வரலட்சுமி துதி (Varalakshmi Thuthi)

praveen

Life is a dream
Staff member
வரலட்சுமி துதி (Varalakshmi Thuthi)

சீதரன் மார்பினில் செம்மகளாய் வெகு சீருடன் வாழ்பவளே!
மாதவர் மகிழ்வுற வந்தவர்க் கிங்கித மங்கள வாழ்வருள்வாய்
வேதமெலாம் புகழ் மின்னிய மேனிகொள் விண்மகள் பொன்மகளே!
ஜய ஜய ஜய சௌபாக்யலட்சுமி ஜய வரலட்சுமி ஶ்ரீதேவி!.

மாதவன் மார்பினில் வரமருள் எழிலுடன் வளர் திருமலர் மகளே!
மேதினி போற்றிடும் மேன்மையெலாமுற விரைவினில் வரம் அருள்வாய்
பூதல மானிடர் வானவர் யாவரும் போற்றிடும் பொன் மகளே!
ஜய ஜய ஜய சௌபாக்யலட்சுமி ஜய வரலட்சுமி ஶ்ரீதேவி!.

 
Back
Top