வடுமாங்காய் ஊறுகாய்:

Status
Not open for further replies.
வடுமாங்காய் ஊறுகாய்:

வடுமாங்காய் ஊறுகாய்:


வடுமாங்காய் - 1 படி,

விளக்கெண்ணைய் - 100 மிலி,

உப்பு - 50 கிராம்,

மிளகாய் வற்றல் - 10

கடுகுபொடி - 1 டேபிள் ஸ்பூன்,

காரப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்



முதலில் வடுமாங்காய்களை குண்டு குண்டாகப் பார்த்து வாங்கி நன்கு கழுவி உலர்ந்த துணியில் நன்றாகத் துடைத்து பின் விளக்கெண்ணை விட்டி நன்கு கிளறி விடவும்.

பிறகு உப்பு, மஞ்சள் பொடி கலக்கவும்.


ஜாடியில் கொஞ்சம் மாவடு, உப்பு என்று அடுக்கவும்.

எல்லா மாவடுக்களையும் போட்ட பிறகு ஓர் உலர்ந்த துணியால் ஜாடியின் வாயை கட்டி விட்டு மூடியால் மூடி விடவும்.

தினமும் நன்கு குலுக்கி விட்டால் 4-5 நாட்களில் தண்ணீர் விட்டுக் கொள்ளும்.

பிறகு அந்த தண்ணீரில் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் மி.வற்றல், ஒரு கரண்டி கடுகு போட்டு மிக்சியில் நன்கு மைய அரைத்து அதை மாவடுவில் விடவேண்டும்.

வேறு நீர் சேர்க்கக் கூடாது.

ருசிக்கேற்ப உப்பு, மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

10365752_778501468868916_7353481862697026378_n.jpg




Source: Jayanathan Durai
 
Status
Not open for further replies.
Back
Top