ரமணி ஹைக்கூ

Status
Not open for further replies.

saidevo

Active member
ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****
 
4.
தோட்டத்தின் இருளில்
குழந்தை கையில் கண்ணாடி
சிரித்தது குழந்தை நிலா

5.
திருவிழாக் கரகாட்டம்
பொய்க்கால் குதிரைமேல் உட்காரக்
குழந்தை பிடிவாதம்

*****
 
6.
’கைலென்ன சொல்லு?’
குழந்தை முதுகின்பின் கைகள்
பார்த்தால் அந்துருண்டை!

7.
ஒலியற்ற இரவு
உள்முக சாதனை முயல்வில் நான்
சிள்வண்டின் அபஸ்வரம்

*****
 
8.
அப்பா பெருச்சாளி!
திடுக்கிட்டு விளக்கைப் போட்டேன்
ஜன்னலில் ரசித்தே மகன்

04/11/2015
9.
மழைத்துளி மாவிலை நுனி
சின்னத் துளி வண்ணம் வான்வில்
சிறைப்பட்டது ஓர் மலை

*****
 
05/11/2015
11.
அலையற்ற வானம்
இறகே துடுப்பாய் ஓர் படகு
நிலத்தில் கண். கழுகு!

12.
அடை மழை. பேய்க்காற்று.
மாலை. மின்வெட்டு. கம்பியில்
காக்கை இரண்டு தவம்.

*****
 
06/11/2015
13.
நெகிழி மலர்க்கொத்து
மேசை மேலே குடுவையில்
பூவண்டு தேடும்

14.
சுட்டெரிக்கும் வெய்யில்
சுவரோரம் வண்டி ஓய்வு
காளை வாயில் நுரை

*****
 
15.
கட்டாந்தரையில் கொக்கு
ஆழக் கொத்தி எடுப்பது எது?
எரிவாயு எண்ணெய்

08/11/2015
16.
எறும்புக்கு இட்டாள்
வாசல் அரிசி மாக்கோலம்
தின்றது காக்கை அணில்

*****
 
17.
இருளில் ஒளிவெள்ளம்
சாலை மரங்கள் பெயர்த்தே
சுவரில் எரியும் கார்

18.
ஹெலிகாப்டர் தும்பி
வானில் பற்பல சாகசங்கள்
பூவில் அருந்துமோ தேன்?

*****
 
19.
கை தொட்டால் நசியும்
சுற்றிலும் மணம் கமழ்ந்த பாம்பு
உயிரிலா ஊதுபத்தி

20.
தூபம் ஊதுபத்தி
தீபம் கற்பூரம் உற்சவம்
நாளும் வேண்டும் கொசு

*****
 
21.
தங்கச் சிறு கூண்டு
மங்காத ஆசை பலவிதம்
பங்கப் படுமே கிளி.

22.
அண்ணாந்து பார்த்தேன்
கண்ணாடி விரிசல் ஆச்சு
விண்ணின்று மழைத்துளி

*****
 
25.
காற்றடித்து விழுந்தன
எண்ணற்ற நட்சத்திரங்கள்
அட, வேப்பம்பூக்கள்!

26.
தோட்டத்தில் புதுமலர்
அடைமழை நீரில் மிதந்தாடும்
சாக்கடைநீர் சல்லடை

*****
 
27.
தென்னை மட்டை மேல்
காக்கை மூக்கைத் தேய்க்கும் ஒலி
பதுங்கும் அணில் குஞ்சு

28.
ஜலதரங்கம் கூட்டும்
தனி ஆவர்த்தனக் கச்சேரி
குளியல் அறை சல்லடை

*****
 
29.
வெய்யில் கல்தரை குடம்
தரையில் படும்துளி உடன்மறையும்
காக்கை மூக்கில் துளி

30.
சீனித் துகள் சுவைத்தே
காலை இழுக்கும் கட்டெறும்பு
பாலாடை வலையில்

*****
 
ஜலதரங்கம் கூட்டும்
தனி ஆவர்த்தனக் கச்சேரி
குளியல் அறை சல்லடை

நல்ல கற்பனை. நான் அனுபவித்து ரசித்தேன். நன்றி.
 
