பெரிய திருமொழி மூன்றாம் பத்து - எட்டாந் த&#300

praveen

Life is a dream
Staff member
பெரிய திருமொழி மூன்றாம் பத்து - எட்டாந் த&#300

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து - எட்டாந் திருமொழி
நந்தா விளக்கே
திருநாங்கூர் - திருமணிமாடக்கோவில்


10, ★வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர்,
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டாய தொல்சீர் வயல் மங்கையர்க் கோன்,
கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்**
கண்டார் வணங்கக் களி யானை மீதே,
கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலராய்*
விண்தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ்,
விரிநீர் உலகாண்டு விரும்புவரே.


விளக்கவுரை :
வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்து அழகாக விளங்கும் திருநாங்கூர்
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு
என்றும் தொண்டனாக இருப்பதை இயல்பான குணமாக உடையவரும்,
வயல்வெளிகள் நிறைந்த மங்கைநாட்டுக்கு அரசருமான
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த தமிழ்மாலையான இத்திருமொழியை ஓதவல்லவர்கள்..,
கண்டவர்கள் அனைவரும் வணங்கும்படி பட்டத்து யானை மீது ஏறி,
கடல்சூழ்ந்த இந்த உலகுக்கு ஒரு அரசராகி,
வானத்தைத் தொடும் நீண்ட வெண்கொற்றக் குடையின் கீழிருந்து
ஆவாரண ஜலம் சூழ்ந்த பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டு மகிழ்ந்திருக்கப்பெறுவரே.
 
Back
Top