ஸீதா கல்யாண வைபோகமே!

Status
Not open for further replies.

Raji Ram

Active member
ஸீதா கல்யாண வைபோகமே!


''ஸீதா கல்யாண வைபோகமே!''


பல்லவி:

ஸீதா கல்யாண வைபோகமே!
ராம கல்யாண வைபோகமே!

சரணங்கள்:

குவம்ஸ திலகனாய் அவனிதனில் அவதரித்த
ரகுராமன் இளவலுடன் ஜனகபுரி சேர்ந்திட
(ஸீதா கல்யாண...​)

ஸாமஜ வரகமனன் கம்பீர நடை காண,
தாமதம் செய்யாமலே வைதேகி வந்திட
(ஸீதா கல்யாண...​)

அண்ணலும் நோக்கிட, அவளும் நோக்கிட,
கண்களும் இணைந்திட, காதலும் மலர்ந்திட
(ஸீதா கல்யாண...​)

ஒப்பில்லா அரசர்களால் ராஜ சபை நிறைந்திட,
ஒப்பில்லா சிவதனுஸை ஸ்ரீராமன் முறித்திட
(ஸீதா கல்யாண...​)

மனந்தனில் வரித்தவனே மணாளன் ஆகிட,
மனம் நிறையப் பரவசமாய் மணமாலை சூட்டிட
(ஸீதா கல்யாண...​)

விண்ணோரும் மண்ணோரும் ஆனந்தக் களிப்பிலே,
பண்ணோடு கொண்டாடிப் பல்லாண்டு பாடிட
(ஸீதா கல்யாண...​)


வாழ்க வளமுடன்...
ராஜி ராம்.:pray2:
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top