“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான&

Status
Not open for further replies.

shridisai

You Are That!
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான&

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

குறள் 134: ஒழுக்கமுடைமை

இதற்கு பொதுவான பொருள்:
“பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும்.
திருக்குறள் ஒரு உலகப்பொது மறை நூல்.இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மெய் பொருள்.அவ்வாராயீன் “பார்ப்பான்” என்னும் ஒரு குலத்திற்கு மட்டும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாகாது

த்விஜந்மந்(dvijanman) என்பது ஒரு வடமொழி சொல்.
இதற்கு இரு-பிறப்பாலான் (Twice born, regenerate) என்று பொருள். அதாவது எவனொருவன் இம்மண்ணில் பிறந்த தன்னையே மீண்டும் பிறப்பித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனோ அவனேபார்ப்பான்என்னும்ப்ரஹ்மனன்ஆவான்.

இத்தகைய ஆற்றல், ஒருவனுக்கு சத்குருவின் மூலமாக மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று. இத்தத்கைய தகுதியில் ஒருவன் பார்ப்பான் ஆகின், பின் அக்குருகுலத்தில் தான் பயின்ற கல்விதனை மறக்கும் சூழ்நிலை ஏற்படினும், ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அவன் பிறந்த(தோன்றிய)அக்குருகுலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால், அக்குலத்தின் தீராத சாபத்திற்குள்ளாகி மாறாத அழிவை நோக்கியே செல்வான் என்று வள்ளுவர் நமக்கு எச்சரிக்கிறார்.

சாய்ராம்
 
Am I the only pervert here? Did any one chuckle reading this kural?? :heh:

even though many scholars have taken it for 'Brahmins' as mentioned in the kural still the meaning given for 'பார்ப்பான்' makes me smile a little even though I would say 'chuckling' may sound little strong.
 
திருவள்ளுவர் பார்ப்பான் என்று குறிப்பிடுவது யாரை?
திருவள்ளுவர் பார்ப்பனரா? ராமாலிங்‌கர், தாயுமானவர், யாழ்ப்பானர் முதலிய அருட்பெரும்ஜோதிகள் பார்ப்பனரல்லவா? ஒருவர் பார்ப்பனராக மலர்ந்தபின்னர் உலக கட்டுப்ப்பாடுகளின் தளைகளிலிருந்து விடுபட்ட அவர் செயல்களின் லௌகீக விளைவுகள் அவரை பாதிக்குமா?
 
Status
Not open for further replies.
Back
Top