31.
நள்ளிரவு மௌனம்
டிக்டிக் ஒலிக்கும் கடிகாரம்
நாணயம் விழும் சப்தம்

32.
தொட்டியில் காலிக் குடம்
நீர் மொள்ளும் சொம்பு குபுக் குபுக்
குழந்தை கால் உன்னும்

*****
 
33.
மழையில் சிறு கப்பல்
இழுத்துக் கரை சேர்த்தது குழந்தை
தப்பும் கட்டெறும்பு

34.
வீறிடும் குழந்தை ஒலி
செய்வது அறியாத் தாய் திகைத்தாள்
நாக்கில் மிளகாய் விதை

*****
 
மிக்க நன்றி, வாக்மி அவர்களே.
ரமணி
Dear Sri saideo,
A suggestion. If you can add a ch before the word challadai the meaning will become more precise. Otherwise it may appear that the bathroom itself is being called challadai instead of the drain lid.

குளியலறைச்சல்லடை என்பது குலியலறையிலுள்ள சல்லடை என்று பொருளைத்தெளிவாக்குகிறது. அந்த ஒற்று மிகுந்து வந்து அந்தப்பொருளைத்தெளிவாக்குகிறது.

குளியலறை சல்லடை என்று வரும்போது குளியலறையே சல்லடையாகிறது.

நீங்கள் கூறவிரும்புவது குலியலறைச்சல்லடையின் ஜலதரங்க ஒலி இனிமையைத்தானே?

எனது புரிதலில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
 
Last edited:
28.
ஜலதரங்கம் கூட்டும்
தனி ஆவர்த்தனக் கச்சேரி
குளியல் அறைச் சல்லடை

இந்த நுணுக்கமான திருத்தத்திற்கு நன்றி, வாக்மி அவர்களே.
ரமணி
 
35.
சீருடைச் சிறார் கலகல
ஆசையில் ஏங்கும் சிறுவன் முகம்
துருத்தியை இழுக்கும் கை

36.
அருவியாய் ஓடும் மழை
முள்மரம் முழுதும் வெண்மலர்கள்
காத்திருக்கும் கொக்குகள்

*****
 
37.
கண்ணாடி முன்னே
பழிப்புக் காட்டி மகிழ் குழந்தை
மறைந்து ரசிக்கும் தாய்

38.
குருவியின் ஆக்ரோஷம்
தாழ்வார நிலைக்கண்ணாடி
குழந்தை கண்ணில் பயம்

*****
 
39.
பழைய வாராவதி
காவிரி மேலே வாகனங்கள்
மின்தூண் சங்கீதம்

40.
மல்லாந்தே நடனம்
மரவட்டை செய்தது ஈர்த்தது
சுள்ளெறும்புகள் மொய்க்க

*****
 
41.
டி.வி.எஸ். 50
இருப்புப் பாதை சந்திப்பு
தெறித்து விழுந்த தலை!

42.
சின்னத் தவளை தலை
மெல்ல மெல்ல விழுங்கியது
ஒரு பாம்புக் குட்டி!

*****
 
43.
தேங்கிய நீர் குறையும்
திணறும் மீன்கள் சுற்றிவரும்
சூரியன் தலைமேல் வர.

44.
அம்புலி உள்ளே முயல்?
மாலை மறையும் சூரியனுள்
மாடப் புறா சுற்றும்

*****
 
28/11/2015
ஹைக்கூ, சென்ரியு வேறுபாடு
இப்படி எழுதினால் இது ஹைக்கூ அருகில்:

51.
கூர்ந்து காணும் முகம்
குழந்தை நட்பில் இன்னொரு உயிர்
என்-நத்தை இது இனி.

இப்படி யெல்லாம் எழுதினால் இவை நிச்சயம் சென்ரியு:

தன்னை அறிந்திடவே
நத்தை நோக்கும் குழந்தை முகம்
ஐம்புலன் கூட்டுக்குள்!

அப்பா போல் நத்தை
எத்தனை ஸ்லோ! எவ்வளவு கூல்!
அம்மாவும் ஆமை.

--ரமணி, 28/11/2015

*****
 
Status
Not open for further replies.
Back
Top