ராஹு கேது தோஷ பரிஹாரம்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ராஹு கேது தோஷ பரிஹாரம்.

ராஹு கேது விற்கான பரிஹாரம் ஆதாரம்—சாந்தி குஸுமாகரம் புத்தகம்.

1. தங்கம் அல்லது வெள்ளியில் செய்த பாம்பு வடிவத்தை செவ்வாயன்று இரும்பு பாத்திரத்தில் வைத்து தக்ஷினையுடன் தானம் செய்வது.

2. ஆலயத்தில் வெள்ளிக்கிழமையன்று துர்கைக்கு நலெண்ணை அபிஷேகம் 21 உளுந்து வடை, உளுந்து சாதம் நைவேத்யம் செய்வது.

3. மஹா விஷ்ணுவிற்கு பக்தியுடன் அபிஷேகம் அர்ச்சனை செய்தல்..சக்கரை பொங்கல் நிவேத்யம், பாராயணம் விஷ்ணு ஸ்தோத்ரம்

4. தன்னை விட வயதில் மூத்த ஏழு சுமங்கலி பெண்களை வீட்டிற்கு வர சொல்லி நல்ல எண்ணை தேய்த்து ஸ்நானம் பண்ண சொல்லி ஆடை ஆபரணங்கள் கொடுத்து அறுசுவை உணவளித்து.

அவர்களை ப்ராஹ்மி, கெளமாரி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டா என்பதான 7 மாத்ருக்களாக பாவித்து பூஜை செய்து ஆசி பெறுதல்.

5. தன் கைப்பட எட்டு கையுடன் கூடிய துர்கை படம் பட்டு துணியில் வரைந்து தினசரி விடாமல் முப்பது நாட்கள் பூஜை செய்து தானம் செய்தல்.


6. ஒரு பட்டு துணியில் எட்டு இதழ்களுடன் கூடியதான தாமரையை வரைந்து அதன் தளங்களில் ப்ராஹ்மி, கெளமாரி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணீ, சாமுண்டா, என்ற பெயர்களை எழுதவும் .எட்டாவது இதழில் உங்கள் நக்ஷத்திரத்தை எழுதவும்..

விடாமல் தொடர்ந்து 45 நாட்கள் பூஜை செய்யவும். நைவேத்யம் , உளுந்து சாதம்,எள்ளு சாதம் தேன். தினமும்.

7. தேவி மாஹாத்மியம் புத்தகம் வாங்கவும். தொடர்ந்து 45 நாட்கள் பாராயணம் செய்யவும். நைவேத்யம், முதலில் தேன், கடைசியில் பால் தினமும்.. 45 நாட்கள் கழித்து இந்த புத்தகத்தை தானம் செய்யவும்.

8. தொடர்ந்து ஆறு சனிக்கிழமைகளில் தேங்காய் சாதத்தில் வெல்லம் சேர்த்து விநாயகர் ஆலயத்தில் பக்தர்களுக்கு விநியோகம் செய்தல்.


9.நுனியுள்ள தர்பத்தை கையில் வைத்துக்கொண்டு ஆலயம் அல்லது கன் றுடன் கூடிய பசு மாடு அல்லது மஹான்கள் வசிக்குமிடம் ஆகியவற்றை தொடர்ந்து ஒரு மாதம் வறை தினசரி பத்து முறை ப்ரதக்ஷிணம் செய்தல்.

தொடர்ந்து 24 வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில் விஷ்ணு சன்னதியில் தினமும் காலை, மதியம், மாலை என மூண்று வேளைகள் புருஷ சூக்தம் பாராயணம் செய்தல்.

ராஹு கேது ஸஞ்சாரத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களையும் விலக்கி பற்பல நன்மைகளையும் கிடைக்க செய்யும்..
 
they say for any navagraha doshams-including raghu-kethu- you should read ADITYA HRUDAYAM 9times a day atleast for a week. you will definately see better results as per the books . I follow this procedure and got the results.
 
can any one will explain - nichrut gayathri -in gayathri japam. it is like this. savitriya rishihi-Nichrut gayathri chandaha-savita devatha-jape viniyogaha. If anybody knows what is nichrut gayathri chandas please explain. I am eager to know the meaning .
 
Status
Not open for further replies.
Back
Top