்ந்து, சுகி சிவம் உரையாற்றுவார்.


அதே பள்ளி வளாகத்தில், டிச., 11 காலை, 9:00 மணிக்கு, கர்நாடக இசைப் பாடகர்கள், அருணா சாய்ராம், ஓ.எஸ்.அருண், உன்னி கிருஷ்ணன், டி.எம்.கிருஷ்ணா, மகதி, சங்கீதா சிவகுமார் உள்ளிட்டோருடன், 300 இசைக் கலைஞர்கள் பங்கேற்கும், 'பாரதி ஐந்து' என்னும், பாரதி பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெறும்.


தொடர்ந்து, 'ஜதிபல்லக்கு' நிகழ்ச்சியில், பாரதி சிலைக்கு அளிக்கப்பட்ட சால்வை, பொற்பை ஆகியவை, கவிஞர் கொத்தமங்கலம் விஸ்வநாதனுக்கு வழங்கப்படும். இதை, எழுத்தாளர் சிவசங்கரி வழங்குவார். காலை, 11:00 மணியில் இருந்து பாரதி இல்லத்தில், 100க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிப்பொழிவு நடைபெறும். அன்று மாலை, 6:30 மணிக்கு, பாரதி பாடல்களுக்கான, நடன நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான பாரதி விருது, நாட்டியக் கலைஞர் வைஜயந்திமாலா பாலிக்கு வழங்கப்படும். நிகழ்ச்சியில்,
கவிஞர் வைரமுத்து பங்கேற்பார். 'பாரதி ஐந்து' பஞ்சரத்ன கீர்த்தனையில் பங்கேற்க விரும்புவோர், 98400 94000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1653155
 
பாரதியார் விருதுக்கு வைஜயந்திமாலா பாலி தேர்வு: டிசம்பர் 11-ம் தேதி வழங்கப்படுகிறது

இந்த ஆண்டுக்கான பாரதியார் விருதுக்கு பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான வைஜயந்திமாலா பாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வானவில் பண்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, பாஜக எம்பி இல.கணேசன், புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாகவி பாரதியின் நல்லுணர்வும், நற்சிந்தனைகளும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் பரவ செய்வதற்காக வானவில் பண்பாட்டு மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து பாரதியின் பிறந்தநாளை எங்கள் மையம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா டிசம்பர் 10, 11-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதன்படி, டிசம்பர் 10-ம் தேதி மாலை திருவல்லிக்கேணி என்கேடி தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மறைந்த எம்.பி.சீனிவாசின் சென்னை இளைஞர் குழுவினரின் சேர்ந்திசை நிகழ்ச்சி, ‘வாழ்விக்க வந்தவர்கள்’ என்ற தலைப்பில் சுகி சிவத்தின் சொற் பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும்.

Read more at: http://tamil.thehindu.com/tamilnadu...-11ம்-தேதி-வழங்கப்படுகிறது/article9369747.ece
HH
 
Status
Not open for further replies.
Back
Top